Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Uyiril Kalandha Uravey…
Uyiril Kalandha Uravey…
Uyiril Kalandha Uravey…
Ebook105 pages50 minutes

Uyiril Kalandha Uravey…

Rating: 1 out of 5 stars

1/5

()

Read preview

About this ebook

திருச்செந்தூரை முக்கியக் களமாகக் கொண்டது. சாமியார் ஒருவர் வருகிறார். அவர்தாம் கதையைப் பின்னணியிலிருந்து நடத்துகிறாரோ என்று ஐயம் ஏற்படும் அளவு நடக்கவுள்ள சம்பவத்தை சாடை காட்டுகிறார்.

நாவலில் வரும் எழுத்தாளர் சுந்தரம் டாக்டர் மு.வரதராசனின் கதைமாந்தர் போன்ற லட்சிய மனிதர். காதலில் தோற்று, பிறகு வென்று, கடைசியில் அவரது காதல் கேள்விகுறியாக மாறியபோதிலும் இந்த மனிதர் பண்புகளிலிருந்து நழுவாதவர்.

பணத்தை வட்டிக்கு விடும் தந்தையை எதிர்த்து காதலிவுடன் கை கோர்க்கிறார் காதலன். இதற்கு உதவுகிறார் எழுத்தாளர் ஆனால் விதியின் விளையாட்டால் அவர்கள் ஒன்று சேர்வதில் தடை ஏற்படுகிறது. இதற்கான காரணத்தை கூறுகிறார் பக்தர், அவர் கூறிய காரணம் என்ன? அந்த பெண்ணின் எதிர்காலம் என்ன ஆனது! என்பதை அறிந்து கொள்ள படியுங்கள்...

Languageதமிழ்
Release dateOct 21, 2016
ISBN6580100701602
Uyiril Kalandha Uravey…

Read more from Indira Soundarajan

Related to Uyiril Kalandha Uravey…

Related ebooks

Related categories

Reviews for Uyiril Kalandha Uravey…

Rating: 1 out of 5 stars
1/5

1 rating1 review

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 1 out of 5 stars
    1/5
    pathetic attempt; the end is confusing; what is the author trying to say

Book preview

Uyiril Kalandha Uravey… - Indira Soundarajan

http://www.pustaka.co.in

உயிரில் கலந்த உறவே…

Uyiril Kalandha Uravey…

Author:

இந்திரா செளந்தர்ராஜன்

Indira Soundarajan

For more books

http://www.pustaka.co.in/home/author/indira-soundarajan

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

பொருளடக்கம்

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

அத்தியாயம் 3

அத்தியாயம் 4

அத்தியாயம் 5

அத்தியாயம் 6

அத்தியாயம் 7

அத்தியாயம் 8

அத்தியாயம் 9

அத்தியாயம் 10

அத்தியாயம் 11

அத்தியாயம் 12

அத்தியாயம் 13

அத்தியாயம் 14

அத்தியாயம் 15

உயிரில் கலந்த உறவே…

1

'செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஓரையில் திருச்செந்தூர் செந்திலாதிபதியை வழிபட்டு விட்டு, நேரே வெளியே வந்து கடல் நீரில் கால் பதிய நின்று, சூரியனைப் பார்த்து மனதுக்குள் எதை, வேண்டிக் கொண்டாலும் அது நடக்கும் நடந்தே தீரும்…'

அவரைச் சரியாக ஞாபகமில்லை. ஆனால், அவர் சொன்னது சுந்தரத்தின் மனதில் சுடர்விட்டபடியே இருந்தது. மாதம் தவறாமல் திருச்செந்தூருக்கு வந்து செந்தில் ஆண்டவனை தரிசனம் செய்யும் சுந்தரத்துக்கு அன்றைய நாளை ஒரு யோகமான நாளாகத்தான் சொல்ல வேண்டும்...

அவர் யாரோ...? பார்க்கப் பக்கிரி போல இருந்தார். ஆனாலும், கண்களில் ஒரு தீட்சண்யம். அழுக்குக் காவி வேட்டி, புதர் போல தாடி என்று கண்களைக் கரிக்க விட்டார்.

அவர், மணல் வெளியில் சுந்தரம் அமர்ந்திருந்ந இடத்துக்கு அருகில் வந்து அமர்ந்துகொண்டு முதலில் ஊன்றிப் பார்த்து, பிறகு சிரித்து, ஒரு பைத்தியம் பேல நடந்துகொண்டபோது அவனுக்கு பயமாகத்தான் இருந்தது.

பயப்படாதே… நான் எல்லாத்தையும் வெறுத்தவன். அதான் இப்படி இருக்கேன்... நீ நேத்து அனுப்பினோ பாரு ஒரு கதை... அதுக்குத்தான் இந்தத்தடவை முதல் பரிசு கிடைக்கப் போகுது. அப்பன் முருகன் சொல்லிட்டான்... - என்று அவர் சொன்னபோது, சுந்தரம் திக்கு முக்காடிவிட்டான்.

ஏனென்றால், ஒரு பரிசுப் போட்டிக்காகக் கதையை எழுதி அனுப்பியது என்பது அவன் மட்டுமே அறிந்த விஷயம். அது எப்படி இவருக்குத் தெரிந்தது என்று அவரை வியப்போடு பார்த்தான்.

அவரோ, தாடியை நீவிக்கொண்டே சிரித்தார். சாப்பிட என்ன வைச்சிருக்கே? என்று கேட்டு, அவன் வசம் இருந்த தேங்காய்- பழம்- அதிரசம் என பிரசாதத்தை வாங்கிச் சாப்பிட்டார். போகும்போது உனக்கு ஒரு ரகசியத்தைச் சொல்றேன். நல்லா கேட்டுக்கோ என்றார். செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஒரையில் செந்திலாதி பதியை தரிசித்து, கடலில் கால் நனைய நின்றபடி சூரியனைப் பார்த்து வேண்டிக்கொள்ளச் சொன்னார்.

ஒரு ஆச்சரியம்- அவர் அன்று சொன்னது போலவே அவனுக்கே முதல் பரிசும் கிடைத்துவிட்டது…

அதனால், அவர் சொன்ன விஷயமும் நிச்சயம் ஒரு கால ரகசியமாகத்தான் இருக்கும் என்று கருதிய சுந்தரமும் அவர் கூறியதுபோலவே இதோ செவ்வாய்க்கிழமையாகப் பார்த்து திருச்செந்தூருக்கும் வந்துவிட்டான்…

'ஜேஜே' என்று கூட்டம்!

கடல் தன் தண்ணிரைப் பாயைச் சுருட்டுவது போலச் சுருட்டிச் சுருட்டி, பின் விரித்து வீசிக்கொண்டிருந்தது. தலைமுடியைப் பிய்க்கப் பார்க்கும் காற்று வீச்சுவேறு... செந்தூர்க் கடல் வெளியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று பார்த்தால், மொத்தக் கோயிலே ஏதோ அலைகள் எழுதிய கவிதை போலத்தான் தெரியும்.

சுந்தரம் முதலில் நல்ல ரசிகன்; பிறகுதான் எழுத்தாளன். எனவே, அந்த இடத்தில் போய் நின்று கொண்டு ஆலயத்தைப் பார்த்து ரசிக்கலானான்.

காதில் காற்று போடும் சப்தம். இல்லையில்லை… அது, அதன் மொழி. நமக்கு அது தெரியாது. தெரிந்தால் அதில் பல செய்திகள் இருந்து நமக்கும் தெரிய வருமோ என்னவோ? சுந்தரம் அப்படித்தான் நினைத்துக் கொண்டான்.

அடிக்கடி கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டான். செவ்வாய் ஒரைக்கு நிறையவே நேரமிருந்தது… அதுவரை இப்படி கடற்கரையில் நிற்பது என்று தீர்மானித்துக் கொண்டான்.

தமிழ்நாட்டின் முக்கியமான எழுத்தாளன் அவன். எந்தக் காரணம் கொண்டும் புகைப்படத்தை எந்தப் பத்திரி கைக்கும் தந்ததில்லை. திருச்செந்தூர் பக்கம் ஆறுமுகநேரி தான் அவனுக்குச் சொந்த ஊர். பெற்றவர்கள் வைத்த பெயர் சுந்தரம். ஆனால், அவன் எழுத்தாளனாக தனக்கு வைத்துக்கொண்ட பெயர் பாஸ்கரத்தேவன்.

அவன்தான் பாஸ்கரத்தேவன் என்று வாசகர்களுக்குத் தெரிந்தால், அவனை அப்படியே மொய்த்துவிடுவார்கள்.

பெண்களை மையமாக வைத்துச் சிந்திப்பதில் சுந்தரம் வெகு சிறந்தவன். அதனால் அவனுக்கு ஏராளமான பெண் வாசகர்கள்… அந்தக் கடற்கரையில்கூட அவன் பார்க்க ஒரு வாசகி அவனது நாவலைத்தான் படித்துக்கொண்டிருந்தாள். அவளைக் கடந்தபோது பார்த்துக்கொண்டே தான் போனான்.

அவ்வப்போது அந்த வாசகியின் சலனம் கலைகிறதா என்று நின்ற இடத்தில் இருந்தபடி கவனித்தான். அப்படிக் கலைந்தால் அந்த நாவலில் விறுவிறுப்பு போதவில்லை என்பதுதான் உண்மை. ஆனால், அவளோ பக்கத்தில் ஒரு இடி விழுந்தாலும் எழுந்திருக்கமாட்டாள் போல் தெரிந்தது.

அவனுக்கு அது மகிழ்ச்சியைத் தந்தது. நடுநடுவே கடிகாரத்தையும் பார்த்துக்கொண்டான்… செவ்வாய் ஒரைக்கு நிறையவே நேரமிருந்தது.

ஒரு விநாடி அதை நினைக்க- கொஞ்சம் முட்டாள் தனமாகக்கூடத் தோன்றியது. யார் என்றே தெரியாத ஒரு பிச்சைக்காரனைப் போன்றவர் சொன்னதையா நம்புவது என்றும் ஒரு கேள்வி உள்ளே ஒடிக்கொண்டுதான் இருந்தது.

எழுத்தாளன் என்றால் சும்மாவா?

அவர்கள் மனம் எல்லாவித ஆராய்ச்சிகளையும் செய்யும். ஒன்றை முதலில் ஒப்புக்கொள்ளும். பிறகு மறுக்கும்… மீண்டும் ஒப்புக்கொள்ளப் பார்க்கும். தெளிவான விஷயங்களில் இரும்புப் பிடி போட்டுவிடும். யார் என்ன சொன்னாலும் அசராது.

ஒவ்வொரு எழுத்தாளனுக்குமே

Enjoying the preview?
Page 1 of 1