Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Arputha - Athisaya Aalayangal
Arputha - Athisaya Aalayangal
Arputha - Athisaya Aalayangal
Ebook247 pages1 hour

Arputha - Athisaya Aalayangal

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

she has written several novels in Tamil.
Languageதமிழ்
Release dateMay 18, 2017
ISBN6580115702063
Arputha - Athisaya Aalayangal

Read more from Lakshmi Rajarathnam

Related to Arputha - Athisaya Aalayangal

Related ebooks

Reviews for Arputha - Athisaya Aalayangal

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Arputha - Athisaya Aalayangal - Lakshmi Rajarathnam

    http://www.pustaka.co.in

    அற்புத - அதிசய ஆலயங்கள்

    Arputha - Athisaya Aalayangal

    Author:

    லட்சுமி ராஜரத்னம்

    Lakshmi Rajarathanam

    For more books
    http://www.pustaka.co.in/home/author/lakshmi-rajarathnam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    அற்புத அதிசய ஆலயங்கள்

    பொருளடக்கம்

    மூத்த பிள்ளை பிள்ளையார்

    கூலி வாங்கிய பிள்ளையார்

    மாற்றுரைத்த பிள்ளாயார்

    ஐயப்பனின் அருள் பெயர்கள்

    கோவை கோயில் அற்புதங்கள்

    தண்டு மாரியம்மன்

    கோனியம்மன்

    அர்த்தசாம சுமங்கலிபூஜை

    கொங்கணகிரி குமரன்

    முருகனின் வடிவங்கள்

    திருச்செந்தூர் கடற்காவலன்

    வேற்காடு வேந்தன்

    குறை தீர்க்கும் குமாரஸ்வாமி

    அசுரன் மலையான மயிலம்

    கழுகுமலை கருணாமூர்த்தி

    திருத்தணி - காஞ்சிபுரம்

    சமண வரலாற்றுத்தலம்

    விமான அமைப்புக்கள்

    ஏகாம்பரர்

    அற்புத அத்திவரதர்

    வைகுந்தப் பெருமாள்

    கயிலாசநாதரும், காமாட்சியும்

    பிரம்ம நாயகி

    சரஸ்வதி பூஜித்த வாகீஸ்வரர்

    திருக்கழுக்குன்றம்

    இடையாறு

    சிவனும் விஷ்ணுவும்

    திருமால்பூர் மகேசன்

    புகழ்பெற்ற காவேரிப்பாக்கம்

    பிரம்மனுக்குப் பூணுால் போட்டதலம்

    தில்லை - இல்லை பிறவி

    அற்புத லிங்கேஸ்வரர்கள்

    அதிசயத் தேர்கள்

    ஆச்சாள் புரம்

    லிங்கம் இல்லாத சிவாலயம்

    நாராயணி பிரத்யங்கரா

    அவதார திருமால்

    அதிசயம் ஆனால் உண்மை

    தீபாவளி அற்புதங்கள்

    ரங்கனின் தீபாவளி ஸ்நானம்

    ஐந்தரங்கன்

    அதிசயம் - ஆனால் உண்மை

    ராமாயணம் படிக்கும் ஆஞ்சநேயர்

    விபூதி தரும் அனுமன் கோயில்

    பாஸ்போர்ட் இல்லாமல் ஃபாரினில் ஆஞ்சநேயர்

    பிடிவரிசி ஆஞ்சநேயர்

    அதிசயம் - ஆனால் உண்மை

    சயன சாஸ்தா

    காத்திருந்த கன்னி

    தென் திருமுல்லைவாயில்

    வள்ளிமலை

    திருப்பரங்குன்றம்

    சிக்கல் சிங்காரவேலர் அற்புதமானவர்

    பிரசாதத்திற்குப் பெயர் பெற்ற தலங்கள் சில இருக்கின்றன

    எண்ணாயிரம் பிள்ளையார்

    சங்கு சக்கரப் பிள்ளையார்

    தவழும் விநாயகர்

    கடல் பிள்ளையார்

    குபேரன்

    கணபதீச்சரம்

    தாயின் சினத்தை தணித்த தனயன்

    ஆனந்த நர்த்தன விநாயகர்

    வில்லேந்திய விநாயகர்

    ரிஷபா ரூட விநாயகி

    போர்க்கோல விநாயகி

    வீணை விநாயகி

    மகுட விநாயகி

    வியாக்ரகந்தி விநாயகி

    பிரியங்காசன விநாயகி

    அபூர்வ லிங்கம்

    அதிசய லிங்கங்கள்

    ராமலிங்கம்

    திருச்செந்தூர் பஞ்ச லிங்கங்கள்

    அக்னி லிங்கம்

    சக்தி லிங்கம்

    சுயம்பு பாதாள லிங்கம்

    நவலிங்கங்கள்

    பிடி அளவே லிங்கம்

    ஜம்புலிங்கம்

    சஹஸ்ர லிங்கம்

    பெருவுடையார் லிங்கம்

    கங்கை கொண்ட சோழ லிங்கம்

    சப்தவிடங்கத் தலங்கள்

    திருவாரூர்

    திருநள்ளாறு

    திருநாகைக்காரோணம்

    திருக்காறாயில்

    திருகோளிலி

    திருவாய்மூர்

    திருமறைக்காடு

    ஓசை கொடுத்த நாயகி

    கம்பஹரேஸ்வரர்

    சூர்யா போற்றி

    அற்புதம் ஆனால் உண்மை

    பிறைசூடிய அம்பாள்

    வேடுவர் கோல குமரன்

    தேன் துளிகள்

    திருவோணத்தப்பன்

    ஸ்ரீ ராம வடிவங்கள்

    சயனப் பெருமாள்

    யோக நரசிம்மர்

    கனகதுர்கா - பானக நரசிம்மர்

    அபிஷேகபாக்க நரசிம்மர்

    அறுபடை வீடுகளின் தத்துவம்

    கரும்பு கந்தன்

    குருவாயூர்

    இராமேஸ்வர தீர்த்தங்கள்

    அதிசயம் ஆனால் உண்மை

    வெண்ணெய் மலை முருகன்

    சங்கு வடிவில் சிவபெருமான்

    கோடரி தழும்புள்ள லிங்கம்

    கயிறு தழும்புடைய லிங்கம்

    வால் தழும்புடைய லிங்கம்

    வாள் தழும்பு பட்ட லிங்கம்

    நண்டு வளை லிங்கம்

    வண்டு துளைத்த லிங்கம்

    பஞ்சபூத ஆலயம்

    அபிஷேகப்பால் தயிராகும் அற்புதம்

    படிக்கட்டு பூஜை

    ராசிப் படிகள்

    சக்தி தட்சிணாமூர்த்தி

    சிவாலய தீர்த்தம்

    நர்த்தன வடிவங்கள்

    நர்த்தன கணபதி

    நடன முருகன்

    நடன லட்சுமி

    நடன பைரவர்

    நடன வீரபத்திரர்

    நடன சரஸ்வதி

    நடன துர்க்கை

    தெய்வங்கள் வழிபட்ட தலம்

    அதிசயம் ஆனால் உண்மை

    வித்தியாசமான முருகன்

    அடியார்க்கு நல்லபெருமாள்

    முருகனுக்கு ஆறு முகங்கள் ஏன்?

    ஜம்முகச் செவ்வேள்

    சென்னிமலைச் சென்னியப்பன்

    குதிரை வாகனக் குமரன்

    குல்லாய் அணிந்த குமரன்

    ஆவுடையாரில் ஆறுமுகன்

    அதிசயம் ஆனால் உண்மை

    சித்ரா பெளர்ணமி

    செங்கோட்டு மலை

    நெய்மலையான்

    மூத்த பிள்ளை பிள்ளையார்

    முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடுகள் இருப்பதைப் போல வினாயகருக்கும் ஆறுபடை வீடுகள் இருக்கின்றன. அவைகள்-

    திருவண்ணாமலை - அல்லல் தீர்க்கும் வினாயகர்.

    விருத்தாசலம் - ஆழத்துப் பிள்ளையார்

    திருக்கடவூர் - கள்ள வினாயகர்.

    திருஆலவாய் (மதுரை) - சித்தி வினாயகர்.

    காசி-துண்டி ராஜ வினாயகர்

    திருநாரையூர்-பொல்லாப்பிள்ளையார்

    பொல்லாப் பிள்ளையார் என்றால் பொல்லாத பிள்ளையார் என்றுஅர்த்தம் கொள்வாரும் உண்டு. பொல்லாப் பிள்ளையார் என்றால் உளியால் செதுக்காத சுயம்பு என்று பொருள்.

    திருச்சிராப்பள்ளி உச்சிப்பிள்ளையார் தலையில் ஒரு குழி இருக்கும். இது விபீஷணர்வினாயகர்தலையில் குட்டிய குட்டு. விபீஷணர் இலங்கை மன்னராக முடிசூட்டிக்கொண்ட பின்பு ஸ்ரீராமர் தந்த ஸ்ரீரங்கநாதரின் விக்ரகம் அடங்கிய பேழையுடன் வருகிறார். காவிரி- கொள்ளிடம் நடுவே வந்ததும் நீராட வேண்டும் என்பதால் புஷ்பக விமானத்திலிருந்து கீழே இறங்கினார்.

    ஸ்ரீரங்கநாதரைக் கீழே வைக்கக்கூடாது. வினாயகர் ஒரு சிறுவனாக வருகிறார். பத்து எண்ணுவதற்குள் வந்துவிட வேண்டும் என்ற நிபந்தனையுடன் பெட்டியை வாங்கிக் கொள்கிறார். விபீஷணர் வரவில்லை. பேழையைக் கீழே வைத்துவிடுகிறார். அதுதான் ஸ்ரீரங்கம். கோபம் கொண்ட விபீஷணர் மலைக்கோட்டை உச்சியில் அமர்ந்த சிறுவன் தலையில் குட்டுகிறார். வினாயகர் தான் யாரென்று காட்சி தருகிறார்.

    வினாயகப் பெருமானுக்கு முக்கியமாகப் படைக்கப்படும் நைவேத்யம் கொழுக்கட்டை. இதை முதன் முதலில் செய்து வினாயகப் பெருமானுக்குப் படைத்தவர் வசிஷ்டரின் பத்தினி அருந்ததி ஆவார்.

    பிள்ளையார் பெயரில் பிள்ளையார்பட்டி என்ற தலம் அமைந்துள்ளது. இதேபோல் கும்பகோணத்துக்கு அருகில் கணபதி அக்ரஹாரம் என்ற தலம் அமைந்துள்ளது. இங்குள்ள கணபதியைப் பிரார்த்தனை செய்து கொழுக்கட்டை நைவேத்யம் செய்தால் தேள் கண்ணில் பட்டோ, கடிப்பதோ கிடையாது என்று நம்பிக்கை இருக்கிறது.

    வினாயகர் அதிசயங்கள் செய்பவர். அருணகிரிநாதர் பெருமான் திருவண்ணாமலையில் கோபுரத்திலிருந்து கீழே விழுந்தார். முருகப்பெருமான் அவரைத் தடுத்தாட்கொண்டு திருப்புகழ் பாட முத்தைத் தரு என்று அடி எடுத்துக் கொடுத்தார். பாடி முடித்தார் அருணகிரிநாதர். இன்னும் பாடிக் கேட்க ஆசைப்பட்டார் முருகவேள். அருணகிரிநாதர் திருப்புகழ் பாடிவிட்டோம் என்று பேசாமல் இருந்தார். இன்னும் திருப்புகழ் பாடும்படி முருகவேள் கேட்டார். பாடவரவில்லை என்று கூறினார் அருணகிரிநாதர்.

    வயலூர்க்கு வா என்று ஆணையிட்டார்முருகன்.

    வயலூர் சென்ற அருணகிரிநாதருக்கு அங்கு உள்ள வினாயகர் மீண்டும் திருப்புகழைப் பாட அருளினார்.

    "செய்பதியில் வைத்துயர் திருப்புகழ் விருப்பமொரு செப்பென எனக்கருள்கை மறவேனே' என்று பாடினார் அருணகிரிநாதர். செய்பதி என்றால் வயலூர். வினாயகர் மீண்டும் திருப்புகழ் பாட அருளினார்.

    கூலி வாங்கிய பிள்ளையார்

    திருப்புன்கூரில் நந்தனார் கோவிலுக்குள் போக முடியாமல் வெளியே நின்றபடியே நந்தி விலகி தரிசனம் காட்ட தரிசனம் செய்தார். வெளியே வந்த நந்தனார்க்கு இறைவனுக்கு இன்னும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆசைமூண்டது. ஊரைச்சுற்றிவந்த பொழுது குளம்தூர்வாரப் படாமல் ஓடையாய்த் தேங்கி நின்றது அவருக்கு மன சங்கடத்தைக் கொடுத்தது. அதைத்தூர்வாரி நல்ல முறையில் ஆழமாகக் குளம் வெட்டத் தீர்மானித்தார்.

    இறைவன் நந்தனாரின் நல்ல நினைப்புக்குத் துணைபுரியத் திருவுளம் கொண்டார். தமது மூத்த மகன் வினாயகப் பெருமானைக் கூலியாளாக அனுப்பினார். பிட்டுக்காக வந்தி என்ற வயதான பிட்டு வாணிச்சிக்காகக் கூலியாளாக சிவபெருமான் வந்த கதை நினைவுக்கு வருகிறதல்லவா!

    கூலியாளாக வந்த சிறுவனை நந்தனார் தூர்வார அழைத்தார். கூலி கொடுக்க வேண்டுமே? நந்தனாரோ வயலில் வேலை செய்து கூலியாக நெல்லைப் பெறுபவர். அந்த வகையில் ஐந்துபடி நெல்லை வைத்திருந்தார். கூலியாளாக வந்த வினாயகப் பெருமானிடம் ஐந்துபடி நெல்லைக் கூலியாகத் தருவதாகப் பேசி ஒப்பந்தம் செய்துகொண்டார்.

    எவ்வளவு தூரம் எவ்வளவு ஆழம் என்று அளந்து சொல்லுங்கள்என்று கூலியாளாக வந்த வினாயகர் கேட்டார்.

    அளந்து பார்க்கப் போனார்நந்தனார். கணநேரம்தான். கணங்களை வைத்துத் தூர் வாரிப்போட்டார் வினாயகர். பேசியபடி ஐந்துபடி நெல்லைத் தர வினாயகரும் அதைக் கூலியாகப் பெற்றுக் கொண்டார்.

    எப்படி பிள்ளையார் பெற்ற கூலி?

    மாற்றுரைத்த பிள்ளாயார்

    அறுபத்து மூன்று நாயன்மார்களில் சுந்தரமூர்த்தி நாயனாரும் ஒருவர். அவர் சிவபிரானுக்குரிய திருவிழாக்களை நடத்துவார். அதற்கு சிவபெருமானிடமே பொன், பொருளைக் கேட்டுப் பெறுவார். ஒருசமயம் பொருள் கேட்க திருப்புகலூர் சென்றார். தேவாரம் பாடினார். இறைவன் பேசாமல் இருந்துவிட்டார். சுந்தரரும் கோபம் கொண்டு செங்கல்களைத் தலைக்கு வைத்துக் கொண்டு படுத்து விட்டார்.

    மறுநாள் அந்த செங்கல்கள் பொன் செங்கல்களாகி இருந்தன. அவற்றை எப்படி திருவாரூர் எடுத்துச் செல்வது என்று திருப்புகலூர் இறைவனிடமே கேட்க, அவர் அதைத்திருப்புகலூர்ஆற்றில் போட்டு விட்டு திருவாரூர்கமலாலயத்தில் போய் எடுத்துக் கொள்ளச் சொன்னார். அதன்படியே திருவாரூர் கமலாலயத்தில் சுந்தரர் அந்தப் பொன் செங்கல்களைத் தேடி எடுத்தார்.

    அச்செங்கல்கள் பாசி படிந்திருந்தன. அதனால் எந்த பொற்கொல்லர்களும் அந்தச் செங்கல்களை வாங்க மறுத்தனர். உடனேசுந்தரர்ஆரூர்தியாகேசரிடம் போய்முறையிட்டார். அதற்கு தியாகேசர்

    Enjoying the preview?
    Page 1 of 1