Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Azhagiya Theeye!
Azhagiya Theeye!
Azhagiya Theeye!
Ebook110 pages50 minutes

Azhagiya Theeye!

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.

Languageதமிழ்
Release dateMay 26, 2017
ISBN6580100402142
Azhagiya Theeye!

Read more from Rajesh Kumar

Related to Azhagiya Theeye!

Related ebooks

Reviews for Azhagiya Theeye!

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Azhagiya Theeye! - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    அழகிய தீயே!

    Azhagiya Theeye!

    Author:

    ராஜேஷ் குமார்

    Rajesh Kumar

    For more books
    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அழகிய தீயே!

    ராஜேஷ்குமார்

    1

    தேர்தலின்போது இடது ஆட்காட்டி விரலில் தடவப்படும்

    மை எதனால் ஆனது?

    - சில்வர் நைட்ரேட்டினால் ஆனது.

    பஞ்சவர்ண சாஸ்திரிகள் கோயிலில் உச்சிக் கால பூஜையை முடித்துக் கொண்டு வீடு திரும்பும்போது மேற்றளி தெருவில் சிற்சபேசன் எதிர்ப்பட்டார்.

    என்ன சாஸ்திரிகளே...! வீட்டுக்கு யாரோ கெஸ்ட் வந்திருக்கா போலிருக்கே...?

    கெஸ்டா...?

    ஆமா... உம்ம வீட்டுக்கு முன்னாடி பன்னிரண்டடி நீளத்துக்குக் கப்பல் மாதிரி ஒரு கார் நின்னுட்டிருக்கு...

    காரா...?

    ஆமா...

    கார்ல வரக்கூடிய அளவுக்கு எனக்கு கெஸ்ட் யாரும் கிடையாதே...

    போய்ப் பாரும்... தெரியும... சிற்சபேசன் சொல்லி நகர்ந்துவிட, பஞ்சவர்ண சாஸ்திரிகளைப் பதட்டம் தொற்றிக் கொண்டது.

    ‘நம்ம வீட்டுக்கு கார்ல யார் வந்திருப்பா...?’

    வேகமாய் நடை போட்டார்.

    ஐந்து நிமிஷ நடை

    தன் வீடு இருந்த இரண்டாவது அக்ரஹாரத் தெருவுக்குள் நுழைந்தார். தன் வீட்டு வாசலில் அந்த மெரூன் கலர் ஃபோர்ட் கார் உண்மையிலேயே ஒரு கப்பல் மாதிரி நின்றிருந்தது. காரைச் சுற்றிலும் அக்ரஹாரக் குழந்தைகள்.

    சாஸ்திரிகள் மிதியடிகளை ஒரமாய் விட்டு விட்டு வீட்டுக்குள் நுழைந்தார். அவரைப் பார்த்ததுமே சோபாவில் உட்கார்ந்திருந்த அந்த நடுத்தர வயதுப் பெண் எழுந்து பவ்யமாய் கும்பிடு போட்டாள்.

    அந்தப் பெண்ணுக்கு நாற்பத்தைந்து வயது இருக்கலாம். இருபதாயிரம் ரூபாய் பட்டுப் புடவைக்குள், காதுகளிலும் உலது பக்க மூக்கிலும் வைரத் துணுக்குகள் மினுமினுக்க வெளிச்சமாய் இருந்தாள். முழங்கை வரைக்கும் இடம் பிடித்து இருந்த வளையல்கள் பளபளத்தன.

    நமஸ்காரம்... சாஸ்திரிகளே...!

    நமஸ்காரம்! நீங்க...?

    என்னோட பேர் ஜெகதாம்பாள். ‘ஜெகதா க்ரூப்ஸ்’ கம்பெனிகளைப் பத்தி கேள்விப்பட்டு இருக்கீங்களா, சாஸ்திரிகளே?

    ம்... நிறைய கேள்விப்பட்டிருக்கேன். டி.வி.யிலும் பத்திரிகைகளிலும் நிறைய விளம்பரம் பார்த்துட்டிருக்கேன். உட்கார்ங்கோ...

    அவள் உட்கார்ந்தாள்.

    ‘ஜெகதா க்ரூப்ஸ்’ கம்பெனியோட மானேஜிங் டைரக்டர் நான்தான். என்னோட கணவர் சாம்பசிவம் சில வருஷங்களுக்கு முன்னாடி இறந்துட்டார். அவர்க்குப் பிறகு கம்பெனிகளின் மொத்த நிர்வாகத்தையும் நான்தான் பார்த்துட்டு வர்றேன். ஜெகதாம்பாள் சொல்ல, சாஸ்திரிகள் எதிரேயிருந்த நாற்காலியில் உட்கார்ந்தார்.

    நீங்க என்னோட வீட்டுக்கு வந்ததுல ரொம்பவும் சந்தோஷம். நல்ல வெய்யிலில் வந்திருக்கீங்க. மோர் சாப்ட்றீங்களா?

    சாப்பிட்டேன்... உங்க மனைவி கொடுத்தாங்க. கருவேப்பிலையும் கொத்துமல்லியும் போட்ட மோர்... இந்த வெய்யிலுக்கு அமிர்தமாயிருந்தது. ரெண்டு டம்ளர் வாங்கிச் சாப்பிட்டேன்...

    சாஸ்திரிகள் திரும்பிச் சமையல்கட்டருகே நின்றிருந்த தன்னுடைய மனைவி பார்வதியைப் பார்க்க, அவள் ‘ஆமாம்’ என்பது போல் தலையசைத்தாள். மறுபடியும் ஜெகதாம்பாளை ஏறிட்டார். பிறகு தயக்கமான குரலில் கேட்டார்.

    என்னைத் தேடி என்ன விஷயமா வந்திருக்கீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா...?

    முகம் இறுகிய ஜெகதாம்பாள், சில விநாடிகள் தயங்கி விட்டுப் பேச்சை ஆரம்பித்தாள்.

    எனக்கு ஒரே ஒரு பொண்ணு. பேரு சிமி. இப்போ அவ கனடாவில் இருக்கா, மானேஜ்மெண்ட் கோர்ஸ் சம்பந்தப்பட்ட ரெண்டு வருஷப் படிப்பைப் படிக்கிறதுக்காக... போயிருந்தா. இப்போ படிப்பு முடிஞ்சாச்சு. அடுத்த வாரம் இந்தியா புறப்பட்டு வர்றா...

    சாஸ்திரிகள் ஜெகதாம்பாளையே பார்த்துக் கொண்டிருக்க, அவள் தொடர்ந்தாள்.

    கனடாவிலிருந்து புறப்பட்டு வர்ற நேரத்துல ஒரு பிரச்னை. சிமி கடந்த ரெண்டு வருஷகாலமா கனடாவில் ‘மேத்யூ’ என்கிற ஒரு இளைஞனைக் காதலிச்சிருக்கா, போன வாரம் ஒரு சர்ச்சுல வெச்சு கல்யாணமும் பண்ணிகிட்டா. அப்படி அவ கல்யாணம் பண்ணிகிட்டதுக்குக் காரணம் நான் அவ காதலை ஏத்துக்கமாட்டேன்ங்கிற பயம்தான்.

    விஷயம் என்ன என்பது போல் சாஸ்திரிகள் இன்னமும் ஜெகதாம்பாளையே பார்த்துக் கொண்டிருக்க, அவள் சில விநாடி இடைவெளிக்குப் பின் தொடர்ந்தாள்.

    சிமி அடுத்த ஞாயிற்றுக்கிழமை காலை தன் கணவன் மேத்யூவோடு கனடாவிலிருந்து புறப்பட்டுச் சென்னை வர்றா. அவ சென்னை வந்ததுமே ஒரு நல்ல நாள் பார்த்து நம்முடைய சம்பிரதாயப்படி ஒரு பெரிய கல்யாண மண்டபத்தில் கல்யாணத்தை நடத்திடலாம்ன்னு இருக்கேன். சிமியோட ஜாதகத்தைக் கொண்டு வந்திருக்கேன். நீங்க அவளுடைய ஜாதகத்தைப் பார்த்து அவளுடைய ராசிக்கும் நட்சத்திரத்துக்கும் ஏற்ற ஒரு நாளைக் குறிச்சுக் கொடுக்கணும். நாள் நட்சத்திரம் பார்த்துப் பெண்ணோட ஜாதகத்துக்கு ஏற்ற மாதிரி முகூர்த்த தேதியைக் குறிச்சுத் தர்றதில் நீங்க பிரசித்தம்ன்னு எங்க கம்பெனியின் ஜெனரல் மானேஜர் விஸ்வநாத அய்யர் சொன்னார். அதான் உங்களைப் பார்த்துட்டுப் போலாம்ன்னு வந்தேன்.

    உங்க பொண்ணோட பேர் என்னான்னு சொன்னீங்க.

    சிமி...

    அதென்ன சிமி...?

    "அவளோட உண்மையான பேரு சிவகாமி. என் மாமியாரோட பேரும் அதுதான். தன் அம்மாவோட ஞாபகார்த்தமா என்னோட கணவர் அந்தப்

    Enjoying the preview?
    Page 1 of 1