Ushh… Paarkkathey!
()
About this ebook
இவர் ஆயிரத்தை நெருங்கும் சிறுகதைகள், 150 நாவல்கள், 50 தொடர்கதைகள், நூறை நெருங்கும் தொகுப்புகள், ஒரு தொலைக்காட்சி தொடர், மூன்று வானொலி நாடகங்கள் 100 நேர்காணல்கள், 300 இலக்கிய மேடைப்பேச்சுகள், 100 விஞ்ஞான சிறுகதைகள், 200 இஸ்லாமிய சிறுகதைகள் மற்றும் ஒரு மொழிபெயர்ப்பு நாவல்களை எழுதியுள்ளார்.
இவரது குடும்பம் - மனைவி-வகிதா, மகள்-ஜாஸ்மின் மற்றும் மகன் - நிலாமகன் ஆவர். தற்போது சிதம்பரத்தில் வசித்து வருகிறார்.
Read more from Arnika Nasser
Thrill Thrill Dynamite Rating: 0 out of 5 stars0 ratingsKodaikanal Marmam Rating: 5 out of 5 stars5/5Thulla Thudikka Rating: 0 out of 5 stars0 ratingsClydescope Mugamoodi Rating: 5 out of 5 stars5/5Aabathu Mandalam Rating: 5 out of 5 stars5/5Thimingala Vettai Rating: 1 out of 5 stars1/5Kaialavu Boogambam! Rating: 2 out of 5 stars2/5Suriyan Santhippu Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsGramathu Nila Rating: 0 out of 5 stars0 ratingsThakku Minnaley Thakku Rating: 5 out of 5 stars5/5Nee Kolaikarana? Rating: 5 out of 5 stars5/5Onbadhu Uyirgal Rating: 3 out of 5 stars3/5Saathan Devathai Rating: 0 out of 5 stars0 ratingsNodiku Nodi Rating: 0 out of 5 stars0 ratingsThirumarai Nabimozhi Islamiya Neethi Kathaigal - Thoguthi 3 Rating: 0 out of 5 stars0 ratingsIdi Minnal Naatkal Rating: 0 out of 5 stars0 ratingsRatha Samuthiram Rating: 0 out of 5 stars0 ratingsVetri Koottani Rating: 2 out of 5 stars2/5Marana Kaadu Rating: 0 out of 5 stars0 ratingsSuriyan Santhippu Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsKizhakku Kadarkarai Saalai Rating: 2 out of 5 stars2/5Elipori Rating: 0 out of 5 stars0 ratingsKonjam Kollungal Rajavey Rating: 0 out of 5 stars0 ratingsThirumarai Nabimozhi Islamiya Neethikathaigal - Thoguthi 4 Rating: 0 out of 5 stars0 ratingsTamil Selvi Rating: 0 out of 5 stars0 ratingsPani Nilavai Pathanidu Rating: 0 out of 5 stars0 ratingsMummy Rating: 1 out of 5 stars1/5Soonyakara Kizhavi Rating: 0 out of 5 stars0 ratings
Related to Ushh… Paarkkathey!
Related ebooks
Kirumi Rating: 0 out of 5 stars0 ratingsNee Kolaikarana? Rating: 5 out of 5 stars5/5Soonyakara Kizhavi Rating: 0 out of 5 stars0 ratingsThaandathe Thandikkapaduvai Rating: 5 out of 5 stars5/5Time To Murder Rating: 5 out of 5 stars5/5Kutram Puthu Vitham Rating: 5 out of 5 stars5/5Unnidam Oru Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsInikkum Vishame Vaa Rating: 3 out of 5 stars3/5Thorkathe Thozha Rating: 0 out of 5 stars0 ratingsEnnaik Kaanavillai Rating: 0 out of 5 stars0 ratingsIranthavane, Vanakkam Rating: 5 out of 5 stars5/5Vaa! Rating: 5 out of 5 stars5/5Neeyum Oru Indian Rating: 5 out of 5 stars5/5Ini Poruppathillai Rating: 0 out of 5 stars0 ratingsNiram Marum Nijangal Rating: 0 out of 5 stars0 ratingsVellai Iruttu Rating: 0 out of 5 stars0 ratingsEn Kaadhal Mannavaney Rating: 0 out of 5 stars0 ratingsYedu Un Vaalai Rating: 0 out of 5 stars0 ratingsKaatrodu Kaatrai... Rating: 0 out of 5 stars0 ratingsVetri Koottani Rating: 2 out of 5 stars2/5Kana kachithamaai Rating: 0 out of 5 stars0 ratingsKolusu Satham Rating: 0 out of 5 stars0 ratingsSaathaanin Kavithaikal Rating: 0 out of 5 stars0 ratingsKanavugaludan Nadamadu Rating: 0 out of 5 stars0 ratingsMaranathin Niram Manjal Rating: 5 out of 5 stars5/5Kaadhalukku Karuppu Kodi Rating: 5 out of 5 stars5/5Vaseegara... Vaseegara Rating: 0 out of 5 stars0 ratingsUyire Vaa Uyirai Thaa Rating: 0 out of 5 stars0 ratingsNatchathira Girahanam Rating: 0 out of 5 stars0 ratingsYeidhavanai Thedi... Rating: 5 out of 5 stars5/5
Related categories
Reviews for Ushh… Paarkkathey!
0 ratings0 reviews
Book preview
Ushh… Paarkkathey! - Arnika Nasser
http://www.pustaka.co.in
உஷ்… பார்க்காதே!
Ushh… Paarkkathey!
Author:
ஆர்னிகா நாசர்
Arnika Nasser
For more books
http://www.pustaka.co.in/home/author/arnika-nasser
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
உஷ்… பார்க்காதே!
ஆர்னிகா நாசர்
1
கிழக்கு கடற்கரை சாலையில் அந்த கருநீலநிற டாட்டா இண்டிகோ கார் நூறு கிலோ மீட்டர் வேகத்தில் விரைந்து கொண்டிருந்தது. காரைச் செலுத்தியபடி பக்கத்தில் அமர்ந்திருக்கும் சாம்பவியைப் பார்த்தான் நகுலன். அவன் சற்றே உயரம் கூடிய நடிகர் விவேக் போலிருந்தான். ஆனால் தலைகேசத்தை நடுவகிடு எடுத்திருந்தான். சென்னையின் பிரபல கண் மருத்துவர்களில் நகுலனும் ஒருவன். டாக்டர் டாக்டரைத்தான் காதலிப்பர். என்கிற தியரிக்கு இணங்க நகுலன் மகப்பேறு மருத்துவர் சாம்பவியை காதலித்தான். சாம்பவி சற்றே சதைத்த திரிஷா. இரண்டு பக்கக் குடும்பங்களும் இவர்களின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டிவிட்டன. முந்திய வாரமே இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது. இருவரும் ஒரு த்ரிலிங்கான டேட்டிங்குக்காக சென்னையிலிருந்து மாஸ் கிளாஸிக் காட்டேஜ்க்கு பறந்து கொண்டிருக்கின்றனர்.
இது தப்பில்ல?
எது- நள்ளிரவுல காருக்குள்ள பயணிக்கும் யுவனும் யுவதியும் பேசிக்காம அமைதியாக உக்காந்திருக்கிறதா?
ச்...அதெல்ல நகு கல்யாணத்துக்கு முன்னாடி செக்ஸ் தேவையா?
நாம அந்தளவு போகப் போறதில்ல. நள்ளிரவுல ஆள்நடமாட்டமில்லாத கடற்கரைல உக்காந்து முழுநிலாவை ரசித்தபடி ஒயின் சூப்பியபடி விடியவிடியகதைத்தபடி மீன் உணவு கொறித்தபடி இருக்கப்போறோம். என் கை உன்னின் எந்த தப்பான இடத்தையும் தொடாது. விடியற்காலை சூரியனுக்கு 'ஹாய் சொல்லி எழுவோம். காட்டேஜ் திரும்புவோம். குளிப்போம். காலை எட்டுமணிக்கு மீன் உணவு எடுத்துக்கொண்டு சென்னை திரும்புவோம்!
நீ ஒரு வேஸ்ட் நகு!
ஏன் சம்ப்?
பின்ன என்ன? நீ டேட்டிங்னு சொன்னவுடனே நான் என்னென்னவோ கற்பனை பண்ணிக்கிட்டு கிளம்பி வந்திருக்கேன். பார்த்துக்கிட்டே இரு நீ பேசிக்கிட்டே இருக்கப்போற. நான் உன்னை தப்புதப்பான இடங்கள்ல தொடப்போகிறேன். இப் யூ கேன் ரெஸிஸ்ட் யூ ரெஸிஸ்ட்!
உனக்கு இப்டியெல்லாம் பேசவருமா?
நீ கிட்டப்பார்வை தூரப்பார்வை வெள்ளெழுத்துன்னு நாற்பது வயது தாண்டின முதிர்ஆண் மகன்களுடன் பெரும்பாலும் பகல் பொழுதுகளை கழிக்கிறாய். நானோ சுகப்பிரசவம் சிஸேரியன் பிரசவங்களுடன் அல்லாடுகிறேன். வி வாண்ட் அவுட்லெட் மேன். நான் இன்னும் மூணு வாரங்களுக்கு காத்திருக்கப்போவதில்லை. இன்று நள்ளிரவு இரு மருத்துவர்கள் மருத்துவம் சாராத சில கில்பான்ஸிகளை செய்யப்போகிறார்கள்!
அம்மாடி! நா வரலம்மா இந்த விளையாட்டுக்கு
என்ன நீ-நெகடிவ்வா. பேசிப்பேசி உணர்வுகளை சூடேற்றுகிறாய்!
மனரீதியாக நான் தயாராகவில்லை சம்ப்!
காரை சென்னைக்கு திருப்பு!
ஏன் ஏன்?
நீ மனரீதியா தயாரானவுடனே தொலைபேசு. நானும் அப்ப மனரீதியா தயாராயிருந்தா வரேன்!
கோபப்படாதே கண்ணம்மா கடற்கரை மணல்-பெளர்ணமி கரைக்கு சதா பலிங் சடுகுடு ஆடும் கடலலைகள்- மிதமான ப்ரஞ்ச் ஒயிட் ஒயின் மூடை வரவழைத்தாலும் வரவழைத்து விடும்!
ஆர் யூ ஷூர்?
ஷூர்
அட்வான்ஸா இப்ப எதாவது குடுத்து நீ சொன்னதை கன்பர்ம் பண்ணு!
காருக்குள்ளேயேவா?
நத்திங் எக்ஸ்ட்ராடினரி. ஆங்கில முத்தம் ஒன்று குடு நகு!
சாலையோரம், காரை நிறுத்திக்குடுக்கவா?
ஓடும் காரிலேயே குடு!
வலது கையால் ஸ்டியரிங்கை கையாண்டபடியே சாம்பவியை தன்னருகே இழுத்து உதட்டில் முத்தமிட்டான்.
ஐந்து நொடிகளுக்கு பிறகு சாலை பார்வைக்கு மீண்டான்.
இன்னும் ஒரு தடவை!
போதும்!
குடுடா. குடுடா செல்லம்!
வேகமாய் இழுத்து சாம்பவியை முத்தமிட்டான். பதினைந்து நொடிகள் நிகரில்லாமல் கரைந்தன.
உறிஞ்சலை முறித்துக்கொண்டு சாலைபார்வைக்கு நகுலன் திரும்ப.
ஒரு ராட்சச கண்டெய்னர் லாரி 120கிமீ வேகத்தில் எதிரில் வர...
கன்டெய்னரின் மீது மோதாமல் இருக்க காரின் எஸ்டியரிங்கில் கழைக்கூத்தாட்டம் நிகழ்த்தினான்.
ஆனாலும்.
ஆனாலும்.
கன்டெய்னரின் இடப்பக்கம் மோதி நெறி கெட்டு சாலையை விட்டு விலகி எகிறி மணலில் தாவித்தாவி ஓடி இருநூறு அடி தூரத்தில் அமைந்திருந்த உறாலோபிளாக் காம்பவுண்ட் சுவர் கல்லறைக்கதவை மோதி கார் சிரசானம் செய்து மல்லாந்தது.
மல்லாந்த கார் ஒரு கல்லறையை அப்பளமாக்கியது.
கல்லறைத் திறந்து கொண்டது!
நெஞ்சிலும் வயிற்றிலும் பலத்த அடிபட்ட நகுலன் வலியாய் துடித்தபடி பக்கத்தில் பார்த்தான்.
சுடச்சுட இறந்திருந்தாள் சாம்பவி!
அவளது தலை நொறுங்கி மூளை வெளியே வந்திருந்தது.
கதறியழுதபடி கார்கதவை சிரமப்பட்டுத்திறந்து தரைக்கு குதித்தான் நகுலன்.
வாய் திறந்திருந்த கல்லறைக்குள் விழுந்தான்.
குப்புற