Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Soonyakara Kizhavi
Soonyakara Kizhavi
Soonyakara Kizhavi
Ebook104 pages1 hour

Soonyakara Kizhavi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

திரு.ஆர்னிகா நாசர் அவர்கள் முதுகலை சமூகவியல் பட்டம், மருத்துவ நிர்வாகம் முதுகலை பட்டப்படிப்பு, வெகுஜன தொடர்பு முதுகலை பட்டப்படிப்பு, குற்றவியல் மற்றும் தடய அறிவியல் முதுகலை பட்டப்படிப்பு, வழிகாட்டல் மற்றும் ஆலோசனை முதுகலை பட்டப்படிப்பு, இளம் முனைவர் பட்டம், சமூகவியல் மருத்துவ மேலாண்மை நிர்வாகம்-முதுகலை பட்டம், பி.ஹெச்,டி ஆய்வும் செய்து வருகிறார்.
இவர் ஆயிரத்தை நெருங்கும் சிறுகதைகள், 150 நாவல்கள், 50 தொடர்கதைகள், நூறை நெருங்கும் தொகுப்புகள், ஒரு தொலைக்காட்சி தொடர், மூன்று வானொலி நாடகங்கள் 100 நேர்காணல்கள், 300 இலக்கிய மேடைப்பேச்சுகள், 100 விஞ்ஞான சிறுகதைகள், 200 இஸ்லாமிய சிறுகதைகள் மற்றும் ஒரு மொழிபெயர்ப்பு நாவல்களை எழுதியுள்ளார்.
இவரது குடும்பம் - மனைவி-வகிதா, மகள்-ஜாஸ்மின் மற்றும் மகன் - நிலாமகன் ஆவர். தற்போது சிதம்பரத்தில் வசித்து வருகிறார்.
Languageதமிழ்
Release dateDec 9, 2016
ISBN6580111001716
Soonyakara Kizhavi

Read more from Arnika Nasser

Related to Soonyakara Kizhavi

Related ebooks

Related categories

Reviews for Soonyakara Kizhavi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Soonyakara Kizhavi - Arnika Nasser

    http://www.pustaka.co.in

    சூன்யகார கிழவி

    Soonyakara Kizhavi

    Author:

    ஆர்னிகா நாசர்

    Arnika Nasser

    For more books

    http://www.pustaka.co.in/home/author/arnika-nasser

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    சூன்யகார கிழவி

    1

    மகாலிங்கபுரம், காம்தார் நகர்.

    டிஷ் ஆண்டெனா கொண்டை கூடிய இரட்டை மாடி பங்களா.

    நீர் படுக்கை கொண்ட ஹைடெக் படுக்கையறை.

    உள்ளலங்காரம் செய்யப்பட்ட சுவற்றில் ஆளுயர ப்ளோ அப்பாய் நடிகை ஸான்யா ராம் நின்றிருந்தாள்.

    ஸான்யா 'மிஸ் வேர்ல்டு 2001' பட்டம் பெற்றவள். தேன் நிற கேசம். டேவிட் பிளெய்ன்தனம் செய்யும் மாயக்கண்கள். நீண்டு கீழிறங்கிய நாசித்துவாரங்கள் கவர்ச்சி காட்டும் மூக்கு இரு சமச்சீரான செர்ரி ரேகைகள் கூடிய கனத்த உதடுகள். சரம் தொடுத்த மல்லிகையாய் பற்கள். ரோஸ் ஜெல்லிநாக்கு நீள்கழுத்து, நளினமான உள்ளடங்கிய காதுமடல்கள். டிஸைனர் சுரைக்காய்களாய் மார்பகங்கள். டெர்ரகோட்டா ஓவியங்களை சுற்றிலும் வரையச் சொல்லும் தொப்புள். நீண்ட மாசு மருவில்லாத ரோமங்கள் நீக்கப்பட்ட LIVON ஈஷபட்ட தொடைகளும் கால்களும். பெடிக்யூர் மெனிக்யூர் செய்யப்பட்ட கைகால் நகங்கள் ELLE 18 நகச்சாயத்துடன்.

    பாத்டப்பில் குளித்துவிட்டு நீர் ஸ்ப்ளாச்ச ஸ்ப்ளாச்ச நிர்வாணமாய் நடந்து வந்தான் சிவபிரசாத். சிவபிரசாத் தமிழ் திரை உலகின் நம்பர் டூ ஹீரோ. கட்டழகன்.

    ஸாண்யாவின் ப்ளோஅப்புக்கு நேராக வந்து நின்றான் சிவபிரசாத்.

    ஸான்!

    ஸானி!

    ஓ ஸான்யா... மை ஸ்வீட் அண்ட் ஸ்வீட் டெவில்

    ஸாண்யா! நிஜம் போலவே நீ என்னை காதலிக்கிறியா... இல்ல வெறும் படவாய்ப்புக்காக நூல் விடுறியா?

    என்னையும் லவ் பண்ணிக்கிட்டு அந்த புகழேந்தி பயலையும் லவ் பண்றியாமே?

    உன் காதலர் லிஸ்ட் மிகமிகப்பெரிசுன்னு துணுக்கு மூட்டைல கலாய்ச்சிருந்தாங்களே... உண்மையா?

    ஸான்யா பதில் பேசவில்லை.

    இந்த நெஞ்சழுத்தம் தாண்டி உன்னோட மெயின் ப்ளஸ் பாயிண்ட்... நீ என்னையும் சேத்து நூறு பேரை லவ் பண்ணு-எனக்கு கவலையில்லை-ஏன்னா மீதி 99பேரை எலிமினேட் பண்ற வழி எனக்கு நல்லாத்தெரியும்!

    ஸாம்ஸங் மொபைல்ஃபோன் அழைத்தது.

    எடுத்தான்.

    எதிர்முனையில் ஜூனியர் சூப்பர் ஸ்டார் புகழேந்தி!

    என்னடா சிவபிரசாத். குளிச்சிட்டு மொட்டைக்கட்டையா ஸான்யா போட்டோ முன்னாடி நின்னு லூஸ் மாதிரி புலம்பிக்கிட்டு இருக்க போல...

    அஸ்ஸோல்!

    பாரின் கெட்டவார்த்தையெல்லாம் போட்டு திட்ற... மனப்பாடம் பண்ண எத்ணி நாளாச்சு?... எங்க மதுரை பக்கம் சித்திரை திருவிழா அப்ப பீமபுஷ்டி அல்வா விப்பாண்க தள்ளுவண்டில. தள்ளுவண்டில ஒரு பயில்வான் படம் போட்ருப்பாங்க. அந்த பயில்வான் மாதிரியே இருக்க சிவபிரசாத். தமிழ்நாட்டு மக்களுக்கு பாடிபில்டப் பண்ணும் நடிகர்களை பிடிக்கவே பிடிக்காது. ஏன்னா 99 சதவீத தமிழ்நாட்டு மக்களுக்கு உடற்பயிற்சி செய்ற வழக்கமே இல்லை. நீ டென்மார்க் ஸ்வீடன் பக்கம் போனா பொழைச்சிக்கலாம். ஏன்னா அங்கதான் சிறப்பான ப்ளுப்லிம்கள் எடுக்கப்படுது...

    ரொம்ப அளக்காதடா நாக்குபூச்சி!

    இந்த நாக்குபூச்சி மேலதான் இன்னைக்கி காலேஜ் பொண்ணுக பைத்தியமா இருக்காள்க.

    சுயபிரதாபம் தேவையா? எதுக்கு போன் பண்ணின?

    எண் ஆளு ஸான்யாவை நீ ரொம்ப தொந்திரவு பண்றியாம். கொஞ்சம் விலகி நில்லு பிரதர்!

    நான் சொல்ல வேண்டிய டயலாக் இது. நீ எண் ஆளு ஸான்யாவை விட்டு விலகி நில்லு சோனிபய்யா!

    ஸான்யா யாரைக் காதலிக்றான்னா அவளையே கேப்பமா?

    புகழேந்தி எனும் ஸ்டுடியோவின் செட்ப்ராப்பர்ட்டிடா ஸான்யா...

    இது கொஞ்சம் ஒவராயில்ல?

    விலகி நில்லு... இல்ல... கொண்னுருவேன்.

    நாக்குபூச்சி! மாபியாஸ் 'டான்'-ஸ் எல்லாம் என் கைக்குள்ள. ஒரு சின்ன சமிக்ஞை போதும். உன்னை எரிச்சு சாம்பலாக்கி ஆந்திரா பார்டர்ல தூவிடுவாண்க!

    மிஸ்டர் பீமபுஷ்டி உனக்கு தில்லு இருந்தா அடுத்த ஒரு மணிநேரத்ல பார்க் ஷெர்ட்டன் பாருக்கு வா. நீயா நானாண்னு நேருக்கு நேரா மோதி பாத்திடலாம்!

    நீ தனியா வரியா, நானும் தனியா வரேன்!

    வாக்கு மாறக்கூடாது!

    சரிடா வெண்ண. ஸெல்ல ஆஃப் பண்ணுடா. மீதிய நேரா பேசிக்குவம்!

    ஜீன்ஸும் க்ரஸ்டு காட்டன் முழுக்கை சட்டையும் உடுத்திக்கொண்டான் சிவபிரசாத், மேஜை இழுப்பறையிலிருந்து பிஸ்டலையும் இரு கேட்ரிட்ஜ்களையும் கவர்ந்தான்.

    போர்ட்டிகோவில் நின்றிருந்த டோயோட்டா கரோவா காரை கிளப்பினான்.

    Enjoying the preview?
    Page 1 of 1