Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vanajavin Annan
Vanajavin Annan
Vanajavin Annan
Ebook190 pages1 hour

Vanajavin Annan

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Mrs. Jyotirllata Girija, born in Chennai. She wrote her first story when she was at the age of thirteen. She has written in so many forms - Stories for children, novels, short stories, dramas etc. So far, she has written more than 600 short stories, 19 novels, 60 novelettes and 3 dramas. She has also written 25 short stories in English and she has written around 150 stories for children.
Languageதமிழ்
Release dateAug 22, 2016
ISBN6580101501436
Vanajavin Annan

Read more from Jyothirllata Girija

Related to Vanajavin Annan

Related ebooks

Reviews for Vanajavin Annan

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vanajavin Annan - Jyothirllata Girija

    http://www.pustaka.co.in

    வனஜாவின் அண்ணன்

    Vanajavin Annan

    Author :

    ஜோதிர்லதா கிரிஜா

    Jyothirllata Girija

    For other books

    http://www.pustaka.co.in/home/author/jyothirllata-girija

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. பலநாள் திருடன்

    2. ஒட்டப் பந்தயம்

    3. திருடன் திருடன்

    4. அபாயம் குறுக்கிட்டது

    5. ஐயோ, போலீஸ்!

    6. ஜிமிக்கி எங்கே?

    7. ஸ்டேஷனுக்கு அழைப்பு

    8. இரும்புக் கரங்கள்

    9. யாரடா அங்கே?

    10. மூர்ச்சையானார்!

    11. மற்றோர் ஆபத்து

    12. ராக்கப்பன் யார் ?

    13. குண்டு வெடித்தது

    14. அந்த ரகசியம்

    15. சிங்கத்தின் வாயில்.

    16. வந்தவர் யார்

    17. உயிருக்கு ஆபத்து

    18. போன மச்சான்

    வனஜாவின் அண்ணன்

    1. பலநாள் திருடன்

    'கிண் கிண், கினு கிணு' என்று வெண்கல ஓசையுடன் ஒலித்தது அந்த அலாரம் கடிகாரம். அதன் அலறலைக் கேட்டதுமே 'சட்'டென்று வாரிச்சுருட்டிக் கொண்டு தன் படுக்கையில் எழுந்து உட்கார்ந்தான் ரமணி. அவனைப் பார்த்தால் அப்போதுதான் விழித்துக் கொண்டவன் மாதிரித் தெரியவில்லை. கடிகாரம் மணி அடிப்பதற்கென்றே காத்துக் கொண்டிருந்தவன் போல்தான் தென்பட்டது.

    அபாயம் நிறைந்த இரகசியத் திட்டத்தை நிறைவேற்றும் எண்ணத்துடன் படுக்கிறவர்களுக்குத் துாக்கமா வரும்? சுறுசுறுப்புடன் கண்களை விரலால் கசக்கித் தேய்த்து விட்டுக் கொண்ட ரமணி, 'ஆவ்' என்று மெல்லிய குரலில் கொட்டாவி விட்டுக் கொண்டே பின்புறமாக முதுகை நெளித்துக் கொண்டான். அவனுடைய இந்தச் செய்கையால், அவனிடம் ஒட்டிக் கொண்டிருந்த அரைக்கால் தூக்கமும் அலறிப் புடைத்துக் கொண்டு ஓட்டம் பிடித்தது.

    நிறுத்தப்படாத கடிகாரம் இன்னும் அலறிக் கொண்டிருந்தது. அமைதி நிறைந்த அந்த இரவு நேரத்தில், கடிகாரத்தின் கிண் கிணி நாதம் இன்னிசையாக ஒலிப்பதற்குப் பதில், ஏனோ ரமணியின் உள்ளத்தில் எரிச்சலை எழுப்பிவிட்டது! படுக்கையிலிருந்து ஆத்திரத்துடன் எழுந்த ரமணி, கடிகாரம் வைக்கப்பட்டிருந்த முக்காலியை ஒரே எட்டில் நெருங்கினான். அடுத்த விநாடி அவன் கை கடிகாரத்தின் கிணுகினுப்புக்கு ஒரு தற்காலிக முற்றுப் புள்ளி வைத்தது.

    கடிகாரத்தின் கிண்கிணி ஓசை தன்னைத் தவிர வீட்டில் வேறு யாரையாவது விழிக்கச் செய்து விடுமோ என்று பயந்துதான் ரமணி அப்படிச் செய் தான்.

    முதல் நாளே அவன் ஒரு திட்டம் தயார் செய்து வைத்திருந்தான். அந்தத் திட்டம் ரகசியமாகவே நிறைவேற்றப் பட வேண்டும் என்றால் அந்த வீட்டில் அவன் ஒருவனைத் தவிர வேறு யாரும். விழித்துவிடக் கூடாதே இப்பொழுது புரிந்தா, ரமணி அவசர அவசரமாகக் கடிகாரத்தின் ஜலதரங்க ஒசைக்கு முற்றுப்புள்ளி வைத்ததன் காரணம்?

    தன் படுக்கையில் மறுபடியும் உட்கார்ந்து கொண்டே அந்தக் கடிகாரத்தை உற்றுப் பார்த்தான் ரமணி. அந்த வட்ட வடிவமான கடிகார முகப்பில், அவனுடைய அப்பா ராமசாமியின் முகம் தென்பட்டது. முதல் நாள் கூறிய வார்த்தைகளைத் திரும்பவும் அப்போது அவர் கூறுவது போலிருந்தது.

    'ஏதேது! பரீட்சைக்கு இன்னும் மூன்று மாதங்களுக்கு மேல் இருக்கும்போதே துரையவாளுக்குப் படிப்பில் அக்கறை வந்துவிட்டது போலிருக்கிறதே! பேஷ்! படிப்பில் ஒருநாளும் இல்லாத திருநாளாக இன்று உனக்கு அக்கறை ஏற்படிருக்கிறதே! இதில் பத்தில் ஒரு பங்காவது பரீட்சைகள் முடிவடையும் வரை நீடித்தாற்போல் உன்னிடம் இருக்க வேண்டுமே என்றுதான் கவலையாக இருக்கிறது. அலாரம் கடிகாரம்தானே வேண்டும்? தாராளமாய்த் தருகிறேன். கொஞ்சம் கவனமாக மட்டும் பாடங்களைப் படித்து இந்த வருஷம் எப்படியாவது தேறி மேல் வகுப்பிற்குப் போய்விடு! நீ என்ன வேண்டு மென்று கேட்டாலும் அவன் தட்டாமல் வாங்கித் தருகிறேன்!" என்றுதான் அப்பா முதல் நாள் கூறினார்

    'ஐயோ, அப்பாவி அப்பாவே! சீக்கிரம் எழுந்து படிப்பதற்காகவே நான் அலாரம் கடிகாரம் கேட்டேன் என்றா எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள்? உங்கள் அறியாமைக்கு என் மனமுவந்த அனுதாபம் உரித்ததாகுக!' - இந்த மாதிரி நாடக மேடைப் பாணியில் இலக்கணமாக முணுமுணுத்து விட்டுச் சிரித்துக் கொண்டான் ரமணி.

    - ...அன்று காலை, பரீட்சை நெருங்கிக்கொண்டிருக்கிறதே அப்பா! உங்கள் அலாரம் கடிகாரத்தைக் கொஞ்சம் கொடுத்தீர்களானால் அதிகாலையில் சிக்கிரமாய் எழுந்து படிக்கச் செளகரியமாயி ருக்கும். மாடியிலுள்ள என் அறையில் வைத்துக் கொள்கிறேன்,அப்பா! என்று மிகுந்த அக்கறை யுடையவன் போல் நடித்துக் கொண்டே அப்பா வைக் கேட்டான் ரமணி.

    அவனுடைய ஆர்வங்கலந்த சொற்களைக் கேட்டதும் அப்பா திகைத்துப் போனார்.

    ஏனெனில் படிப்பில் ரமணிக்கு இருந்த அக்கறையின் எல்லை அவருக்கு வெகு நன்றாகத் தெரியும். ஆயினும், அவருக்கு ரமணி கூறியதைக் கேட்டதும் மிக்க மகிழ்ச்சி ஏற்பட்டது. ஏதோ கடவுள் கிருபையால் ரமணி ஒழுங்காகப் படித்து முன்னேற வேண்டும். இது ஒரு நல்ல அறிகுறி தான்' என்று எண்ணி மகிழ்ந்தார். எனினும் தமக்குத் தோன்றிய மகிழ்ச்சி முழுவதையும் அவர் வெளிக் காட்டிக் கொண்டதாகச் சொல்ல முடியாது.

    ஏதேது! படிப்பில் ரொம்ப அக்கறை வந்து விட்டது போலிருக்கிறதே, துரையவாளுக்கு! என்று கொஞ்சம் இடக்காகவே ஆரம்பித்துத்தம் மகிழ்ச்சியை ஒரளவு மட்டுமே காட்டிக் கொண்டார், அந்தக் கெட்டிக்கார அப்பா. அளவுக்கு மீறிப் புகழ்ச்சியாகப் பேசிவிட்டால், 'பிள்ளைக்கு மூக்கு வெளுத்துவிடும்' என்ற் பயம் அவருக்கு!

    ரமணியிடம், அலறும் கடிகாரத்தை அவர் கொடுத்தபோது, அவரது முகம் எவ்வகையான உணர்ச்சியைக் காட்டியதோ, அதே உணர்ச்சி யைத்தான் கடிகாரத்தில் தோன்றிய அப்பாவின் முகத்தில் இப்போதும் ரமணி கண்டான். ஆனால் ரமணி அதிகாலையில் எழுந்து பாடம் படிப்பதற்காக அலறும் கடிகாரத்தைக் கேட்டு வாங்கிக் கொள்ளவில்லை என்பதை அந்த அப்பாவித் தகப்பனார் அறிய நேர்ந்தால்...?

    இதை நினைத்துப் பார்த்த ரமணியின் உள்ளத்தில் ஏதோ முள் போன்ற ஒரு பொருள் 'சுருக்' கென்று குத்துவது போலிருந்தது. நேரம் போய்க் கொண்டே இருந்தது. கடிகாரத்தைப் பார்த்த ரமணி நெஞ்சிலே துணிச்சலை வரவழைத்துக் கொண்டு எழுந்து நின்றான். கடிகாரத்தில் மணி இரண்டாகிக் கொண்டிருந்தது. திட்டத்தை அதிக அபாயத்துக்குட்படாமல் நிறைவேற்றச் சரியான நேரம்!

    'திருடர்களுக்கும், கொலை பாதகர்களுக்கும் தூக்கம் வராத நேரம். ஆம்; எனக்கும் சாதகமான சமயம்தான்! பார்க்கப் போனால் நானும் ஒரு குட்டித் திருடன்தான்! பிறர் வீட்டிலிருந்து நூறு நூறாய்க் கொள்ளையடிக்கப்போகும் திருடனல்ல. சொந்த வீட்டில் அப்பாவின் பணப்பையிலிருந்து சிறிது தொகையைக் களவாடப் போகும் குட்டித் திருடன்...!

    'உன் வீட்டிலேயேவா கொள்ளையடிக்கப்போகிறாய் ரமணி! என்ன காரியம் இது! சரியா?"

    'ஏன் சரியில்லை? இந்த அப்பாதான் ஏராளமான^ சொத்துகளைச்சேர்த்து வைத்திருக்கிறாரே! அப்படி இருந்தும், விரும்பியதை வாங்கித் தின்னத் தாம் பெற்ற பிள்ளைக்குக் கூடக் காசு கொடுக்க மனம் வரவில்லையே! பணத்தை எண்ணி அழகு பார்த்துக் கொண்டிருக்கும் இவருக்கு இந்தத் தண்டனை வேண்டியதுதான்!'

    'உன் தந்தை அப்படியொன்றும் கருமியல்ல, அப்படியே அவர் கருமியாக இருந்தாலும், தண்டனையைக் கடவுள் அவருக்குக் கொடுத்துவிட்டுப் போகிறார். அவரைத் தண்டிக்க நீ யார்? நீ செய்வது மட்டும் சரியா?

    ஏன் சரியில்லை? எல்லாம் சரிதான்!

    மனச்சாட்சியின் குறுக்குக் கேள்விகளை எல்லாம் தன்னுடைய சமாதானங்களால் தகர்த் தெறிந்துவிட்டு எழுந்தான் ரமணி. அடிமேல் அடி வைத்து மெதுவாகத் தன்னறையை விட்டு வெளியே வந்தான். கூடத்திலிருந்த விடிவிளக்கின் மங்கிய ஒளி மாடிப் படிகளின் மீது இலேசாய்ப் பரவியிருந்தது. கூடத்தின் ஓர் ஒரத்தில் அவனுடைய அம்மா விசாலமும், தங்கை வனஜாவும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள்.

    மிகவும் ஜாக்கிரதையாக ஒசையின்றி ஒவ்வொரு மாடிப்படியாகக் கடந்து தரைக்கு வந்து விட்டான் ரமணி. அப்போது தூக்கத்தில் வனஜா என்னவோ உளறிக் கொண்டே புரண்டு படுத்தாள். 'எங்கே அவள் விழித்துக் கொண்டு விடுவாளோ!' என்கிற அச்சத்தில் அவனுடைய உடல் வியர்த்துக் கொட்டியது.

    இதற்கு முன்னால் அவன் எத்தனையோ 'சில்லறை வேலைத்தனங்கள்' செய்திருக்கிறான். சாமான்கள் வாங்கி வரும்படி அவனுடைய அப்பா கொடுக்கும் காசில் பத்துப்பைசா இருபது பைசா என்று மிச்சம் பிடித்துவிட்டுப் பலமுறை பொய்க் கணக்குச் சொல்லியிருக்கிறான். ஆனாலும் இந்த மாதிரி இருட்டு வேளையில் வெளிப்படையாகத் திருடுவது இதுதான் முதல் தடவை.

    மெல்ல மெல்ல இரேழி நடைக்கு வந்து விட்டான் ரமணி. இரேழியில் ராமசாமி அபூர்வ இராகங்களில் குறட்டை விட்டபடியே நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தார். ரேழியறையில்தான் பணப்பை இருந்தது. குறட்டையிலிருந்து ராமசாமி ஆழ்ந்து துங்கிக் கொண்டிருந்தாரென்பது அவனுக்குத் தெரிந்தது. ஆனாலும், சிறிய ஓசைகளுக்கு அசைந்து கொடுக்கக் கூடிய தூக்கமா இல்லையா என்பதைத் தெளிவாய்த் தெரிந்து கொண்டுவிட விரும்பினான் ரமணி. ஏனென்றால் விழித்துக் கொண்டே குறட்டைவிடும் ஆசாமிகளும் உண்டல்லவா?

    இரேழிக் கதவில் 'லொட் லொட்'டென்று இரண்டு தடவைகள் சிறிது பலமாகத் தட்டினான் ரமணி. ராமசாமி அசையவே இல்லை. ரேழியறையின் நிலையில்தான் சாவி எப்போதும் மாட்டப் பட்டிருக்கும். கூடத்திலிருந்து வந்த வெளிச்சத்தின் உதவியால் அந்தச் சாவியை எடுத்துப் பூட்டைக் கூடியவரை ஒசையில்லாமல் திறந்தான் ரமணி. 'பட் பட்'டென்று அப்போது அவன் இருதயம் வேகமாக அடித்துக் கொண்டது. அந்த ஒலி ரமணியின் செவிகளுக்கே நன்கு கேட்டது. அவனுடைய உடல், உச்சியிலிருந்து குதிகால்வரை உள்ளுறு வெட வெடத்துக் கொண்டிருந்தது.

    கதவைத் திறந்து விட்டு அறையினுள் புகுந்தான் ரமணி. கதவைச். சாத்திவிட்டு முன்னேற். பாடாக எடுத்து வந்திருந்த 'டார்ச்' விளக்கைப் பொருத்தினான். பணப்பையை எடுத்தான். தைகள் உதறிய உதறலில் பையிலிருந்த நாணயங்க ளெல்லாம் எங்கே நழுவி இழுந்து பலத்த சத்தம் உண்டாக்கிவிடுமோ என்கிற பயம் ஏற்பட்டது அவனுக்கு. கூடியவரை கை நடுக்கத்தைச் சமாளித்துக் கொண்டு பையைப் பார்த்தான் ரமணி. ஒரே ஒரு ரூபாய் மட்டும் எடுக்கும் எண்ணத்துடன்தான் அங்கே வந்தான். பையிலிருந்த நோட்டுக் கற்றை களையும் நாணயங்களையும் கண்டதும் ரமணியின் 'சபலம்; அதிகரித்துவிட்டது. 'எடுக்கிறதோ எடுக்கிறோம். நிறைய எடுத்து விடுவேர்மே!'

    இந்த எண்ணம் ஏற்பட்ட மறு வினாடி சமஜியின் கை இரு பத்து ரூபாய் நோட்டுகிளை லாகவமாக உருவிவிட்டது. பையை ருந்த இடத்தில் வைத்துவிட்டுக் கதவைச் சாத்திக் கொண்டு வெளிவந்தான் ரமணி. அப்பா இன்னும் அதே நிலையில் அசையாமல் தூங்குவதைக் கண்டான். நிம்மதியாகப் பெருமூச்செறிந்தான். கதவைப் பூட்டிச் சாவியை மாட்டிவிட்டுப் பூனைபோல் தன்னறைக்கு வந்தான். 'இருபது ரூபாயை ஒரேயடியாக எடுத்துவிட்டோமே! அப்பா கண்டு பிடித்துவிட்டால்...?'

    இரண்டு தினங்கள் கழிந்தன. வெளியே தம் இடுப்பிலேயே நிறையப் பணம் வைத்துக் கொண்டிருந்ததால், ரேழியறைக்குள் நுழைந்து பணப்பையைத் திறக்கவேண்டிய தேவை ராமசாமிக்கு ஏற்படாது போயிற்று.

    'அனுபவிக்க அனுபவிக்க ஆசை அதிக மாகிறது' என்று சொன்ன அறிஞன் எத்தகைய புத்திசாலி! ஆம், ரமணியின் ஆசை அதிகரித்தது. இருபது ரூபாயில் ஐந்து ரூபாயை இந்த இரண்டு நாட்களில் செலவழித்துவிட்டான். மீதி பதினைந்து ரூபாய் அவனிடம் - கணக்கு நோட்டில்- பத்திரமாக இருந்தது. காசு வைத்துச் சீட்டாடும் கெட்ட வழக்கம் அந்தப் பதினான்காம் வயதிலேயே ரமணியிடம் ஏற்பட்டுவிட்டிருந்தது. அதற்காக இன்னும் ஐந்து ரூபாய் அவனுக்குத் தேவையா யிருந்தது.

    Enjoying the preview?
    Page 1 of 1