Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thulla Thudikka
Thulla Thudikka
Thulla Thudikka
Ebook105 pages1 hour

Thulla Thudikka

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

திரு.ஆர்னிகா நாசர் அவர்கள் முதுகலை சமூகவியல் பட்டம், மருத்துவ நிர்வாகம் முதுகலை பட்டப்படிப்பு, வெகுஜன தொடர்பு முதுகலை பட்டப்படிப்பு, குற்றவியல் மற்றும் தடய அறிவியல் முதுகலை பட்டப்படிப்பு, வழிகாட்டல் மற்றும் ஆலோசனை முதுகலை பட்டப்படிப்பு, இளம் முனைவர் பட்டம், சமூகவியல் மருத்துவ மேலாண்மை நிர்வாகம்-முதுகலை பட்டம், பி.ஹெச்,டி ஆய்வும் செய்து வருகிறார்.
இவர் ஆயிரத்தை நெருங்கும் சிறுகதைகள், 150 நாவல்கள், 50 தொடர்கதைகள், நூறை நெருங்கும் தொகுப்புகள், ஒரு தொலைக்காட்சி தொடர், மூன்று வானொலி நாடகங்கள் 100 நேர்காணல்கள், 300 இலக்கிய மேடைப்பேச்சுகள், 100 விஞ்ஞான சிறுகதைகள், 200 இஸ்லாமிய சிறுகதைகள் மற்றும் ஒரு மொழிபெயர்ப்பு நாவல்களை எழுதியுள்ளார்.
இவரது குடும்பம் - மனைவி-வகிதா, மகள்-ஜாஸ்மின் மற்றும் மகன் - நிலாமகன் ஆவர். தற்போது சிதம்பரத்தில் வசித்து வருகிறார்.
Languageதமிழ்
Release dateFeb 9, 2017
ISBN6580111001877
Thulla Thudikka

Read more from Arnika Nasser

Related to Thulla Thudikka

Related ebooks

Related categories

Reviews for Thulla Thudikka

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thulla Thudikka - Arnika Nasser

    http://www.pustaka.co.in

    துள்ளத் துடிக்க

    Thulla Thudikka

    Author:

    ஆர்னிகா நாசர்

    Arnika Nasser

    For more books

    http://www.pustaka.co.in/home/author/arnika-nasser-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.     

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    துள்ளத் துடிக்க

    - ஆர்னிகா நாசர்

    1

    தூது வருமா? தூது வருமா? காற்றில் வருமா, கரைந்து விடுமா...? பாடல் வரிகளை சீழ்க்கையடித்தபடி தனது துப்பறியும் அலுவலகத்துக்குள் பிரவேசித்தான் டியாரா ராஜ்குமார். டியாரா கறுப்புநிற கார்ட்ராய்ட் பேண்ட்டும் தூயவெள்ளைநிற லீ ரெடிமேட் சட்டையும் அணிந்திருந்தான்.

    எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த தேஜிஸ்வினியை நோட்டமிட்டவாறே தனது இருக்கையில் அமர்ந்தான் டியாரா.

    என்ன டிடக்டிவ் அய்யா காலைலயே செம மூடுல இருக்காரு?

    மரணத்தின் கடைசிகணம் வரைக்கும் நான் செம மூடுலதான் இருப்பேன். அதுவும் பச்சைநிற மினி சுடிதாரில் வந்திருக்கும் உன்னை பார்த்ததும் மூடு பூச்சிமருந்து கலந்த பெப்ஸி கோக் குடிச்ச மாதிரி எக்குத்தப்பாய் பீரிடுகிறது!

    டியாரா தி இன்கார்ஜிபிள் டெவில்!

    சிரித்தான் டியாரா. ஏன் ரெண்டு நாளா ஆபிஸ் வரல தேஜி?

    வெளில சொல்ல முடியாத உபாதைகள்! நேற்று காலைதான் ரெகவர் ஆனேன்!

    தென்?

    ஏய் டியாரா நேத்து நைட் ஒரு அட்டகாசமான கனவு கண்டேன்ய்யா!

    என்ன கனவு. மாதவன் கூடவா ஷாம் கூடவா?

    யூ ஆர் எ அவுட்டேட்டட் மேன் டியாரா! மாதவன் முகத்தில கிழக்களை வந்து ரொம்ப நாளாய்டுச்சு. ஷாம் ஒரு துரதிஷ்டபய்யன்- வினித் மாதிரி. ஷாம் எந்த படம் நடிச்சாலும் புரடியூஸருக்கு ஒரு திருவோசு கேரண்டி

    ஸ்ரீகாந்த்தா?

    அய்ய அவன் சிரிச்சா சின்ன ஜனகராஜ் மாதிரி இருக்கான்!

    சிம்பு?

    சிம்பு தோல் சீவின மரவள்ளிக் கிழங்காட்டம் இருக்கான். இதுல 'கலக்குவேன் கலக்குவேன் ட்ரைனேஜைத்தான் கலக்குவேன் பாரு'ன்னு பாடிவேற கழுத்தறுக்கிறான்!

    தனுஷா?

    டீனேஜ் தயிர்வடை தேசிகன் ஓமக்குச்சி நரசிம்மன் மாதிரி இருக்கான். அவன் என் கனவுல வந்தா நான் அம்பேல் கண்ணா!

    உன் கனவுல வந்த நடிகன் சனியன் யாருன்னு நீயே சொல்லித்தொலை தேஜி சனியனே!

    டியாராவின் கோபத்தை ஒரக்கண்ணால் ரசித்தாள் தேஜி. ஜீவன்தான் என் கனவில் வந்தான்!

    யாரு 'காக்க காக்க'ல வில்லனா வந்தானே அவனா?. அந்த சடையனா?

    என்ன - சடையன் என்று இழிவாக பேசுகிறாய்! ஆண்டனியோ பாண்டரஸ் மாதிரி ஒரு ஆண்மை தெறிக்கும் அழகு ஜீவன்கிட்ட இருக்கு டியாரா. பாத்துக்கிட்டே இரு அடுத்த பத்து வருஷத்துக்கு தமிழ் சினிமாவை மகாராஜா போல் ஆளப் போறான் ஜீவன். என்ன உயரம், என்ன அகன்ற மார்புகள்!- என்ன ஒரு வித்தியாசமான குரல்!

    ஸ்டாப் ஸ்டாப் தேஜி. இந்த வர்ணனையே ஆபாசத்தின் எல்லை தாண்டுகிறது. உன் கனவில் வந்து ஜீவன் என்ன செய்தான்?

    சென்ஸார் பண்ணி சொல்லவா, பண்ணாம சொல்லவா?

    டியாராவின் கண்களில் பொறாமை மிளிர்ந்தது. சென்ஸார் பண்ணாமயே சொல்!

    ஜீவன் துப்பாக்கியுடன் வந்தான். என்னை பாத்து சுட்டான். அவனின் ஒவ்வொரு தோட்டாவுக்கும் எனது ஒவ்வொரு ஆடையும் தூள்தூளாய் சிதறின. எஞ்சியிருந்த ஒற்றை ஆடையை...

    கைகளை உயர்த்திக் கும்பிட்டான் டியாரா. இதுக்கு மேல ஒரு வார்த்தை சொல்லாத. நான் வெடிச்சு தூள்தூளா சிதறிடுவேன்!

    ஓ.கே டியாரா. எனது கனவினைப்பற்றி இனி ஒரு வார்த்தை கூற மாட்டேன். நேற்றிரவு நீ எதுவும் கனவு கண்டாயா?

    நான் கனவு காணாத இரவு ஏது?

    நேற்றைய கனவின் சிறம்பம்சம்?

    எனது கனவில் ஒரு தமிழ் ஹீரோயின் வந்தாள்!

    யாரந்த ஹீரோயின்?

    ஜெனிவ்!

    வந்து என்ன செய்தாள்?

    டியாரா. நீ ஆங்கில முத்தம் தருவதில் நிபுணனாமே-எனக்கு அக்கலையை கொஞ்சம் கற்றுத்தர முடியுமா? என்றாள்!

    நீ என்ன சொன்னாய்?

    கற்றுத்தருகிறேன். குருதட்சணை என்ன தருவாய்?-என்றேன்!

    ஒஹோ! அதற்கு அவள் என்ன சொன்னாள்?

    முத்தக்கலையைக் கற்றுத்தந்த பிறகு போதும் போதும் என்கிற அளவுக்கு ஆங்கில முத்தங்களை தட்சணையால் அள்ளித் தந்துவிட்டு போகிறேன். என்றாள்!

    அடடா- எவ்ளவு தாராளம் எவ்ளவு தாராளம்!

    ஜெனிவ்வை அருகில் இழுத்தேன். அவளது பின்னங்கழுத்தில் இடக்கை கோர்த்தேன்

    இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசாதே. இதுக்கு மேல நீ பேசுற ஒவ்வொரு வார்த்தையும் என் மீது வீசப்படுகிற தூண்டில்!

    போர்டிகோவில் ஒரு கறுப்பு நிற ஆடம்பரக்கார் சறுக்கி

    Enjoying the preview?
    Page 1 of 1