Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Clydescope Mugamoodi
Clydescope Mugamoodi
Clydescope Mugamoodi
Ebook98 pages48 minutes

Clydescope Mugamoodi

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

திரு.ஆர்னிகா நாசர் அவர்கள் முதுகலை சமூகவியல் பட்டம், மருத்துவ நிர்வாகம் முதுகலை பட்டப்படிப்பு, வெகுஜன தொடர்பு முதுகலை பட்டப்படிப்பு, குற்றவியல் மற்றும் தடய அறிவியல் முதுகலை பட்டப்படிப்பு, வழிகாட்டல் மற்றும் ஆலோசனை முதுகலை பட்டப்படிப்பு, இளம் முனைவர் பட்டம், சமூகவியல் மருத்துவ மேலாண்மை நிர்வாகம்-முதுகலை பட்டம், பி.ஹெச்,டி ஆய்வும் செய்து வருகிறார்.
இவர் ஆயிரத்தை நெருங்கும் சிறுகதைகள், 150 நாவல்கள், 50 தொடர்கதைகள், நூறை நெருங்கும் தொகுப்புகள், ஒரு தொலைக்காட்சி தொடர், மூன்று வானொலி நாடகங்கள் 100 நேர்காணல்கள், 300 இலக்கிய மேடைப்பேச்சுகள், 100 விஞ்ஞான சிறுகதைகள், 200 இஸ்லாமிய சிறுகதைகள் மற்றும் ஒரு மொழிபெயர்ப்பு நாவல்களை எழுதியுள்ளார்.
இவரது குடும்பம் - மனைவி-வகிதா, மகள்-ஜாஸ்மின் மற்றும் மகன் - நிலாமகன் ஆவர். தற்போது சிதம்பரத்தில் வசித்து வருகிறார்.
Languageதமிழ்
Release dateDec 9, 2016
ISBN6580111001737
Clydescope Mugamoodi

Read more from Arnika Nasser

Related to Clydescope Mugamoodi

Related ebooks

Related categories

Reviews for Clydescope Mugamoodi

Rating: 4.5 out of 5 stars
4.5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Clydescope Mugamoodi - Arnika Nasser

    http://www.pustaka.co.in

    க்ளைடாஸ்கோப் முகமூடி

    Clydescope Mugamoodi

    Author:

    ஆர்னிகா நாசர்

    Arnika Nasser

    For more books
    http://www.pustaka.co.in/home/author/arnika-nasser

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    க்ளைடாஸ்கோப் முகமூடி

    1

    டியாரா ராஜ்குமாரின் நீலநிற வாகன் ஆர் கார் அழகம்மை மருத்துவப் பல்கலை கழகத்துக்குள் சீறிப்பாய்ந்தது.

    டியாரா குளிர்கண்ணாடி அணிந்திருந்தான். வெள்ளை நிற ஜீன்ஸும் கறுப்பு எம்ப்ராய்டரி பூக்கள் வரையப்பட்ட யானைத்தந்த நிற க்ளப் வியர் லாமேன் சட்டையும் அணிந்திருந்தான்.

    அவனுக்கு அருகில் தேஜிஸ்வினி அமர்ந்திருந்தாள். கில்லர்ஸ் லோஹிப் 'ஜீன்ஸ்'ம் பல்வர்ண குறுக்கு கோடுகள் நிறைந்த குட்டைக்கை பணியனும் உடுத்தியிருந்தாள். பனியன் மார்பகங்களுக்கு கீழே திரிதிரியாய் தொங்கியது. தொப்புளில் வளையம் தொங்கியது.

    எலந்தப்பயம் எலந்தப்பயம் உனக்குத்தான் சிவந்த பழம் சிவந்தயமும் உனக்குத்தான் என பாடின டியாரா திடீரென்று குரல் உயர்த்தி

    முருகா காப்பாத்து முடிஞ்சா மலையேத்து! என கூவினான்.

    எதுக்காக இந்தப்பாட்டை திடீர்னு பாடுற டியாரா?

    ஸ்டியரிங்கை விட்டு இரு கை குவித்து தேஜியின் இரு மார்பகங்களை பெரிதாய் கும்பிட்டான் டியாரா. பின் நொடி தாமதித்து கைகளை எப்டியரிங்கில் பதித்தான்.

    வரவர உன் ஆடை அலங்காரம் எஃப் டிவி ரேஞ்சுக்கு போகுது தேஜி. உன்னோட எங்கயும் வெளில போனா மனசு அதைத்தவிர வேற எதையும் நினைக்கமாட்டிங்குது. கை துறுதுறுக்குது வாய் நமநமன்னுது!

    அடங்கு மகனே அடங்கு செல்லக்கோபம் காட்டினாள் தேஜி.

    கார் பல்கலையின் மாநாட்டு அறையின் முன்னிருக்கும் போர்டிகோவில் சறுக்கி நின்றது.

    இறங்கினான் டியாரா.

    குலுங்ககுலுங்க இறங்கினாள் தேஜி.

    டியாராவையும் தேஜியையும் பல்கலையின் பதிவாளரும் பாதுகாப்பு அதிகாரியும் வரவேற்று குளிர்பதன முட்டப்பட்ட துணைவேந்தர் அறைக்குள் அழைத்துச் சென்றனர்.

    ஃபுல் சூட்டில் இருந்த துணைவேந்தர் எழுந்து வரவேற்றார். வணக்கம் டியாரா!

    வணக்கம்!

    துணைவேந்தரின் அருகிலிருந்த 58 வயதான பருமன் பெண்மணியும் டியாராவை வணங்கினார்.

    அனைவரும் அமர்ந்து தேநீர் அருந்த துணைவேந்தர் பருமன் பெண்மணியை டியாராவுக்கு அறிமுகப்படுத்தினார். இவங்கதான் டாக்டர் சந்திரமால்யா பல்கலைல மனநோய் மருத்துவப்பிரிவின் தலைவி. அநாமநேய குடிநோயாளிகள் குழுமமும் தற்கொலை தடுப்பு மையமும் நடத்றாங்க. 'தற்கொலை மனோபாவத்தை அறவே களைவதெப்படி?' என்கிற தலைப்பில்தான் சந்திரமால்யாவும் நீங்களும் இன்னைக்கி பேசப் போறீங்க சந்திரமால்யாவைப் பற்றி ஒரு சிறப்புத்தகவல். மால்யா இதுவரைக்கும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட யுவன்யுவதிகளை தற்கொலையிலிருந்து மீட்டெடுத்து மறுவாழ்வு குருத்திருக்காங்க!

    இஸிட் கிரேட் நான் உங்களை பாத்து பெருமைப்படுறேன் டாக்டர் சந்திரமால்யா! கைகுலுக்கினான். மால்யாவின் கைவிரல்கள் லேசாய் நடுங்கின.

    டாக்டர் சந்திரமால்யா! இவர் டிடக்டிவ் டியாரா ராஜ்குமார்!

    எனக்கு இவரை நல்லாத்தெரியும். இவரோட கதைகள் நிறைய படிச்சிருக்கேன்!

    "குட் (மணிக்கட்டை ஆராய்ந்துவிட்டு) இன்னும் அரைமணிநேரத்ல விழாவை

    ஆரம்பிச்சிடலாம்!" சந்திரமால்யா மெதுவாக எழுந்து தனியே நடக்க

    பின்னே போனான் டியாரா.

    நீங்க என் கூட எதுவோ பேச விரும்புlங்க இல்லையா மேடம்?

    ஆமா டியாரா!

    எதுவோ ஒரு விஷயம் உங்களை கிலியூட்டியிருக்கு இல்லையா மேடம்?

    ஆமா டியாரா!

    தென் கம் அவுட். என்ன ப்ராப்ளம் மால்யா?

    நேத்திரவு எனக்கு ஒரு ஈமெயில் வந்தது டியாரா!

    என்னன்னு?

    இன்னைக்கி நான் இந்த கூட்டத்ல பேசிக்கிட்டுக்கும் போதே கொல்லப் படுவேணாம்!

    யாராலாம்?

    தெரியவில்லை!

    என்ன காரணத்துக்காம்?

    தெரியவில்லை!

    உங்களுக்கு யாராவது எதிரிகள்?

    எனக்கு யாரும் எதிரிகள் இல்லை!

    உங்களுக்கு வந்த மின்னஞ்சல் பற்றி போலீஸுக்கு புகார் செய்தீர்களா?

    இல்லை!

    ஏன்?

    பல்கலைக்கழக வளாகத்தை பீதியூட்ட விரும்பவில்லை!

    இப்ப ஏன் என்கிட்ட சொல்றீங்க?

    நீங்க இதுமாதிரியான இஸ்யூக்களை டிப்ளமேட்டிக்காக டீல் பண்ணுவிங்கன்னு எனக்கு நம்பிக்கை!

    டியாரா தேஜியை அழைத்து காதில் ஏதோ கிசுகிசுத்தான். உடனே அவள் மாநாட்டு அறைக்கு புறப்பட்டுப்போனாள்.

    துணைவேந்தர் பதிவாளருடன் டியாராவும் மால்யாவும் விழா மேடைக்கு நடந்தனர்.

    `ஸிஸ்!'

    மேடையின் பின்புலத்தில் தர்மோகோல் கட்டிங்ஸ் 'தற்கொலை மனோபாவத்தை

    Enjoying the preview?
    Page 1 of 1