Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thakku Minnaley Thakku
Thakku Minnaley Thakku
Thakku Minnaley Thakku
Ebook83 pages57 minutes

Thakku Minnaley Thakku

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

திரு.ஆர்னிகா நாசர் அவர்கள் முதுகலை சமூகவியல் பட்டம், மருத்துவ நிர்வாகம் முதுகலை பட்டப்படிப்பு, வெகுஜன தொடர்பு முதுகலை பட்டப்படிப்பு, குற்றவியல் மற்றும் தடய அறிவியல் முதுகலை பட்டப்படிப்பு, வழிகாட்டல் மற்றும் ஆலோசனை முதுகலை பட்டப்படிப்பு, இளம் முனைவர் பட்டம், சமூகவியல் மருத்துவ மேலாண்மை நிர்வாகம்-முதுகலை பட்டம், பி.ஹெச்,டி ஆய்வும் செய்து வருகிறார்.
இவர் ஆயிரத்தை நெருங்கும் சிறுகதைகள், 150 நாவல்கள், 50 தொடர்கதைகள், நூறை நெருங்கும் தொகுப்புகள், ஒரு தொலைக்காட்சி தொடர், மூன்று வானொலி நாடகங்கள் 100 நேர்காணல்கள், 300 இலக்கிய மேடைப்பேச்சுகள், 100 விஞ்ஞான சிறுகதைகள், 200 இஸ்லாமிய சிறுகதைகள் மற்றும் ஒரு மொழிபெயர்ப்பு நாவல்களை எழுதியுள்ளார்.
இவரது குடும்பம் - மனைவி-வகிதா, மகள்-ஜாஸ்மின் மற்றும் மகன் - நிலாமகன் ஆவர். தற்போது சிதம்பரத்தில் வசித்து வருகிறார்.
Languageதமிழ்
Release dateFeb 9, 2017
ISBN6580111001876
Thakku Minnaley Thakku

Read more from Arnika Nasser

Related to Thakku Minnaley Thakku

Related ebooks

Related categories

Reviews for Thakku Minnaley Thakku

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thakku Minnaley Thakku - Arnika Nasser

    http://www.pustaka.co.in

    தாக்கு மின்னலே தாக்கு

    Thakku Minnaley Thakku

    Author:

    ஆர்னிகா நாசர்

    Arnika Nasser

    For more books

    http://www.pustaka.co.in/home/author/arnika-nasser-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    தாக்கு மின்னலே தாக்கு

    ஆர்னிகா நாசர்

    1

    எமல்டா அடுக்குமாடிக்குடியிருப்பின் மொட்டைமாடி.

    இரவாடை அணிந்த கதிரவன் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு வயது 28. உயரம் 178செ.மீ திராவிட நிறம். ஐஸிஐஸிஐ வங்கி கிளை ஒன்றில் மேலாளராக பணிபுரிபவன். தகுதி சார்ந்த பிரம்மச்சாரி.

    அவனது இடது கையில் மது கிண்ணம் இருந்தது. அதில் வெள்ளை ஒயின் நிரப்பப்பட்டிருந்தது. ஒயினை ஒரு ‘ஸிப்’ உட்கொள்வதும் ஸ்ட்ராபெர்ரி பழத்தை சிறிது கடித்துக் கொள்வதுமாக இருந்தான். ஒயினின் துவர்ப்பு பழத்தின் தித்திப்பு ஒரு புதிய கலாப்பூர்வ கூட்டணி. சிவப்பு ஒயின் குடிக்கும்போது துணைக்கு சோயாபீன்ஸ் மீல் மேக்கரை வைத்துக் கொள்வான். நண்பர்கள் கூட்டு சேர்ந்தால் ஸாம்பெய்ன் குடிப்பான்.

    விசேஷ பார்ட்டிகளில் ‘தெக்கீலா’ எடுத்துக் கொள்வான். அபூர்வசந்தர்ப்பங்களில் காக்டெய்ல் குடிப்பான்.

    -வானத்தை பார்த்துக்கொண்டிருந்த கதிரவன் நெற்றி சுருக்கினான். வானத்தில் நட்சத்திரங்களே இல்லை. பதிலாக மசமசப்பான கருநீல நிற வானமே காணக் கிடைத்தது. தூரத் திசையிலிருந்து ஒரு குளிர்காற்று தவழ்ந்து வந்தது. அது கதிரவன் முகத்தை முட்டிமோதி சென்றது. தலைகேசத்தை கோதிவிட்டு சென்றது.

    சில நொடிகள் தாமதத்தில் திரள்திரளாய் மழை மேகங்கள் வந்து குழுமின.

    இரவு நடன விருதிகளில் நடனப்பெண்கள் நெருக்கமாய் ஆடிக்கொண்டே புட்டங்களால் இடித்துக் கொள்வது போல மழை மேகங்கள் இடித்துக் கொண்டன.

    தொடர்ந்து மின்னல்கள் வெட்டின.

    சில மின்னல்கள் இடிகளை உற்பத்தி செய்யவில்லை.

    சில மின்னல்கள் இடிகளை உற்பத்தி செய்தன.

    வானத்தைக் கீறிக்கொண்டு இலை நரம்புகள் போல கோடுகள் கிழித்துக் கொண்டு தரை இறங்கின. ஆயிரம் டன் எடையுள்ள இரும்புகுண்டுகளை மழை மேகங்கள் தவறி விட்டன. அவை ‘பொங்கார்’ என எங்கோ விழுந்து பெரும் சப்தம் கிளப்பின.

    ஒயினை உறிஞ்சிக் கொண்டே மின்னல் வானில் அரங்கேற்றும் வர்ண ஜாலங்களை ஒலி வித்தைகளை ரசித்தான் கதிரவன்.

    வழக்கத்தை விட தீவிரமான ஒரு மின்னல் சரசரவென கிளைத்து 50000’F வெப்பத்தை உற்பத்தி செய்தபடியே கதிரவனின் நூறாவது மீட்டரில் சாட்டை சொடுக்கியது.

    ‘ஊஃப்!’

    நகரும் ஆயிரம் டெஸிபல் ஒலி நதிகள் சங்கமித்து இரண்டாயிரம் டெஸிபல் இடியாய் கதிரவனுக்கு நூறாவது மீட்டரில் பிக்பாங்கியது.

    தொடர்ந்து மின்னல்களும் இடிகளும் கதிரவனை வட்டம் அமைத்து கண்காட்சி நடத்தின.

    ‘ஓவ்!’

    கதிரவனின் ஒரு மனம் எச்சரித்தது. ‘முட்டாள்! இடிகளும் மின்னல்களும் உனக்கு மிக அருகில் பல விபரீதங்களை அரங்கேற்றி காட்டிக் கொண்டிருக்கின்றன. படமெடுக்கும் பாம்புக்கு அருகில் நின்று படமெடுக்கும் பாம்பின் அழகை ரசிக்கும் தவளை போல் ரசித்துக் கொண்டிருக்கிறாய். ஓடு கதிரவா ஓடு. உனது மனைக்கு ஓடு. இரு காதுகளில் பஞ்சை அடைத்துக் கொண்டு தூங்கு!’

    மறுமனம் கும்மாளித்தது. ‘இயற்கையின் வினோதங்களை கண்கூடாய் ரசிக்க இப்படி சந்தர்ப்பங்கள் சிலதான் அபூர்வமாய் அமையும். அதனை பார்க்காமல் ரசிக்காமல் கோழை போல் வீட்டுக்குள் ஒடுங்குவதா? மகனே ஆறிலும் சாவு நூறிலும் சாவு. வீரனுக்கு ஒரு மரணம் கோழைக்கு தினம்தினம் மரணம். நீ நின்று ரசியடா. தொடர்ந்து பெய்யப் போகும் மழையில் நனைந்து கொண்டே ஒயினை குடியடா!’

    Enjoying the preview?
    Page 1 of 1