Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaadhalikka… Kaathiru
Kaadhalikka… Kaathiru
Kaadhalikka… Kaathiru
Ebook102 pages53 minutes

Kaadhalikka… Kaathiru

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Anuradha was born in 1947 in Thanjavur, Tamil Nadu. Her grandfather R. Balasubramaniam was an actor who inspired Anuradha to become a writer. Anuradha started her career as an artist before making several unsuccessful attempts to get a job with popular magazines. This prompted her to join Mangai, a Tamil magazine after the editor found her writings very interesting. Anuradha's literary career started in 1977 while working for the magazine.

Apart from her literary contributions, she was well known for her "anti-divorce counselling" work. In a career that spanned over 30 years, Anuradha wrote nearly 800 novels and 1,230 short stories. Her works were mainly centered on family and everyday happenings. One of her early works Sirai, won a gold medal for the best short story from Ananda Vikatan. It was adapted into a film of the same name. Following this, her other novels Kootu Puzhukkal, Oru Malarin Payanam and Oru Veedu Iruvasal were adapted into films in various languages such as Tamil, Telugu and Kannada. Oru Veedu Iru Vasal, directed by Balachander won the National Film Award for Best Film on Other Social Issues in 1991. The 1988 Telugu film Oka Baarya Katha based on her work won five Nandi Awards. In addition to films, many of her stories such as Archanai Pookal, Paasam and Kanakanden Thozhi have been adapted into Television serials. She was awarded a gold medal by M. G. Ramachandran, the then Chief Minister of Tamil Nadu.

Languageதமிழ்
Release dateDec 12, 2016
ISBN6580110001627
Kaadhalikka… Kaathiru

Read more from Anuradha Ramanan

Related to Kaadhalikka… Kaathiru

Related ebooks

Reviews for Kaadhalikka… Kaathiru

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaadhalikka… Kaathiru - Anuradha Ramanan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    காதலிக்க... காத்திரு

    Kaadhalikka… Kaathiru

    Author:

    அனுராதா ரமணன்

    Anuradha Ramanan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/anuradha-ramanan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    1

    பக்கத்து வீட்டு மதிற்சுவருக்குப் பின்னாலிருந்து திடீரென உதித்த சூரியோதயத்தைப் பார்த்துத் திகைத்துப் போகிறார் நரசிம்மன்.

    லதிகா!

    உஷ்... அப்பா இன்னும் ஃபாக்டரிக்கு கிளம்பலே. இரையாதீங்க மாமா.

    லதிகாவைப் போலவே அவளது குரலும் மெல்லிசு.

    சுற்றும் முற்றும் பார்த்தவள், தனது வீட்டு மதிற்சுவரிலிருந்து நாலடி பின்னுக்கு நகர்ந்து, விறுவிறுவென ஒரே ஓட்டமாய் ஓடி வந்து, பச்சைக் குதிரை தாண்டும் சிறுவனைப் போல் சுவரைத் தாண்டுகிறாள்.

    கண்ணில் பட்ட சோப்பு நுரையின் எரிச்சலையும் மறந்து, அந்தப் பெண்ணின் சுறுசுறுப்பில் வாய் பிளந்து நின்ற நரசிம்மனின் எதிரில்... இடுப்பில் இரு கைகளையும் பதித்தபடி நிற்கிறாள் அவள். குளிக்கிறீங்களா மாமா? அப்பொழுதுதான் அவர், தன் நிலையை உணருகிறார்.

    ‘கருமம்! கருமம்! ஒரு நாளைப் போல, இந்தப் பொண்ணு எதிரில இப்படியொரு போஸ் தேவைதானா.’

    அவர், கண்களை இறுக மூடிக் கொண்டு கத்துகிறார்.

    நீ போம்மா அந்தண்டை. தினமும் குளிக்கறச்சேதான் உனக்கு மூக்குல வியர்க்கும்.

    அவரது தவிப்பு, அவளுக்குச் சிரிப்பை உண்டு பண்ணுவதாய்...

    ஆமா... எனக்கு நீங்க குளிக்கறதைப் பார்க்கணும்தான் ரொம்ப ஆசை. ஏதோ பாவம், வயசான காலத்துல, கிணத்துல தண்ணியிழுக்க முடியாமச் சிரமப்படறீங்களே, நாம வேணுமானா நாலு பக்கெட் தண்ணியிழுத்து தலையில கொட்டலாமேன்னு வந்தா... குருட்டுப் பூனை இருட்டு விட்டத்துல தாவின மாதிரி, எம்மேல எரிஞ்சு விழறீங்களே. வாய்பாட்டுக்கு எதிராளியை வம்புக்கு இழுத்துக் கொண்டிருந்தாலும், கைகள் அதன் வேலையைச் செய்து கொண்டுதாணிருக்கிறது லதிகாவுக்கு. அவள் அம்மா சொல்வதைப் போலச் சொல்ல வேண்டுமானால், உனக்கு கையும் மொக்கும்; வாயும் மொக்கும் டீ... நரசிம்மனின் தலையில் தண்ணீரை ஊற்றிக் கொண்டே கேட்கிறாள் அவள். வீட்டுலதான் அங்கங்கே குழாய் இருக்குதில்லே. எங்க வீடு மாதிரி பம்ப் அடிக்க வேண்டிய வேலைகூட இல்லே. குழாத் தண்ணியில குளிக்க வேண்டியதுதானே?

    சொல்ல மாட்டீயோ... பக்கெட் பக்கெட்டா தண்ணியிழுத்து தோட்டம் முழுக்க கொட்டறது போறாதுன்னு, உங்க அத்தைக்கு வேற தலையில ஊத்தறேன். நரசிம்மன் இப்படிச் சொன்னதும், லதிகா குறும்புடன் கண்களை இடுக்கிக் கொண்டு சிரிக்கிறாள்.

    ஐயய்யோ... என்னம்மா இது...?

    ஒண்ணுமில்லே. கேட்க ரொம்ப இன்டிரஸ்டிங்கா இருக்கு. நீங்க, அத்தைக்கு குளிப்பாட்டி வேற விடறீங்களா... இத்தனை நாள் வரைக்கும் இதை அத்தை சொன்னதே இல்லையே. நரசிம்மனுக்கு வெட்கம் பிடுங்கித் தின்கிறது. ‘இந்தப் பெண்தான் எப்படியெல்லாம் காலை வாருகிறாள்.’

    போ... நான் பேசமாட்டேன்.

    சேச்சே... கோவிச்சுக்காதீங்க. நாளைக்கே நான் உங்க வீட்டு மருமகளா வந்துட்டா, இப்படியெல்லாம் பேச முடியுமா என்ன?

    இப்பொழுது நரசிம்மன் உண்மையிலேயே மௌனமாகிவிட்டார்.

    இதைச் சொன்னாமாத்திரம், மாமனார் மிடுக்கு வந்துடுமே உங்களுக்கு?

    அட... நீ வேறம்மா. நானே எதையெதையோ நினைச்சுக் கலங்கிட்டிருக்கேன்.

    லதிகா, தன் கன்னத்தில் பட்பட்டென்று போட்டுக் கொள்கிறாள்.

    தப்பு சாமி, நான் இனிமே கல்யாணப் பேச்சையே எடுக்கலே. உங்களுக்கா, எப்ப, என்னை உங்க வீட்டு மருமகளா ஆக்கிக்கணும்னு தோணுதோ... அப்பப் பேசுங்க. இப்ப பழைய பேச்சுக்கே போவோம்... குழா இருக்கறச்சே, ஏன் நீங்க, இந்த வயசுக்குமேல மாஞ்சு மாஞ்சு கிணத்துல தண்ணி இழுக்கணும்?

    இது கொஞ்சமாவது கரையாதான்னுதான்... அவர், தனது மேடிட்ட வயிற்றைத் தட்டிக் காட்டுகிறார்...

    லதிகா, வெண்கல மணிகளை உருட்டிவிட்டாற் போலச் சிரிக்கிறாள்.

    மாமா... இது இல்லையின்னா, உங்களுக்கும், உங்க பிள்ளைக்கும் வித்தியாசம் தெரியாமப் போயிடும் எனக்கு...

    இதைச் சொல்லிவிட்டு அங்கே நிற்காமல் அவள் துள்ளிக் குதித்தபடி, அவரது வீட்டுக்குள் ஓட, அவர், செல்லமாய் திட்டுகிறார்.

    அடி செருப்பாலே!

    அவர் தனக்குள் சொல்லிய வசைமொழி, சத்தமாய் எதிரொலிக்க ‘சட்’டென நிமிர்ந்து பார்க்கிறார்...

    பக்கத்து வீட்டுப் புழக்கடையில், லதிகாவின் அப்பா, சகாதேவன்...

    அடி செருப்பாலே! வீட்டுல ஒரு நிமிஷம்கூடக் கால் தரிக்காம ஓடற கழுதைய இழுத்து வச்சு கால்லே சூடு போட்டா என்ன... ஏய்... தடிச்சோறு... இரும்புலக்கை, திமிசுக்கட்டை... எங்கே போய் ஒழிஞ்சே?

    நரசிம்மனுக்கும் சுருசுருவென மூக்கிற்குமேல் கோபம் வருகிறது... ‘அது என்ன... பெண் குழந்தையை இப்படியெல்லாமா திட்டுவது...’ லதிகா பிறந்தபோது, இந்த சகாதேவனும் அவருமாய் சேர்ந்து, மண்டையைக் குடைந்து கொண்டு பெயர் சூட்டினார்கள். இன்னமும், அவருக்கு அதெல்லாம் பசுமையாக நினைவிலிருக்கிறதே... ‘சண்டையென்று வந்தால், யாருடன் மனஸ்தாபமோ அவரை முகத்துக்கு நேராகத் திட்டிவிட்டுப் போகட்டும். அதை விட்டுவிட்டு, அருமையாய்ப் பெற்ற பெண்ணை எதற்காகத் திட்ட வேண்டும்?’ எருமை மாடு! சகாதேவன் அர்ச்சனையைத் தொடர, நரசிம்மனும் தன் பங்குக்கு கத்துகிறார். அது கன்னுகுட்டிதான்... பெத்தவன் வேணுமானா எருமை மாடா இருக்கலாம்!

    "டேய்...

    Enjoying the preview?
    Page 1 of 1