Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Velu Nachiyar Novelil Penniya Sinthanagal
Velu Nachiyar Novelil Penniya Sinthanagal
Velu Nachiyar Novelil Penniya Sinthanagal
Ebook195 pages2 hours

Velu Nachiyar Novelil Penniya Sinthanagal

Rating: 1 out of 5 stars

1/5

()

Read preview

About this ebook

இயற்பெயர் மு.கீதா. அரியலூரை தாய்மண்ணாய் கொண்டவர். தேவதா தமிழ் என்ற புனைப்பெயரில் தமிழ் கூறும் நல்லுலகில் அறியப்படுபவர். முன்மாதிரியான ஆசிரியராக மட்டுமில்லாது. சமூகப்பணிகளில்,குறிப்பாக பெண்ணியம் சார்ந்த பணிகளில் மிகுந்த ஆர்வமும் அர்ப்பணிப்பும் கொண்டவர்.

சமூக வலைத்தளங்களில் ஆகச்சிறந்த கருத்துகளால் பலரால் பாராட்டப்பட்டவர். வேலுநாச்சியாரைப் பற்றிய இவர் நூலொன்று பரந்துபட்ட பாராட்டைப் பெற்றது. மேலும் இரண்டு கவிதை நூல்கள் "விழிதூவிய விதைகள்" மற்றும்" ஒரு கோப்பை மனிதம்"என மூன்று நூல்களின் ஆசிரியர்.

ஒரு கோப்பை மனிதம் என்னும் நூலுக்காய் வளரி என்ற அமைப்பால் சிறந்த நூலாசிரியராக தேர்ந்தெடுத்து பாராட்டப்பட்டவர். நூலாக்கப்படவேண்டிய பல பதிவுகளை தன்னுடைய வலைப்பூ மூலம் விதைத்து வருபவர். பணியின் காரணமாய் புதுக்கோட்டையில் வசிப்பவர். புதுகையின் பெண்கவிஞர்களுள் முக்கியமானவராக நிலைநிறுத்திக்கொண்டுள்ளார்.

எழுதுவதோடு மட்டுமல்லாமல் கணினி தமிழ்ச்சங்க அடிப்படை நிர்வாகிகளுள் ஒருவராகவும்,வீதி கலை இலக்கியக்கழகத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படுபவர். பல சுயமுன்னேற்ற உரைகளை,கவியங்கங்களில் கவிதைகளை,பட்டிமன்றங்களில் பங்கேற்று வருகிறார். காணும் யாவையும் கவிதைகளாகவும்,அவலங்களை அமிலமாகவும் இவர் எழுத்துப்பணி தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580116101953
Velu Nachiyar Novelil Penniya Sinthanagal

Read more from M. Geetha

Related to Velu Nachiyar Novelil Penniya Sinthanagal

Related ebooks

Reviews for Velu Nachiyar Novelil Penniya Sinthanagal

Rating: 1 out of 5 stars
1/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Velu Nachiyar Novelil Penniya Sinthanagal - M. Geetha

    http://www.pustaka.co.in

    வேலு நாச்சியார் நாவலில் பெண்ணிய சிந்தனைகள்

    Velu Nachiyar Novelil Penniya Sinthanaigal

    Author:

    மு. கீதா

    M. Geetha

    For more books
    http://www.pustaka.co.in/home/author/m-geetha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    கே. ஜீவபாரதியின் வாழ்வும், படைப்பும்

    வேலு நாச்சியார் நாவலின் கதைக் கருவும், கதைப் பின்னலும்

    வேலு நாச்சியார் நாவலில் கதை மாந்தர்களின் பண்புகள்

    பெண்ணிய வரலாறு

    வேலு நாச்சியார் நாவலில் பெண்ணியச் சிந்தனைகள்

    முடிவுரை

    பின்னிணைப்புகள்

    பேட்டி

    நிழற்படங்கள்

    செப்பேடுகள்

    துணை நூற்பட்டியல்

    பாராட்டுரை

    வீரமங்கை வேலு நாச்சியாரைப் பற்றி பல படைப்புகள் வெளிவந்துள்ள போதிலும், கவிஞரும் எழுத்தாளருமான திரு. கே. ஜீவபாரதி அவர்களின் முதல் வரலாற்றுப் புதினமாகிய 'வேலு நாச்சியார்’ வாசகர்களுக்கு வேலு நாச்சியார் பற்றி மறைக்கப்பட்ட செய்திகளைக் கூறுவதுடன், இளமுனைவர் பட்ட ஆய்வுக்கு ஆய்வுக் களமாக அமைந்து ஆய்வு மாணவர்களை உருவாக்கும் கலைக் களஞ்சியமாகவும் உள்ளதென்பதை மு. கீதா அவர்களின் ஆய்வுநூலின் மூலம் உணர முடிகிறது.

    இருபதாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டு வரலாற்றில் பெண்ணிய சிந்தனைகளும் பெண்ணிய இயக்கங்களும் தோன்றின. அரசியல் உலகில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, எழுத்துலகில் மாயூரம் நீதிபதி வேதநாயகம் பிள்ளை, மகாகவி, பாவேந்தர் போன்றோர் காரணமாயிருந்திருக்கிறார்கள்.

    ஆணாதிக்கம் கோலோச்சிய பதினெட்டாம் நூற்றாண்டிலேயே, வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைக்கவும், கட்டிலைப் போடவும், தொட்டிலை ஆட்டவும் மட்டுமே பெண்கள் என்று பெண்ணடிமைத்தனம் மேலோங்கிய அந்தக் காலத்திலேயே,

    தென்தமிழ் நாட்டு வீரமங்கையான வேலு நாச்சியார், வெள்ளையர் எதிர்ப்பில் கணவனைப் பறிகொடுத்து, இழந்த நாட்டை மீட்டெடுத்து, பன்மொழி பேசும் பாவையாய், பெண்ணியம் போற்றும் நன்மணியாய் திகழ்ந்திருக்கிறார் என்பதை இந்த ஆய்வு நூல் சிறப்புடன் எடுத்துக் காட்டுகிறது.

    வேலு நாச்சியார் நாவலில் உள்ள பெண்ணியச் சிந்தனைகளை, பெண்ணிய வரலாற்றுடன் ஒப்பாய்வு செய்துள்ள பாங்கு இந்நூல் ஆசிரியரின் திறமைக்குச் சான்று.

    'வேலு நாச்சியார்’ நாவலின் ஆசிரியரான கே. ஜீவபாரதி அவர்களைப் பேட்டி கண்டது மட்டுமின்றி, வரலாறு நிகழ்ந்த இடங்களுக்கு நேரிலேயே சென்று அதன் உண்மைத் தன்மையை உணர்ந்து ஆய்வுநூலாக்கிய ஆசிரியரின் பங்கு பாராட்டுதற்குரியது.

    இதுபோன்ற பல நூல்களைப் படைத்து அன்னைத் தமிழுக்கு அணி சேர்க்க வாழ்த்துகிறேன். பாராட்டுகிறேன்.

    வாக்குமூலம்

    பல படைப்பாளிகள் தங்கள் படைப்புகளுக்கு அணிந்துரை, முன்னுரை, மதிப்புரை வேண்டி என்னை அணுகியிருக்கின்றனர். நானும் எழுதியிருக்கிறேன். ஆனால் இந்த நூலின் ஆசிரியர் கீதா அவர்கள் என்னைத் தொடர்பு கொண்டு இந்த நூலுக்கு என்னிடம் அணிந்துரை கேட்டபோது சிறிது தயங்கினேன். ஏனெனில் என்னுடைய 'வேலு நாச்சியார்’ புதினத்தை ஆய்வுசெய்து எம்.ஃபில் பட்டம்பெற்ற ஆய்வேடுதான் இந்த நூல். இந்தப் பின்புலம்தான் இதன் தலைப்பை 'அணிந்துரை’ என்று கொடுக்காமல் 'வாக்குமூலம்’ என்று கொடுக்க என்னைப் பணித்தது. இனி என் வாக்குமூலம்...

    இந்த தேசம் வெள்ளையரிடமிருந்து விடுதலை பெற்ற ஐம்பதாவது ஆண்டாகிய பொன் விழாவைக் கொண்டாடும் வகையில் மத்திய அரசும், மாநில அரசுகளும், பத்திரிகைகளும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டன. அப்போது இந்திய ஐக்கியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வார ஏடான 'ஜீவா முழக்கம்’ சார்பில் பொன்விழா மலர் வெளியிட முடிவுசெய்து, அந்தப் பொறுப்பை ஈரோடு வழக்குரைஞர் த. ஸ்டாலின் குணசேகரனிடம் கட்சி ஒப்படைத்தது.

    மலர் தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட தோழர் ஸ்டாலின் குணசேகரன், மலருக்கு பலர் கவிதை அனுப்புவர். இதுவரை சொல்லப்படாத ஒரு வீரனைப் பற்றி நீங்கள் ஒரு கட்டுரை மலருக்கு எழுதுங்கள் என்றார் என்னிடம். அப்போது என் தேடலில் சிக்கினான் துப்பாக்கிக் கவுண்டன் என்ற வீரன். அவனை ஒட்டி வேலு நாச்சியாரும் என் கண்ணில் பட்டாள். அந்த மலருக்கு ‘துப்பாக்கிக் கவுண்டன்’ என்ற தலைப்பில் கட்டுரை கொடுத்தேன். ஈரோட்டில் அந்த மலரை வெளியிட்ட அருட்செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கம் அந்தக் கட்டுரையை விதந்து பேசினார்.

    ‘துப்பாக்கிக் கவுண்டன்’ கட்டுரையைப் படித்துவிட்டு, வேலு நாச்சியார் வாரிசுகளில் ஒருவரும் மிகச்சிறந்த ஆய்வாளருமான சிவகங்கையைச் சேர்ந்த திருவரங்கராசன் என்ற பாப்பாதுரை அவர்கள் சென்னைக்கு வந்து என்னைச் சந்தித்து, உங்களுடைய துப்பாக்கிக் கவுண்டன் கட்டுரை மிகச் சிறப்பாக இருந்தது. உங்கள் எழுத்து நடை என்னை மிகவும் கவர்ந்தது. நீங்கள் வேலு நாச்சியார் பற்றி ஒரு நூல் எழுத வேண்டும் என்றார்.

    அது அவ்வளவு எளிதான காரியமன்று. நான் சிவகங்ககைச் சீமை முழுவதையும் சுற்றிப் பார்க்க ஒருவர்துணை வேண்டும்; பயணிக்க கார் வேண்டும்; நினைவிடங்களை புகைப்படம் எடுக்க ஒரு புகைப்பட கலைஞர் வேண்டும் என்றேன்.

    அனைத்திற்கும் ஏற்பாடு செய்ததுடன், தன்னுடைய இரண்டாவது மகன் வழக்குரைஞர் குமரகுருவையும் திரு. பாப்பாதுரை என்னுடன் அனுப்பிவைத்தார்.

    இந்தத் தொடர்பு என் உறவினர் வீட்டில் சம்பந்தம் செய்யும் அளவிற்கு திரு. பாப்பாதுரையைக் கொண்டு வந்தது. ஆம்! என் எழுத்தின் வழியாக எனக்கு அறிமுகமாகி எனக்கு உறவினர் ஆனவர்தான் திரு. பாப்பாதுரை!

    சிவகங்கைச் சீமை முழுவதும் வேலு நாச்சியார் கால்பதித்த இடங்களில் எல்லாம் கண்பதித்த நான், 1999 டிசம்பர் 24 அன்று ‘தினமணி’ நாளிதழில் 'வெள்ளையரை வெற்றிகண்ட வீரத்தாய்' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினேன். இதுதான் வேலு நாச்சியார் பற்றிய என்னுடைய முதல் கட்டுரை. ஒரு வெகுஜனப் பத்திரிகையில் வேலு நாச்சியாரின் முழுமையான வரலாற்றைச் சொன்ன முதல் கட்டுரையும் இதுதான்.

    இந்தக் கட்டுரையின் இறுதிப் பகுதியை, ‘சிவகங்கை குளத்தங்கரையில் சேடிப் பெண் பழையனூர் இருளாயி கட்டிய ஆனைமுகக் கடவுள் ஆலயத்திற்குக் கிழக்கே வேலு நாச்சியாரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நினைவுப் பகுதியை இன்றைய தமிழர்கள் திறந்தவெளிக் கழிப்பிடமாகப் பயன்படுத்துவது கண்ணீர் செய்தி" என்று முடித்தேன்.

    இந்தக் கட்டுரையைப் படித்த சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியின் அன்றைய உறுப்பினர் திரு.சுதர்சன் நாச்சியப்பன் என்னைத் தொடர்பு கொண்டு, வேலு நாச்சியார்பற்றி மேலும் விசாரித்து தெரிந்துகொண்டு தன்னுடைய எம்.பி. நிதியிலிருந்து வேலு நாச்சியார் நினைவிடத்தை அழகுற அமைத்துக் கொடுத்தார். ஆம்! என்னுடைய ஒரே ஒரு கட்டுரை வீரத்தாய் வேலு நாச்சியார் நினைவிடத்தை மாற்றிக் காட்டியது.

    தினமணியில் வெளிவந்த 'வெள்ளையரை வெற்றிகண்ட வீரத்தாய்" என்ற என்னுடைய வேலு நாச்சியார் பற்றிய கட்டுரையைப் படித்துவிட்டு ‘நந்தன்’ பத்திரிகையின் ஆசிரியர் அய்யா ஆனாரூனாவும் தோழர் இளவேனிலும் என்னைத் தொடர்பு கொண்டு வேலு நாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றை புதின வடிவில் 'நந்தன்' பத்திரிகையில் தொடராக எழுத வலியுறுத்தினர்.

    ‘நந்தன்' பத்திரிகையில் 'வேலு நாச்சியார்’ வரலாற்றுப் புதினம் தொடராக வெளிவந்து வாசகர்களின் மகத்தான வரவேற்பைப் பெற்றது. அந்தத் தொடர் நூலாக வெளிவந்தபோது, நான் எதிர்பார்க்காத இடங்களில் இருந்தெல்லாம் எனக்கு வாழ்த்துகள் வந்து குவிந்தன!

    கோவையிலிந்து ஒரு மாணவியும் புதுக்கோட்டை பகுதியிலிருந்து ஒரு மாணவனும் என்னுடைய 'வேலு நாச்சியார்’ புதினத்தை ஆய்வுசெய்து எம்.ஃபில். பட்டம் பெற்றதாக எனக்குச் செய்தி வந்தது. ஆனால் அவர்களுடைய ஆய்வுகள் எனக்குக் கிடைக்கவில்லை. ஆசிரியர் கீதா என்னை தொடர்பு கொண்டு 'வேலு நாச்சியார்’ புதினத்தை எம்.ஃபில். பட்டத்திற்குத் தேர்வு செய்திருப்பதாகக் கூறினார். அதன்பின் ஆய்வேட்டையும் எனக்கு அனுப்பினார். அந்த ஆய்வேடுதான் இந்த நூல்.

    ஆம்! கல்லூரியில் கால் வைக்காத என்னால் எழுதப்பட்ட வேலு நாச்சியார் வரலாற்றுப் புதினத்தை மூவர் எம்.ஃபில். பட்டத்திற்கு ஆய்வு மேற்கொண்டது எனக்கோ என் எழுத்துக்கோ கிடைத்த வெற்றியாக நான் கருதியதில்லை. இந்தச் சிறப்புகள் எல்லாம் வீரத்தாய் வேலு நாச்சியாரையே சாரும். அதுவும் ஒரு புதினத்தின் முதல்பாகம் மட்டுமே வெளிவந்து, அதைமட்டுமே ஆய்வுசெய்து எம்.ஃபில். பட்டம் பெற்றிருப்பது வேலு நாச்சியாருக்குக் கிடைத்த அங்கீகாரமாகக் கருதுகிறேன்.

    இனி ஆசிரியர் கவிதா அவர்களின் ஆய்வு பற்றி…

    வேலு நாச்சியார் நாவலின் கதைக் கருவும் கதைப் பின்னலும், வேலு நாச்சியார் நாவலில் கதை மாந்தர்களின் பண்புகள், பெண்ணிய வரலாறு, வேலு நாச்சியார் நாவலின் பெண்ணியச் சிந்தனைகள் என்ற மூன்று தலைப்புகளில் நின்று கொண்டு வேலு நாச்சியாரின் தனித்துவம்; வேலு நாச்சியாரின் வீரம் - விவேகம்; வேலுநாச்சியாரின் பன்மொழிப் புலமை; வேலு நாச்சியாரின் பெண்ணியச் சிந்தனைகள்; வேலு நாச்சியாரின் சாதிமத பேதமற்ற வாழ்க்கைமுறை; வேலு நாச்சியாரின் விடுதலை உணர்வு ஆகிய அனைத்தையும் மிகச் சிறப்பாக ஆசிரியர் கீதா இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார். அத்துடன் வேலு நாச்சியார் வாழ்ந்த சிவகங்கைச் சீமைப் பகுதிக்குச் சென்று கள ஆய்வும் செய்திருப்பது சிறப்பு.

    தன்னுடைய ஆய்வுக்கு எவரைத் தேர்வு செய்ய வேண்டும்; தேர்வு செய்தவரை எப்படி உள்வாங்கிக் கொள்ள வேண்டும்; உள்வாங்கிக் கொண்டதை களத்திற்குச் சென்று எப்படி உரசிப் பார்க்க வேண்டும்; அந்த உரசலில் கிடைத்த உண்மைச் செய்திகளை எப்படி உரத்துச் சொல்ல வேண்டும் என்பதை ஆசிரியர் கீதாவின் இந்த ஆய்வு மிகச் சரியாக எடுத்துக் காட்டுகிறது.

    இதற்குமேல் இந்த ஆய்வுக்குள் நான் நுழைவது அழகல்ல. என்னுடைய 'வேலு நாச்சியார் வரலாற்றுப் புதினத்தைப் படித்தவர்கள் இந்த ஆய்வையும் படிக்க வேண்டும். அதன் வழியாக பன்னெடுங் காலமாக தமிழர்களால் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்யப்பட்ட வேலு நாச்சியாரின்தியாக வரலாற்றை வருகின்ற சந்ததியும் படிக்க வேண்டும். அதுவே வேலு நாச்சியார் வரலாற்றுப் புதினத்தை நான் எழுதியதின் நோக்கமாகும். அந்த வகையில் எனக்குத் தோள் கொடுத்து வேலு நாச்சியார் புகழை முன்னெடுத்துச் செல்லத் துணிந்திருக்கும் ஆசிரியர் கீதா அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் எப்போதும் உண்டு.

    என் கவனத்தை வேலு நாச்சியார் பக்கம் திருப்பிய மதிப்பிற்குரிய திருவரங்கராசன் என்ற பாப்பா துரை இன்று இல்லை. இருப்பினும் அவருடைய மூத்த மகன் திரு. சுரேஷ் இந்த நூலைத் தன்னுடைய திரு பதிப்பகத்தின் வழியாக வெளியிடுவது

    Enjoying the preview?
    Page 1 of 1