Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Valampuri Sangu
Valampuri Sangu
Valampuri Sangu
Ebook86 pages44 minutes

Valampuri Sangu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Vidhya Subramaniam born in 1957. She was introduced in Mangaiyar Malar through a story Mudhal Konal in 1982. She has written more than 100 short stories and novels. She has got lots of rewards in her 27 years of career. Rewards like Anandhachari Arakattalai Virudhu for her essay Thennang Kaatru, Tamilnadu government award for her Vanathil Oru Maan short stories, Bharat State Bank's first prize for her Aagayam Arugil Varum essays, Kovai Lilly Deivasigamani Virudhu for her Kanniley Anbirunthal short stories. Beyond the Frontier has her outstanding short stories which are translated to english. Anthology of Tamil Pulp Fiction also has her 2 short stories.
Languageதமிழ்
Release dateDec 9, 2016
ISBN6580105701705
Valampuri Sangu

Read more from Vidhya Subramaniam

Related to Valampuri Sangu

Related ebooks

Reviews for Valampuri Sangu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Valampuri Sangu - Vidhya Subramaniam

    http://www.pustaka.co.in

    வலம்புரிச் சங்கு

    Valampuri Sangu

    Author :

    வித்யா சுப்ரமணியம்

    Vidhya Subramaniam

    For other books

    http://www.pustaka.co.in/home/author/vidhya-subramaniam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    வலம்புரிச் சங்கு

    1

    'கம்ப்யூட்டரின் மானிட்டரில் பரமேஸ்வரனின் மதிப்பெண்கள் ஒளிர்ந்தது. இரண்டு சப்ஜெக்டில் சதம் மற்ற எல்லாவற்றிலும் தொண்ணூறுக்கு மேல் மொத்தம் ஆயிரத்து நூற்றி அறுபத்தி ஐந்து. தொண்ணூற்றி ஏழு சதவிகிதம்!

    அடேயப்பா...! சூப்பர் மார்க் வாங்கியிருக்காண்டா வேணு உன் பிள்ளை! சுற்றிலும் நின்றிருந்த நண்பர்கள் பிரம்மித்து பாராட்ட வேணு மகிழ்ச்சியின் உச்சிக்குச் சென்றார். உடனே பாச்சுவைப் பார்த்து அவனை ஆரத்தழுவிக் கொண்டு பாராட்ட வேண்டும் போல் பரபரத்தது. நண்பர்களுக்கு இனிப்பு வாங்கி வழங்கி விட்டு வீட்டுக்கும் கொஞ்சம் பாதாம் கேக் வாங்கிக் கொண்டு சற்று சீக்கிரமாகவே வீட்டுக்குக் கிளம்பினார்.

    பாச்சு மார்க் பார்த்திருப்பானா? நண்பர்களோடு நிச்சயம் பார்த்திருப்பான். குழந்தை எவ்வளவு சந்தோஷப் பட்டிருப்பான்! பாவம் எத்தனை சிரமங்களுக்கிடையில் படித்தான். புறநகர் பகுதியில் வீடு கட்டிக் கொண்டு போனதிலிருந்து மாற்றி மாற்றி ஏதாவது பிரச்சனைதான். பாதி நாள் கரண்ட் இருக்காது. கொசுத் தொல்லை, சரியான பஸ் வசதி இல்லாமை, என்று நிறைய கஷ்டங்கள். பாச்சுவின் ஸ்கூலுக்கு அவன் தினமும் ஒன்றரை மணி நேரம் பயணிக்க வேண்டும். பிதுங்கி வழியும் பஸ்ஸில் அவன் போய்விட்டு வருவதைப் பார்த்தால் அடி வயிறு கலங்கும்.

    ஃபுட் போர்ட்ல மட்டும் தொங்கிண்டு போகாதேடா பாச்சு பசங்கள்ளாம் அப்டி போறதைப் பார்த்தா வயத்த கலக்கறது.

    வேணு தினமும் ஒருமுறை சொல்லுவார்.

    நாம அவசரப்பட்டு இங்க வந்துட்டோம்னு நினைக்கறேன். ஒருவழியா இவன் ஸ்கூல் படிப்பு முடிஞ்சதுமே வந்திருக்கலாம் தேவகி ஒரு நாள் குறைப்பட்டுக் கொண்டாள்.

    வீட்டுக்காரர் தொந்தரவு தாங்காமதானே உடனே காலி பண்ணிண்டு வந்தோம்!

    இருந்தாலும் அங்கயே வேற ஒரு வீடு தற்காலிகமா பார்த்திருக்கலாம்.

    என்னமோ வந்தாச்சு விடு. கொஞ்ச நாளானா சரியாய்டும் எவ்ளோ பேர் இந்த ஏரியாலயும் இருக்கா பார். அவாளும் மனுஷாதானே! ஏண்டா பாச்சு உனக்கு சிரமமார்க்கோ போய்ட்டு வரது?

    டிராவல்லயே பாதி டைம் போயிடறா மாதிரி இருக்கு. மத்தபடி இந்த இடம் எனக்கு ஒகே அமைதியா இருக்கு! கான்ஸென்ட்ரேட் பண்ணி படிக்க முடியறது. அம்மாவுக்கு பேச ஆளில்ல இல்ல? அதனால போராடிக்கறது போல்ருக்கு.மந்தவெளில இருந்தப்பொ ஏகப்பட்ட குடித்தனம் நிறைய நியூஸ் கிடைக்கும் இல்லம்மா...?

    நாலு பேர் கிட்ட பேசினா அது வம்புக்குன்னு தீர்மானம் பண்ணிட்டா எப்படி? நாலு மனுஷங்க வேணாமா நமக்கு நல்லது கெட்டதுக்கு? உறவுக்காரங்களோடதான் பேச்சு வார்த்தை, போக்குவரத்து எதுவுமில்லை. அக்கம் பக்கத்துலயாவது நாலு பேரை தெரிஞ்சு வெச்சிக்கிட்டா தானே?

    சாரிம்மா நா உன்னை தப்பு சொல்லல.

    போகப் போக இங்கயும் நாலு பேர் சிநேகமாய்டுவா தேவகி. பழகறதுக்கு உனக்கு சொல்லியா குடுக்கணும்!

    ஏம்பா அம்மா ஏதோ சொன்னாளே உறவுக்காரங்களோடதான் பேச்சு வார்த்தை இல்லன்னு என்ன அது?

    சொல்றேன். நீ நல்லபடியா ப்ளஸ்டு எழுதி நல்ல மார்க்ஸ் வாங்கு. அதுக்கப்புறம் நம்ம வீட்டு பிரச்சனையெல்லாம் விலாவாரியா சொல்றேன் சரியா?

    சரி கேக்கல.

    குட் நல்லாபடி; உனக்கென்னல்லாம் வேணுமோ வாங்கி வசதி பண்ணித்தறேன்.

    கரண்ட் கட் ஆகாம இருந்தா போதும் அதான் என் கவலைப்பா!

    ஆகாது அப்பா தைரியம் சொன்னார். ஆனால் அதற்கு நேர்மாறாக நடந்தது. கேபிள் லைன் போடுகிறோம் பேர் வழி என்று ரோடு முழுக்க பள்ளம் நோண்டி வேலை நடக்க சரியாய்

    பரீட்சை சமயத்தில் பாதிநேரம் கரண்ட் இல்லாமல் போயிற்று. எப்போது வரும் எப்போது போகும் என்றே சொல்ல முடியாது.

    ஒரு எமர்ஜென்ஸி லைட் வாங்கிடலாமே.

    ஆயிரம் ரெண்டாயிரம் ஆகுமே எங்க போறது? வேணு மோவாயைத் தடவியபடி கவலைப்பட்டார்.

    புள்ள படிப்பு முக்கியம்ங்க. என் வளையலைக் கழட்டிதரேன் அதை அடமானம் வெச்சு பணம் வாங்கி ஒரு எமர்ஜென்ஸி லைட் வாங்கிடுங்க.

    "போன மாசம்தான் அவன் ஸ்கூல் ஃபீஸ்க்காக ஒரு வளையல் குடுத்த அதையே

    Enjoying the preview?
    Page 1 of 1