Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Dhinam Oru Uyir!
Dhinam Oru Uyir!
Dhinam Oru Uyir!
Ebook514 pages5 hours

Dhinam Oru Uyir!

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Indra Soundar Rajan, (b. 13 November 1958) is the pen name of P. Soundar Rajan, a well-known Tamil author of short stories, novels, television serials, and screenplays. He lives in Madurai.

He is something of an expert on South Indian Hindu traditions and mythological lore. His stories typically deal with cases of supernatural occurrence, divine intervention, reincarnation, and ghosts, and are often based on or inspired by true stories reported from various locales around the state ofTamil Nadu.
Two or three of his novels are published every month in publications such as Crime Story and Today Crime News.
Languageதமிழ்
Release dateAug 9, 2016
ISBN6580100701423
Dhinam Oru Uyir!

Read more from Indira Soundarajan

Related to Dhinam Oru Uyir!

Related ebooks

Related categories

Reviews for Dhinam Oru Uyir!

Rating: 4.888888888888889 out of 5 stars
5/5

9 ratings3 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 4 out of 5 stars
    4/5
    was a good read! but didn't keep up with the spiritual side
  • Rating: 5 out of 5 stars
    5/5
    very interesting. lot of questions wish we had answers. some characters were killed - by snake their connection to jameen bangla was not explained. wish we know why.
  • Rating: 5 out of 5 stars
    5/5
    Excellent plot. Keeps you motivated to finish the novel without stopping! One of Indira Soundarajan's best.

Book preview

Dhinam Oru Uyir! - Indira Soundarajan

http://www.pustaka.co.in

தினம் ஒரு உயிர்!

Dhinam Oru Uyir!

Author:

இந்திரா செளந்தர்ராஜன்

Indira Soundarajan

For more books
http://www.pustaka.co.in/home/author/indira-soundarajan

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

பொருளடக்கம்

என்னுரை

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

அத்தியாயம் 3

அத்தியாயம் 4

அத்தியாயம் 5

அத்தியாயம் 6

அத்தியாயம் 7

அத்தியாயம் 8

அத்தியாயம் 9

அத்தியாயம் 10

அத்தியாயம் 11

அத்தியாயம் 12

அத்தியாயம் 13

அத்தியாயம் 14

அத்தியாயம் 15

அத்தியாயம் 16

அத்தியாயம் 17

அத்தியாயம் 18

அத்தியாயம் 19

அத்தியாயம் 20

அத்தியாயம் 21

அத்தியாயம் 22

அத்தியாயம் 23

அத்தியாயம் 24

அத்தியாயம் 25

அத்தியாயம் 26

அத்தியாயம் 27

அத்தியாயம் 28

அத்தியாயம் 29

அத்தியாயம் 30

அத்தியாயம் 31

அத்தியாயம் 32

அத்தியாயம் 33

அத்தியாயம் 34

அத்தியாயம் 35

அத்தியாயம் 36

அத்தியாயம் 37

அத்தியாயம் 38

அத்தியாயம் 39

அத்தியாயம் 40

அத்தியாயம் 41

அத்தியாயம் 42

அத்தியாயம் 43

அத்தியாயம் 44

அத்தியாயம் 45

அத்தியாயம் 46

அத்தியாயம் 47

அத்தியாயம் 48

அத்தியாயம் 49

அத்தியாயம் 50

அத்தியாயம் 51

தினம் ஒரு உயிர்!

என்னுரை

இந்தத் தலைப்பைக் கேட்டதும் சரியான தடாலடி மர்மக் கதையாக இது இருக்கும் என்கிற ஒரு எண்ணம் உங்களுக்குத் தோன்றலாம். அப்படித் தோன்றினால் மிக நல்லது என்கிற எண்ணம்கூட இந்தத் தலைப்பை நான் அமைக்க ஒரு காரணம்.

இன்றைக்கு புத்தகம் படிப்பவர்கள் அருகி வருகி றார்கள். ஆனால் தொலைக்காட்சி, சினிமா போன்ற ஒளிப் புனலைப் பார்ப்பவர்களோ பெருகி வருகிறார்கள்.

படிப்பது என்பது நாமாகப் பிசைந்து நமது கைகளால் முயன்று சாப்பிடுவது போன்றது. பார்ப்பது என்பது அப்படி இல்லை. அது கிட்டத்தட்ட ஊட்டப்படும் சோறு. நாம் கண்ணைத் திறந்துகொண்டிருந்தாலே போதும். அதன் வழியாகக் கதையானது காட்சிப் பொருளாகவே உள்ளே நுழைந்து நம்மை ஆக்ரமித்துக் கொண்டு விடும். 1990க்கு முன்வரை இந்த ஊடகங்கள் தமிழகத்தில் இல்லாத நிலையில் நம் சமுதாயம் பொழுதுபோக்கு விஷயத்தில் ஊட்ட ஆளில்லாத நிலையில் தானாகவே பிசைந்து முயன்று சாப்பிட்டுக் கொண்டிருந்தது. (அதுதான் நல்லதும்கூட) பின்னாளில் அதற்கு அவசியமில்லாமல் போய்விட்டது. இன்றைக்கு

ஒன்றுக்கு நாற்பது சேனல்கள். அதில் 24 மணி நேரமும் நம்மை அப்படி இப்படி நகரவிடாதபடி காட்சி ஓட்டங்கள்.

இதில் வாராந்திர மெகா சீரியல்களின் ஆதிக்கம் ஒருபுறம் என்றால், விஞ்ஞானபூர்வமான, நாம் தவமிருந் தாலும் பார்க்க இயலாது என்று கருதும் காட்சிகளை, நம் கண்ணுக்கு விருந்தாக்கும் ஜாக்ரஃபி சேனல், டிஸ்கவரி சேனல் போன்றவை ஒருபுறம்.

இதனால் உலகமும் மிகச் சுருங்கிவிட்டது. எங்கே எது நடந்தாலும் அடுத்த ஷணம் நம் வீட்டுச் சின்னத்திரை அதைக் காட்டி, எப்படி என் சாமர்த்தியம் என்று கேட்கிறது.

இது ஒரு விஞ்ஞான வளர்ச்சி; தவிர்க்க முடியாத காலத்தின் கட்டாயமும்கூட.

ஆனால் இந்த வளர்ச்சி மிதித்துக்கொண்டிருப்பது மனித மனங்களின் கற்பனைக்கும், சிந்தனை ஆற்றலுக்கும் பெருமளவு காரணமாக இருக்கும் வாசிக்கும் பழக்கத்தின்மேல்தான் என்பது பெரிய கொடுமை. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் எனக்குத் தெரிந்து 20 வயதுக்குக் கீழ் கதை படிக்கும் பழக்கம் கொண்ட வாசகர்களே இல்லை எனலாம். அன்று ஏராளமாய் கதை வடித்தவர்கள்கூட இன்று டி.வி. சீரியல்களின் பக்கம் திரும்பிவிட்டனர். குறிப்பாக பெண்கள் புத்தகத்தைக் கட்டிக்கொண்டு அழுத காலம் மலையேறிப் போய்விட்டது.

இது நல்லதா கெட்டதா என்கிற வாதம் ஒருபுறம் இருக்கட்டும். நான் அதற்குள் நுழைய விரும்பவில்லை. ஒரு எழுத்தாளனால் என்னைப் போன்ற எழுத்தாளர்களுக்கு சவால் விடுவதாய் இன்றைய காலகட்டம் இருப்பதைச் சொல்லவே இந்தப் பீடிகை.

இப்படி ஒரு காலகட்டத்தில் தமிழ் வார, மாத இதழ்களிலும் பெரிய அளவில் வடிவ மாற்றங்கள்! முன்பு போல இப்போது பாகம் பாகமாய் எழுத முடியாது.

ஆறு வாரத் தொடர், நான்கு வாரத் தொடர் என்று தொடருக்கு அறிவிக்கும்போதே இலக்குகளை நிர்ணயித்துவிடுகிறார்கள். இதில் ஒரு எழுத்தாளர் அதிகபட்சம் 20 முதல் 24 வாரம் வரை எழுதினாலே அது பெரிய வெற்றி. இதில் பத்திரிகைகளின் பிழை எங்கேயும் இல்லை. காட்சிக்கும் எழுத்துக்குமான யுத்தத்தில் எழுத்து உதைபடும் நிலையில் அது உதை படாமல் காப்பாற்றப்பட வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என்று மட்டும் எனக்குள் கேட்டுக்கொண்டேன். அதன் எதிரொலிகள்தான் என் நாவல்கள். காட்சிகளில் கிடைக்கும் சுவைக்கு ஈடான விஷயங்களையும், சிந்திக்கத் தூண்டும் மறைஞான விஷயங்களையும் உள்ளடக்கி அதற்கேற்ப கதைக் கருவை தேர்வு செய்து அதை உரிய சஸ்பென்சுடன் இழுத்துச் செல்லும்போது வாசகன் அதை கெட்டியாகப் பற்றிக்கொள்கிறான்.

இந்த 'தினம் ஒரு உயிர்' தொடரிலும் அது நடந்தது. மிக வெற்றிகரமாகவே அது நடந்தது என்றால் மிகையே இல்லை. அதனாலேயே 51 வாரங்கள் எழுத எனக்கு வாய்ப்பும் கிட்டியது. 50ஆவது வாரம்வரை இதை ஒரு முடிவை நோக்கிச் செல்லும் தொடராகவே யாரும் கருதவில்லை. 51 ஆவது தொடர் முடியவும் என்ன இது இத்தனை சீக்கிரம் முடித்துவிட்டீர்களே என்று பலர் கேட்டபோது மகிழ்வாக இருந்தது.

நல்ல பேச்சுக்கு இலக்கணம், இவர் இன்னமும் பேசமாட்டாரா என்று ஏங்கும்போது பேச்சை முடித்துக் கொள்வது. அது இந்த தொடருக்கும் பொருந்திற்று.

இது தொடராய் தொடங்கப்பெற்ற நாளில் இது உருவாக்கப் போகும் பாதிப்பைப் பற்றி நான் பெரிதாக கற்பனைக் கோட்டை கட்டவில்லை. நிச்சயம் ஓடி ஜெயிக்கும் ஒரு குதிரை இது என்று மட்டுமே நம்பினேன். ஆனால் இது எனக்கு ஜாக்பாட் பரிசினையே அள்ளித் தந்துவிட்டது.

ஒவ்வொரு வாரமும் பல வாசகர்கள் இத்தொடர் குறித்து என்னிடம் விவாதங்களை மேற்கொண்டார்கள். எங்கோ எதற்கோ போன இடத்தில் கூட இத்தொடரின் நாயகனான அரங்கநாதன் பற்றி என்னைக் குடைந்தவர்கள் உண்டு.

சிலர் வீடு தேடி வந்து இது உண்மைக் கதையா, இதை எழுதும் நான் ஒரு முதிர்ந்த கிழவனா என்றெல்லாமும் ஆராய்ந்தார்கள்.

தொலைக்காட்சி ஒன்று என்னை ஒரு நேர்முகப் பேட்டி கண்டது. அதில் நான் நேயர்களின் தொலைபேசிக் கேள்விகளுக்கு பதில் கூறினேன். பொதுவான அந்த நிகழ்ச்சியிலும் இந்தத் தொடரின் அரங்கநாதன் நுழைந்துவிட்டான்.

இவன் எழுதியதாக நான் எழுதிய டயரிக்குறிப்பு பலரை வெகுவாகக் கவர்ந்துவிட்டது. இத்தனைக்கும் அது என் கற்பனை. அது என் தனிப்பட்ட சிந்தனை. அதில் தவறுகள், கருத்து மாறுபாடுகள் நிச்சயமாக இருக்கலாம். இருக்கிறது என்று எனக்கும் தெரியும். ஏன் என்றால் ஒரு கதாபாத்திரத்தை சிருஷ்டித்து அது பேசுவதாக ஒரு விஷயத்தை வடிவமைக்கும்போது அந்த பாத்திரத்தின் பலம், பலவீனத்திற்கு ஏற்பவே பேச்சும் சிந்தனையும் இருக்கும். இருக்கவும் முடியும்.

இருந்தும் அந்த டயரிக்குறிப்பும் சரி, தொடரும் சரி எல்லோரையும் கட்டி இழுத்தது. இத்தொடரில் கொஞ்சம் பீதாம்பர ஜாலவித்தையையும் தொட்டுக்கொண்டிருக்கிறேன். இன்றைய அதிநவீன விஞ்ஞான உலகில் இதெல்லாம் ஒரு அசுரக் கற்பனையாக மட்டுமே நினைக்கப்படும். அனுபவிக்காதவரை எல்லாவற்றையுமே கற்பனையாக நினைக்கலாம். அதுதான் மனதின் இயல்பு.

எது எப்படியோ காட்சி ஜெயித்த ஒரு காலத்தில் கதை ஒன்றை ஜெயிக்க வைத்த நிறைவு எனக்கு உண்டு. அதற்காக இந்தப் படைப்பு காலத்தை வென்ற ஒரு இலக்கியம், தால்ஸ்தாயின் அன்னகரீனா, ஷேக்ஸ்பியரின் ரோமியோஜூலியட், கல்கியின் அலைஓசை, சுஜாதாவின் ரத்தம் ஒரே நிறம் போல் ஒரு உயரமுடையது என்று சத்தியமாய் கதைக்கமாட்டேன். என் உயரம் எனக்குத் தெரியும். விறுவிறுப்பான ஒரு வித்தியாசமான நாவல் இது. அவ்வளவுதான்!

தினமலர் வாரமலர் வெகு விமர்சையாக வெளியிட்டு ஊக்கப்படுத்தியது. இதன் ஆசிரியர் திரு கோபால்ஜியும் சரி, அவரது சார்பில் என்னைக் கண்டுபேசி படைப்பை வாங்கி வெளியிட்ட குமரகுருபரனும், தமிழ்ச்செல்வனும் சரி என்றும் என் நன்றிக்கு உரியவர்கள்.

அருமை நண்பர் ஷ்யாமின் தூரிகையும் அற்புதமாக விளையாடித் துணை செய்தது.

இந்தத் தொடர் நாவலை உளவியல்ரீதியில் பல உச்சங்களைக் கண்டும் மனித மனத்தோடு இதம்பதமாக உறவாடவும், அவர்களின் பலம் பலவீனங்கள் அறிந்து அதை விரும்பினால் சுட்டிக் காட்டியும், விரும்பாவிட்டால் அனுசரித்தும் சான்றாண்மையுடன் பழகத் தெரிந்த, என்னுள் பல நல்ல பாதிப்புகள் உருவாகக் காரணமான திரு C.N. ரகுராமன் (மூத்த மேலாளர், சுந்தரம் பாஸனர்ஸ் லிமிடெட்) அவர்களுக்கு சமர்ப்பிப்பதில் மகிழ்கிறேன். வழக்கம்போல வானதியின் திருவரசு புத்தக நிலையம் இத்தொடரை புத்தகமாக்கியுள்ளது. மிக ராசியான இந்நிறுவனத்திற்கும் என் நன்றி.

16–4–2002                                         பணிவுடன்

மதுரை-3                                  இந்திரா செளந்தர்ராஜன்

தினம் ஒரு உயிர்

1

"எனக்கு மரணமில்லை. நான் மரணத்தை வென்று பெருவாழ்வு வாழ ஆசைப்படுகின்றேன். அதற்கு இயற்கையை வெற்றி கொள்ள வேண்டும். நான் இயற்கையை வெற்றி கொண்டவன். காற்றும் தண்ணீரும் போதும், நான் உயிர் வாழ என்றார் பல காயகல்பங்களை கண்டறிந்து வைத்திருக்கும் அந்த அதிசய மனிதர்'

-அரங்கநாததேவரின் டயரியிலிருந்து.

அந்த டாடா சியாராவிடம் நல்ல வேகம்! அருண் குமார்தான் ஓட்டிக்கொண்டிருந்தான். பின்சீட்டில் அமர்ந்திருக்கும் நிலையில் ஸ்க்ரிப்ட் பேப்பர்களை புரட்டிக்கொண்டிருந்தான் டைரக்டரான பிரதாப்!

அளவுக்கதிகமான வேகம் என்று உணர்ந்தவன்போல அருண் ஸ்லோவா போ. இந்த வேகம் ரொம்ப ஆபத்தானது என்றான்.

நோ சார்... மணி இப்பவே அஞ்சு ஆயிடிச்சு. மலை அடிவாரத்துல இருக்கற ஜமீன்பாளையத்துக்குப் போய் அந்த பங்களாவை இருட்டறதுக்குள்ள பார்த்து முடிக்கணும்னா இன்னும்கூட வேகமா போகணும்.

அருண்குமார் பதிலோடு ஆக்ஸிலேட்டரில் அழுத்தம் கூட்டினான். சியாராவும் சீற்றத்தைக் கூட்டிக்கொண்டது.

சரி சரி பார்த்துப் போ. ரோடு வேற சரியில்ல பார்... பிரதாப் எச்சரிக்கும்போதே ஒரு பெரிய பள்ளத்திற்காக காரை அப்படியும் இப்படியுமாக பாம்பைப்போல வளைத்து ஓடித்து ஒரு புழுதிக்கவளத்தையே உருவாக்கிவிட்டு திரும்ப சாலை மையத்திற்கு வந்தான் அருண்குமார்.

அருண்! நாம லொகேஷன் பாக்கத்தான் வந்துகிட்டிருக்கோம். எமலோகத்துக்குப் போகறதுக்கில்ல... பிரதாப் பயத்தோடு கத்தினான்.

கவலைப்படாதீங்க சார். சோழவரம் ரேஸ்ல கப் வாங்கினவன் நான். இதெல்லாம் ஒரு வேகமா..? ஆமா கடைசியா என்னவோ சொன்னீங்களே என்ன சார் அது..?

புடலங்கா... வாயடிக்காம வண்டிய ஓட்டு.

சும்மா சொல்லுங்க சார்... பரலோகமோ எமலோகமோன்னு சொன்னீங்கள்ல..?

அதுக்கென்னய்யா?

இன்ஃபாக்ட் ஜமீன்பாளையம் பங்களாவை அந்த ஊர் மக்களும் ஒரு எமலோகமாதான் நினைக்கறாங்கன்னா பாத்துக்கங்களேன்...

எதை வெச்சுய்யா...?

அதை எல்லாம்தான் பாக்கப்போறீங்களே சொல்லும்போதே அவன் பார்வை தார்ச்சாலைமேல் ஒரு அதிசயக் காட்சியைப் பார்க்க ஆரம்பித்தது. அடுத்தநொடி காரின் வேகம் தானாகக் குறைந்தது. காரும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கிரீச்சிட்டு நின்றது.

என்ன அருண் எதுக்கு காரை நிறுத்துனே?

சார் கொஞ்சம் எட்டி, எனக்கு முன்னால ரோட்டு மேல பாருங்க..

அருண் சொல்ல பிரதாப்பின் பார்வையும் உடனே வெளியே பார்க்க, அடுத்த நொடி அதிர்ந்து போனான்.

காருக்கு முன்னால் நடுச்சாலையில் படம் எடுத்த நிலையில் ஒரு கருநாகம்! கார் வருகிறது. அது தன் உடம்பை ஒரு துவையலாய் அரைத்துப் போட்டுவிடும் என்கிற பயமெல்லாம் துளியும் இல்லாதபடி காவல்காரன் வழியை மறிக்கிறமாதிரி மறித்துக்கொண்டு படுத்திருந்தது.

என்னய்யா இது அதிசயம். துளிகூட பயமில்லாம நடு ரோட்டுல இப்படி படுத்திருக்குதே... 

காரணம் இருக்கு சார். அதோட வாயைப் பார்த்தீங்களா?-அருண்குமார் கேட்டபிறகுதான் அந்த பாம்பின் வாயைக் கூர்ந்து பார்த்தான் பிரதாப். ஒரு அங்குல நீளத்திற்குக் குறையாத கருவேல முள் ஒன்று மேலும் கீழுமாய் கூடாரக்கம்பி போல வாய்க்கு நடுவில்...

மை குட்நெஸ் வாய்ல முள் தெச்சிருக்குய்யா...

ஆமாம் சார். எதையோ விழுங்கப் பார்த்து இப்படி ஆகியிருக்கணும். அதான் இப்படி நடு ரோட்ல வந்து படுத்திருக்கு. யாராவது பாத்துட்டு முள்ளை எடுத்துவிட மாட்டாங்களான்னு எதிர்பார்ப்பு கூட காரணமா இருக்கலாம்.... 

என்ன அருண்... பாம்புக்கு அவ்வளவு தூரத்துக்கெல்லாமா அறிவு இருக்கும்? பிரதாப் கேட்க அருண்குமார் நமுட்டுச்சிரிப்பு சிரித்தான். அதேசமயம் அந்தக் கருநாகம் அங்கிருந்து மெல்ல ஊர்ந்து வழிவிடுவது போல ஓரம்கட்டி படுக்க ஆரம்பித்தது.

சார் பாருங்க சார்... நாம யோசிக்கறது தெரிஞ்சு வழி விட்றத. அறிவு இருக்கான்னு கேக்கற நமக்கு வேணும்னா அறிவு குறைவா இருக்கலாம். ஆனா பாம்புகளுக்கு அப்படி கிடையாது சார். இல்லாமலா பெருமாள் அதை யூஸ் பண்றார்...? சிவபெருமானும் கழுத்துல மாலையா போட்டுகிட்டிருக்கிறார்?

அந்த நிலையிலும் அருண்குமாரின் டயலாக்கை சிரித்தபடி ரசித்த பிரதாப் பாம்பையே பார்த்தபடி இருந்தான். அதுவும் சீற்றமெல்லாம் இன்றி பரிதாபமாக பார்க்கிறமாதிரியே தோன்றியது.

என்ன அருண் பண்ணலாம்?

எனக்குத் தெரியாது சார். நீங்க பெரிய டைரக்டர். உங்கள் அஸிஸ்டெண்ட் நான். இங்கையும் உங்க டைரக்ஷன்தான்.

இது ஆழம் பாக்கற நேரமில்லை அருண். சட்டுன்னு ஒரு பதிலைச் சொல்.

உங்களுக்கு தைரியம் இருந்தா இறங்கி அந்த முள்ளை எடுத்துவிடுங்க. இல்லாட்டி சொல்லுங்க பறந்துகிட்டே இருப்போம். எமலோகத்துக்கு வேற போகணுமில்ல... ச்சீ! ஜமீன்பாளையம் பங்களாவுக்கு வேற போகணுமில்ல?

அருண்குமார் ஒரு ஜாலிபேர்வழி. அதேசமயம் மிக எச்சரிக்கையானவன் என்பது போலப் பேச, பிரதாப் துணிச்சலாகக் கரைவிட்டு இறங்க ஆரம்பித்தான்.

என்ன சார் உதவி செய்யப்போறீங்களா? அலறினான் அருண்குமார்.

ஆமாம் அருண். பாம்போ தேளோ... வலி எல்லாருக்கும் பொதுதானே? அதுலையும் அது தானா வந்து உதவ முடியுமான்னு கேக்காம கேக்கும்போது பார்த்தும் பார்க்காமப்போனா நானெல்லாம் ஒரு மனுஷனா?

பேசிக்கொண்டே மெல்ல அந்தப் பாம்பை நெருங்கிய பிரதாப் அதன் முன்னால் போய் நிதானமாக அமர்ந்தான். அந்தப் பாம்பும் படம் விரித்த தலையைத் தழைத்து அவனை நோக்கி மிக மெல்ல ஊர்ந்து வரத் தொடங்கியது.

அருண்குமார் மிரண்டுபோய்பார்த்துக்கொண்டிருந்தான்.

சார் நாம சினிமாக்குன்னு எழுதற கதையைவிட இது திகிலா இருக்கு சார்... என்று ஒரு ரன்னிங் கமென்ட்ரி வேறு அவன் உதடுகளில்.

சும்மா இரு அருண். இட் ஈஸ் எ கிரேட் சூப்பர் ஆப்பர்ச்சூனிட்டி... பிரதாப் பதிலோடும் கொஞ்சம் பயத்தோடும் அதன் எதிரில் கைகளை நீட்டினான். அதுவும் நீட்டிய கை மேல் தன் தலையைப் பதித்தபடி அவனைப் பார்த்தது கருநாகம். பிரதாப் தன் வாழ்நாளிலேயே முதல் முறையாக இப்பொழுதுதான் ஒரு பாம்பைத் தொடுகிறான். அதிலும் பார்க்க விகாரமாகவும் கொடிய விஷமும் கொண்ட ஒரு கருநாகத்தை... வழவழவென்று கைகளில் பரவிய உணர்வு உடம்பு முடிகளை எல்லாம் தொண்ணுாறு டிகிரிக்கு நிமிர்த்த, முள் தைத்து நிற்கும் அதன் வாயைப் பார்த்தான். கூரிய முனை தலையைப் பொத்துக்கொண்டு வெளியே தெரிய, கீழ்த்தாடைக்குக் கீழ் முண்டோடு கூடிய அதன் தலைப்பாகம் நடுவில் அழுந்த, வாயை மூடவிடாதபடி முட்டுக் கொடுத்தமாதிரி தெரிந்த அதை மிக லாவகமாக உருவியும் எரிந்தான். பாம்பும் உயிர் வந்தமாதிரி மெலிதாக சீறிக்கொண்டு வாயை ஒரு நான்கைந்து முறை திறந்தும் முடியும்... திறந்து மூடியும் பார்த்துக்கொண்டது.

அதற்குமேல் அந்தப் பாம்பைப் பிடித்துக்கொண்டிருக்கும் தைரியமும் பிரதாப்பிடம் இல்லை. வேகமாகப் பிடியை நழுவ விட்டான். தரை தட்டிய அதுவும் நிமிர்ந்து நடுபார்வை பார்த்தது. பார்வையில் நன்றியுணர்ச்சி மின்னுகிறமாதிரி தோன்றியது.

படம் விரித்த தலையை தரைமேல் ஒரு அடி அடித்துவிட்டு அது நிமிரும்போது ஆட்டுக்குட்டியைத் தோளில் போட்டுக்கொண்டு ஒருத்தி கச்சிதமாக கார் அருகே வந்திருந்தாள்.

பாம்பைப் பார்த்துவிட்டு தன் வெற்றிலைக் காவி வாயை ஒரு குகையைப் போலத் திறந்தாள்.

ஆ...! அய்யனார் உருவில் கருநாகம்! சொன்ன சூட்டோடு ஆட்டை இறக்கிவிட்டு சாமீஈஈ... என்று கன்னத்திலும் போட்டுக்கொண்டாள்.

பிரதாப்பும் அருண்குமாரும் சட்டென்று திரும்பி அவளை வெறித்தனர். அவளும் அவர்களை மிரள மிரளப் பார்த்தாள். அந்த இடைவெளியில் கருநாகமும் அந்த இடத்தைவிட்டு நழுவ ஆரம்பித்தது.

சாமி யாருங்க சாமி நீங்க...?

நீ யாரும்மா அதைச் சொல்லு...

நான் ஜமீன் பாளையத்தச் சேர்ந்தவ... சாமி பாம்பை பாத்துட்டு கொஞ்சமும் பயமில்லாம நிக்கறீங்களே! யாருங்க சாமி நீங்க..

சாமி பாம்பா...?

ஆமாங்கோ. எங்க ஜமீன்பாளையத்து அய்யனார் கோவில் கருநாகமுங்கோ இது. நூறு நூத்தி இருபது வருஷமா இருக்குது. யார் கண்ணுலையும் படாதுங்கோ. பட்டா அது நல்லதில்லேம்பாங்க..

நல்லதில்லையா... நாங்க அதுக்கு உதவிதான் செஞ்சோம்.

என்னது உதவியா. சாமி பாம்புக்கா...?

ஆமாம்மா. வாய்ல முள் குத்துன நிலைல கூடாரம் மாதிரி வாயைத் திறந்துகிட்டு நடுரோட்ல படுத்துகிட்டு இருந்துச்சு. பாத்துட்டு எங்களுக்கென்னன்னு போகாம இறங்கி உதவி செஞ்சிருக்கோம். இதை நாங்க எடுக்கற சினிமாவுல ஒரு சீனா வெச்சாகூட யாரும் நம்பமாட்டாங்க. ஆனா நான் சொல்றதுதான் உண்மை அருண்குமார் பேச்சோடு பாம்பு எங்கே என்று பார்த்தபோது அது மறைந்துவிட்டிருந்தது. அந்த பாளையத்து பெண்ணிடம் நடுக்கம் குறையாத நிலை.

நீங்க சினிமாகாரங்களா சாமி?

ஆமாம். அதுசரி ஜமீன்பாளையத்துக்கு இன்னும் எவ்வளவு தூரம் இருக்கு?

அங்க எங்க சாமி போகணும்?

சினிமா ஷூட்டிங் ஒண்ணு நடத்தறதுக்காக ஜமீன் பங்களாவைப் பாக்கனும் அதுக்குதான்.

ஜமீன் பங்களாவைப் பாக்கணுமா? அந்தப் பெண்ணிடம் நடுக்கமும் அதிர்ச்சியும் அதிகரிக்கத் தொடங்கியது.

என்ன... அங்க யாரும் போகமாட்டாங்க. போனா நடக்கக்கூடாதது எல்லாம் நடந்துடும். ஈ காக்கா கூட அந்தப் பக்கம் பறக்காதுன்னுதானே சொல்லப்போறே?

ஆமாம் சாமி! எல்லாம் தெரிஞ்சுமா போறீங்க. அதுலையும் இன்னிக்கு ஜமீன் சாமி கழுத்துல பாம்போடு, கைல வாளோடு பங்களாவைச் சுத்தி சுத்தி வர்ற நாளாச்சுங்களே?

அவன் சொல்லி முடித்த மறு நொடி பிரதாப்புக்கு தூக்கி வாரிப்போட்டது.

அருண் என்ன இது நம்ம கதைல வர்ற சீனை இந்த பொண்ணு அப்படியே சொல்லுது! என்ற பிரதாப்பை அருண்குமாரும் ஒரு மாதிரிதான் பார்த்தான்.

சார் இது ஆரம்பம்தான் ஜமீன்பாளையத்துல எங்க திரும்பினாலும் த்ரில்தான். யாரோட பேசினாலும் இப்படித்தான் நம்மை மிரள வைக்கறாங்க என்றவனை பிரதாப் அதிர்ச்சி குறையாமல் பார்த்தான்.

பக்கவாட்டில் மேற்குதொடர்ச்சி மலைகளின் அரண்போன்ற நீட்சி. நடுவில் ஒரு மலைப் பள்ளத்தில் ஆரஞ்சு பழம் போல விழ ஆரம்பித்துவிட்ட சூரியன்! ஊடாடும் கடலை வயல் காற்று காதோரம் குசுகுசுக்க...

சரி சார், நாம கிளம்புவோம் டயம் ஆகிகிட்டு இருக்கு பாருங்க.. என்றபடி காரில் ஏறி கிளப்பினான் அருண்குமார். பிரதாப்பும் பின் கதவைத் திறந்துகொண்டு ஏறி அமர்ந்தான். பாளையத்து பொண்ணு மட்டும் மிரளமிரள பார்த்துக்கொண்டே இருந்தாள்.

பாம்பைப் பாத்துட்டு பங்களா பக்கம் வேற போறாங்க என்ன கதி ஆகப்போறாங்களோ.. அவளிடம் முணு முணுப்பு.

காருக்குள் பிரதாப் ஒரு சிகரெட்டை உருவி உதட்டில் சொருகி புகையைக் கக்க ஆரம்பித்தான். முகத்தில் தீவிர சிந்தனை தெரிந்தது. காரும் சீறிக் கொண்டிருந்தது.

என்ன சார். ஆரம்பமே மிரட்டலா இருக்கேன்னு கவலைப்பட்றீங்களா?

இல்ல அருண். இந்த சப்ஜெக்டை எப்படி எடுக்கப் போறோம்னு நினைச்சுக்கிட்டிருந்தேன். லொகேஷன் சரியா அமைஞ்சாதான் வெற்றி கிடைக்கும்றது என்னோட தீர்மானமான முடிவு. அது உனக்கும் தெரியும். இந்த இடமும் சூழ்நிலையும் நம்ம கதைக்கு ஏற்ற சூழ்நிலையாதான் தெரியுது. பயமுறுத்தற கதைகளை எழுதி இயக்கற மனிதர்கள் முதல்ல பயப்பட்டாதான் பாக்கறவங்களும் பயப்படுவாங்க. அதுக்கு இங்க ஸ்கோப் நிறையவே இருக்கு...

அப்ப இங்கதான் ஷூட்டிங்னு முடிவு பண்ணிட்டீங்களா?

ஆமாம்!

இன்னும் பங்களாவை நீங்க பாக்கவே இல்லையே...

அது எப்படி இருந்தாலும் சரி. அங்கதான் ஷூட்டிங். ஆமா பர்மிஷன் கிடைக்கும் தானே?

யாராவது இருந்தாதானே பர்மிஷன் வாங்கறதுக்கு...! எனக்கென்னன்னு கிடக்கற இடம் சார் அது..?

அப்படியா?

ஆமாம் சார். இடம் மட்டும் உங்களுக்குப் பிடிச்சுட்டா நமக்கு லொகேஷன் செலவே கிடையாது. ஆனா என்ன...

சொல்லு. மெல்லாதே!

பங்களாக்குள்ள போய்ட்டு யாரும் உயிரோட திரும்பினதில்லைங்கறத ரொம்ப அழுத்தாமாவே சொல்றாங்க.

அப்ப பங்களால யாராவது சமூக விரோதிகள் இருக்காங்களா?

சமூக விரோதிக்குதான் சார் வாழணுங்கற ஆசை அதிகமா இருக்கும். அப்படி எல்லாம் தெரியல சார்.

அப்ப அது வெறும் முட்டாள்தனமான நம்பிக்கை மட்டும்தான்.

அந்த நம்பிக்கைலதான் நானும் இருக்கேன் அருண்குமார் தன் நம்பிக்கையை வெளிப்படுத்தும்போது ஜமீன் பாளையத்துக்குள் கார் புகுந்துவிட்டிருந்தது.

சார் ஊர் வந்தாச்சு. வீ.ஏ.ஓ. அழகர்சாமியை பாத்துடுவோமா?

அவரை எதுக்கு பார்க்கணும்?

அவர்தான் சார் இந்த ஊர்ல முக்கிய புள்ளி. ஷூட்டிங் பத்தி சொன்னப்போ எல்லா உதவிகளும் செய்யத் தயாரா இருக்கேன்னு சொன்னவர்.

ஜமீன் பங்களாவுக்கு அவரும் வருவாராமா?

கேட்டுப் பார்ப்போமே...

சொன்னபடி காரை ஓரம் கட்டிவிட்டு இறங்கினான் அருண்குமார். தெருவின் பிஞ்சுகுழந்தைகள் கிழிசல் டவுசரும் திறந்த மார்புமாய் ஓடிவந்து அவனை சூழ்ந்து கொண்டார்கள். அவர்களை ஒதுக்கிக்கொண்டு வி.ஏ.ஓ. அழகர்சாமி வீட்டு முன் போய் நின்றான். மல்லிகைக் கொடி படர்ந்த அந்தக் காலத்திய வீடு. உள்ளே டி.வி. பார்த்துக் கொண்டிருந்தார் அழகர்சாமி. அருண்குமாரைப் பார்த்து விட்டு எழுந்து வந்தார்.

வணக்கம் வி.ஏ.ஓ. சார்.

வாங்க தம்பி உள்ற வாங்க.. 

டைரக்டர் வந்துருக்கார். பங்களாவைப் பாக்கனும்ங்றார். பாத்துட்டு வந்துடுவோமே.

என்னது பங்களாவை இப்ப போய்ப் பார்க்கறதா?

ஆமாம். இருட்றதுக்குள்ளே போய்ப் பார்த்தாதானே?

இல்ல தம்பி. நான் வரலை. நீங்க வேணா போய் பார்த்துட்டு வாங்க. ஆனா நான் சொன்னதெல்லாம் மட்டும் ஞாபகத்துல இருக்கட்டும்.

வி.ஏ.ஓ. ஏற்கனவே ஏகத்துக்கும் மிரட்டியவர். அதற்கு அழுத்தம் கூட்டுவது போலப் பேசிவிட்டு பதிலைக்கூட எதிர்பார்க்காமல் திரும்பி உள்ளே போனார்.

அருண்குமாரும் திரும்பி வந்தான்.

சாரி சார்... வி.ஏ.ஓ. கூட வர பயப்பட்றார். நாமதான் போய் பாக்கணும்.

அப்ப கிளம்பு...

பிரதாப் எந்த நெருடலும் இன்றி சொல்ல அருண்குமாரும் காரில் ஏறி அதைக் கிளப்பினான். ஒரு மண் சாலையில் பல்லக்கு போல ஆடியபடி அதுவும் ஒடத் தொடங்கியது. இருபக்கமும் அடர்த்தியான கருவேல மரங்கள். பின்தொடர்ந்து ஓடிய சிறுவர்கள் ஒரு இடத்தில் நின்றுவிட்டார்கள். கார் தொடர்ந்து ஓடியது.

புழுதி வளையங்கள் ஒரு புரட்டலாய் அஸ்தமன வானில் ஏறிப் பறந்தன. அடர்ந்த மரக்கூட்டங்களுக்கு மத்தியில் பங்களா உச்சிக் கூரையின் ஒரு துண்டுப் பகுதி மட்டும் தெரியத் தொடங்கியது. அதைப் பார்த்த பிரதாப்பின் விழிகளும் விரிந்து பெரிதாயின.

அருண்... அட்டகாசமான வியூ! நான் எப்படி இருக்கணும்னு யோசிச்சு வெச்சிருந்தேனோ அப்படியே இருக்கு. வேகமா போ...

பரபரத்தான் பிரதாப். காரும் அடர்வான மரக்கூட்டங்களுக்குள் புகுந்து வளைந்து பங்களா முகப்பில் உள்ள பெரிய கிராதிக் கதவு அருகே போய் நின்றது.

பிரதாப் கண்களில் பரவசம் மின்ன காரைவிட்டு இறங்கி கதவருகே போய் நின்றான். பார்வை உள்ளோடியது. அந்த நாளைய ஆஜானபாகுவான அரண்மனை போன்ற கட்டிடம். எங்கு பார்த்தாலும் புதர்க்காடாய் செடி கொடிகளோடும் ஒரு பாழ்பட்ட தோற்றத்தோடும் பிரதாப்பின் மனதில் ஒரு இனம் புரியாத உணர்ச்சியை ஊட்டியது. அதே நொடிப் பொழுதில் பிரதாப் வந்துட்டியா? என்று ஒரு கிசுகிசுப்பான குரலும் அவன் காதில் வந்து மோதியது!

2

"அவரைப் பார்த்த நாள் என் வாழ்க்கையின் விமோச்சன நாள். அவருடைய சக்தி எனக்கு அளவற்ற ஆச்சரியத்தைத் தந்தது. செடி ஒன்று ஏதோ ஒரு மிருகத்தின் காலடி பட்டு நசிந்து போயிருந்தது. அதைப் பார்த்து வருடிக் கொடுத்தார். என்ன ஆச்சரியம்...? துவண்ட அதன் வாட்டமான இலைகளில் உயிர் புகுந்தது. மலர்ச்சியாக அந்த செடியும் எழும்பி நின்றது.

இது மனித சக்தியா... இல்லை தெய்வ சக்தியா என்று கேட்டேன். மனித சக்திதான்... உன்னுள்ளேயும் இது இருக்கிறது என்றார்!"

-அரங்கநாததேவரின் டயரியிலிருந்து

பிரதாப் கிராதிக் கதவு முன்னால் நின்றுகொண்டு நாலாபுறமும் பார்த்தான். அருண்குமார் காரில் இருந்து வீடியோ காமிராவை எடுத்துக் கொண்டிருந்தான்.

அருண் இப்ப யாரோ என்னை பிரதாப் வந்துட்டியான்னு கேட்டாங்க. யார்னு பார்... சொன்னபடியே பிரதாப்பின் பார்வை திரும்பவும் சுழன்றது.

என் காதுல எதுவும் விழலையே சார்... என்றபடி அருண்குமாரும் காமிராவோடு நெருங்கி வந்தான்.

இல்ல இப்ப யாரோ கூப்ட்டாங்க அருண்.

என்ன சார் நீங்க. இங்க ஈ காக்கா இல்லை. யார் சார் கூப்ட்டிருக்கப் போறாங்க..

என் காதுல கேட்டுச்சே...

அப்படின்னா எனக்கும் கேட்டிருக்கணுமே. நானும் உங்க கூடதானே இருக்கேன்.

அருண்குமார் அழுத்திச் சொல்ல பிரதாப்பின் முகத்தில் மெலிசான ஒருவித ஆச்சரியரேகையின் ஓட்டம்.

என்ன சார். குரல் அது, இதுங்கறீங்க. உள்ள போக பயமா இருக்குதா?

நோ... நோ...

அப்ப நடங்க... எதையாவது நினைச்சு குழம்பிக்காதீங்க

சொல்லிக்கொண்டே அருண்குமார் கிராதிக் கதவைப் பின்னோக்கித் தள்ளினான்.

க்ரீச்ச் சப்தமுடன் அதுவும் பின் சென்றது. இருவரும் உள்ளே நடக்க ஆரம்பித்தார்கள்.

பழசுன்னா பழசு, அரதப் பழசால்ல இருக்கு...?

நடந்தபடியே அருண்குமாரிடம் கேள்வி.

இப்படி ஒரு பங்களாதானே நமக்கும் வேணும்.

ஆர்ட் டைரக்டர் எனக்கு வேலையே இல்லாம பண்ணிட்டீங்களேன்னு அழுவப் போறார்.

ரியாலிடிக்குதான் அருண் இப்ப காலம். வாவ்! அங்க பார் நம்ம கதைல நான் எழுதியிருக்கற மாதிரியே வரிசையா கருங்கல் படிகள். படிக்குமேல தர்பார் மண்டபம்!

ஆமாம் சார். தூண் ஒவ்வொண்ணையும் பார்த்தீங்களா, நாலு பேர் சேர்ந்தாகூட பிடிக்க முடியாதுங்கற மாதிரி இருக்கறதை...

எக்ஸாக்ட்லி... இப்படித்தான் வேணும்... பியூட்டிஃபுல்

இதைப் போய் எனக்கென்னன்னு இப்படி போட்டு வெச்சிருக்காங்களே சார். என் கைல மட்டும் இருந்தா நீட்டா மெய்ன்டைன் பண்ணி ஒரு நாள் ஷூட்டிங்குக்கு பத்தாயிரம்னு வாடகைக்கு விட்டு காசா எண்ணிடுவேன்.

அதனாலதான் உன் புத்திக்கு கடவுள் உன்னை என் அசிஸ்டென்ட் ஆக்கிட்டான். உளறாம கேமராவை ஆன் பண்ணி எல்லா ஆங்கிள்ளையும் ஷூட் பண்ணு கமான் க்விக்!

பிரதாப் கட்டளைக் குரலோடு உள்ளே வளைய வர ஆரம்பித்தான். தரையில் கால் வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் புழுதி ஜிவ்ஜிவ்வென்று அந்தரம் ஏறியது. தும்மல் வந்தது. அடக்கமாட்டாமல் தும்மியபோது நாலாபுறமும் எதிரொலிகள் கேட்டு சுவர்கள் எல்லாம் ஆடி நடுங்குவது போல ஒரு பிரமை.

அங்கங்கே சிலந்தி வலைகள், நூலாம்படைகள்! அதில் பனை நுங்குக்கு எட்டுக்கால்கள் முளைத்த மாதிரி சிலந்திகள். காமிராவின் ஃப்ளாஷ் வெளிச்சம் பட்டபோது அவை வலை நாடாவில் விறுவிறுவென்று ஓடின. ஒரு கணம் அருண்குமாருக்கு நெஞ்சையடைத்தது. சரேலென்று காதை உரசிக்கொண்டு பூமராங் போல வவ்வால் ஒன்றும் பறந்து வெளியேறிப் போனது. அந்த நொடியில் பந்து போல எகிறிய இதயம் வாய்வழியே வெளியே வந்து விழுந்துவிடுமோ என்றுகூடத் தோன்றியது.

சார்... நெஜமாலுமே மிரட்டுது சார் இந்த பங்களா. அடேங்கப்பா எவ்வளவு பெரிய ஹால்! காமிராவை விட்டுக் கண்களை எடுக்காமல் அருண்குமார் கமென்ட் அடிக்க, பிரதாப்புக்கு லேசாகத் தலையை சுழற்றத் தொடங்கியது.

தூசும்துப்புமான ஒரு சிம்மாசனம் போன்ற நாற்காலியில் போய் அமர்ந்தான்.

என்ன சார்.... இருட்டிட்டதால பயமா இருக்கா?

இல்ல அருண். தலையை லேசா சுத்துது.

உங்களையும் அறியாம பயப்படத் தொடங்கிட்டீங்களோ?

அதெல்லாம் இல்லை. இங்க இதுக்கு முந்தி நான் பல முறை வந்துருக்கற மாதிரி ஒரு ஃபீலிங்

பார்றா... பூர்வஜென்ம பந்தம்னு கதைல உட்ற மாதிரி எதையாவது சொல்லப் போறீங்களா?

இடியட். நான் சீரியஸா சொல்றேன். அதோட காதுல இவ்வளவு நாளா ஏன் வரலைன்னும் யாரோ கேட்டுகிட்டே இருக்காங்க.

சார் நாம எடுக்கப்போற படத்தோட கதைல வர்ற சீன் சார் அது.

அஃப்கோர்ஸ் அது கற்பனையா இருக்கலாம். ஆனா இப்ப நான் சொல்றது சத்யமான உண்மை.

பிரதாப் சொல்லிவிட்டு நெற்றிப் பொட்டை தேய்த்து விட்டுக் கொண்டான். அருண்குமாரும் கேமராவை இறக்கிக் கீழே வைத்தான்.

இருள் அப்பிக்கொண்டு வந்தது.

சரி சார்... இதுக்குமேல இன்னிக்கு இங்க இருந்தா டேஞ்சர்தான். புறப்படுவோம். நாளைக்கு பகல்ல வந்து பாப்போமா?

"நானும் அதைத்தான் நினைச்சேன். சரி

Enjoying the preview?
Page 1 of 1