Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ladies Hostel
Ladies Hostel
Ladies Hostel
Ebook421 pages4 hours

Ladies Hostel

Rating: 1 out of 5 stars

1/5

()

Read preview

About this ebook

Yandamoori Veerendranath, (b. 14 November 1948) is a renowned Telugu novelist.Hailing from Andhra Pradesh state in India, he influenced younger generations with his socially relevant writings. In his writings he addresses many of the important social problems in India like poverty, prejudices, and superstitions, and encourages people to be socially responsible. He successfully bridges the idealistic and the popular styles of literature.
Languageதமிழ்
Release dateAug 22, 2016
ISBN6580101101424
Ladies Hostel

Read more from Yandamoori Veerendranath

Related to Ladies Hostel

Related ebooks

Reviews for Ladies Hostel

Rating: 1 out of 5 stars
1/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ladies Hostel - Yandamoori Veerendranath

    http://www.pustaka.co.in

    லேடிஸ் ஹாஸ்டல்

    Ladies Hostel

    Author:

    தெலுங்கில் - எண்டமூரி வீரேந்திரநாத்

    தமிழாக்கம் - கெளரி கிருபானந்தன்

    Telugu – Yandamoori Veerendranath

    Translated by – Gowri Kirubanandhan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/yandamoori-veerendranath

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    லேடிஸ் ஹாஸ்டல்

    1

    கிரண்மயி இன்னும் முழுவதுமாக உள்ளே நுழைவதற்குள்ளாகவே பின்னால் கதவுகள் சாத்தப்பட்டு விட்டன. அவள் கையில் பால் தம்ளர் இருக்கவில்லை. யாரோ அதை அறையில் மேஜை மீது வைத்திருந்தார்கள். அந்த மேஜைக்குப் பக்கத்திலேயே அவன் நின்று கொண்டிருந்தான்.

    அவள் அறைக்குள் அடி எடுத்து வைத்ததுமே குப்பென்று மல்லிகைப் பூக்களின் நறுமணம் அந்த அறையில் சூழ்ந்து கொண்டது.

    அவள் நிமிர்ந்து அவனைப் பார்க்க விரும்பினாள். ஆனால் இமயம் முதல் கன்னியாகுமரி வரையில் பரவியிருந்த இந்திய பண்பாடும், உடல் நடுக்கமும் அதற்கு ஒத்துழைக்கவில்லை. அவளுக்கு வியப்பாக இருந்தது. மனோதத்துவ சாஸ்திரத்தில் அவள் பெற்று இருந்த பட்டத்தால்கூட இதற்கு விளக்கம் தரமுடியவில்லை.

    அவள் யோசித்தாள். அவனைப்பற்றி தனக்கு அதிகமாக எதுவும் தெரியாது. ஏதோ பெண் பார்க்கும் படலத்தில் ஐந்து நிமிடங்கள் பார்த்ததோடு சரி.

    'ஏதாவது பேசிக்கொள்கிறீர்களா?' என்று இருவரையும் பார்த்துக்கேட்கும் நாகரீகம் தன் வீட்டாருக்கு இல்லை. அந்தப்பக்கம் மணமகன் வீட்டாரிடத்திலும் அப்படிப்பட்ட பழக்கம் இருப்பதாகத் தெரியவில்லை. அவர்கள் முற்றிலும் கிராமத்துச் சூழ்நிலையிலிருந்து வந்தவர்கள். ஒரே மகன். தந்தைக்கு நிலம் நீச்சு இருந்தது. பஞ்சகச்சம் கட்டிக்கொண்டு தோளில் அங்கவஸ்திரம் போட்டிருந்தார். அப்பாவியாய் தென்பட்டார். உயரமாக, திடகாத்திரமாக இருந்த அவருக்கு நாற்காலியில் இடம்தான் போதவில்லை. பட்டணத்துக்காரர்களுக்கு சம்பந்தி ஆகப்போகிறோம் என்ற பயம் அவரிடம் லேசாக தென்பட்டது. அதை நன்றாக பயன்படுத்திக்கொண்டு தந்தையும், இரண்டாவது அண்ணனும் வாய்ப்பந்தல் போட்டார்கள். ஆனால் பொருளாதார ரீதியில் அவர்கள் தங்களைவிட கொஞ்சம் உயர்ந்த நிலையில் இருப்பதை அவள் உணர்ந்திருந்தாள்.

    இந்த வரனைப்பற்றி அவள் அதிகமாக ஆசைகளை வளர்த்துக்கொள்ளவில்லை. ஒன்பது குழந்தைகளில் அவள் ஆறாவது தந்தை தாலுக்கா ஆபீசில் ஹெட்கிளார்க், லஞ்சம் வாங்கிக்கொண்டிருக்கும்போது பிடிபட்டு சஸ்பெண்ட் ஆகிவிட்டார். பெரிய அண்ணன்கள் இருவரும் வேண்டாத வெறுப்பாக மாதந்தோறும் தலைக்கு ஆயிரம் ரூபாய் தந்துகொண்டு இருந்தார்கள். அதில்தான் குடும்பமே நடந்து கொண்டிருந்தது.

    அவள் ஒருத்திதான் சைக்காலஜியில் எம்.ஏ. படித்திருக்கிறாள். அதுவும் வீட்டாரின் எதிர்பையும் மீறி. தாழ்த்தப்பட்ட இனத்தைச்சேர்ந்தவள் என்பதால் ஸ்காலர்ஷிப் கிடைத்தது. அந்த பக்கபலம் இருந்ததால்தான் அவளால் வீட்டாருடன் போராடி எம்.ஏ. படிப்பை முடிக்க முடிந்தது.

    அவளுக்கும் மேலே நான்கு அண்ணன்களும், ஒரு அக்காவும் இருந்தார்கள். அக்காவுக்கு ஆறு குழந்தைகள். அத்தான் சாராயக்கடை காண்ட்ராக்டர். மறுபடியும் அதே பண்பாடு. சிறுவயதிலிருந்தே அவள் அந்த விட்டிற்கு தொலைவாக இருந்து வநதாள்.

    எம்.ஏ. முடித்த சில நாட்கள் ஆனதுமே இந்த வரன் வந்தது. அவளுக்கு அதற்குள் திருமணம் செய்து வைப்பதற்கு வீட்டில் இருந்தவர்களுக்கு, முக்கியமாக தந்தைக்கு விருப்பம் இல்லை.

    தாழ்த்தப்பட்டஇனம் என்பதாலும், படித்த படிப்பிற்காகவும் தன் மகளுக்கு நல்ல சம்பளம் கிடைக்கும் என்று அவருக்குத் தெரியும். அதனால் அவ்வளவு சுலபமாக அவளை விரட்டுவது பிடிக்கவில்லை. அந்த அபிப்பிராயத்தை அவர் ஜாடை மாடையாக பேச்சில் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.

    மணமகனின் பெயர் ராயன்னா. பெயர் நன்றாக இல்லைதான். ஆனால் அழகான பெயரைக் கொண்டவர்கள் எல்லோரும் ஆறடி உயரம் இருக்க மாட்டார்கள். ஆனால் ராயன்னா ஆறடி உயரம் இருந்தான்.

    22:32:46: Hrs.

    அறைக்குள் காலடி எடுத்து வைத்த பன்னிரண்டு வினாடிகள் கழித்து அவள் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். அவனுக்கு தோள் வரையில் வருவோம் என்று நினைத்துக்கொண்டாள். அவனும் தன்னையே பார்த்துக்கொண்டிருப்பதை உணர்ந்து சட்டென்று பார்வையைத் தாழ்த்திக்கொண்டாள்.

    ஆனால் அந்த கண்இமைக்கும் நேரத்திற்குள்ளேயே அவனும் தன்னைப்போலவே இந்த மெளன போராட்டத்தில் எப்படி அமைதி பேச்சு வார்த்தை மூலமாய் சமாதானத்திற்கு வந்து நெருக்கமாவோம் என்ற தவிப்பில் தடுமாறிக்கொண்டிருப்பதை உணர்ந்தாள். தன்னையும் அறியாமல் வந்த மெலிதான சிரிப்பை அரும்பாடுபட்டு அவன் பார்த்துவிடாமல் அடக்க முயன்று தோல்வியடைந்தாள்.

    இந்தத் திருமணம் நடக்க வேண்டும் என்று அவள் பெரிதாக ஆசைப்படாததற்கு மற்றொரு காரணம் அவனுடைய குவாலிஃபிகேஷன்! அவன் பட்டதாரிகூட இல்லை. இதில் அவளுக்கு ஆட்சேபனை எதுவும் இல்லை என்றாலும் பெரும்பாலான ஆண்கள் தங்களைக் காட்டிலும் அதிகமாக படித்த பெண் மனைவியாக வருவதை விரும்ப மாட்டார்கள் என்பது அவளுக்குத் தெரியும். அப்படியும் அவர்கள் பெண் பார்க்க வருவதற்கு சம்மதித்து விட்டார்கள் என்று தெரிந்தபோது அவள் கொஞ்சம் வியப்படைந்தாள்.

    அவள் அவனை முதல் முதலாக பார்த்தது. ரஞ்சிட்ரோஃபி மேட்சில்!

    ராயன்னா தமிழ்நாட்டு சார்பில் கிரிக்கெட் ஆடும் உமில் முக்கியமான பிளேயர்.

    அவன் பெண் பார்க்க வரப்போகிறான் என்று தெரிந்ததுமே அவளுடைய நாலாவது அண்ணன் (அவன் ஒருத்தன்தான் அந்த வீட்டில் அவளிடம் கொஞ்சம் பாசம் வைத்திருக்கிறான்) அடம் பிடித்து அன்றைக்கு அவளை மேட்சுக்கு அழைத்துச் சென்றான். அவளுக்கு கிரிக்கெட் பற்றி நன்றாகவே தெரியும். ஆனால் அவ்வளவாக ஆர்வம் இல்லை. அவள் வேண்டாம் என்று மறுத்தாள்.

    அவன் யாரோ! இன்னும் பெண் பார்க்கும் நிகழ்ச்சிகூட நடைபெறவில்லை. அதற்குள் இப்படிப் போய்ப் பார்ப்பானேன் என்று வாதாடினாள். ஆனால் அவள் அண்ணன் இதை ஒரு திரில்லிங்காக எடுத்துக்கொண்டான்.

    சாதாரணமாக நடக்கும் எல்லா ரஞ்சி மேட்சுகளைப் போலவே, அதுவும் சென்னைக்கும் திருநெல்வேலிக்குமிடையே நடந்ததால் மக்கள் கூட்டம் அதிகமாக இல்லை. இருவரும் டிக்கெட்டுகளை வாங்கிக்கொண்டு உள்ளே போய் உட்கார்ந்து கொண்டார்கள்.

    எதற்காகவோ டிரெஸ்ஸிங் ரூமிலிருந்து வெளியே வந்த ராயன்னாவைப் பார்த்து, தொலைவிலிருந்தே அவளுடைய அண்ணன் கையை ஆட்டினான். ராயன்னா அவனை அடையாளம் புரிந்து கொள்ளவில்லை. சம்பந்தம் பேசுவதற்காக தந்தையோடு சேர்ந்து அவளுடைய அண்ணனும் போயிருந்தான். ஆனால் அவ்வளவு தூரத்திலிருந்து அடையாளம் புரிந்து கொள்வதற்கு அந்தச் சொற்ப அறிமுகம் போதாது. அதனால்தான் அவன் கையை ஆட்டியபோது ராயன்னாவின் முகத்தில் வியப்பு தென்பட்டது. அவன் மறுபடியும் உள்ளே போய்விட்டான்.

    ஆட்டம் தொடங்கிய இருபது நிமிடங்களுக்கே சென்னை அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து விட்டது. ராயன்னா ஐந்தாவது ஆள். பேட்டை கையில் எடுத்துக்கொண்டு ஆடும் இடத்திற்கு போய்க் கொண்டிருந்தவன், இவர்கள் உட்கார்ந்திருந்த பக்கம் தலையைத் திருப்பி, அவளுடைய அண்ணனை இன்னொரு தடவை கூர்ந்து பார்த்தான்.

    அவனை யார் என்று சட்டென்று நினைவுக்கு வந்து விட்டாற்போல் ராயன்னாவின் முகத்தோற்றத்தில் மாறுதல் தென்பட்டது. அவன் பார்வை பக்கத்திலிருந்தே தன் பக்கம் திரும்பப்போன அதே சமயத்தில் கைதட்டல் ஓசை கேட்டதால் பிட்ச்சை நோக்கி நடக்கத்தொடங்கினான்.

    சென்னை அணியில் எதிர்பார்ப்புகள் அவன் மீதே நிலைத்திருந்தன. அவனும் ஏமாற்றமளிக்கவில்லை. ஸ்கோர் மெள்ள மெள்ளமாய் அதிகரித்துக்கொண்டே வந்தது. லஞ்ச் நேரத்திற்குள் அவன் ஐம்பது ரன்களை எடுத்திருந்தான். மாலையில் ஆட்டம் முடியும்போது சென்னை அணி இருநூற்று முப்பத்தெட்டிலும், அவன் நூற்றுக்கு இரண்டு ரன்கள் குறைவாகவும் இருந்தான்.

    மக்கள் கூட்டம் குறைவாக இருந்தாலும் சீட்டை விட்டு எழுந்து நின்று கைதட்டிக் கொண்டிருந்தார்கள். பெவிலியனுக்கு திரும்பி வரும்போது அவன் பார்வை தாங்கள் இருந்த பக்கமே இருந்ததை அவள் உணர்ந்தாள். அவன் தன்னைத் தெரிந்து கொண்டுவிட்டான்.

    ஆண்களும் பெண்களும் அவனைச் சூழ்ந்துகொண்டு ஆட்டோகிராஃப் வாங்கிக்கொண்டு இருந்தார்கள். வெளியே வரும்போது அண்ணன் 'எப்படி இருக்கிறான்?' என்று கேட்டான்.

    அவள் எந்த பதிலும் சொல்லவில்லை. First impression is the best impression என்பது மற்ற எந்த விஷயத்திலும் பொருத்தமாக இருக்கலாமோ என்னவோ! ஆனால் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் விஷயத்தில் மட்டும் பொருந்தாது.

    திருமணமான முதல் வருடம் முழுவதும் அறையிலேயே அடைபட்டுக்கிடக்கும் தம்பதிகளுக்கு இடையேகூட, பத்து ஆண்டுகள் கழிந்த பிறகு ஒரு விதமான வெறுமை குடிகொண்டு இருப்பதை ஒரு மனவியல் மாணவியாக அவள் கவனித்திருக்கிறாள். அப்படி கவனிப்பதற்கு அவளுக்கு வெளிஉலகம் தேவையாக இருக்கவில்லை. தன்னுடைய வீடே போதுமானதாக இருந்தது. அவள் வீட்டிலேயே ஆறு தம்பதிகள் இருக்கிறார்கள். தாய் தந்தையரையும் சேர்த்து.

    அதனால்தான் இந்த சம்பந்தத்திற்கு அவர்கள் ஒப்புக்கொண்டு விட்டதாக தெரிந்தபோது பயந்தாள், போகப்போக தன் கணவனோடு மனதளவில் எப்படி ஒத்துப்போகுமோ என்று! அவன் சுபாவம், பழக்க வழக்கங்கள், அவன் வீட்டுச் சூழ்நிலையோடும் தன்னால் ஒன்றிப்போக முடியுமா என்று சந்தேகப்பட்டாள்.

    புகுந்த வீட்டுக்குப் போகும் ஒவ்வொரு பெண்ணிடமும் இந்த பயம் இருப்பது சகஜம்தான். ஆனால் அவளுக்கு தன் சொந்த விட்டுச் சூழ்நிலையும், மூடிய படுக்கை அறைக்குப் பின்னாலிருந்து கேட்கும் சண்டை, சச்சரவுகளும் எல்லாவற்றையும்விட தான் படித்த டிரான்ஸாக்ஷனல் அனாலிஸிஸ்' இந்த பயத்தை தோற்றுவித்தன.

    கிரண்மயி அளவுக்கு மீறி புத்தகங்களை படிக்கும் பழக்கமுடையவள். கல்லூரியில் படிக்கும் நாட்களில்கூட அவள் பெரும்பாலான நேரத்தை புத்தகங்களை படிப்பதிலேயே கழித்து வந்தாள். படிப்பு முடிந்த பிறகோ கேட்கவே வேண்டாம். அவள் படித்த புத்தகங்களை ஆதாரமாகக் கொண்டு படிப்பு முடிந்த இந்த இரண்டு வருட இடைவெளியில் ஒரு தீஸிஸ் எழுதியிருந்தால் நிச்சயமாக டாக்டரேட் கிடைத்திருக்கும்.

    சாதாரணமாக ஆண்களுக்கும் - பெண்களுக்கும் இருக்கும் மென்மையான உணர்ச்சிகளுக்கு அவள் ஒன்றும் அப்பாற்பட்டவள் இல்லை. ஏறத்தாழ நூறு ரன்களை அடித்து முடித்துவிட்டு பெவிலியனை நோக்கி வரும்போது அவன் தன்னை கண் இமைக்காமல் பார்த்த பார்வை! பெண் பார்க்க வந்தபோது அன்று நீ என் ஆட்டத்தை பார்க்க வந்ததை நான் கவனித்துவிட்டேன்' என்று மறைமுகமாய் உணர்த்தும் மெலிதான முறுவலை அவள் கவனித்துவிட்டாள்.

    அந்த விஷயம் மறுபடியும் மறுபடியும் அவள் நினைவுக்கு வரத்தான் செய்தது. சில நிகழ்ச்சிகள், அவற்றை அனுபவிக்கும் நேரத்தில் இருந்ததைவிட நினைவுகளாக மாறியபிறகு அற்புதமான உணர்வை தரும். அவை போன்றவற்றில் அதுவும் ஒன்று. ஆனால் பெண் பார்க்க வந்தபோது அவன் எதுவுமே பேசாமல் போனது அவளுக்கு ஏமாற்றமாக இருந்தது.

    22:33:04: Hrs.

    அதற்குள் முப்பது நீண்ட வினாடிகள் கழிந்து விட்டன. அவன் இன்னும் அருகில் வரவில்லை. தானே உரிமை எடுத்துக்கொண்டு முன்னால் அடி எடுத்து வைப்பதா வேண்டாமா என்று புரியாத நிலைமை. அவன் தன்னைவிட அதிகமாக தடுமாறிக்கொண்டிருந்தது அவளுக்கு வேடிக்கையாக இருந்தது.

    ரஞ்சி கிரிக்கெட் பிளேயர். அதிர்ஷ்டக்காற்று கொஞ்சம் வீசினாலும் விரைவிலேயே டெஸ்ட் பிளேயர் ஆகப்போகிறவன். இவ்வாறு கூச்சப்படுவது வித்தியாசமாக இருந்தது. சாதாரணமாக விளையாட்டு வீரர்களுக்கு, அதிலும் கிரிக்கெட் வீரர்களுக்கு நிறைய பேர் விசிறிகள் இருப்பார்கள். ஆனால் இவன் சச்சின் டெண்டுல்கர் லெவலில் ரொம்பவும் வெட்கப்படுகிறான்.

    கதவுக்குப் பக்கத்திலேயே அவ்வாறு அவ்வளவு நேரமாக நின்று கொண்டிருப்பது அவளுக்கு சங்கடமாக இருந்ததால் ஓரடி முன்நோக்கி வைக்கப்போனாள். அப்பொழுதுதான் கேட்டது ஹலோ என்று. அறையில் நுழைந்த அத்தனை நேரம் கழித்து கேட்ட அந்த ஒரு வார்த்தைக்குப் பிறகு மறுபடியும் ஆழ்ந்த நிசப்தம்.

    தானும் ஹலோ என்று சொல்வோமா என்று நினைத்தாள். ஆனால் அது ரொம்பவும் அமெரிக்கன் டைப் முதலிரவைப்போல் இருக்கும் என்று நினைத்து அந்த எண்ணத்தை கைவிட்டாள்.

    அவன் அவள் கையைத் தன் கையில் எடுத்துக்கொண்டே ஹலோ என்று சொன்னால் பதில் சொல்ல மாட்டேங்கிறாயே? என்றான்.

    என்ன சொல்வது என்பது போல் அவள் தலையைக் குனிந்து கொண்டாள். நிச்சயமாக வெட்கத்தினால் அல்ல. ஏதோ யோசனை...

    What do you say after you say hello என்ற தலைப்பில் 'எரிக்பெர்ன்' எழுதிய புத்தகம்! ஹலோ! என்ற பிறகு என்ன பேச வேண்டும் என்பதைப்பற்றி அவர் எழுதியிருந்தார்:

    என்னங்க... செளக்கியமா? செளக்கியம்தான். நீங்க நானும்தான். வீட்டில் எல்லோரும் நலம்தானே, பசங்க என்ன படிக்கிறாங்க? பெரியவன் எட்டாவது பெயிலாகி விட்டான். சின்ன பெண் ஆறாவது படிக்கிறாள். வெயில் ரொம்ப கொளுத்துகிறது. உங்க ஊரில் எப்படி? இந்த அளவுக்கு மோசமாக இல்லை. அது சரி. அம்மா ஆட்சி விழுந்துவிடும் என்கிறார்களே. உண்மைதானே? பொய்! இன்னும் பத்து வருடங்களுக்கு யாரும் அசைக்க முடியாது. எழுதி வேண்டுமானாலும் தருகிறேன். இன்னொரு விஷயம் தெரியுமா? நம் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு பாகிஸ்தான் சி.ஐ.டி.யிலிருந்து ஆயிரம் பேர் நம் நாட்டுக்கு வந்திருக்கிறார்களாம். (இந்த விஷயத்தை இன்னும் பத்து பேரிடம் சொல்லணும்) போயிட்டு வரேன்.

    வாட் டு யு ஸே ஆப்டர் ஹலோ கிரண்மயி?

    ஒரு ஹலோவுக்கு பதிலாக இன்னொரு ஹலோ சொல்ல வேண்டுமென்றால் எதிரில் இருப்பவரை சந்தித்த மகிழ்ச்சி முகத்தில் தெளிவாக தென்பட வேண்டுமாம். அந்த நிமிடம் வரையில் இருந்த வருத்தம் - கடமைகள் எல்லாம் மறந்துபோய் இதயத்தின் ஆழத்திலிருந்து சொல்ல வேண்டுமாம். அப்படிச்சொல்ல முடியாத பட்சத்தில் "ஹலோ என்று சொல்வதை விட பேசாமல் இருப்பதே நல்லதாம். உண்மைதானே! கடமையே என்று பேசுவதைவிட மெளனமாக இருப்பது நல்லது இல்லையா?

    பரஸ்பரம் ஹலோ சொல்லி முடித்த பிறகு தொடர்ந்து ஒரு மணிநேரம் வெட்டியாக பேசும் உரையாடலைப்பற்றி நானுறு பக்கங்களைக் கொண்ட புத்தகத்தை எழுதிய டாக்டர் எரிக்பெர்ன் தனது முதலிரவில் மனைவியோடு என்ன பேசியிருப்பார்? வாழ்நாள் முழுவதும் சேர்ந்து வாழப்போகும் முயற்சியாய் இருவருக்குமிடையே இருந்த மெளனச்சுவரை இடித்துத் தள்ளி வார்த்தைகளின் உதவியால் நட்பு என்ற பாலத்தை உருவாக்கிக் கொள்ளும் தம்பதிகள், தம் முதலிரவில் முதல் முதலாக பேசிய வார்த்தை என்னவென்று நினைவில் வைத்துக்கொண்டிருப்பார்களா? முதலில் அதற்கு முக்கியத்துவம்தான் தருவார்களா? முக்கால்வாசிபேர் மறந்துகூட போயிருப்பார்கள்.

    பார்த்தாயா என் கை எப்படி நடுங்குகிறதோ

    அவள் யோசனையிலிருந்து மீண்டு அவன் கையைப் பார்த்தாள். தன் கையைப் பிடித்துக்கொண்டிருந்த அவன் உள்ளங்கை லேசாக நடுங்கிக்கொண்டு இருந்தது. அவன் கைக்குள் சிறைப்பட்டு இருந்ததால் அவளுக்கு தன் கையின் நிலைமையைப் பற்றித் தெரியவில்லை. அவள் முறுவலை கட்டாயமாக அடக்கிக் கொண்டாள்.

    அவன் தன் கையை யோசனையுடன் பார்த்தவாரே இது இரண்டாவது தடவை இப்படி நடுங்குவது. இதற்கு முன்னால் ஒரே ஒரு தடவை இந்த மாதிரி உணர்ச்சி வசப்பட்டிருக்கிறேன் என்றான்.

    அவள் சட்டென்று நிமிர்ந்து பார்த்தாள்.

    திருமணம் ஆன புதிதில் கணவன் மனைவி தங்கள் கடந்த கால வாழ்க்கையைப் பற்றியும், அனுபவங்களைப் பற்றியும், பழக்க வழக்கங்களைப் பற்றியும்... தங்களுடைய நேர்மையை நிருபித்துக்கொள்ளும் முயற்சியில் அடுத்தவருக்குச் சொல்லி, பிறகு, வாழ்நாள் முழுவதும் அதன் விளைவை அனுபவிப்பார்கள் என்று முதல் நாளே சைக்காலஜி புரொபசர் சொல்லியிருந்தார். தன்னுடைய முதல் இரவில்கூட அதே போல் நடக்கப்போகிறதா? அவன் சீரியஸாக சொல்லப்போன பொழுது அவள் மிரண்ட விழிகளுடன் பார்த்தாள். ஆமாம். இது இரண்டாவது முறை. மைக்கேல் ஹோல்டிங்கைத் தெரியுமா? போன கோடையில் அவங்க டீம் நம் நாட்டிற்கு வந்திருந்தபோது செளத் ஜோன் சார்பில் முதல் முதலாக அவன் போட்ட பந்தை எதிர்த்து நின்றபோது பேட்டைப் பிடித்துக்கொண்டிருந்த கை, இதே போல் நடுங்கியது. அது முதல் தடவை. இது இரண்டாவது தடவை.

    அவள் பக்கென்று சிரித்துவிட்டாள். அந்த விதமாக இருவருக்குமிடையே நிலவியிருந்த சங்கடங்களும், தயக்கங்களும் அடித்துச் செல்லப்பட்டன. வாட் டு யு ஸே ஆஃப்டர் யு ஸே ஹலோ கிரண்மயி?

    ஒன்றுமே சொல்லத் தேவையில்லை. நட்பு கலந்த புன்முறுவல் போதும்.

    22:02:34: Hrs.

    சரியாய் அரைமணி நேரத்திற்குப்பிறகு பேச்சுவாக்கில் அவன் கேட்டான். நான் குறைவாக படித்திருக்கிறேன் என்று உனக்கு எதுவும் இல்லையா?

    அவள் திகைத்துப்போனாள். எனக்கு ஒன்றும் இல்லை. ஆனால் நீங்க ஏதாவது நினைத்துக்கிட்டு இருப்பிங்களோ என்று எண்ணினேன்.

    அவன் சிரித்துவிட்டு "கிரிக்கெட்டைத் தவிர வேறு எதைப்பற்றியும் நான் யோசிக்க மாட்டேன். அது போகட்டும். உனக்கு கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் இருக்கா? என்று கேட்டான்.

    "கொஞ்சம் இருக்கு. ஆனால் போகப்போக அந்த ஆர்வத்தை மேலும் வளர்த்துக்கொள்கிறேன். உங்களுடன் டிஸ்களில் செய்ய வசதியாக இருக்கும் இல்லையா? என்றாள்.

    அவன் மறுபடியும் சிரித்துவிட்டு தாங்க்ஸ் என்றான்.

    அவன் சிரிப்பில் ஒரு அலாதியான தன்மை இருந்ததை அவள் கவனித்தாள். இந்த உலகிலேயே அற்புதமாக சிரிக்கக்கூடியவர்கள் ஃபிஜி தீவில் வசிப்பவர்கள்தானாம். டாக்டர் மாக்ஸ் லுசெர் எழுதியிருக்கிறார். அவர்கள் சிரிப்பு மெதுவாகத் தொடங்கி முகம் முழுவதும் மலர்ந்து அடுத்தவர் அதை உணர்ந்து கொள்ளும்வரை நீடித்து, பிறகு எரியும் தீபச்சுடர்போல் மெதுவாக கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து போகுமாம். இந்தச்செய்தி உண்மைதானா என்று தெரிந்து கொள்வதற்காக அவள் ஃபிஜி நாட்டு திரைப்படத்தை பார்த்தாள். அந்தச் சிரிப்புக்கும், ராயன்னாவின் சிரிப்பிற்கும் உள்ள ஒற்றுமையை கவனித்தாள். அதை அவனிடம் சொல்லவும் செய்தாள்.

    திருமணம் ஆன புதிதில் எல்லாம் அழகாகவும், அற்புதமாகவும்தான் தென்படும் என்றான்.

    அவள் கொஞ்சம் கோபமடைந்தாள். நான் எல்லோரையும் போல் பொதுவாக சொல்லவில்லை. மாக்ஸ் லூசெர் எழுதியதை உறுதிப்படுத்திக்கொண்ட பிறகு சொல்கிறேன்.

    "ஓ.கே... ஓ.கே. ஒப்புக்கொள்கிறேன் போதுமா?

    அதற்குப்பிறகு பேச்சு அவர்களுடைய பெற்றோர் பக்கம் திரும்பியது.

    அம்மா ரொம்பவும் கட்டுப்பெட்டி அவளுக்கு இதுபோல் படித்த பெண் மருமகளாக வருவது பிடிக்கவே இல்லை. ஆனால் அப்பாவுக்கு ஏனோ ரொம்பவும் பிடித்துவிட்டது. அவர் அதிகமாக படிக்கவில்லை. அது சரி. என் படிப்பு விஷயம் தெரியும் இல்லையா? குறைந்தபட்சம் பேரனையாவது நன்றாக படித்தவனாக பார்க்கணும் என்ற ஆசை அவருக்கு. அதனால் உன்னைப்பார்த்ததுமே அவருக்குப் பிடித்துப்போய்விட்டது.

    அப்பொ உங்களுக்கு

    எனக்கா? உண்மையைச் கொல்லட்டுமா?

    எந்தக் கல்லாக இருந்தால் என்ன பல்லைத் தட்டி எடுப்பதற்கு என்றுதான் நினைத்தேன்.

    அந்த வார்த்தை முழுவதுமாக முடியும் முன்பே அவன் கத்திய கத்தல் விலென்று அந்த அறையில் எதிரொலித்தது. அவன் கையில் அவள் நகத்தின் அவள் அடையாளம் சிவப்பாய் படிந்துவிட்டது. அவன் எரிச்சல் தாங்காமல் கையை ஊதிக்கொண்டிருந்தான். தான் செய்த காரியம் புரிந்ததுமே அவளுக்கு வியப்பாக இருந்தது. இவ்வளவு சுவாதீனம் தனக்கு எப்படி வந்தது? அவனுக்கு சாரி' சொன்ன பிறகும் அவள் இதைப்பற்றித்தான் யோசித்துக்கொண்டிருந்தாள். பேரெண்ட்... அடல்ட். சைல்ட் அனாலிஸிஸ்க்கு அப்பாற்பட்ட சுவாதீனம் அது.

    அதற்குள் அவன் கேட்டான். உன்னை என்னவென்று அழைப்பது? உன் முழுப்பெயரும் ரொம்பப் பெரிசாக இருக்கு.

    கிரண்.

    "ஊஹூம்… வீட்டில் எல்லோரும் உன்னை அப்படித்தான் கூப்பிடுவாங்க என்று

    நினைக்கிறேன். நானும் அப்படியே அழைத்தால் நன்றாக இருக்காது. வேறு ஏதாவது நல்ல பெயராக யோசிக்கணும்."

    அவள் பதில் சொல்லவில்லை. அவனுடைய சென்ஸ் ஆஃப் பிலாங்கிங்நெஸ் பற்றி நினைத்து கொஞ்சம் வியப்படைந்தாள்.

    அவன் சொன்னான்: உன் பெயரில் உள்ள எழுத்துக்களோடு எதுவும் சரியாக வராது போலிருக்கு. 'கிர்ரு என்றால் ரொம்பவும் கட்டில் சத்தம் போல் இருக்கு மரண் என்றாலோ கேட்கிறவங்களுக்கு திட்டுவது போல் இருக்கும்.

    அவள் காதில் எதுவும் விழவில்லை. அவன் தன்னை டாமினேட் செய்வது சந்தோஷமாக இருந்தது. அவனுக்கு தன் படிப்பைப்பற்றி எந்தவிதமான காம்ப்ளெக்ஸும் இல்லை. அது புரிந்ததும் மகிழ்ச்சியாக இருந்தது.

    எப்போதும் சந்தோஷமாக இருக்கும் ஆண்கள் ரொம்ப குறைவு. அந்தச் சிலபேரில் அவன் ஒருவன். அதுவும் புரிந்துவிட்டது.

    நீ வேலைக்கு போகப்போகிறாயா? எனக்கு விருப்பம் இல்லை என்றோ இவ்வளவு படித்துவிட்டு வேலைக்கு போகாமல் இருந்தால் எப்படி? படித்த பெண்ணை நான் திருமணம் செய்து கொண்டதே அதற்காகத்தான் என்றோ சொல்லவில்லை. இது போன்ற அபிப்பிராயங்களை முதல்நாளே அவள் மீது திணிக்கவில்லை. "உனக்குப் பிடித்த ஹீரோ யார்? எந்த பத்திரிக்கைகளை விரும்பி படிப்பாய்? போன்ற உப்பு சப்பற்ற கேள்விகளை கேட்டு நேரத்தை வீணடிக்கவில்லை. கலகலப்பான சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்றால் ரசனை இருக்க வேண்டும். உரையாடல் நன்றாக இருக்கவேண்டும் என்றால் எதிராளி புத்திசாலியாக இருக்க வேண்டும். அரைமணி நேரம் உரையாடியதில் அவனிடம் அந்த குணம் இருப்பதை கண்டுபிடித்து விட்டாள். எதிராளியின் மனதை சீக்கிரமாக கவரும் குணம்!

    நீங்க சிகரெட் பிடிப்பீங்களா?

    பிடிப்பேன. ஏன் கேட்கிறாய்?

    அவள் கொஞ்சம் தடுமாறினாள். எனக்கு சிகரெட்டைக் கண்டாலே பிடிக்காது என்றாள்.

    இந்த நிமிடத்திலிருந்து சிகரெட் பிடிக்க மாடேன். சத்தியம் செய்து தருகிறேன் என்றான்.

    அவள் வியப்படைந்தவளாய் நிமிர்ந்து பார்த்தாள். அவன் சிரித்துக்கொண்டிருந்தான்.

    சிரித்துக்கொண்டே மேலும் சொன்னான்: அப்படிச் சொல்ல முடியாது என்னால், சாரி. உனக்கு சிகரெட் பிடிப்பது ஆகாதா இல்லை. அந்தப் புகையைக் கண்டால் ஆகாதா?

    அவள் கொஞ்சம் கோபத்துடன் சிகரெட் பிடிப்பதும் ஆகாது. அந்தப் புகையும் ஆகாது என்றாள்.

    அவன் ஒரு வினாடி யோசித்துவிட்டு "சரி. அப்படியென்றால் நாம் ஒரு ஒப்பந்தத்திற்கு வருவோம். உனக்கு முன்னால் சிகரெட் பிடிக்கமாட்டேன். அதேபோல் உன்னிடம் வருவதற்கு முன்னால் க்ளோசப் டூத் பேஸ்டால் வாயை நன்றாக கொப்பளித்து விட்டு வருகிறேன். இந்த இரண்டையும் கடைப்பிடித்தால் பிறகு உனக்கு எந்த ஆட்சேபனையும் இருக்காது இல்லையா? என்றான்.

    அவளுக்கு எந்த ஆட்சேபனையும் இருப்பதாக தோன்றவில்லை. ஓ.கே. என்றாள்.

    அவன் நிம்மதியாக மூச்சு விட்டுக்கொண்டே தாங்க்ஸ். நம் குடித்தனம் நிச்சிந்தையாக நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு வந்துவிட்டது என்றான்.

    "ஏனாம்? என்று கேட்டாள், ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே அவளுக்கு முதலில் இருந்த பயம் பெரும்பாலும் நீங்கிவிட்டது. அவன் மேல் ஒரு விதமான உரிமையும், விருப்பமும் ஏற்படத் தொடங்கின. அவன் புது ஆள் என்ற தயக்கம் போய்விட்டது.

    சாதாரணமாக வேறு பெண்ணாக இருந்தால் 'எனக்காக விட்டுவிட மாட்டீங்களா? என்று கேட்டிருப்பாள். இந்த முதல் இரவை ஒரு அவகாசமாக பயன்படுத்திக்கொண்டு என்னை இன்ப்ளுயென்ஸ் பண்ண முயற்சி செய்திருப்பாள்.

    அப்படிப்பட்ட இன்ப்ளுயென்ஸ்களால் யாரையும் அதிகநாள் தடுத்து நிறுத்தமுடியாது.

    "நான் சொல்ல வந்ததும் அதுதான். ஏதிராளிக்கு இடைஞ்சல் இல்லாத வகையில் லாஜிக்காக யோசித்து இருவரும் ஒரு ஒப்பந்தத்திற்கு வரணும். இது முதல் விஷயம். இனி இரண்டாவது, கிரிக்கெட் பற்றிப் பேச்சு வந்தபோது நானும் அதைப்பற்றி தெரிந்து கொள்கிறேன்' என்று சொன்னாய். நினைவு இருக்கிறதா? எவ்வளவு பேருக்கு தம் வாழ்க்கைத் துணைவருக்கோ துணைவிக்கோ சம்பந்தப்பட்ட துறையைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது? எத்தனையோ பெண்களை கணவன்மார்கள் உற்சாகம் காட்டாததால் திருமணத்திற்குப் பிறகு இசை, ஓவியம் போன்றவற்றை மூட்டை கட்டி வைப்பதை நான் அறிவேன். அது சரி. கேட்க மறந்தே போய்விட்டேன். உனக்கு ஆர்வமுள்ள துறை எது?

    படிப்பைத்தவிர எந்தத் துறையிலுமே ஆர்வம் கிடையாது அவளுக்கு. அதுவும் சைக்காலஜி. வீட்டை ஒழுங்காக நேர்த்தியாக வைத்துக்கொள்வது பிடிக்கும். அவ்வளவுதான். இந்த வீட்டை விட்டு குறுகிய மனம் படைத்த நபர்களை விட்டு கூடிய சீக்கிரம் போய்விட வேண்டும் என்று விரும்புகிறாள். அதைத்தான் அவனிடம் சொன்னாள். அவன் சிரித்து விட்டான்.

    அவள் கொஞ்சம் தயங்கிவிட்டு நான் ஒரு விஷயம் சொல்லட்டுமா? என்றாள்.

    சொல்லு என்ன விஷயம்

    "நான் ரொம்ப பயந்தேன். உண்மையில் இதைச் சொல்லக்கூடாது. ஆனால் நிஜமாகவே பயந்து கொண்டிருந்தேன். ஏதேதோ இனம் புரியாத சந்தேகங்கள் என்னை வாட்டிக் கொண்டிருந்தன. எப்படிப்பட்ட பிரச்சனைகள் வருமோ எப்படி சமாளிக்கப்போகிறேனேன் என்ன

    Enjoying the preview?
    Page 1 of 1