Robert Naan Robot
By Devibala
()
About this ebook
Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Read more from Devibala
Enakku Mattumthaan! Rating: 0 out of 5 stars0 ratingsThurathi Varum Dhurogam Rating: 4 out of 5 stars4/5Theeyodu Vilaiyadum Thendral! Rating: 0 out of 5 stars0 ratingsMundhanai Pandhal Rating: 0 out of 5 stars0 ratingsNaan Uppa? Sarkkaraiya? Rating: 0 out of 5 stars0 ratingsKoottai Kalaikkatheenga Rating: 0 out of 5 stars0 ratingsKaanikkai Rating: 5 out of 5 stars5/5Bathil Mariyathai Rating: 5 out of 5 stars5/5Kanney Varuvaya? Rating: 5 out of 5 stars5/5Irumbu Changili Rating: 0 out of 5 stars0 ratingsVizhikul Oru Ulagam Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Vittal Yarumillai! Rating: 0 out of 5 stars0 ratingsAthuvarai Poruthiru! Rating: 0 out of 5 stars0 ratingsNenje Unnidam Rating: 0 out of 5 stars0 ratingsIruttin Nizhalgal…! Rating: 0 out of 5 stars0 ratingsKaaladiyil Poomalai Rating: 0 out of 5 stars0 ratingsKodi Kodi Aasai Rating: 0 out of 5 stars0 ratingsAmma Gondu…! Rating: 5 out of 5 stars5/5Panam, Penn, Pathavi! Rating: 0 out of 5 stars0 ratingsUdaney Vaazha Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsUnakku, Neethan Neethipathi! Rating: 0 out of 5 stars0 ratingsInikkum Ilamai Rating: 5 out of 5 stars5/5Manithan Paathi! Mirugam Paathi! Rating: 0 out of 5 stars0 ratingsUnakkum Vazhvu Varum Rating: 0 out of 5 stars0 ratingsChakkalathi Rating: 0 out of 5 stars0 ratingsKana Kanum Kangal Rating: 3 out of 5 stars3/5
Related to Robert Naan Robot
Related ebooks
Kannip Parunthu Rating: 5 out of 5 stars5/5ரத்தத்தில் ஒரு கேள்விக்குறி! Rating: 0 out of 5 stars0 ratingsRatthathil Oru Kelvikuri! Rating: 4 out of 5 stars4/5Oppanai Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsNagaratha Nizhal Ondru! Rating: 0 out of 5 stars0 ratingsOru Ponmaanai Thedi... Rating: 0 out of 5 stars0 ratingsNatchathira Iravil Rating: 0 out of 5 stars0 ratingsNilavu Uthikatha Iravu Rating: 0 out of 5 stars0 ratingsThottathellam Penn Rating: 0 out of 5 stars0 ratingsUyir Urugum Satham Rating: 5 out of 5 stars5/5Kalavadinean Kanapozhuthil! Rating: 0 out of 5 stars0 ratingsNagaratha Nizhal Ondru! Rating: 0 out of 5 stars0 ratingsEnnuyire... Rating: 5 out of 5 stars5/5Nenjamellam Nee! Rating: 0 out of 5 stars0 ratingsAranmanai Ragasiyam Rating: 4 out of 5 stars4/5தொட்டு விடும் தூரம்! Rating: 0 out of 5 stars0 ratingsThottuvidum Thooram Rating: 0 out of 5 stars0 ratingsAnge... Inge... Enge...? Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Kaapatrungal! Rating: 0 out of 5 stars0 ratingsThanimara Thoppu Rating: 0 out of 5 stars0 ratingsUla Vara Oru Ulagam Rating: 0 out of 5 stars0 ratingsகண்ணகி - '96' Rating: 0 out of 5 stars0 ratingsPurusha Sikamanikal Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Sadugudu Rating: 5 out of 5 stars5/5Nandhalala Rating: 5 out of 5 stars5/5Ingeyuma Nee? Rating: 0 out of 5 stars0 ratingsAvan Aval Theevu Rating: 0 out of 5 stars0 ratingsIsai Kolai Rating: 5 out of 5 stars5/5Natchathira Kutram Rating: 0 out of 5 stars0 ratingsSuthi Suthi Vandheega... Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Robert Naan Robot
0 ratings0 reviews
Book preview
Robert Naan Robot - Devibala
http://www.pustaka.co.in
ராபர்ட் நான் ரோபோட்
Robert Naan Robot
Author :
தேவிபாலா
Devibala
For more books
http://www.pustaka.co.in/home/author/devibala
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
என்னுரை
எல்லா வகையான-சிந்தனைக்கு விருந்து தரும்-நூல்களையும் வெளியிடும் வித்தியாசமான இந்த மயிலவன் பதிப்பகத்தில் எனது ஐந்தாவது நூல் ராபர்ட் நான் ரோபோட்
.
கம்ப்யூட்டர் மயமான இந்த உலகத்தில் ஒரு கம்யூட்டரையே கதாபாத்திரமாக உருவாக்கி, அதன் பல்வேறு உணர்வு வெளிப்பாடுகளை மனித ரசனையோடு கலந்து நான் உருவாக்கிய வித்தியாசமான நாவல்தான் இந்த ராபர்ட் நான் ரோபோட்
.
நாளை இது போல நிகழலாம். நிகழ வேண்டும். விஞ்ஞானத்தில் என்னதான் ஒரு மனிதன் வெற்றியின் சிகரத்தைத் தொட்டாலும், அடி மனது நேசம் அவனை விட்டு விலகாது என்ற மனிதாபிமானமும் இதில் மறக்கப்படவில்லை.
தொடர்ந்து எனக்கு பல சிகரங்களைத் தொட உறுதுணையாக இருக்கும் திரு.எம்.கே.சாமி அவர்களுக்கு என் நன்றிகளைத் தெரிவிக்கும் நிமிடத்தில், மயிலவன் மூலம் உங்களிடையே மலரப்போகும் எனக்கு நேசக்கரம் நீட்டுமாறு பாசத்துடன் வேண்டிக் கொள்கிறேன்.
நன்றி.
நேசமுடன்,
தேவிபாலா
ராபர்ட் நான் ரோபோட்...!
1
ராபர்ட் வரப்போகிறான் நாளைக்கு.
வீடு முழுக்க விழாக்கோலத்தில் இருந்தது.
பென்னட் ஏகப்பட்ட டென்ஷனில் இருந்தார். டெலிபோன் அவரது ஆக்ரமிப்பு தாளமாட்டாமல் அலறி அழுது கொண்டிருந்தது.
"த பாரு ராஜா... நம்ம எஸ்.கே.ல. சொல்லி, வீடியோ காமிரா ஏற்பாடு பண்ணு. மெக்ரென்னட்ல ஜயன்ட் சைஸ் கேக் ஆர்டர் பண்ணனும்... ஆமாம், ராபர்ட் லண்டன்லேருந்து திரும்பற நாள் மட்டுமில்லை. அவனோட பர்த்டேயும் நாளைக்குத்தான்.
என்னங்க ராபர்ட்டுக்கு புது சூட் தைக்க வேண்டாம்?
-- சூசம்மா தன் பெரிய தேக்கத்தைச் சுமந்து கொண்டு மூச்சிறைக்க எதிரே வந்து நின்றாள்.
அறிவிருக்கா உனக்கு? முணு வருஷமா வெளிநாட்ல இருக்கிற பிள்ளை அதேமாதிரி உடம்போட இருப்பானா? ரெடிமேட் வாங்கிக்கலாம். எல்லாருக்கும் இன்விடேஷன் போயிருக்கா?
"
ம்! ஆச்சு!
பென்னட் அடுத்த டெலிபோன் பேச்சுக்கு ஆயுத்தமாகும் இந்த வேளையில் இவர்களை சுருக்கமாக அறிமுகம் செய்து கொண்டு விடலாமா?
முதலில் பென்னட்:
தமிழ்நாட்டில் இருப்பதால் பென்னட் பற்றி உங்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்லை. அம்பத்தூர் தொழிற்பேட்டையில் நாலைந்து யூனிட்டுகள், எழும்பூர் ரயில்நிலையத்துக்கு அருகில் நீங்கள் அண்ணாந்து பார்த்தால் கழுத்து நரம்புகள் இடம் மாறும் உயரத்தில் ஒரு காம்ளளெக்ஸ் உண்டல்லவா? அதன் சொந்தக்காரர் பென்னட்தான். அண்ணாசாலையில் ஒரு நவீன திரையரங்கம், தேனாம்பேட்டையில் நட்சத்திர அந்தஸ்த்து பெற்ற உணவகம்... சரி, லிஸ்ட் போதும்.
பென்னட்-சூசம்மா (95கிலோ) தம்பதியரின் ஒரே மகன் ராபர்ட்.
இங்கே பல டிகிரிகளைச் சுமந்து கொண்டு டாக்டராக அயல்நாடு புறப்பட்டு, மருத்துவ வாலோடு ஒருமுறை திரும்பி, மறுபடியும் எதையோ ஸ்பெஷலைஸ் செய்ய மூன்று வருடம் முன்னால் லண்டன் போய், நாளை தாயகம் திரும்பும் ராபர்ட்டுக்கு வயது முப்பது.
அவன் வந்த பிறகு அவனது வாலிப வசீகரங்களை வாசகர்களே பார்த்து கொள்ளுங்கள்.
அறிமுகம் போதும்.
பென்னட்டின் செக்ரட்டரி வந்து விட்டான்.
வா உஸ்மான்.
குட் மார்னிங் சார்!
எல்லாம் ரெடியா?
ரெடி சார்! ஒருவாட்டி சொல்லிர்றன்..சரி பார்த்துருங்க. காலை ஒன்பதரைக்கு சின்னதுரை வர்ற ஃப்ளைட் ரிசீவ் பண்ண ஏர்போர்ட் போறோம். வீட்டுக்கு வந்ததும் முக்கிய வி.ஐ.பி.க்களோட அறிமுகம். அவர் குளிச்சு சாப்பிட்டு முடிக்க பன்னிரன்டு. ஒரு மணிக்கு பேக்டரி விசிட். மூணு மணிக்கு க்ரிம்ஸ் ரோட்ல புதுசா தொடங்கப்போற நம்ப நர்ஸிங்ஹோம் திறப்பு விழா, சாயங்காலம் ஆறுமணிக்கு நம்ம சின்ன துரையோட ‘பர்த்டே’ பார்ட்டி...
இனஃப்! எனக்கே தலை சுத்துது!
என்னங்க... முக்கியமா ஒரு வேலை இருக்கு நாளைக்கு. அதை மறந்துட்டீங்க!
என்ன சூசம்மா?
உஸ்மானை அவள் பார்க்க, குறிப்பறிந்து அவன் அங்கிருந்து விலகினான்.
சொல்லு!
ராணிக்கும், ராப்ர்ட்டுக்கும் கல்யாணம் செய்யப்போற செய்தியை அறிவிக்க வேண்டாமா?
சூசம்மா!
என்னங்க?
ராபர்ட்டை ஒரு வார்த்தை கேட்டுட்டு அதைப்பத்தி முடிவு செஞ்சா போதாதா?
ஏன் இப்படி சொல்றீங்க? மூணு வருஷம் முன்னாலா லண்டன் புறப்படும் போது அவ கையில மோதிரத்தை நுழைச்சிட்டே நம்ம பிள்ளை என்ன சொன்னான் தெரியுமா?
ராணி! இந்த நிமிஷம் நமக்கு நிச்சயதார்த்தம் நடந்தாச்சு. மூணு வருஷம், மூணு நிமிஷமா ஓடிப் போயிரும். நான் வந்ததும் முதல் வேலை கல்யாணம்தான்!
சரி...
ஏன் இழுக்கறீங்க? போன மாசம் கூட அவளுக்கு அவன் வர்ற விவரம் பத்தி தனியா எழுதியிருக்கான். எங்கிட்ட சொல்லிச்சு அது. ‘என்ன எழுதியிருக்கான்? நான் பார்க்கலாமா’னு கேட்டதும். முகம் சிவந்து போச்சு... புரியுதா இப்ப?
சரி, நீ சொன்னா நான் ஒப்புக்கத்தானே வேணும்
இண்டர்காம் ஒலித்தது. எடுத்துப் பேசிய பென்னட் உள்ளே அனுப்பு!
என்றார்.
பத்தாவது நொடி, சைமன் உள்ளே நுழைந்தார். பின்னால் ராணி.
குட் மார்னிங் அங்கிள்.
வாம்மா... நாளைக்கு உன் நாயகன் வரப்போறானா?
போங்க அங்கிள்
ராணி சிம்லா ஆப்பிள் போல சிவந்து நின்றாள்.
ராணி நல்ல உயரமும், ஒடிசலான தேகவாகும் கொண்ட வசீகரமான பெண்.
அவளது அழகை உயர்த்திக் காட்டுவது கண்களா, கன்னமா என்று பட்டிமன்றம் நடத்தினால், நடுவரால் தீர்ப்பு சொல்லமுடியாது.
அண்ணா பல்கலைக் கழகத்தில் பி.டெக்கும், டெல்லி ஐ.ஐ.டி.யில் எம். டெக்கும் படித்த ராணி, சைமனின் பிராதான எலெக்ட்ரானிக் யூனிட் ஒன்றுக்கு ஜெனரல் மானேஜர்.
சொல்லு சைமன்! நாளைக்கு ராபர்ட் பிறந்த நாளை நிச்சயதார்த்த நாளாவும் செஞ்சிரலாமா?
நான் தயார். உன் ஒப்புதல் கிடைச்ச பின்னால சில ஏற்பாடுகளை செய்யணும்னு காத்திருக்கேன்!
ஏற்பாடு?
யெஸ்! என் மாப்ளைக்கு நான் செய்ய வேண்டிய கௌரவங்களை நிறுத்த முடியுமா?
பென்னட் குரலெடித்துச் சிரித்தார்.
வாம்மா!
ராணியை அழைத்துக் கொண்டு உள்ளே போனாள் சூசம்மா.
இது உனக்கு பிடிச்சிருக்கா?
பெட்டி திறந்ததும் எட்டிபார்த்த வைர நெக்லஸ் வெளிச்சத்தை வாரி இறைத்தது.
இன்னும் சில நகைகள்…
ஸ்பெஷலாக ஆர்டர் செய்த பட்டு புடவை!
அத்தை இதெல்லாம்?
நாளைக்கு உன் நிச்சயதார்த்தம்னு நான் முடிவு செஞ்சாச்சு எப்பவோ...?
அத்தை?
என்னாம்மா?
அவரை கேட்காமலே இத்தனை ஆர்பாட்டங்களும் நடக்குதே... அவர் கோவிச்சுக்கிட்டா?
உன்னை எப்ப பார்ப்பம்னு துடிச்சுகிட்டு இருப்பான் என் பிள்ளை. ஏர் போர்ட்ல வச்சு மாலை மாத்திக்ககூட அவன் ரெடியா இருப்பானே!
கன்னத்தைக் கிள்ளினாள்.
ராணி முகத்தை மூடிக்கொண்டாள்.
அத்தனை பேர்களின் எதிர்ப்புகளையும் சுமந்து கொண்டு மறுநாள் காலை பொழுது விடிந்தது.
பென்னட் இருப்பு கொள்ளாமல் அலைந்தார்.
தொலைபேசியில் விமான நிலையத்தை அணுகி, விமானம் சரியான நேரத்துக்கு வருவதை அறிந்து கொண்டார்.
நாலைந்து மாருதி வேன்கள் வாசலில்...
பென்னட் தம்பதியர்-
சைமன், ராணி, வேறு சில பிரமுகர்கள் என்று நிரம்ப வாகனங்கள் மவுண்ட் ரோட்டில் சீறத் தொடங்கின.
லவுன்சில் ஆக்கிரமிப்பு செய்தார்கள்.
நேரம் 9:29.
விமானம் தன் அலுமினியப் புள்ளியை ஆகாயத்தில் காட்டியது.
நகக் கடிப்போடு எழுந்தாள் ராணி.
தரை தொட்டு, ஊர்ந்து, இயக்கம் துறந்து நிற்க. எஸ்கலேட்டர்கள் பொருத்தப்பட்டன.
கதவு திறக்கப்பட்டது.
பயணிகள் இறங்கத் தொடங்கினார்கள்.
சகலரும் மாலையோடு காத்திருக்க-
உச்சியில் ராபர்ட் தெரிந்தான்-
கையசைத்தான்.
உடம்பெல்லாம் ஆனந்தத்தால் சிவக்க ஓரடி முன் வைத்த ராணி சட்டென நின்றாள்.
ராபர்ட்டின் தோளை வெகு சுவாதீனமாக பற்றிக் கொண்டு, ஏறத்தாழ அவன்மேல் பரவிக் கொண்டே வெகு நெருக்கமாக அவனோடு இறங்கினாள் அந்தப் பெண்...
2
அத்தனை பேரும் அதிர்ச்சியின் உச்சியில் இருந்தார்கள்.
மாலை போடக் கூட மறந்து போனார்கள்.
அவர்களை நெருங்கிய ராபர்ட், தாயின் காலைத்தொட்டு முதலில் வணங்கினான். தகப்பனாரை அணைத்துக் கொண்டான்.
ஹலோ அங்கிள்!
ஹாய் ராணி. ஹவ் ஆர் யூ?
வெகு இயல்பாகப் பேசத் தொடங்கினான்.
யாரப்பா இந்த பெண்?
பென்னட்டின் குரல் கரகரப்பாக வெளிப்பட்டது.
பார்த்திங்களா... எல்லாரையும் பார்த்த சந்தோஷத்துல ஹெலனை மறந்து போனேன். ஹெலன் நீயாவது சொல்லக் கூடாதா?
இதமான ஆங்கிலத்தில், "இது உன் தாய்நாடு.