Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mohiniyin Kaadhal
Mohiniyin Kaadhal
Mohiniyin Kaadhal
Ebook327 pages2 hours

Mohiniyin Kaadhal

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

இந்த ‘மோகினியின் காதல்’ தமிழில் வெளிவரும் என்னுடைய இருபத்தைந்தாவது நாவல்.

பழைமைச் சிறப்பும், இலக்கிய வளமும் நிறைந்த தமிழ் மொழியில் எனது நாவல்கள் மொழிபெயர்க்கப்படுவதும், புத்தகமாக வெளியிடப்படுவதும் ஓர் எழுத்தாளன் என்ற முறையில் என்னைக் கெளரவிப்பதாகக் கருதுகிறேன்.

- கோட்டயம் புஷ்பநாத்

Languageதமிழ்
Release dateJan 6, 2017
ISBN6580103801777
Mohiniyin Kaadhal

Read more from Kottayam Pushpanath

Related to Mohiniyin Kaadhal

Related ebooks

Related categories

Reviews for Mohiniyin Kaadhal

Rating: 4.25 out of 5 stars
4.5/5

4 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mohiniyin Kaadhal - Kottayam Pushpanath

    http://www.pustaka.co.in

    மோகினியின் காதல்

    Mohiniyin Kaadhal

    Author:

    கோட்டயம் புஷ்பநாத்

    Kottayam Pushpanath

    Translated by:

    சிவன்

    Sivan

    For other books

    http://www.pustaka.co.in/home/author/kottayam-pushpanath

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    மோகினியின் காதல்

    முன்னுரை

    தமிழக வாசகப் பெருமக்களுக்கு முதலில் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    எண்பதுகளின் கடைசியில் நான் எழுதிய ‘பிரம்மரக்ஷஸ்’ என்ற நாவல் முதன்முதலாக ‘குங்குமச்சிமிழ்’ மாதஇதழில் தொடர்கதையாக வெளியானது. இந்த ‘மோகினியின் காதல்’ தமிழில் வெளிவரும் என்னுடைய இருபத்தைந்தாவது நாவல்.

    தொண்ணுற்றியொன்றில் (சரியாகச் சொன்னால் 23.12.91-13.7.92) மங்களம் (தமிழ்) பத்திரிகைக்காக ‘டெரர் டெத் டெவில்’ என்ற பெயரில் எனது 'யகூஷிமன' என்ற நாவலை மொழி பெயர்த்ததன் மூலமாக நண்பர் சிவன் எனக்கு அறிமுகமானார். அதன்பிறகு மோகினி, காதல் மந்திரம் என்று அடுத்தடுத்து அவர் மட்டுமே இருபது நாவல்களை மொழிபெயர்ப்புச் செய்திருக்கிறார். இருவருக்கும் என் நன்றி. இது பாக்யாவில் வெளியான ஐந்தாவது தொடர். ஜனவரி 16-22, 1998 முதல் 11-17, 1998 வரை 35 வாரங்கள் வெளியானது.

    இந்த வெற்றியின் பின்னணியில் உள்ள குங்குமச்சிமிழ் மங்களம், சாவி, இதயம் பேசுகிறது. பாக்யா, தமிழரசி, அமுதசுரபி, தமிழன் எக்ஸ்பிரஸ், எங்கள் தங்கம், சிங்கப்பூரிலிருந்து வெளியாகும் வானம்பாடி ஆகிய பத்திரிகைகளுக்கும் மேற்குறிப்பிட்ட பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் அவர்களுடன் பணிபுரியும் ஆசிரியர் குழுவினருக்கும் நான் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

    ‘மோகினி' நாவலை முதன் முதலாகப் புத்தகமாக வெளியிட்ட பாமா பதிப்பகம், தொடர்ந்து எனது புத்தகங்களை வெளியிடும் கங்கை புத்தகாலயம், திருமகள் நிலையம், பாரதி பதிப்பகம், நர்மதா பதிப்பகம், பூங்கொடி பதிப்பகம், கற்பகம் புத்தகாலயம் கலாநிலையம் ஆகியோருக்கும் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.

    பழைமைச் சிறப்பும், இலக்கிய வளமும் நிறைந்த தமிழ் மொழியில் எனது நாவல்கள் மொழிபெயர்க்கப்படுவதும், புத்தகமாக வெளியிடப்படுவதும் ஓர் எழுத்தாளன் என்ற முறையில் என்னைக் கெளரவிப்பதாகக் கருதுகிறேன்.

    பிரபல தமிழ் எழுத்தாளர்கள் எழுதிய குறிப்பிடத்தக்க நாவல்களின் மலையாள மொழிபெயர்ப்புகளை நான் ஓரளவுக்குப் படித்திருக்கிறேன். இந்தத் தருணத்தில் ‘மோகினியின் காதல்’ நாவலைப் புத்தகமாக்கி வெளியிடும் கலாநிலையம் சீனுவாசன் மூலமாக வாசகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதில் நிறைவடைகிறேன். தமிழக வாசகர்களின் ஆதரவு தொடரும் என்ற நம்பிக்கையுடன்…

    கோட்டயம் - 41

    தோழமையுள்ள,

    கோட்டயம் புஷ்பநாத்

    1

    அந்த கிராமத்துக்குச் செல்லும் பஸ்ஸில் ஏறி மிகவும் கடைசியிலிருந்த பின்ஸிட்டில் வலதுபுறமாக அமர்ந்தான்.

    அவனிடம் சற்றுப் பெரிதான சூட்கேஸ் ஒன்று மட்டுமே இருந்தது.

    வெள்ளை வெளேரென்ற டெரிகாட்டன் ஷர்ட்டும், அதே நிறத்திலான சற்றுக் கசங்கிய வேஷ்டியும் அணிந்திருந்தான்.

    பார்வைக்கு முப்பத்திரண்டு வயதை மதிப்பிடத் தோன்றும் அந்த இளைஞன், சுலபத்தில் எப்படிப்பட்ட வரையும் கவர்ந்துவிடும் முகத்தைப் பெற்றிருந்தான். அலட்சியமாக விடப்பட்டிருந்த தலைமுடியும், ஒளி பொருந்திய கண்களும், ஆரோக்கியமான, திடகாத்திரமான உடம்பும் அவனுக்கு ஒரு கம்பீரத்தை அளிக்கவே செய்தன.

    மாலை நேரம். ஐந்து மணிக்குமேல் ஆகிவிட்டிருந்தது. பகல் பொழுது குறைவாக இருந்த மாதமாக இருந்ததால், இருள் சுற்றுப்புறத்தில் பரவத் தொடங்கியிருந்தது. பஸ்ஸின் பெரும்பாலான இருக்கைகள் ஆட்களால் நிரப்பப்பட்டுவிட்டன. பஸ் புறப்படும்போது ஏறிக் கொள்ளலாம் என்று எண்ணிய சிலர் பஸ்ஸின் இடதுபுறம் வெளியே காத்திருந்தனர்.

    அவனுக்கு அருகில் வந்து அமர்ந்தவர் நடுவயதுக்காரர். உயர்ந்து, மெலிந்து, சிவந்த நிறத்துடனிருந்த அவர் நம்பூதிரியாக இருக்கவேண்டும். அவரது கையில் துணிப்பை ஒன்று இருந்தது.

    எங்க போறீங்க? நம்பூதிரி அந்த இளைஞனிடம் கேட்டார்.

    அவன், தான் இறங்கவேண்டிய இடத்தின் பெயரைச் சொன்னான்.

    நீங்க சொன்ன இடம் வரைக்கும்தான் இந்தப் பஸ் போகுது. அதுக்கப்புறமும் நீங்க பயணம் செய்ய வேண்டி இருக்குமோ?

    சுமாரா ஒன்றரை கிலோ மீட்டர் போக வேண்டி இருக்கும்.

    அப்படீன்னா இதுக்கு முன்னால நீங்க அங்க போனதில்லை, அப்படித்தானே?

    ஆமாம்... இப்பத்தான் முதல் தடவையா போறேன்.

    அங்க, நீங்க யாரைப் பார்க்கணும்?

    இடைக்காட்டுத் தறவாட்டுக்குப் போறேன்.

    அதைக் கேட்டதும் நம்பூதிரியின் முகத்தில் ஒரு பிரத்தியேக உணர்வு தோன்றியது. சந்தேகமும், நம்ப முடியாத தன்மையும் இணைந்து ஏற்படுத்திய ஒருவிதக் கலவை உணர்வு. அவனது பதிலைக் கேட்டு, அவனுக்கு முன்புற ஸிட்டில் இருந்தவர்கள் கூட ஒரு தடவை தலையைத் திருப்பி அவனைப் பார்த்தார்கள். பிறகு தங்களுக்குள் ரகசியம்போல் எதையோ பேசிக் கொண்டனர். மறுபடியும் அவனையே கவனிக்கத் தொடங்கினர்.

    அங்கே இப்போ யார் இருக்கிறாங்க? நம்பூதிரி யோசனையில் ஈடுபட்டுத் தன்னைத்தானே கேட்டுக் கொள்வதுபோல் மந்திரித்தார்.

    இப்போ அந்தத் தறவாட்டுல குஞ்ஞக்காவம்மா பாட்டிதான் இருக்கிறதா சொன்னாங்க!

    திருமேனியின் முகம் வர்ணனைக்கு அப்பாற்பட்டதாக விளங்கியது. மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்தார். பிறகு தன் கை விரல்களை மடக்கி என்னென்னமோ கணக்குகள் போட்டார்.

    அவனுக்கு முன்புறம் இருந்தவர்களும் சந்தேகம் விலகாத கண்களுடன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

    அவங்க இன்னுமா உயிரோட இருக்காங்க? நான் அரிச்சுவடி படிக்கப் போனப்பவே அவங்க ரொம்பவும் வயசான வங்களா இருந்தாங்க! எனக்கே இப்போ அறுபது வயசுக்கு மேல ஆயிடுச்சு. அப்படியே அவங்க உயிரோட இருந்தாலும் நூத்துநாற்பது வயசுக்குக் குறையாது! நம்பூதிரி இருக்கையிலிருந்து எழுந்து ஜன்னல் பக்கமாகத் தலையை நீட்டி தொண்டையைச் செருமித் துப்பிவிட்டு மறுபடியும் அமர்ந்தார்.

    உங்க பேரு?

    ஜயதேவன்.

    என்ன வேலை செய்றீங்க?

    குறிப்பிட்டுச் சொல்ற மாதிரி எனக்கு எந்த வேலையும் கிடையாது!

    அப்ப சொத்துபத்தெல்லாம் இருக்குற வீடாத்தான் இருக்கும். ஆமா, என்ன படிச்சிருக்கீங்க?

    எம்.ஏ. முடிச்சிருக்கேன். சம்ஸ்கிருதத்துல வித்துவான் பாஸாகி இருக்கேன்.

    அப்படீன்னா ஒரளவு விஷயம் தெரிஞ்சவர்தான்…

    டிரைவர் முன்புறக் கதவைத் திறந்துகொண்டு ஏறி அமர்ந்தார். வெளியே நின்றிருந்தவர்கள் திபுதிபுவென்று பஸ்ஸுக்குள் நுழைந்தனர். கண்டக்டர் பாதி ஏறியும் ஏறாமலும் விசிலடித்த் உடன் பஸ் புறப்படத் தொடங்கியது.

    மெயின் ரோட்டில் விரைந்த பஸ் ஏறத்தாழ ஆறு கிலோ மீட்டர் கடந்ததும் ஆற்றங்கரையோரமாக இடதுபுறம் திரும்பி நின்றது. பஸ்ஸிலிருந்த பாதிப் பேர் அங்கேயே இறங்கிக் கொண்டனர். அதற்குள் இருளும் முதிரத் தொடங்கியது. அந்த இடத்துக்குச் சுற்றிலுமிருந்த கடைகளில் விளக்குகள் எரியத் தொடங்கின.

    அதற்குப் பின்னர் பாதை மிகவும் மோசமாக இருந்தது. செப்பனிடப்படாத சாலை வழியாக பஸ் குலுங்கியபடி நகர்ந்தது.

    ரொம்பவும் மோசமான ரோடு. எத்தனையோ வருஷமா இப்படியேதான் கிடக்குது திருமேனி கூறினார்.

    பஞ்சாயத்து இருக்குதில்லையா?

    இருக்கு... இருக்கு... எல்லா வருஷமும் அவங்க வந்து கொஞ்சம் புல்லு வெட்டிட்டுப் போவாங்க. அவ்வளவுதான்!

    வெளிப்புறத்திலிருந்து புகை மண்டலம்போல் எழுந்த தூசி, வண்டிக்குள் படிந்து கொண்டிருந்தது.

    ஆங்காங்கே தொலைவில் தென்பட்ட வீடுகளில் மண்ணெண்ணை விளக்குகள் மங்கலாக எரிந்தன. நேரம் செல்லச் செல்ல வீடுகளுக்கு இடையேயுள்ள இடை வெளிகள் அதிகரித்துக் கொண்டே வந்தன.

    குறிப்பிட்ட ஓர் இடத்துடன் மின்விளக்கும் முற்றுப் பெற்றது. சற்று நேரத்தில் பஸ் நின்றது.

    அது ஒரு சிறிய கூட்டு ரோடு போல் இருந்தது. டீக்கடை ஒன்றும், அதையொட்டி சமாதி மாடம் ஒன்றும் தென்பட்டன. அங்கு ஏற்றி வைத்திருந்த தகரவிளக்கின் வெளிச்சம், அந்தப் பகுதியிலிருந்த இருட்டை விரட்டப் போராடிக் கொண்டிருந்தது.

    பஸ்ஸுக்குள் இருந்த மொத்தப் பேரும் இறங்கி விட்டனர். டிரை வரும் கண்டக்டரும் கூட வண்டியிலிருந்து இறங்கி டீக்கடைக்குள் நுழைந்தனர்.

    இது அவங்களோட தாவளம், அது டீ க்கடை மட்டுமில்ல, பட்டைச் சரக்கு விற்குற இடமும் கூட. அதனாலதான் வண்டியை நிறுத்தினதும் ஓடிட்டாங்க திருமேனி கூறினார்.

    அட... இந்தக் குக்கிராமத்துல கூடவா சாராயம் விற்கிறாங்க? ஜயதேவன் கேட்டான்.

    அந்தச் சாராயம் இல்லை இது. இவங்களா காய்ச்சி வடிக்கிற சரக்கு. இங்கே இருக்கிறவங்க நெல் அவிச்ச தண்ணின்னு சொல்வாங்க. எப்படிப்பட்ட பிசாசுங்க சாப்பிட்டாலும் தள்ளாட ஆரம்பிச்சுடுங்க. அவ்வளவு வலுவானது! திருமேனி, ஒரு துண்டுப் புகையிலையை உள்ளங்கைக்குள் வைத்துக் கசக்கியபடி பேசினார்.

    இன்னும் எவ்வளவு தூரம் போக வேண்டி இருக்கும்? ஜயதேவன் கேட்டான்.

    அதிகமாப் போனா மூணு மைல் இருக்கும். ரோடு, இதுவரைக்கும் வந்ததைவிட ரொம்பவும் மோசமா இருக்கும். ரெண்டு இடத்துல பெரிய பள்ளமே இருக்கு. இந்த பஸ் அதில இறங்கித்தான் போகும்.

    எப்படி இருந்தாலும் அவ்வளவு தூரத்துக்கு பஸ் போறது நல்லதாப் போச்சு! என்ற ஜயதேவன், குளிருக்கு இதமாக சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்துக் கொண்டான்.

    ஆளுக்கு ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு டிரைவரும் கண்டக்டரும் திரும்பி வந்தனர். தொடர்ந்து பயணம் செய்ய மொத்தமே வண்டியில் ஏழு பேர்தான் இருந்தனர்.

    ஆற்றங்கரையை ஒட்டியே பஸ் ஓடிக் கொண்டிருந்தது. வலதுபுறம் ஆறும் இடதுபுறம் வயற்காடுகளும் தென்பட்டன. வயல்வெளிகளைத் தாண்டிக் குன்றுகள் நின்று கொண்டிருந்தன. ஜன நடமாட்டமே இல்லை. அந்தப் பகுதியில் ஆட்கள் வசிப்பதற்கான அடையாளம் எதுவும் தட்டுப்படவில்லை.

    திருமேனி எங்கே போறீங்க? பக்கத்திலிருப்பவர் பேசியதைக் கொண்டும் அவர் பூணுரல் அணிந்திருப்பதைப் பார்த்ததும் அவர் நம்பூதிரிதான் என்பதை ஜயதேவன் புரிந்து கொண்டிருந்தான்.

    நீங்க போற இடத்துக்குப் பக்கத்துலதான் நானும் போகணும். அதாவது நீங்க போகுற இடத்துலேர்ந்து மூணு மைல் போகனும். இன்னும் தெளிவாச் சொல்லணும்னா ஒரு குன்றுல ஏறி இறங்கணும். அதோ இருக்கிற மூணு பேரும் என் வீட்டுக்குப் பக்கத்தில இருக்கிறவங்கதான். எனக்குத் துணையா இருக்காங்க. நீங்கதான் தனியாப் போக வேண்டி இருக்கும். அந்தப் பாதையில எந்த மனுஷனையும் பார்க்க முடியாது. அங்கேயெல்லாம் யாரும் குடியிருக்கிறதாவும் தோணலை!

    திருமேனியின் பேச்சும், அதுவரை தனக்கு முன்னாலிருந்து பயணம் செய்பவர்களின் முகத்தில் தென்பட்டஉணர்வுகளும், ஜயதேவனின் மனத்திலிருந்த சில தீர்மானங்களை உறுதிப்படுத்தின.

    தனியாப் பயணம் செய்யுறது உங்களுக்குக் கஷ்டமா இருந்தா, எங்ககூட வரலாம். நாங்க போற பாதை ரொம்ப மோசமா இருக்கும். சுத்துப்பாதையும்கூட. அதனாலதான் நான் உங்களை எங்ககூட வரச் சொல்லி வற்புறுத்தலை, சரி, நான் ஒருமாற்று ஏற்பாடு செஞ்சு தர்றேன்! என்ற திருமேனி தனது துணிப்பையிலிருந்து சற்று நீளமான நூலைப் பிரித்து எடுத்து நாலாக மடக்கினார். அதை உதட்டோடு சேர்த்து வைத்து, கண்களை மூடி எதையோ முணுமுணுத்தபடி நாலைந்து முடிச்சுகள் போட்டார்.

    உங்க வலது கையைக் காட்டுங்க. திருமேனி கேட்டுக் கொண்டார்.

    ஜயதேவன் கையை நீட்டினான். திருமேனி அந்த நூலை அவனது கையின் மேற்பகுதியில் கட்டிவிட்டார்.

    எப்படி இருந்தாலும் இது உங்களுக்கு ஒரு பாதுகாப்பா இருக்கும். சாமான்யமான எதுவும் உங்களை நெருங்க முடியாது. திருமேனி, ஜயதேவனுக்கு தைரியம் ஊட்டினார்.

    ஜயதேவன், அவர் கட்டிய 'ரக்ஷை’யைப் பார்த்தான். தான் நினைத்தபடியே விஷயம் விபரீதம்தான் என்பது அவனுக்குப் புரிந்தது. ஆவிகள் மற்றும் பிசாசுகள் இருக்கும் இடத்துக்குத்தான் போகிறோம். தான் வாசித்துத் தெரிந்துகொண்ட புராதனமான ஏடுகளில் சொல்லியிருப்பதை இன்னமும் நம்புகிறவர்கள் இருக்கிறார்கள். அந்த பஸ் பயணமே அதற்கு அத்தாட்சியாக விளங்கியது.

    பஸ் ஒரு மேட்டில் ஏறி இறங்கியது. தண்ணீர் ஓடும் சத்தம் தெளிவாகக் கேட்டது. குறைந்தபட்சம் கெண்டைக்கால் அளவுள்ள தண்ணிரிலாவது பஸ் ஓடிக் கொண்டிருக்க வேண்டும். பஸ் நிலப்பகுதிக்கு வந்தபிறகு மீண்டும் அதே மாதிரி சத்தம் கேட்டது.

    'நிலா உதிச்சிட்டதால, நீங்க பாதையைப் பார்த்து நடந்துடலாம்."

    அதோ நிக்குது பாருங்க ஒரு ஆலமரம். அதுக்குக் கீழே பஸ் நின்னுடும். மரத்தை ஒரு சுத்துச் சுத்தி பஸ் திரும்பி வந்துடும். நாம வரும்போது பார்த்த டீக்கடைக்கு முன்னாலதான் ராத்திரியெல்லாம் பஸ் கிடக்கும். பஸ் நின்னவுடனே நாங்க எங்க பாதையில புறப்பட்டு டுவோம். உங்களுக்கு பயமில்லையே?

    இல்லைங்க... நான் போய்க்கிறேன். ஜயதேவன் பதிலளித்தான்.

    பஸ் நின்றது. சக பயணிகள், டிரைவர்-கண்டக்டர் எல்லோரும் ஜயதேவனைப் பார்த்தார்கள்.

    ராத்திரி நேரமானதால நான் உங்ககிட்ட விடை பெத்துக்க முடியலை… திருமேனி, ஜயதேவனின் வலதுகையை ஒரு தடவை அழுத்திப் பிடித்துவிட்டுத் தமது ஆட்களுடன் நடக்கத் தொடங்கினார்.

    டிரைவரும் கண்டக்டரும் எதுவும் பேசாமல், ஆலமரத்தைச் சுற்றிக்கொண்டு பஸ்ஸைக் கொண்டுபோனார்கள்.

    ஜயதேவன் தனியாகிப் போனான்.

    அந்தப் பகுதியில் நிறைந்து பரவியிருந்த அமைதியைக் கிழித்துக்கொண்டு ஆலிலைகள் மென்மையாகச் சலசலத்தன. காற்றே இல்லாதபோதும் ஆலிலைகள் மட்டும் அசையும் என்ற விஷயம் அவனுக்கு ஞாபகம் வந்தது. உண்மையில் அப்போது அந்தப் பகுதியில் காற்றே வீசவில்லை!

    நிலவு குன்றின் மேற்புறம் வந்துவிட்டிருந்தது. அதன் ஒளியும், அது ஏற்படுத்திய நிழல்களும் இணைந்து படைத்த விளக்கமுடியாத ஒரு சூழ்நிலை அந்தப் பகுதி முழுவதும் பரவியிருந்தது.

    ஜயதேவன் தனது சூட்கேஸை எடுத்துக்கொண்டு முன்புறம் தென்பட்ட ஒற்றையடிப் பாதையில் நடக்கத் தொடங்கினான். பாதையின் இருபுறமும் புதர்கள் அடர்த்தியாக வளர்ந்திருந்தன. அதையும் தாண்டி நெருக்கமாக வளர்ந்திருந்த உயர்ந்த மரங்கள், அந்தப் பகுதியைப் பெருங்காடாக மாற்றிவிட்டிருந்தன. இலைகளின் இடைவெளி வழியாகத் தரையைத் தொட்டநிலவொளிக் கீற்றுகள் ஆங்காங்கே வெளிச்சப் பொட்டுகளை விதைத்திருந்தன. ஓர் இலை உதிர்ந்து தரையில் விழுந்தால் கூட, ரத்தமே உறைந்து போவது போன்ற அமாஷ்னுயமான சூழ்நிலை.

    புறப்படும்போது சேகரித்து வைத்திருந்த தைரியமெல்லாம் வழியிலேயே வடிந்து போய்விட்டதோ என்றுகூட ஜயதேவன் சந்தேகித்தான். எனினும் திருமேனி மந்திரித்துக் கையில் கட்டிவிட்ட சரடு, தைரியத்தை ஊட்டியது.

    நடந்துகொண்டே இருந்தும் கால்கள் முன்புறமாக நகராததுபோல் தோன்றியது ஜயதேவனுக்கு.

    வழியில் எந்தவொரு மனிதரும் தட்டுப்படவில்லை. திருமேனி சொன்னது உண்மைதான்.

    ஏறத்தாழ அரை கிலோ மீட்டர் தூரம் நடந்திருப்பான். அப்போது மரங்கள் எதுவுமில்லாத ஒரு பகுதியில் நிலவொளி எந்தவிதத் தடையுமில்லாமல் மண்ணில் பதிந்து கொண்டிருப்பது தெரிந்தது.

    ஊன்றிப் பார்த்தபோது அங்கு யாரோ நின்று கொண்டிருப்பது போல ஜயதேவனுக்குத் தோன்றியது. யாரையோ எதிர்பார்த்துக் காத்திருப்பது மாதிரியும் தெரிந்தது.

    அது ஒரு பெண் உருவம், வெண்மையான உடை அணிந்திருந்தது. தலையில் அடர்த்தியான கூந்தல்.

    அவள் நின்று கொண்டிருப்பதற்குப் பின்னால் ஒரு சிறிய வீடு தென்பட்டது. இருளால் படைக்கப்பட்டது மாதிரி இருந்தது அது.

    அதன் அருகிலேயே ஒரு பெரிய மரம் இருந்தது.

    ஜயதேவன் நெருங்கியபோது அந்த உருவம் அவனை நோக்கித் திரும்பியது.

    உலகத்திலுள்ள மொத்த அழகுகளையும் குழைத்தெடுத்துப் படைத்தது போன்ற ஒரு பெண்ணுருவம்,

    குஞ்ஞுக்காவம்மா வீட்டுக்குத்தானே போறீங்க?- அவள் ஜயதேவனைப் பார்த்துக் கேட்டாள்.

    அவள் குரலில் என்னவோ ஒரு பிரத்தியேகத் தன்மை இருப்பது போல் அவனுக்குத் தோன்றியது. ரோமக் கால்களில் தளர்ந்து படுத்திருந்த ரோமங்கள் சட்டென்று விறைத்து நிமிரத் தொடங்கின. மேனி சிலிர்ப்பதை அவன் உணர்ந்தான்.

    திரும்பிப் பார்த்தபோது அவள், அவனுக்குப் பின்னால் மிகவும் நெருக்கத்தில் நின்றுகொண்டிருந்தாள்.

    2

    யாருன்னு தெரியலையே? பின்புறம் மிகவும் நெருக்கத்திலிருந்து பெண் குரல் கேட்டது.

    என் பெயர் ஜயதேவன். அந்தத் தறவாட்டைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கேன். ஒரு தடவை பார்த்துட்டுப் போகலாம்னு வந்திருக்கேன். உங்க பேரு என்னன்னு இன்னும் நீங்க சொல்லலையே? அவன் கேட்டான்.

    பஞ்சமி.

    உங்க வீடு எங்கே இருக்குது?

    இங்க... பக்கத்துலதான்!

    அப்படீன்னா?

    நீங்க போறீங்களே, அதுக்குப் பக்கத்துலதான்.

    அப்பா-அம்மாவெல் லாம் கூடவே இருக்கிறாங்க இல்லையாம்மா?

    ஏன்… என்னைப் பஞ்சமின்னு கூப்பிடக் கூடாதா?

    கூப்பிட்டாப் போகுது! பஞ்சமிகூட யாரெல்லாம் இருக்காங்க?

    எல்லாருமே இருக்காங்க…

    இப்படி மொட்டையா சொன்னா?

    எல்லாரும் இருக்காங்கன்னு அர்த்தம்!

    இந்த ராத்திரி வேளையில இப்படி உலாத்துறதுக்கு பயமே இல்லையா?

    நான் எதுக்காக பயப்படனும்? கொஞ்சமும் தயக்கமில்லாமல் கேட்டாள்.

    என்ன இருந்தாலும் வயசுப் பொண்ணு ஒண்ணு இப்படி உலாத்துறது நல்லதா?

    பயம்னா எனக்கு என்னன்னே தெரியாது. நான் இங்கேயே இருக்கிறவதான்?

    அவனுக்கு இணையாக அவளும் நடந்து கொண்டிருந்தாள். வழிநெடுக ஏராளமான சருகுகள். நடக்கும்போது அவை கால்களில் நெரிபட்டு ஓசை எழுப்பின. ஜயதேவன் காலடியோசகைளை ஊன்றிக் கவனித்தான். ஆனால், தன்னுடன் நடந்து வரும் பஞ்சமியின் பாதங்கள் தரையில் படுவதாகவோ,

    Enjoying the preview?
    Page 1 of 1