Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Gramathu Nila
Gramathu Nila
Gramathu Nila
Ebook44 pages16 minutes

Gramathu Nila

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

திரு.ஆர்னிகா நாசர் அவர்கள் முதுகலை சமூகவியல் பட்டம், மருத்துவ நிர்வாகம் முதுகலை பட்டப்படிப்பு, வெகுஜன தொடர்பு முதுகலை பட்டப்படிப்பு, குற்றவியல் மற்றும் தடய அறிவியல் முதுகலை பட்டப்படிப்பு, வழிகாட்டல் மற்றும் ஆலோசனை முதுகலை பட்டப்படிப்பு, இளம் முனைவர் பட்டம், சமூகவியல் மருத்துவ மேலாண்மை நிர்வாகம்-முதுகலை பட்டம், பி.ஹெச்,டி ஆய்வும் செய்து வருகிறார்.
இவர் ஆயிரத்தை நெருங்கும் சிறுகதைகள், 150 நாவல்கள், 50 தொடர்கதைகள், நூறை நெருங்கும் தொகுப்புகள், ஒரு தொலைக்காட்சி தொடர், மூன்று வானொலி நாடகங்கள் 100 நேர்காணல்கள், 300 இலக்கிய மேடைப்பேச்சுகள், 100 விஞ்ஞான சிறுகதைகள், 200 இஸ்லாமிய சிறுகதைகள் மற்றும் ஒரு மொழிபெயர்ப்பு நாவல்களை எழுதியுள்ளார்.
இவரது குடும்பம் - மனைவி-வகிதா, மகள்-ஜாஸ்மின் மற்றும் மகன் - நிலாமகன் ஆவர். தற்போது சிதம்பரத்தில் வசித்து வருகிறார்.
Languageதமிழ்
Release dateOct 21, 2016
ISBN6580111001590
Gramathu Nila

Read more from Arnika Nasser

Related to Gramathu Nila

Related ebooks

Reviews for Gramathu Nila

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Gramathu Nila - Arnika Nasser

    http://www.pustaka.co.in

    கிராமத்து நிலா

    Gramathu Nila

    Author :

    ஆர்னிகா நாசர்

    Arnika Nasser

    For more books

    http://www.pustaka.co.in/home/author/arnika-nasser

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    கிராமத்து நிலா

    1

    டவுன் பஸ் செம்மண் சாலையில் குலுங்கிக் குலுங்கி தகர்ந்து கொண்டிருந்தது. கைலியும் காக்கி சீருடைச் சட்டையும் அணிந்த டிரைவர் பஸ்ஸை முரட்டுத்தனமாய் ஒட்டிக் கொண்டிருந்தார். பஸ்ஸுக்குள் கனத்த கூட்டம், கூடைகளும் பயணச்சுமைகளும் நிறைந்திருந்தன. கண்டக்டர் டிக்கெட் போட்டுக் கொண்டிருந்தார்.

    டிரைவருக்குப் பின் நான்காவது இருக்கையில் புவனேஸ்வரி அமர்ந்திருந்தாள். அவளின் காலடியில் ஒரு கனத்த துணிப்பை, அதில் உளி, சுத்தியல் போன்ற உபகரணங்கள் இருந்தன. புவனேஸ்வரி மடியில் ஐந்து வயது மகள் ராதா. பக்கத்து இருக்கை பயணியின் மடியில் இன்னொரு குழந்தை இரண்டு வயது சுதா.

    இரண்டு பெண் குழந்தைகளும் புவனேஸ்வரியின் நகல்களாய் இருந்தன. அவைகளின் கண்களில் இனம் புரியாத சோகம், மிகவும் மெலிந்து போயிருந்தன.

    கண்டக்டர் டிக்கெட் போட புவனேஸ்வரியின் இருக்கைக்கு வந்தார்.

    அம்மா! டிக்கெட்!

    மோனநிலையில் கண்ணீர் அமிழ்ந்த கண்களுடன் இருந்த புவனேஸ்வரியின் காதுகளில் விழவில்லை.

    புவனேஸ்வரியின் துக்கமான முகம் கண்டக்டரின் இதயத்தைப் பிசைந்தது. மீண்டும் குரல் கொடுத்தார். அம்மா! டிக்கெட்!

    மூத்த குழந்தை ராதா அம்மாவின் முகவாயை கண்டக்டர் பக்கம் திருப்பியது. பிரக்ஞை மீண்ட புவனேஸ்வரி புடவை முடிச்சிலிருந்து கசங்கிய பணம் எடுத்தாள்.

    ஒன்றரை தென்னம்பட்டி! பணம் நீட்டினாள்.

    டிக்கெட்டை

    Enjoying the preview?
    Page 1 of 1