Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Devathaigal Thoonguvathillai
Devathaigal Thoonguvathillai
Devathaigal Thoonguvathillai
Ebook95 pages45 minutes

Devathaigal Thoonguvathillai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Anuradha was born in 1947 in Thanjavur, Tamil Nadu. Her grandfather R. Balasubramaniam was an actor who inspired Anuradha to become a writer. Anuradha started her career as an artist before making several unsuccessful attempts to get a job with popular magazines. This prompted her to join Mangai, a Tamil magazine after the editor found her writings very interesting. Anuradha's literary career started in 1977 while working for the magazine.

Apart from her literary contributions, she was well known for her "anti-divorce counselling" work. In a career that spanned over 30 years, Anuradha wrote nearly 800 novels and 1,230 short stories. Her works were mainly centered on family and everyday happenings. One of her early works Sirai, won a gold medal for the best short story from Ananda Vikatan. It was adapted into a film of the same name. Following this, her other novels Kootu Puzhukkal, Oru Malarin Payanam and Oru Veedu Iruvasal were adapted into films in various languages such as Tamil, Telugu and Kannada. Oru Veedu Iru Vasal, directed by Balachander won the National Film Award for Best Film on Other Social Issues in 1991. The 1988 Telugu film Oka Baarya Katha based on her work won five Nandi Awards. In addition to films, many of her stories such as Archanai Pookal, Paasam and Kanakanden Thozhi have been adapted into Television serials. She was awarded a gold medal by M. G. Ramachandran, the then Chief Minister of Tamil Nadu.

Languageதமிழ்
Release dateDec 12, 2016
ISBN6580110001652
Devathaigal Thoonguvathillai

Read more from Anuradha Ramanan

Related to Devathaigal Thoonguvathillai

Related ebooks

Reviews for Devathaigal Thoonguvathillai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Devathaigal Thoonguvathillai - Anuradha Ramanan

    http://www.pustaka.co.in

    தேவதைகள் தூங்குவதில்லை

    Devathaigal Thoonguvathillai

    Author:

    அனுராதா ரமணன்

    Anuradha Ramanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/anuradha-ramanan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    தேவதைகள் தூங்குவதில்லை

    1

    சாதத்தை மாத்திரம் போட்டுட்டுப் போனா எப்படி? மோர், உங்க மாமனார் வந்து ஊத்துவானா?

    தட்டின் முன் அமர்ந்திருந்த குரு இரைய, வாசலுக்கும், உள்ளுக்கும் நடையாய் நடந்து கொண்டிருந்த புவனா- ஓடி வந்து கணவனின் வாயை- சோற்றுப் பருக்கை ஒட்டிக் கொண்டாலும் பாதகமில்லை என்பது போல- பொத்துகிறாள்.

    உஷ்! என்ன மரியாதை இல்லாமப் பேசறீங்க.

    என்ன? என்ன மரியாதை குறைஞ்சு போச்சு இப்ப?

    என் மாமனார்- உங்க அப்பா. இதை அடிக்கடி நான் ஞாபகப்படுத்த வேண்டியிருக்கு. இதோ பக்கத்து ரூம்லே படுத்துகிட்டிருக்கார். அவன், இவன்னு பேசறீங்களே.

    அடடா... மறந்தே போச்சு. இப்பச் சொல்றேன். சோத்தைப் போட்டுட்டுப் போனா மோர் உங்க மாமனார் வந்து ஊத்துவாரா?

    புவனா, முறைக்கிறாள்.

    கொஞ்சம் இருங்களேன். போஸ்ட்மேன் வரானான்னு பார்த்துட்டு வரேன். மோர், அதோ... கைக்கெட்டின தூரத்துல இருக்கு. ஒரு நாளைக்கு நீங்களே எடுத்து ஊத்திக்கக் கூடாதா? போஸ்ட்மேன் வர டயம்.

    குரு மோர்ப் பாத்திரத்தைத் ‘தரதர’வெனத் தன் பக்கம் இழுக்கிறான்.

    மெதுவா, மெதுவா. எல்லாம் எங்க அம்மா வாங்கிக் கொடுத்த பாத்திரம். நீங்க ஒரு டீஸ்பூன் கூட வாங்கித் தரலை நினைவிருக்கட்டும்.

    ஏன், ஏதோ ஒரு சோப்புத் தூளுக்கு டீஸ்பூன் கொடுக்கறான்னு ஒரே மாதிரியா அரை டஜன் ஸ்பூன் வேணும்னு ஒட்டு மொத்தமா ஆறு சோப்புத் தூள் பாக்கெட் வாங்கிட்டு வரச் சொன்னியே. அதெல்லாம், நான் வாங்கின ஸ்பூன்தான். அதுவும் பக்கம் பக்கமாக் கதை எழுதி. நினைவிருக்கட்டும்.

    குரு, மோரைக் கரண்டி கரண்டியாகக் கையில் ஊற்றி, சர்ரென்று உறிஞ்சுகிறான்.

    ஐயே! இந்த மாதிரிச் சத்தம் போட்டு உறிஞ்சாதீங்கன்னு எத்தனை தடவை சொல்றது? எப்படித்தான் ஆபீஸ் டின்னர்லேயெல்லாம் போய்ச் சாப்பிடlங்களோ? இதுல வாரந்தவறாம ஏதாவது பத்திரிக்கை கான்ஃபரன்ஸ், எழுத்தாளர் வீட்டுக் கல்யாணம், சிநேகிதன் வீட்டுச் சீமந்தம்னு போயிடறீங்க. உங்க பக்கத்துல உட்கார்ந்து சாப்பிடறவங்க பாடுதான் திண்டாட்டம்.

    இதைச் சொல்லிவிட்டு ஏன்தான் சொன்னோமோ எனத் தவித்துப் போய்விட்டாள் புவனா.

    என்ன நீ இப்படி இன்ஸல்ட் பண்றே? அங்கேயெல்லாம் என் கூட வந்து பாரு. ஐயாவுக்கு எப்பேர்ப்பட்ட ராஜோபசாரம் நடக்கறதுன்னு தெரியும். ஒவ்வொரு பொண்ணும் வெறும் பொண்ணில்லே. அழகழகான பொண்ணுங்க. லட்டு மாதிரி எம் பக்கத்துல உட்கார எப்படிப் போட்டி போடும் தெரியுமா?

    மோரைச் சத்தம் போடாம எப்படிடி உறிஞ்சுவே. நீ உறிஞ்சிக் காட்டேன் பார்க்கலாம். அப்பப்பா… பொழுது விடிஞ்சதுலேருந்து ராத்திரித் தூங்கற வரைக்கும் என்னை ஏதாவது சொல்லிக்கிட்டே இருக்கணும் உனக்கு. காலையிலே இப்படித்தான். பல் தேய்ச்சிட்டு, நாக்கு வழிக்கறப்ப ‘உவ்வே'ன்னு சத்தம் போட்டா அதுக்கு ஒரு தடவை. காபியை உறிஞ்சினா எருமை மாடு கழுநீர் குடிக்கறாப்பல இது என்ன ‘களபுள’ன்னு சத்தம்கறே. அப்பளத்தை உடைச்சுத் தின்னா, மாவு மிஷின் மாதிரி சத்தம் போடாதீங்கன்னு திட்டறே. மோருக்கு ஒரு சத்தம். ராத்திரி அக்கடான்னு தூங்கப் போனா இன்னிக்காவது குறட்டை விடாமத் தூங்குங்கங்கறே! மனுஷன் எப்படித்தான் நிம்மதியாச் சத்தம் போடறது? சொல்லு."

    அவன் சத்தமாய்க் கேட்டபடி, இடது கையால் அவளது காதைப் பிடித்துத் திருகும் போது…

    சார், போஸ்ட்!

    ஐயாவ்... போஸ்ட் மேன். காதை விடுங்க...

    "போஸ்ட்மேனா உன் காதைப் பிடிச்சிக்கிட்டிருக்கான்?

    ச்சீ விடுங்களேன். போஸ்ட்மேன் காத்துக்கிட்டிருக்காரு...

    யாரும் வந்து வாங்கிக்கலையின்னா அவரு வீசியெறிஞ்சிட்டுப் போவாரு.

    இப்ப மாட்டார், பொங்கல் வருதில்லே. விடுங்க காதை.

    அவள் தன்னை அவனிடமிருந்து பிடுங்கிக் கொண்டு வாசலுக்கு ஒட…

    ‘என்னமோ லவ் லெட்டர் வந்திருக்காப்பல இல்லே ஒடுறா.’

    அவன் தனக்குள் புன்னகைத்தபடி எழுந்து கை கழுவப் போகிறான்.

    புவனா கை நிறையக் கடிதங்களை அள்ளிக் கொண்டு வருகிறாள். அத்தனையும் வாசகர் கடிதங்கள், குரு மிகப் பிரபலமான எழுத்தாளன். வாயில் நுழையாத பெயருடைய ஏதோ ஒரு கம்பெனியில் நல்ல உத்தியோகத்தில் இருக்கிறான் என்றாலும் அது இரண்டாம் பட்சம்தான். பத்து வருடங்களாக எழுத்தில் இவனை மிஞ்ச, இன்னொருவர் பிறக்கவில்லை. இதுதவிர இளமையும், அழகும், நகைச்சுவையும் இவன் கூடப் பிறந்தவை.

    புவனா இவனைக் கைப்பிடித்து நாலு வருடங்கள் ஆகின்றன. குழந்தை இல்லையே என்கிற குறையைத் தவிர வேறு குறையேதுமில்லை. அந்தக் குறைகூட, அன்புக் கணவன் அவள் மடிமீது தலைவைத்துப் படுக்கையில், ஒன்றை வாங்கிவரச் சொன்னால் வேறொன்றை வாங்கி வந்து விட்டுத் திருதிருவென விழிக்கையில்,

    Enjoying the preview?
    Page 1 of 1