Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Swarnalakshmiyum Bakridpandikaiyum
Swarnalakshmiyum Bakridpandikaiyum
Swarnalakshmiyum Bakridpandikaiyum
Ebook242 pages3 hours

Swarnalakshmiyum Bakridpandikaiyum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

திரு.ஆர்னிகா நாசர் அவர்கள் முதுகலை சமூகவியல் பட்டம், மருத்துவ நிர்வாகம் முதுகலை பட்டப்படிப்பு, வெகுஜன தொடர்பு முதுகலை பட்டப்படிப்பு, குற்றவியல் மற்றும் தடய அறிவியல் முதுகலை பட்டப்படிப்பு, வழிகாட்டல் மற்றும் ஆலோசனை முதுகலை பட்டப்படிப்பு, இளம் முனைவர் பட்டம், சமூகவியல் மருத்துவ மேலாண்மை நிர்வாகம்-முதுகலை பட்டம், பி.ஹெச்,டி ஆய்வும் செய்து வருகிறார்.
இவர் ஆயிரத்தை நெருங்கும் சிறுகதைகள், 150 நாவல்கள், 50 தொடர்கதைகள், நூறை நெருங்கும் தொகுப்புகள், ஒரு தொலைக்காட்சி தொடர், மூன்று வானொலி நாடகங்கள் 100 நேர்காணல்கள், 300 இலக்கிய மேடைப்பேச்சுகள், 100 விஞ்ஞான சிறுகதைகள், 200 இஸ்லாமிய சிறுகதைகள் மற்றும் ஒரு மொழிபெயர்ப்பு நாவல்களை எழுதியுள்ளார்.
இவரது குடும்பம் - மனைவி-வகிதா, மகள்-ஜாஸ்மின் மற்றும் மகன் - நிலாமகன் ஆவர். தற்போது சிதம்பரத்தில் வசித்து வருகிறார்.
Languageதமிழ்
Release dateMar 8, 2017
ISBN6580111001976
Swarnalakshmiyum Bakridpandikaiyum

Read more from Arnika Nasser

Related to Swarnalakshmiyum Bakridpandikaiyum

Related ebooks

Related categories

Reviews for Swarnalakshmiyum Bakridpandikaiyum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Swarnalakshmiyum Bakridpandikaiyum - Arnika Nasser

    http://www.pustaka.co.in

    சொர்ணலட்சுமியும் பக்ரீத்பண்டிகையும்

    Swarnalakshmiyum Bakridpandikaiyum

    Author:

    ஆர்னிகா நாசர்

    Arnika Nasser

    For more books
    http://www.pustaka.co.in/home/author/arnika-nasser-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    கதையடக்கம்

    ஜுலேகா பீவி...

    தில்சாத்...

    பிறந்தநாள்...

    முனிரா…

    ரமலான் நோன்பு…

    சொந்தக்கால்...

    மதம்...

    பூவுக்கு யார் தீ வைத்தது…

    ஆழத்தே... வெகு ஆழத்தே...

    வெள்ளைக் கொடி...

    ரயில் ஸ்நேகம்...

    சொர்ண லட்சுமியும் பக்ரித் பண்டிகையும்...

    பிரியாணி…

    மீண்டும் ஒருமுறை…

    உப்புக் கண்டம்...

    அப்ஸல்...

    திரும்பி வந்த கணவன்...

    ஒப்புதல் வாக்குமூலம்...

    மனைவிக்காக...

    தொப்பி...

    தலைமுறைத் தவறுகள்...

    பர்தா...

    இத்தா…

    ரியாஸ்…

    ஹஜ் யாத்திரை…

    சொர்ணலட்சுமியும் பக்ரீத்பண்டிகையும்

    ஜுலேகா பீவி...

    வெண்மை பிறைநிலா கூடிய பச்சைக் கொடி அந்த பங்களாவின் உச்சியில் பறந்து கொண்டிருந்தது. அந்த பங்களா நான்கு தளங்கள் கூடியதொரு மார்பிள் சாகசம். பங்களாவில் மொத்தம் எண்பது அறைகள் அமைந்திருந்தன. எண்பதில் பதினாறு படுக்கையறைகள். தனி வீடே கட்டும் விஸ்தீரணத்தில் சமையலறை. சமையலறையின் இரு அடுப்புகளில் இருபத்திநான்கு மணிநேரமும் சமையல் ஆகிக்கொண்டே இருக்கும். வீட்டுக்கு யார் வந்தாலும் கொள்ளிடம் கோரைப் பாய் விரித்து உணவு பரிமாறப்படும். சிற்றுண்டியாக இருந்தாலும் சரி, மதிய உணவாக இருந்தாலும் சரி அசைவம் கட்டாயம். தனியடுப்பில் தேநீர் டிகாக்ஷன் கொதித்துக்கொண்டிருக்கும். விருந்தாளிக்கு மிக நீண்ட வெள்ளி டம்ளர் நிறைய ஏலக்காய் டீ உபசரிக்கப்படும்.

    ஊரார் அந்த பங்களாவை ‘ஹச்பீ வீடு' என்று மரியாதையாய் விளிப்பர்.

    பிரதான படுக்கையறையில் ஜுலேகா பீவி படுத்திருந்தாள். வயது நூறை நிறைவு செய்து இருமாதங்களாகியிருந்தன. ஐந்தரை அடி ஜுலேகா பீவி முற்றிய வயோதிகத்தால் நான்கடியாய் சுருங்கியிருந்தாள். கடைசியாக ஜுலேகா பீவி நடந்தது பத்து வருடங்களுக்கு முன். எக்கச்சக்க கூன் காரணமாக பீவி இருகணுக்கால்களுக்கு குனிந்துதான் நடப்பாள்.

    பங்களா முழுக்க ஜுலேகா பீவியின் மகன் வழி பேரன் பேத்திகள் நிரம்பி வழிந்தனர்.

    அதிகாலை ஐந்து மணிக்கு மூத்த மகன் வழிபேரன் மருத்துவருடன் வந்து சேர்ந்தான்.

    வீட்டின் நண்டான் சிண்டான்களும், பெரியவர்களும் அஸ்லாமு அலைக்கும் டாக்டர்!

    அலைக்கும் ஸலாம்!

    எங்க படேநாணி பிழைச்சிப்பாங்களா, டாக்டர்?

    எங்க படடே தாதி பிழைச்சிப்பாங்களா, டாக்டர்?

    மருத்துவர் பதில் பேசாமல் ஜுலேகா பீவியை சோதித்தார். பின் கூட்டிவந்த பேரனிடம் ஆங்கிலத்தில் பேசஆரம்பித்தார்.

    உங்க தாதி ‘சகராத் ஹால்’ எனப்படும் மரண மூச்செடுப்பில் கடந்த ஒன்பது மாதமாகவே கிடக்கிறார். அவரின் உடல் நிலைமை மென்மேலும் சீர் கெட்டுவிட்டது. ரூஹு இன்னும் அரைமணி நேரத்தில் பிரிந்து விடும். மீதி உறவினர்களுக்கும் சேதி சொல்லி விடுங்கள்!

    மருத்துவர் பேசுவது ஜுலேகா பீவிக்கு நன்கு கேட்டது. சுவாசம் சீர்கெட்ட 'கர்கர்’ சப்தமாய் வெளிப்பட்டது.

    ஜுலேகா பீவியின் மனம் முணுமுணுத்துக் கொண்டே இருந்தது. அஷ்ஹது அல்லாஹிலாஹா இல்லல்லாஹு அஷ்ஹது அன்ன முஹம்மது ரசூல்லாஹி! (அல்லாஹ் ஒருவன் என்று நான் சாட்சி சொல்கிறேன். முகமது ஷல்லாஹு அலைவஸல்லம் அல்லாஹ்வின் தூதராக இருக்கும்)

    பீவியின் மனம் அல்லாஹ்விடம் துவா பண்ணியது. அல்லாஹ் நாயனே! எனது மெளத்தை சில மணிநேரம் தள்ளிப்போடு வாயாக!

    வானவர்கள் எள்ளி நகையாடினர். ஏன் நூறு வருஷம் நீ வாழ்ந்த வாழ்க்கை திருப்தி இல்லையா? எதற்காக இன்னும் சில மணி நேரங்கள் உயிர் வாழ ஆசைப்படுகிறாய் மூதாட்டியே?

    என் மகள் வழி கடைசி பேத்தி ஷாபிராவுக்கு இது பிரசவ நேரம். எந்த நேரமும் அவளுக்கு பிரசவமாகலாம். அவளுடைய மகனை (அ) மகளை நான் பார்க்காது கண்மூடக் கூடாதென்று என்னிடம் வேண்டியுள்ளாள் செல்லபேத்தி. கொள்ளு பேத்தி அல்லது கொள்ளு பேரன் வரட்டும். கண்ணார கல்பு குளிர பார்த்துவிட்டு மெளத்தாகிறேன்!

    இரு கரிய மலக்குகள் மெளனித்தனர்.

    போர்டிகோவில் டாட்டா சுமோ சறுக்கி நின்றது. பேத்தி ஷாபிரா பிறந்த குழந்தையுடன் பலவீனமாய் வந்திறங்கினாள். அவளையும், அவள் குழந்தையையும் கைத்தாங்கலாய் ஜுலேகா பீவியிடம் அழைத்து வந்தனர்.

    நாணிம்மா! ஷாபிரா வந்திருக்கேன்! எனக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கு நாணிம்மா. குழந்தைக்கு உன்னை மாதிரியே காது. எனக்கு வாக்கு கொடுத்த மாதிரியே ரூஹுவை கைல இறுக்கிப் பிடிச்சுக்கிட்டு என் மகனை வரவேற்க காத்திருக்கிறாயே நாணிம்மா... உனக்கு அல்லாஹ் காட்டும் கருணை அளப்பரியது!

    குழந்தையின் முகத்தை ஜுலேகா பீவியின் முகத்தருகே கொண்டு போய் காட்டினாள் ஷாபிரா. குழந்தையின் பிஞ்சுக்கையை பற்றி நாணிம்மாவின் முகத்தை, கைகளை, கழுத்தை தொட்டாள். ஜுலேகா பீவிக்குள் பேரானந்தம் பூத்தது. குழந்தை பற்றிய ரசிப்பை ஜுலேகா பீவியால் வாய் திறந்து கூற முடியவில்லை. ஆனந்தக் கண்ணீர் இரு விழியோரம் வழிந்தது.

    ஷாபிரா, நாணிம்மா! பேசாம இந்த கொள்ளுப் பேரன் நிக்காஹ் வரைக்கும் உயிரோட இருந்திரேன்!

    நல்லாயிருக்குடி உன் பேராசை... கிளம்பு கிளம்பு திரும்ப ஆஸ்பத்திரிக்கு! தாயையும், குழந்தையையும் மருத்துவமனைக்கு காரில் அழைத்துச்சென்றனர்.

    ஷாபிரா போனவுடன் இரு வானவர்கள். மூதாட்டியே! உன் கொள்ளுபேரனை தரிசித்துவிட்டாய்! இனியும் என்ன தாமதம்? மெளத்தாகிவிடேன்!

    மலக்குகளே என்னை மன்னியுங்கள், என்னுடைய மெளத்தை மேலும் சில மணி நேரம் தள்ளிப் போட அல்லாஹ் நாயனை இறைஞ்சியுள்ளேன்!

    மேலும் சில மணிநேர அவகாசத்தில் என்ன சாதிக்கப் போகிறாய்?

    என்னுடைய உள்ளக்கிடக்கை அல்லாஹ் ஒருவனே முழுக்க அறிந்திருக்கிறான்!

    ஹெச்பீவீட்டு பெண்கள் தனியறையில் அமர்ந்து 'திக்கிர்’ எடுத்தனர்.

    "இலாஹிலாஹ இல்லல்லாஹு முகமது ரசூல்லாஹு!

    சுபஹானல்லாஹ்! சுபஹானல்லாஹ்! சுபஹானல்லாஹ்!

    ஹெச்பீ வீட்டுப் பெண்கள் ஒன்பது மூட்டை கோதுமை வைத்துக்கொண்டு ‘மிஸ் கின்'களுக்கு தலா ஒன்றேகால் படி கோதுமை 'ஜக்காத்து’ அளித்தனர்.

    ஹெச்பீ வீட்டுப்பெண்கள் முப்பது ஜுஸுக்களை பிரித்து குர்ஆன் ஷெரிப் ஒதினர்.

    இந்து மதப் பெண்மணிகள் எரிசையில் நின்று ஜுலேகா பீவியை கடைசிமுகம் பார்த்துவிட்டு சென்றவண்ணம் இருந்தனர்.

    ஒவ்வொரு இரண்டு மணிநோத்துக்கு பிறகும் ஜுலேகா பீவி தனது மெளத்தை மேலும் சில மணிநேரம் தள்ளிப்போட துவா பண்ணினாள்.

    நேரம் கரைந்துகொண்டே இருந்தது.

    நண்பகல் 12.45 மணி…

    மாலை ஆறரை மணி...

    இரவு எட்டுமணி...

    ஹெச்பீவீட்டுப்பெண்கள் ஊர் முஸ்லிம்பெண்களை கூட்டி மொத்தமாய் இஷா தொழுகை விசேஷமாய் தொழுதனர்.

    தொழுகைக்குப்பின் துவா நள்ளிரவு வரை நீண்டது.

    மணி இரவு 11.30

    ஜுலேகாபீவியின் ரூஹு தொண்டைக்கும், நெஞ்சுக்கும் அல்லாடியது.

    பீவியின் அரைவிழி மூடிய கண்கள் சுவர் கடிகாரத்தை பார்த்தபடியே இருந்தன.

    11.30 - 12.00 மணிக்குள் மரணம் பலநூறு தடவை ஜுலேகாபீவியை தொட்டுத்தொட்டு விலகியது.

    மிகச்சரியாக 12.01 மணிக்கு ஜுலேகாபீவி மெளத்தானாள். வீட்டின் அனைத்து உறுப்பினர்களும் சப்தம் எழாமல் அழுதனர்.

    ஹஜ்ரத், யாரும் அழக்கூடாது! அழுது மெளத்தானவங்களுக்கு பாவத்தைக் கூட்டாதிங்க!

    சவ அடக்கம் நடந்து முடிந்தது.

    இருகரிய மலக்குகள் கபுர் குழிக்குள் இறங்கினர்.

    மூதாட்டியே! அல்லாஹ்வின் உத்திரவு கொண்டு எழுந்திரு!

    ஜுலேகாபீவி எழுந்தாள்.

    உன்னுடைய இறைவன் யார்?

    அல்லாஹுதாலா!

    உன்னுடைய நபி யார்?

    ரசூல்லாஹி ஸல்லாஹு அலைவ ஸல்லம்!

    உன்னுடைய மார்க்கம் எது?

    தீனுள் இஸ்லாம்!

    ஜுலேகாபீவியின் பாவபுண்ணிய கணக்கு படித்துக் காட்டினர். நல்ல 'அமல்கள் பல நீ செய்ததால் அல்லாஹ் உனக்கு சொர்க்கத்தை பரிசளித்துள்ளான். சொர்க்கத்தின் கதவுகள் உனக்காகவே திறந்துள்ளன. நீ பறந்து செல்வாயாக!

    பறக்கப்போகும் ஜுலேகாபீவிடம் ஒரு மலக்கு இப்போ தாவது சொல் மூதாட்டியே! உனது மெளத்தை 12.01 மணிக்கு அதாவது மறுநாளைக்கு தள்ளிப் போட அல்லாஹ்வை நீ இறைஞ்சியது ஏன்?

    எல்லாம் அறிந்தும் கேட்கிறீர்கள்! இஸ்லாமில் மனிதன் வாழும் எல்லா நாளும் நல்ல நாளே. இருந்தாலும் என்னுடைய கொள்ளுப் பேரனின் பிறந்தநாளும், என்னுடைய மெளத்தான நாளும் ஒரே நாளாய் அமைந்து விடக்கூடாது என்பதற்காகவே என்னுடைய மெளத்தை மறுநாளைக்கு ஒத்தி வைக்க எல்லாம் வல்ல அல்லாஹ்வை இறைஞ்சினேன்! என்றபடி சொர்க்கத்துக்கு திவ்யமாய் பறந்தாள் ஜுலேகாபீவி.

    தில்சாத்...

    கால்களில் சக்கரம் கொண்ட ராட்சத சூட்கேஸ் மல்லாந்து திறந்து கிடந்தது.

    கைக்கடிகாரங்கள். செண்ட்பாட்டில்கள். சேலைகள் ரெடிமேட் சட்டைகள்.

    தங்கக் காசுகள். வி.சி.டி. மேக்கப் செட்கள். சோப் வண்ணவண்ண உறையில் சாக்லேட்கள்.

    கொட்டை நீக்கப்பட்ட பேரீச்சம்பழ பேக்கிங்கள். ஜம்ஜம் கிணற்று நீர். கார்டுலெஸ் போன்செட். கருமாக்கட்டிகள் தஸ்பமணிகள். தொழுகை விரிப்புகள். ஆடியோ வீடியோ சிடிக்கள் டிஜிட்டல் டைரி. மினி வேக்குவம் கிளினர். பொம்மைகள். இதர இதர.

    தளர்ந்து சோபாவில் அமர்ந்திருந்தான் ஜாபர். வயது முப்பது உயரம் 5-7 ஜீன்ஸூம், டி-சர்ட்டும் அணிந்திருந்தான். தலையில் வலைத்தொப்பி. முகத்தில் தாடி, பணிபுரியும் இடத்துக்கு மிக அருகில் புனித மெக்காஹ் இருந்ததால் ஹஜ் பயணம் நிறைவேற்றிவிட்டான்.

    ஜாபர் சவுதி அரேபியாவிலுள்ள ரியாத்தில் ஓர் அர ஷேக்குக்கு உதவியாளனாக பணிபுரிந்துவிட்டு இரு ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் தமிழ்நாடு திரும்பியிருக்கிறான். ஒரு மாத விடுமுறை அனுபவித்தப் பிறகு மீண்டும் ரியாத்துக்கு பறக்க வேண்டும்.

    ஜாபருக்கு எதிரில் ஜாபரின் பெற்றோரும் ஜாபரின் மனைவியின் பெற்றோரும் அமர்ந்திருந்தனர்.

    ஜாபரின் பெற்றோருக்கு பின் ஜாபரின் தம்பி கலீல் நின்றிருந்தான்.

    படுக்கையறை வாசலை ஒட்டி மறைவாய் ஜாபரின் மனைவி தில்சாத் நின்றிருந்தாள். அழகிய வட்டமுகம். நீள் கூந்தல். கச்சிதப்புருவம். அகலக்கண்கள். ஒற்றை மூக்குத்தியுடன் மூக்கு. ரோஜாப்பூ சாயலில் உதடுகள். கழுத்திலும், கையிலும் நகைகள், தங்கக் கருகமணி ஐந்து பவுனில் போட்டிருந்தாள். காலில் தங்கக் கொலுசு.

    வயது 20. திருமணத்தின் போது வயது 18. பிஎஸ்ஸி விலங்கியல் முதலாமாண்டு படிப்பவளின் படிப்பை வன்முறையாய் நிறுத்திவிட்டு ஜாபருக்குக் கட்டிக் கொடுத்தனர்.

    முஸ்லிம் பழமைவாதிகளின் எழுதப்படாத சட்டங்களை உடைத்தெறியவேண்டும். தான் விலங்கியலில் டாக்டரேட் பட்டம் பெற வேண்டும். விரிவுரையாளராக பணிபுரிய வேண்டும். பர்தா முறையை காலத்திற்கேற்றவாறு மாற்றியமைக்க வேண்டும். தலாக் சொல்லும் உரிமை பெண்களுக்கும் தரப்பட வேண்டும். இப்படி இன்னும் பல வேண்டும்களை விரும்பினாள் தில்சாத்.

    ஆனால் திடீர் திருமணத்தால் அனைத்தும் வெடித்துச் சிதறின.

    திருமணம் நடந்த பத்து நாட்களில் ஜாபர் தில்சாத்தின பாதி நகைகளை விற்று ரியாத் பறந்தான். பத்து நாட்களில் ஜாபர் தில்சாத்துடன் இருந்தது நான்கே இரவுகள்.

    முதல் மூன்று இரவுகளில் பேசாதவளை வலுக்கட்டாயப் படுத்தி நான்காவது இரவில் பேசவைத்தான் ஜாபர்.

    தில்சாத்

    … … … …

    தில்!

    இம்

    என்னை உனக்குப் புடிச்சிருக்கா!

    'மிக தாமதமான கேள்வி. வெற்றிகரமாக உடல்வேட்கையை மும்முறை நிறைவேற்றிக்கொண்ட பின் இதென்ன அபத்தமான கேள்வி. பிடிக்கவில்லையெனக் கூறினால் மணவிலக்கு அளித்து மீண்டும் படிக்க அனுப்புவாயா?’

    ம். பிடிச்சிருக்கு!

    என்கிட்ட உனக்கு பிடிக்காதது ஏதாவது இருக்கா?

    இருக்காவா? இருக்கு... நீங்க சவுதி அரேபியா போறது!

    உன் நகையை வித்துட்டுப் போறேன்னா?

    சேச்சே... அப்டியில்ல... என் நகையை வித்து இங்கேயே கார் வாங்கி டிரைவரா ஒடுங்க…

    அதிகபட்சம் இங்கமாசம் அய்யாயிரம் கிடைக்கும். ரியாத்ல அஞ்சு வருஷம் வேலைபாத்தா முப்பது இலட்சம் சேத்திரலாம். அப்றம் மீதி வாழ்நாளை உல்லாசமாக, சந்தோஷமாக கழிக்கலாம்!

    ப்ளிஸ்... சவுதி பயணம் வேணாங்க. பணம் மட்டுமே வாழ்க்கை இல்லைங்க...

    பணமும் வாழ்க்கைதான் தில்சாத். நான் சவுதி போறதைபத்தி இனி நீ ஒரு வார்த்தை பேசக்கூடாது. தென்காசில எந்த முஸ்லிம் வாலிபன் சவுதி, குவைத் போகல?

    மவுணித்தாள் தில்சாத்.

    வாரம் இருதடவை கடிதம் போடு. இரண்டு வாரத்துக்கு ஒரு தடவை போன் பண்றேன். நேரத்துக்கு நேரம் ஒழுங்கா சாப்பிடு. எங்கம்மா ஒரு வாயாடி. பார்த்து நடந்துக்க. உன் அம்மா அத்தா வீட்டுக்கு மாசம் ஒரு தடவை அம்மா துணையோட போ...

    சரி...

    கோபாமா என் குட்டிப்பொண்ணுக்கு?

    இ… இல்ல…

    உனக்கு எது வேணாலும் இடைல சொல்லுபோன்லதமிழ்நாடு திரும்புற யார் மூலமாவது குடுத்து அனுப்பறேன்!

    எனக்கு ஒண்ணும் வேணாம். நீங்க சூதானமாஇருந்தா போதும்

    சவுதி புறப்பட்டான் ஜாபர். அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டவன் உள்வாசல் மறைவில் நின்றிருந்ததில்சாத்தைப் பார்த்தான்.

    வரட்டுமா தில்?

    கண்கலங்கினாள். பொருமினாள். சரி!

    பழைய நினைவுகள் அறுந்தன. ஜாபரின் தாய் ஜாபரை நிகழுக்குக் கொண்டு வந்தாள்.

    "நீ சவுதிக்கு போன. வாராவாரம் நீ அவளுக்குக் கடிதம் போட்ட அவ உனக்குக்கடிதம் போட்டா. இரண்டு மாசத்துக்கு நாலாயிரம் போன் பில் வருகிற அளவுக்கு அவ உன்கிட்ட பேசினா. நீ அவகிட்ட பேச எத்தனாயிரம் செலவு பண்ணியோ? நீ அனுப்ன பணத்ல மாசம் நாலாயிரம் எங்களுக்குக் குடுத்துட்டு மீதியை அவ வங்கி கணக்குல போட்டுக்கிட்டா. நாலே மாசம் உன் பொண்டாட்டி நடவடிக்கை சுத்தமா மாறிப்போச்சு. நம்ம தெருலயே குடியிருக்ற ரமீஜா மகன் இம்ரான் கூட கொஞ்சிக் குலாவ ஆரம்பிச்சிட்டா. இரண்டு பேரும் குற்றாலம், திருநெல்வேலி, தூத்துக்குடின்னு சுத்றதை பல பேர் பாத்திருக்காங்க. இந்த விஷயத்தை உனக்கு தெரியப்படுத்தாததுக்கு காரணம் நீ வேலையை அரைகுறையா விட்டுட்டு ஓடி வந்திருவன்னுதான். நீ சவுதி திரும்ப இன்னும் 29 நாள் பாக்கியிருக்கு. இந்த ஒடுகாலிக் கழுதையை தலாக் குடுத்துட்டு

    Enjoying the preview?
    Page 1 of 1