Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vetti Vergal
Vetti Vergal
Vetti Vergal
Ebook102 pages50 minutes

Vetti Vergal

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Vidhya Subramaniam born in 1957. She was introduced in Mangaiyar Malar through a story Mudhal Konal in 1982. She has written more than 100 short stories and novels. She has got lots of rewards in her 27 years of career. Rewards like Anandhachari Arakattalai Virudhu for her essay Thennang Kaatru, Tamilnadu government award for her Vanathil Oru Maan short stories, Bharat State Bank's first prize for her Aagayam Arugil Varum essays, Kovai Lilly Deivasigamani Virudhu for her Kanniley Anbirunthal short stories. Beyond the Frontier has her outstanding short stories which are translated to english. Anthology of Tamil Pulp Fiction also has her 2 short stories.
Languageதமிழ்
Release dateNov 2, 2023
ISBN6580105701733
Vetti Vergal

Read more from Vidya Subramaniam

Related to Vetti Vergal

Related ebooks

Reviews for Vetti Vergal

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vetti Vergal - Vidya Subramaniam

    http://www.pustaka.co.in

    வித்யா சுப்ரமணியம்

    சிறுகதைகள் - பாகம் 2

    Vidhya Subramaniam Short Stories – Part 2

    Author :

    வித்யா சுப்ரமணியம்

    Vidhya Subramaniam

    For other books

    http://www.pustaka.co.in/home/author/vidhya-subramaniam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. தொப்புள் கொடி

    2. கெட்டாலும் மேன்மக்கள்

    3. வர்ணங்கள்

    4. பிள்ளை மனம்

    5. பொய்க்கால் குதிரைகள்

    6. மேடை முகங்கள்

    7. நர்மதாகுட்டி

    8. பணப் பார்வை

    9. ஏணிகளும், பாம்புகளும்

    10. ஆண் மனம்

    1

    தொப்புள் கொடி

    என் அம்மா அப்பா தலைமுறையோடு நகரத்தில் அந்தப் பிரச்சினை ஓய்ந்து விட்டது என்று நினைத்திருந்தேன். அது எவ்வளவு முட்டாள்தனம்! அதுவாவது ஒய்வதாவது மிக நாகரிகமாக நாசூக்காக அது இன்னும் ஜீவித்துக் கொண்டுதான் இருக்கிறது என்பதை நிதர்சனமாக அறிந்ததும் நான் சிலையானேன் என்றுதான் கூறவேண்டும்.

    இத்தனை காலம் படிப்பு படிப்பு என்று என்னைச் சுற்றி நடப்பவை எதையுமே கவனிக்காமல் விட்டிருக்கிறேனோ என்று தோன்றியது. அப்படி என்ன பெரிய பிரச்சனை என்ற கேள்வியை எழுப்புவதற்கு முன் என்னைப்பற்றி சற்று கூறி விடுகிறேன்.

    நான் யமுனா. சமீபத்தில்தான் லட்சங்களை விழுங்கியிருந்த என் பி.ஈ படிப்பு முடிந்து ஒரு பெரிய அயல்நாட்டு நிறுவனத்தில் பத்தாயிரம் ரூபாய் சம்பளத்தோடு வேலையும் கிடைத்தது. ஆறு மாதப் பயிற்சிக்குப் பிறகு இருபதாயிரம் ரூபாய் என்ற அடிப்படை சம்பளம் கிடைக்கும். என் அப்பா கோடீஸ்வரரும் அல்ல, பிச்சைக்காரரும் அல்ல. அப்பர் மிடில் கிளாஸ் எனும் ரெண்டுங்கெட்டான் வர்க்கம். வீட்டில் எதுவும் இல்லாவிட்டாலும் சிரித்துக்கொண்டே உயர்தர உடையில் உலா வர வேண்டும். அக்காவும் நானுமாக இரண்டே பெண்கள் அப்பாவுக்கு. அக்காவை வக்கீலுக்குப் படிக்க வைத்து டாக்டருக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுத்திருக்கிறார். அடுத்தாற்போல் என்னைக் கம்ப்யூட்டர் என்ஜினியராக்கி இருக்கிறார். அசோக் நகரில் டபுள் பெட்ரூம் கொண்ட ஒரு பிளாட் லாக்கரில் இருபது இருபத்தி ஐந்து சவரன் நகை தவிர சொத்து என்று எதுவும் கிடையாது. இது வரை சேமித்து வைத்ததில் அக்காவின் கல்யாணத்தைக் கடனின்றி கெளவரமாய் நடத்தினார். அக்கா கல்யாணம் முடிந்த பிறகு அப்பாவின் பேங்க் பேலன்ஸ் வெறும் பன்னிரண்டாயிரம் மட்டும்தான். அம்மாவின் முகம் கவலையாயிற்று. இன்னோரு பொண்ணு இருக்காளே எப்படி சமாளிப்போம்? உங்களுக்கும் வயது வேறு ஆகிக் கொண்டே போகிறது. இத்தனை காலம் சம்பாதித்தாற்போல் இனி முடியுமா?

    அப்பா சிரிப்பார். எதுக்கு கவலைப்படற? என் ரிடயர்மெண்ட் பணம், பி.எப். கிராஜூவிட்டி மத்த சேமிப்பு எல்லாமாகச் சேர்த்து இன்னோரு அஞ்சாறு லட்சம் வரும். அதை வெச்சு யமுனாவுக்கும் ஒரு என்ஜினியர் மாப்பிள்ளையைப் பிடிச்சுடுவோம்.

    அப்புறம் உங்க செலவுக்கு என்னப்பா பண்ணுவீங்க?

    இந்த வீட்டை வித்தா ஒரு பத்து பன்னண்டு லட்சம் கிடைக்காது? அதுல ஒரு அஞ்சாறு லட்சத்துக்கு சிட்டிக்கு வெளில சின்னதா ஒரு வீடோ, ஃபிளாட்டோ வாங்கிண்டு மிச்சப் பணத்தை, பாங்க்ல போட்டு, வர வட்டில சுக ஜீவனம்தான்.

    அப்பா எல்லாமே திட்டம் போட்டு வைத்திருந்தார். இருபது வயசில் வேலைக்குச் சென்றாராம். இப்போது ஐம்பத்தி ஏழாகப் போகிறது. இத்தனை வருடத்தில் வீடு வாங்க, எங்களைப் படிக்க வைக்க, அது இது என்று எவ்வளவு லட்சங்கள் சம்பாதித்துச் செலவழித்திருப்பார். கடைசியில் அவருக்கு மிஞ்சப் போவது வீடு விற்ற காசுதானா? எனக்கு அவரைப் பார்க்கப் பரிதாபமாயிருந்தது.

    அப்பா எனக்கு வரன் பார்க்க ஆரம்பித்தார். அவரது அலுவலக நண்பர் மூலம்தான். பிருத்வியின் ஜாதகம் கிடைத்தது. பிருத்வி யு.எஸ்.ஸில் லட்சங்கள்ல சம்பாதிக்கும் இளைஞன். அவன் குடும்பம் சென்னையில்தான் இருந்தது. ஒரு பெண் ஒரு பிள்ளையாம். பெண்ணுக்கு சமீபத்தில்தான் ஒரு யு.எஸ். மாப்பிள்ளையோடு திருமணமாகி அவளும் அங்குதான் இருக்கிறாளாம். அவர்களுடைய சென்னை வீடு அசத்தலாக இருப்பதாக அப்பா சொன்னார். இந்த இடம் மட்டும் அமைந்து விட்டால் நான் மிக நன்றாக இருப்பேன் என்று அப்பா கருதினார்.

    ஈ-மெயில் மூலம் பிருத்வி தன் புகைப்படத்தை அனுப்பினான். என்னுடையதும் அவனுக்குப் போய்ச் சேர்ந்து கம்ப்யூட்டர் மூலம் நாங்கள் ஒருவருக்கொருவர் உரையாடிக் கொண்டோம். என்னைப் பிடித்திருப்பதாக பிருத்வி தன் வீட்டுக்குத் தெரிவித்தான். டிசம்பர் மாதம் இந்தியா வருவதாகவும் கூறினான். சொன்னபடி அவன் வந்த பிறகு அவன் வீடு சம்பிரதாயமாக என்னைப் பெண் பார்க்க வந்தது. பிருத்வி அம்மாவுக்கு அருகில் அமைதியாக அமர்ந்திருந்தான். சற்று ஸ்தூல சரீரத்தோடு உடலில் மினுக் மினுக்கென்று வைரங்கள் மின்ன அவன் அம்மா பயமுறுத்துகிறாற்போல் அழுத்தமாக அமர்ந்திருந்தாள்.

    ரொம்பக் கஷ்டப்பட்டு வளர்த்தோம் இவனை அவன் அம்மா சொன்னபோது எனக்கு எரிச்சலேற்பட்டது. "எங்களை வளர்க்க அப்பா கஷ்டப்படவில்லையா?'

    இவன்னா எங்களுக்கு உசிரு.

    'அப்பாவுக்கு நாங்கள் உயிரில்லையா?'

    புத்தின்னா அப்டி ஒரு புத்தி இவனுக்கு!

    'நாங்கள் என்ன மக்குகளா?' என் எரிச்சல் கூடிக் கொண்டே போயிற்று.

    நாம ஏற்கனவே பேசினதெல்லாம் நினைவிருக்கா? எல்லாம் உங்களுக்கு ஒகே தானே?

    "ஏற்கனவே என்ன பேசினார்கள்?' நான் அப்பாவைப் பார்த்தேன்.

    அது... அப்பா லேசாகத் தயங்கி நிறுத்தினார். "முப்பது பவுன் நகை போட்டுடலாம். ஆனா இந்த வைரத்தோடு மாப்பிள்ளைக்கு வைர மோதிரம் இது கூட வாங்கிடலாம் அதில்ல

    Enjoying the preview?
    Page 1 of 1