Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nee Kolaikarana?
Nee Kolaikarana?
Nee Kolaikarana?
Ebook70 pages45 minutes

Nee Kolaikarana?

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

திரு.ஆர்னிகா நாசர் அவர்கள் முதுகலை சமூகவியல் பட்டம், மருத்துவ நிர்வாகம் முதுகலை பட்டப்படிப்பு, வெகுஜன தொடர்பு முதுகலை பட்டப்படிப்பு, குற்றவியல் மற்றும் தடய அறிவியல் முதுகலை பட்டப்படிப்பு, வழிகாட்டல் மற்றும் ஆலோசனை முதுகலை பட்டப்படிப்பு, இளம் முனைவர் பட்டம், சமூகவியல் மருத்துவ மேலாண்மை நிர்வாகம்-முதுகலை பட்டம், பி.ஹெச்,டி ஆய்வும் செய்து வருகிறார்.
இவர் ஆயிரத்தை நெருங்கும் சிறுகதைகள், 150 நாவல்கள், 50 தொடர்கதைகள், நூறை நெருங்கும் தொகுப்புகள், ஒரு தொலைக்காட்சி தொடர், மூன்று வானொலி நாடகங்கள் 100 நேர்காணல்கள், 300 இலக்கிய மேடைப்பேச்சுகள், 100 விஞ்ஞான சிறுகதைகள், 200 இஸ்லாமிய சிறுகதைகள் மற்றும் ஒரு மொழிபெயர்ப்பு நாவல்களை எழுதியுள்ளார்.
இவரது குடும்பம் - மனைவி-வகிதா, மகள்-ஜாஸ்மின் மற்றும் மகன் - நிலாமகன் ஆவர். தற்போது சிதம்பரத்தில் வசித்து வருகிறார்.
Languageதமிழ்
Release dateDec 12, 2016
ISBN6580111001633
Nee Kolaikarana?

Read more from Arnika Nasser

Related to Nee Kolaikarana?

Related ebooks

Related categories

Reviews for Nee Kolaikarana?

Rating: 5 out of 5 stars
5/5

1 rating1 review

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 5 out of 5 stars
    5/5
    G o o o d s t o r y

Book preview

Nee Kolaikarana? - Arnika Nasser

http://www.pustaka.co.in

நீ கொலைகாரனா?

Nee Kolaikarana?

Author:

ஆர்னிகா நாசர்

Arnika Nasser

For more books

http://www.pustaka.co.in/home/author/arnika-nasser

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

பொருளடக்கம்

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

அத்தியாயம் 3

அத்தியாயம் 4

அத்தியாயம் 5

அத்தியாயம் 6

அத்தியாயம் 7

அத்தியாயம் 8

அத்தியாயம் 9

அத்தியாயம் 10

அத்தியாயம் 11

அத்தியாயம் 12

நீ கொலைகாரனா?

1

சிவசங்கர் உதயசூரியனுக்கு இரண்டு மணி நேரம் தாமதமாய் எழுந்தான். விலையுயர்ந்த சாட்டின்வகை இரவாடை அணிந்திருந்தான். பின்னிரவு குடித்த ஷாம் பெய்ன் அவன் முகத்தில் ‘ஹாங் ஓவர்’ காட்டியது.

எழுந்தவன் மானசீகமாய் குட்மார்னிங் பொன் ஜிதா! என்றான்.

சிவசங்கர்.

தமிழ் திரை உலகின் சூப்பர் ஸ்டார். அவன் ஆறு மணி நேர மேக்கப்போட்டு நடிக்க வேணாம். சிரமப்பட்டு இடுப்பை நெளித்து சுளித்து ஆடவேணாம். ‘சும்மா’ வந்து நின்றால் சரி. படம் குறைந்தது நூறு நாள் ஓடி விடும்.

அவனைவிட பீல்டில் ஆயிரம் ஆணழகர்கள் இருக்க இவனைத்தான் பெண்கள் ஆராதித்தனர்.

இதுவரை அவன் நடித்த படங்கள் 180. அதில் தொண்ணூறு சதவீதம் வெற்றிப்படங்களே.

வயது 38 ஆன போதிலும் பார்வைக்கு முப்பதாய் காட்சியளிப்பான்.

சிவசங்கரின் தந்தையும் நடிகர்தான். 1950, 60, 70 களில் கொடிகட்டிப் பறந்து எண்பதுகளில் விருப்ப ஓய்வு பெற்றவர்.

வாரிசு நடிகர்கள் அபாரமாய் சோபிப்பதில்லை எனும் தியரியை மகன் தவிடு பொடியாக்கியதில் சிவசங்கரின் தந்தை விஜயேந்திரனுக்கு உலக ஆனந்தம். ஆனால் மகனிடம் காட்டிக் கொள்ள மாட்டார்.

எப்போது பார்த்தாலும் அவனது நடிப்பை மட்டம் தட்டிக் கொண்டேயிருப்பார்.

தமிழ் ரசிகரின் ரசனை குப்பையாகிவிட்டது என்பார்.

சிவசங்கருக்கு இப்போதும் அப்பாவின் மீது பய மரியாதைதான். அதனால் அவரை எதிர்த்து பேசாமல் மெளனிப்பான்.

விஜயேந்திரன் புத்திசாலி சினிமா பீல்டுக்குள் புகும் மகன் கெட்டுவிடக்கூடாதென்று ஒரு குண்டுக் கத்தரிக்காயை 1982லேயே திருமணம் செய்துவித்தார்.

சிவசங்கர் அப்பாவின் சந்தோஷத்துக்காகவே அந்த ராகினிக்கு தாலி கட்டினான்.

ராகினி உருவத்தில் மட்டும்தான் பெயில் மார்க் வாங்கினாளே தவிர குணத்தில் சமையலில் குடும்பத்தை நிர்வகிப்பதில் நூற்றுக்கு நூறு மார்க் வாங்கினாள்.

ஆனால் அவனுடைய நாட்டம் நடிகை பொன்ஜிதாவின் மேல். அது ரகசியம்.

அம்மனை வழிபட்டுவிட்டு சரசரக்கும் புது பட்டுப் புடவையுடன் காருக்கு நடந்து வரும் ராகினியை மறித்தான் ராஜவேலு. அவன் ஒரு பிரபல வார பத்திரிகையின் சினிமாப்பகுதி நிருபர்!

அம்மா! செளக்யமா இருக்கீங்களாம்மா?

ஒ! நீ எப்டி இருக்க ராஜவேலு?

என் அக்காவுக்கு ஒரு பிரச்சனைன்னா நா எப்டி நல்லாயிருக்க முடியும்? ராஜவேலு ராகிணியை மூத்த அக்காவாக பாவித்தான்.

என்ன சொல்ற வேலு?

‘செய்தியை கிசுகிசு வடிவத்ல சொல்லிப்புடுரேன். சூப்பர் நடிகருக்கும் தங்கத்தை 'தா'

Enjoying the preview?
Page 1 of 1