Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Windows 7
Windows 7
Windows 7
Ebook309 pages1 hour

Windows 7

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

இந்தப் புத்தகத்தின் நோக்கம். உங்களிடம் உள்ள 'விண்டோஸ்7' கணினியை எப்படி முழுமையாக உபயோகப்படுத்திக்கொள்வது, அதில் உள்ள சவுகர்யங்கள் என்னென்ன, அவை ஒவ்வொன்றையும் எப்போது, எப்படிப் பயன்படுத்துவது, விண்டோஸ்7ஐத் தாக்கக்கூடிய ஆபத்துகள் எவை, அவற்றிலிருந்து பராமரித்துக்கொள்வது எப்படி என்று எல்லா விஷயங்களையும் இங்கே உதாரணங்களோடு எளிமையாகச் சொல்ல முயன்றிருக்கிறோம்.

ஒருவேளை உங்களிடம் 'விண்டோஸ்7' கணினி இல்லாவிட்டால்?

'விண்டோஸ்7'க்கு முன்னால் 'விண்டோஸ் விஸ்டா' என்று ஓர் ஆபரேட்டிங் சிஸ்டம் வந்தது. இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் பெரும்பாலான விஷயங்கள் அதற்கும் பொருந்தும். சில சிறிய மாற்றங்கள் இருக்கும். அவ்வளவுதான்.

இதன் அர்த்தம், 'விண்டோஸ் விஸ்டா'வுக்கு முந்தின கணினி ஒன்றை நீங்கள் வைத்திருந்தால் இந்தப் புத்தகம் உங்களுக்குப் பயன்படாது. அதற்கு நீங்கள், நான் எழுதிக் கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள 'கம்ப்யூட்டர் கையேடு' என்ற புத்தகத்தை வாங்கலாம்.

அதைவிட பெட்டர், 'விண்டோஸ்7'க்கு மாறிவிடலாம். ஒரே ஒருமுறை இந்த டிஜிட்டல் மயிலிறகில் எழுதிப் பாருங்கள், அதன்பிறகு பேனா, பென்சிலைத் தொடவேமாட்டீர்கள், நான் கேரண்டி!

என். சொக்கன்

Languageதமிழ்
Release dateFeb 9, 2017
ISBN6580105001821
Windows 7

Read more from N. Chokkan

Related to Windows 7

Related ebooks

Reviews for Windows 7

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Windows 7 - N. Chokkan

    http://www.pustaka.co.in

    விண்டோஸ் 7

    Windows 7

    Author:

    என். சொக்கன்

    N. Chokkan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/n-chokkan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    உள்ளே ...

    முன்னுரை

    1. கைவைத்தியம்

    2. கம்ப்யூட்டர் வாங்குவது

    3. உள்ளே வரலாமா?

    4. மேஜை அலங்காரங்கள்

    5. அலமாரிக்குள்...

    6. எத்தனை ஃபைல்களடா!

    7. சாஃப்ட்வேர் சந்தை

    8. மல்ட்டிமீடியா

    9. நெட்வொர்க்

    10. அச்சிடுதல்

    11. இன்டர்நெட்டும் ஈமெயிலும்

    12. டிரைவர்கள்

    13. வேகம் வேண்டும்

    14. க்ராஷ்!

    15. லப்டப் லாப்டாப்

    விண்டோஸ் 7

    என். சொக்கன்

    முன்னுரை

    நான் பதினைந்து வருடங்களாகக் கம்ப்யூட்டர்களோடு குப்பை கொட்டிக்கொண்டிருக்கிறேன். இதுவரை விண்டோஸ்தவிர இன்னோர் ஆபரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்தியது கிடையாது.

    ஆனால் இத்தனைக்குப்பிறகும், நான் விண்டோஸ் ரசிகனாக இல்லை. 'பழகிவிட்டது. அதனால் தொடர்கிறேன். வேறு எதையும் முயன்று பார்க்கச் சோம்பேறித்தனம்' என்பதுமாதிரி ஓர் உறவுதான்.

    சென்ற வருடம் 'விண்டோஸ்7' அறிமுகமானபோதுதான், முதன்முறையாக இந்தக் கணக்கு மாறியது. கம்ப்யூட்டர் என்பது பேனா, பென்சில்போல ஒரு டிஜிட்டல் எழுதுபொருள் என்கிற அபிப்ராயத்தில் இருந்த நான், முதன்முறையாக அதை ஒரு மயிலிறகைப்போல் பார்க்க ஆரம்பித்தேன்.

    நிஜமாகவே, 'விண்டோஸ்7' எனக்கொரு கலைப்படைப்பைப்போல் தென்பட்டது. அதற்குமுன் வந்த விண்டோஸ் வடிவங்கள் அனைத்தும் கம்ப்யூட்டரின் பலத்தையும் சுலப சாத்தியங்களையும்தான் முன்னிறுத்தின. ஆனால் 'விண்டோஸ்7' தினசரி கம்ப்யூட்டர் பணிகளை உறுத்தாத ஒரு விஷயமாக்கிக்கொள்வதை நோக்கமாகக் கொண்டிருந்தது.

    உதாரணமாக, பழைய விண்டோஸ் வடிவங்களில் கூடுதல் சாஃப்ட்வேர்களைப் போட்டால்தான் அவை முழுமையடையும். ஆனால் 'விண்டோஸ்7' அநேகமாகச் சகலத்தையும் தன்னுள்ளேயே வைத்திருந்தது. வேறு எந்த ப்ரொக்ராமையும் அதில் இன்ஸ்டால் செய்யாமல் மைக்ரோசாஃப்ட் கொடுத்திருக்கும் வசதிகளைமட்டுமே பயன்படுத்தினால்கூடப் போதும் என்று எண்ணுகிற அளவுக்கு ஒரு முழுமை பெற்ற ஆபரேட்டிங் சிஸ்டமாக நான் இதை நினைக்கிறேன்.

    ஆனால், இன்றைக்கு 'விண்டோஸ்7' அடைந்திருக்கிற உயரங்களை 'மேகின்டோஷ்' எப்போதோ தொட்டுவிட்டது என்று சொல்கிறவர்கள் உண்டு. 'விண்டோஸ்7' உடன் ஒப்பிடும்போது 'லைனக்ஸ்' கணினிகளில் செலவு குறைவு, பாதுகாப்பு அதிகம், வசதிகள் அதிகம் என்று பட்டியல் போடுகிறவர்களும் உண்டு.

    இவர்கள் எல்லோர் சொல்வதும் உண்மையாக இருக்கலாம். ஆனால் அதேசமயம் உலகில் பெரும்பான்மைக் கம்ப்யூட்டர்களில் இன்னும் விண்டோஸ்தான் ராஜா எனும்போது, அதில் ஏற்பட்டுள்ள ஒரு மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டாடவேண்டாமோ?

    அதுதான் இந்தப் புத்தகத்தின் நோக்கம். உங்களிடம் உள்ள 'விண்டோஸ்7' கணினியை எப்படி முழுமையாக உபயோகப்படுத்திக்கொள்வது, அதில் உள்ள சவுகர்யங்கள் என்னென்ன, அவை ஒவ்வொன்றையும் எப்போது, எப்படிப் பயன்படுத்துவது, விண்டோஸ்7ஐத் தாக்கக்கூடிய ஆபத்துகள் எவை, அவற்றிலிருந்து பராமரித்துக்கொள்வது எப்படி என்று எல்லா விஷயங்களையும் இங்கே உதாரணங்களோடு எளிமையாகச் சொல்ல முயன்றிருக்கிறோம்.

    ஒருவேளை உங்களிடம் 'விண்டோஸ்7' கணினி இல்லாவிட்டால்?

    'விண்டோஸ்7'க்கு முன்னால் 'விண்டோஸ் விஸ்டா' என்று ஓர் ஆபரேட்டிங் சிஸ்டம் வந்தது. இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் பெரும்பாலான விஷயங்கள் அதற்கும் பொருந்தும். சில சிறிய மாற்றங்கள் இருக்கும். அவ்வளவுதான்.

    இதன் அர்த்தம், 'விண்டோஸ் விஸ்டா'வுக்கு முந்தின கணினி ஒன்றை நீங்கள் வைத்திருந்தால் இந்தப் புத்தகம் உங்களுக்குப் பயன்படாது. அதற்கு நீங்கள், நான் எழுதிக் கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள 'கம்ப்யூட்டர் கையேடு' என்ற புத்தகத்தை வாங்கலாம்.

    அதைவிட பெட்டர், 'விண்டோஸ்7'க்கு மாறிவிடலாம். ஒரே ஒருமுறை இந்த டிஜிட்டல் மயிலிறகில் எழுதிப் பாருங்கள், அதன்பிறகு பேனா, பென்சிலைத் தொடவேமாட்டீர்கள், நான் கேரண்டி!

    என்றும் அன்புடன்,

    என். சொக்கன்,

    பெங்களூரு.

    1. கைவைத்தியம்

    டாக்டர்களும், க்ளினிக்குகளும், ஆஸ்பத்திரிகளும், ஸ்கேன் சென்டர்களும் கண்டுபிடிக்கப்படாத அந்தக் காலம். நம் உடம்புக்கு உள்ளே, வெளியே முளைக்கிற எந்த வியாதிக்கும், உபாதைக்கும் மருத்துவம் பார்க்கத் தனி ஆளெல்லாம் தேவைப்படவில்லை. வீட்டுக்கு உள்ளே, வெளியே உள்ள பொருள்களே மருந்துகளாக உருமாறின. கைவைத்தியம் இப்படிப் பல பிரச்னைகளைத் தீர்த்துவைத்திருக்கிறது.

    இப்போதும், தலைவலி, ஜுரம், காய்ச்சல் என்றால் கைவைத்தியம் போதும் என்று இருந்துவிடுகிறவர்கள் உண்டு. அதற்கு நேர் எதிராக, ஒரு சாதாரணப் பிரச்னைக்குக்கூட டாக்டரிடம் போய், 'எதுக்கும் ஒரு சின்ன இஞ்செக்ஷன் போட்றுங்க, ப்ளீஸ்' என்று கெஞ்சுபவர்களும் இருக்கிறார்கள்.

    இந்த இரண்டுக்கும் நடுவே, சின்ன பிரச்னைகளுக்குக் கைவைத்தியம் போதும், ஒருவேளை அது கைமீறிப் போய்விட்டால் டாக்டரைப் பார்த்துக்கொள்ளலாம் என்பது பெரும்பான்மைக் கட்சி.

    கம்ப்யூட்டர் பிரச்னைகளும், கிட்டத்தட்ட இதேமாதிரிதான்.

    நம்முடைய வீட்டு(அல்லது அலுவலக)க் கம்ப்யூட்டரில் ஏற்படுகிற பெரும்பாலான தொல்லைகளை உடனுக்குடன் தீர்ப்பதற்கு மிக எளிய வழிகள் இருக்கின்றன. இதற்கு நீங்கள் கணினி அறிவியல் படித்தவராக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. யார் வேண்டுமானாலும் சுலபமாகப் படித்துப் புரிந்துகொண்டு பின்பற்றக்கூடிய உத்திகள் இவை.

    ஒருவேளை, பிரச்னை ரொம்பப் பெரிதாகிவிட்டால்? அப்போது கம்ப்யூட்டர் டாக்டரைப் பார்க்கப்போகலாம். எதற்கெடுத்தாலும் அவர்களிடம் கம்ப்யூட்டரைத் தூக்கிக்கொண்டு ஓடினால் நேரமும் வீண், அநாவசியமாகப் பணமும் விரயமாகும்.

    அதற்கெல்லாம் மேலாக, ஒரு விஷயம் நம் வீட்டில் இருக்கிறது என்றால் நம்மளவில் நாம் அதை மாஸ்டர் செய்துகொள்ளவேண்டியது கட்டாயம், அதற்காக இன்னொருவரைச் சார்ந்திருந்தால், அந்தக் கம்ப்யூட்டரின் முழுப் பலன்களை நம்மால் அனுபவிக்கவேமுடியாது.

    இந்தப் புத்தகம், உங்களுடைய 'விண்டோஸ் 7' வகைக் கம்ப்யூட்டர்களைப் புரிந்துகொள்ள உதவும், ஒரு நல்ல கம்ப்யூட்டரை எப்படித் தேர்ந்தெடுத்து வாங்குவது என்பதில் ஆரம்பித்து, அதைப் பயன்படுத்தும் முறை, அதில் ஏற்படக்கூடிய பொதுவான வியாதிகளுக்கு மருந்து சொல்லித்தரும், கூடுதலாகப் படித்துத் தெரிந்துகொள்ள எங்கே போகலாம் என்று வழிகாட்டும்.

    உங்களுடைய வசதிக்காக, இங்குள்ள விவரங்கள், உத்திகளைப் பல தலைப்புகளின்கீழ் தொகுத்திருக்கிறோம். உதாரணமாக, ஆடியோ, வீடியோ பிரச்னைகள் அனைத்தும் 'மல்ட்டிமீடியா' என்கிற அத்தியாயத்தின்கீழ் இருக்கும், இதேபோல், இன்டர்நெட், ஈமெயில் சமாசாரங்களுக்குத் தனி அத்தியாயம், ப்ரின்டர், ஸ்கானர்போன்ற துணைப் பொருள்களுக்குத் தனி அத்தியாயம், கம்ப்யூட்டர் மெதுவாக இயங்கினால் என்ன செய்வது என்று ஓர் அத்தியாயம், .. இப்படிப் பிரித்துத் தொகுத்திருப்பதால் நீங்கள் உங்களுக்கு வேண்டியதைச் சட்டென்று தேடிப் பிடிக்க வசதியாக இருக்கும்.

    அதேசமயம், இந்தப் புத்தகம் கம்ப்யூட்டர் எப்படி இயங்குகிறது, அதில் ப்ரொக்ராம் எழுதுவது எப்படி என்பதுபோன்ற டெக்னிகல் விஷயங்களை விளக்குவதற்காக எழுதப்படவில்லை. பொதுப் பிரச்னைகளை விவரித்துத் தீர்வு சொல்லும்போது உங்களுக்கு எந்த அளவு தெரியவேண்டுமோ, அந்த அளவுமட்டும் அடிப்படை விஷயங்கள் விளக்கப்படும். அநாவசியக் குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக இப்படி ஒரு வழிமுறையைக் கையாண்டிருக்கிறோம்.

    இந்தக் காரணத்துக்காகவே, 'கணினி' போன்ற பொது வழக்கத்தில் உள்ள சில வார்த்தைகளைத்தவிர, மற்ற கலைச் சொற்களைப் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே பயன்படுத்தியிருக்கிறோம். அவற்றுக்கு உரிய தமிழ்ச் சொற்களை அடைப்புக்குறிக்குள் தந்திருக்கிறோம். வருங்காலத்தில் இவற்றுக்கான தமிழ்ச் சொற்கள் பரவலாக எல்லோராலும் பயன்படுத்தப்படுகிற நேரத்தில், ஆங்கிலத்தை அடைப்புக்குறிக்குள் நகர்த்திவிடலாம். அதுவரை, மொழிபற்றி உணர்ச்சிவசப்படாமல் விஷயத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

    நீங்கள் இந்தப் புத்தகத்தை வரிசைக்கிரமமாகப் படிக்கலாம், அல்லது எந்த சாப்டரில் வேண்டுமானாலும் தொடங்கிப் படிக்கலாம். அல்லது அப்படியே மூடிக் கம்ப்யூட்டர் ஷெல்ஃபில் வைத்துவிட்டு அவசரமாக ஒரு பிரச்னை என்றால்மட்டும் எடுத்துப் பார்க்கலாம்.

    உங்களுக்கு இது ஒரு நல்ல தோழனாக, கம்ப்யூட்டரின் ஆயுளை, பயன்பாடுகளை நீட்டிக்கும் கையடக்க மருத்துவராக இருக்கும் என நம்புகிறோம். உள்ளே போவோமா?

    2. கம்ப்யூட்டர் வாங்குவது

    கம்ப்யூட்டர் வாங்குவதாக முடிவெடுத்துவிட்டீர்களா? வாழ்த்துகள்!

    கடைக்குச் சென்று பிஸ்கட் வாங்குவதற்கும், கம்ப்யூட்டர் வாங்குவதற்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் உண்டு. இங்கே ஒன்றுக்கு மேற்பட்ட சாத்தியங்கள் இருக்கின்றன. ஆகவே முடிவெடுப்பது கொஞ்சம் சிக்கலாகிவிடுகிறது.

    உதாரணமாக, இன்றைய தேதிக்குக் கம்ப்யூட்டர் வாங்க நினைக்கும் ஒருவர் தன்னைத்தானே கேட்டுக்கொள்ளவேண்டிய சில கேள்விகள்:

    டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் (மேஜைக் கணினி) வாங்கலாமா? அல்லது லேப்டாப்(மடிக்கணினி)பா? டாப்ளட் கம்ப்யூட்டர் என்கிறார்களே, அது என்ன?

    புதுசு வாங்கலாமா? அல்லது பழையது / செகண்ட் ஹேன்டா?

    நல்ல நிறுவனத் தயாரிப்பாகப் பார்த்து வாங்கலாமா? அல்லது உள்ளூர்த் தயாரிப்பு போதுமா?

    விண்டோஸா, லைனக்ஸா, வேறு ஆபரேட்டிங் சிஸ்டமா?

    கம்ப்யூட்டரோடு என்னவெல்லாம் வாங்கவேண்டும்?

    கம்ப்யூட்டர் வாங்கியபிறகு அதற்குப் பராமரிப்பு ஒப்பந்தம் (Maintenance Contract) தேவையா? வேண்டாமா?

    இப்போது வாங்கலாமா? அல்லது, கொஞ்ச நாள் பொறுத்திருந்தால் விலை குறையுமா?

    இந்தக் கேள்விகள் எதற்கும் இதுமட்டும்தான் சரியான பதில் என்று சொல்லமுடியாது. சூழ்நிலையைப்பொறுத்து நாம் எடுக்கிற முடிவு மாறுபடும். ஒவ்வொரு கேள்வியாக எடுத்துக்கொண்டு விரிவாகப் பேசுவோம்.

    1. டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் வாங்கலாமா, அல்லது லேப்டாப்பா, அல்லது டாப்ளட் கம்ப்யூட்டரா?

    முதலில், மேஜைக் கம்ப்யூட்டருக்கும் லேப்டாப்புக்கும் என்ன வித்தியாசம்?

    அடிப்படையில் இரண்டுமே கணினிகள்தான். இரண்டும் ஒரே வேலையைச் செய்யக்கூடியவைதான்.

    ஆனால், ஒரு மேஜைக் கணினியையோ, மடிக்கணினியையோ பிரித்துப் பார்த்தால், நமக்குப் பெரிய வித்தியாசங்கள் தெரியும். அவை ஒரேமாதிரியான கடமைகளைச் செய்தாலும்கூட, உள்ளே பயன்படுத்தப்பட்டிருக்கும் எலக்ட்ரானிக் சில்லுகளின் தன்மை வெகுவாக வேறுபடுகிறது.

    ஏனெனில், மேஜைக் கணினி எங்கேயும் நகராது. அதில் நன்கு கனமான பாகங்களைப் பயன்படுத்தலாம். ஒரு சிப் செய்யவேண்டிய வேலைக்கு நாலு சிப்களைக்கூட நிறுத்திவைக்கலாம்.

    ஆனால் மடிக்கணினி அப்படி இல்லை. நாலு இடத்துக்குத் தூக்கிக்கொண்டு போகவேண்டிய பொருள் என்பதால் லேசான, அதிக எடை கூட்டாத உள் பாகங்களைப் பயன்படுத்தவேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதற்குக் கூடுதல் செலவு பிடிக்கிறது.

    இதனால்தான், ஒரு மேஜைக்கணினியைவிட, அதே செயல்திறன் கொண்ட, அதே பணியைச் செய்யக்கூடிய மடிக்கணினி விலை அதிகமாக இருக்கிறது. இந்த வித்தியாசத்தை நாம் முதலில் புரிந்துகொள்ளவேண்டும்.

    ஆக, நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரைப் பல இடங்களுக்குக் கொண்டுசெல்லப்போவதில்லை என்றால், மேஜைக்கணினி வாங்குவது சிக்கனம். கொஞ்சம் செலவு ஆனாலும் பரவாயில்லை, நான் என் கம்ப்யூட்டரை ஹாலில், மாடிப்படியில், பாத்ரூமில், பக்கத்துப் பூங்காவில் பயன்படுத்த விரும்புகிறேன், நாலு பேரிடம் எடுத்துச்சென்று எனது படைப்புகளைக் காட்டிப் பெருமைப்படப்போகிறேன் என்றால், லாப்டாப்பே சவுகர்யம்.

    இன்னொரு விஷயம், மேஜைக் கணினியில் மானிட்டர் (திரை), கீபோர்ட் (விசைப்பலகை), மவுஸ் (சுட்டி), ப்ராஸஸர் என்று தனித்தனி பாகங்கள் உண்டு. லாப்டாப்பில் இவை அனைத்தும் ஒன்றாக இணைந்து ஒரே பெட்டியில் அடங்கிவிடும்.

    ஆகவே, இட நெருக்கடி உள்ளவர்கள் (ஹாஸ்டல்மாதிரி இடங்களில் தங்கியிருப்பவர்கள்) மடிக்கணினியை விரும்புகிறார்கள். இதனைச் சுத்தப்படுத்துவது, நகர்த்துவது ரொம்பச் சுலபம்.

    அதேசமயம், லாப்டாப்பைத் திருடுவதும் மிக எளிது. கொஞ்சம் கவனமாக இல்லாவிட்டால் கணினியைப் பறிகொடுத்துவிட்டு விழிக்கவேண்டியதுதான்.

    கவலைப்படாதீர்கள். மடிக்கணினிகளைப் பாதுகாக்க இப்போது அழகான சங்கிலிப் பூட்டுகள் வந்துவிட்டன. ரயிலில் பெட்டிகளைப் பாதுகாக்கப் பூட்டுகிறோமே, கிட்டத்தட்ட அதேமாதிரிதான். இவற்றைப் பக்கத்தில் இருக்கும் ஜன்னல் கம்பியிலோ, வேறு உறுதியான ஒரு பாகத்திலோ நுழைத்துப் பூட்டிவிட்டால், யாரும் உங்கள் லாப்டாப்பைத் தூக்கிக்கொண்டு ஓடிவிடமுடியாது!

    சமீபகாலமாக, லாப்டாப் வாங்க விரும்புகிறவர்களுக்கு ஒரு புதுக் குழப்பம்: 'என்னவோ நெட்புக் என்கிறார்களே, அதென்ன?'

    லாப்டாப்பை 'நோட்புக்' என்று குறிப்பிடுவார்கள், கிட்டத்தட்ட அதேமாதிரி சூட்டப்பட்ட ஒரு செல்லப் பெயர்தான் 'நெட்புக்'.

    ஒரு லாப்டாப்பையும் நெட்புக்கையும் அருகருகே பார்த்தால், சட்டென்று வித்தியாசம் சொல்வது எளிது. லாப்டாப்பைவிட நெட்புக் ரொம்பச் சின்னதாக இருக்கும், உள்ளே இருக்கும் எலக்ட்ரானிக் சில்லும் கொஞ்சம் செயல்திறன் குறைவு, மற்றபடி ரொம்ப நுணுக்கமாகப் பார்த்தாலொழிய இரண்டுமே ஒரேமாதிரிதான் இயங்கும்.

    'நெட்'புக் என்ற பெயருக்கான காரணம், இந்த வகைக் கம்ப்யூட்டர்கள் எப்போதும் இன்டர்நெட்டில் இணைந்து கிடப்பதாக ஓர் ஐதீகம். ஆகவே இவற்றில் தேவையில்லாமல் கண்ட சாஃப்ட்வேரை நிரப்பி இடத்தை அடைக்கமாட்டார்கள். தேவைப்பட்டால் இன்டர்நெட்டுக்குப் போய்ப் பயன்படுத்திக்கொள்வார்கள்.

    ஆனால் இதெல்லாம் அந்தக் கால நம்பிக்கை. இப்போது நெட்புக்ஸும் லாப்டாப்ஸுக்கு இணையான அளவில், செயல்திறனில் வர ஆரம்பித்துவிட்டன. இவை மிகக் குட்டி, எடை ரொம்பக் குறைவு என்பதால் எங்கும் தூக்கிச் செல்வது சுலபம். பாட்டரியும் அதிக நேரம் உழைக்கும்.

    ஒரே பிரச்னை, கீபோர்ட் குட்டி. நீங்கள் அதிக நேரம் டைப் செய்பவராக இருந்தால் கொஞ்சம் சிரமப்படுவீர்கள். அதேபோல் இதில் ரொம்ப ஹை பவர் வீடியோ கேமெல்லாம் ஆடுவது சிரமம். இதுமாதிரி ஒன்றிரண்டு குறைகளைத் தவிர்த்துப் பார்த்தால் நெட்புக் ரொம்ப சமர்த்து, விலையும் ரொம்பக் குறைவு பதினைந்தாயிரம் ரேஞ்சிலிருந்தே கிடைக்கிறது!

    சைஸை வைத்துப் பார்த்தால் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் என்பது டெஸ்ட் கிரிக்கெட்மாதிரி, லாப்டாப் கம்ப்யூட்டர் என்பது ஒரு நாள் கிரிக்கெட்மாதிரி, நெட்புக் 20:20மாதிரி!

    இதற்கு அடுத்தபடியாக, 10:10 என்று ஒரு கிரிக்கெட் வந்தால் எப்படி இருக்கும்? அதுதான் டாப்ளட் பிசி!

    'டாப்ளட்' என்றால் பலகை. ஒரு சின்னப் பலகை சைஸுக்கு இருக்கும் இந்தக் கம்ப்யூட்டர்களில் கீபோர்ட் கிடையாது, மவுஸ் கிடையாது, திரையைத் தொட்டு இயக்கவேண்டியதுதான். பாட்டுக் கேட்கலாம், வீடியோ பார்க்கலாம், இன்டர்நெட்டில் மேயலாம், ஈமெயில் பார்க்கலாம், அரட்டை அடிக்கலாம், எழுதலாம், படம் வரையலாம், கேம்ஸ் விளையாடலாம், புத்தகம் படிக்கலாம்,

    Enjoying the preview?
    Page 1 of 1