Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Mazhai Kaalathu Maalai Neram
Oru Mazhai Kaalathu Maalai Neram
Oru Mazhai Kaalathu Maalai Neram
Ebook493 pages6 hours

Oru Mazhai Kaalathu Maalai Neram

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Yandamoori Veerendranath, is a famous Telugu novelist. He had written many social, fiction, super natural thriller stories and novels. Hailing from Andhra Pradesh state in India, he influenced younger generations with his socially relevant writings. In his writings he addresses many of the important social problems in India like poverty, prejudices, and superstitions, and encourages people to be socially responsible. He successfully bridges the idealistic and the popular styles of literature.
Languageதமிழ்
Release dateApr 23, 2018
ISBN6580101100157
Oru Mazhai Kaalathu Maalai Neram

Read more from Yandamoori Veerendranath

Related to Oru Mazhai Kaalathu Maalai Neram

Related ebooks

Reviews for Oru Mazhai Kaalathu Maalai Neram

Rating: 5 out of 5 stars
5/5

1 rating1 review

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 5 out of 5 stars
    5/5
    the way story moves is the best think in this book. As usual hero of writer loves country more than anythink but in this book hero love for heroin is missing :-D

Book preview

Oru Mazhai Kaalathu Maalai Neram - Yandamoori Veerendranath

http://www.pustaka.co.in

ஒரு மழை காலத்து மாலை நேரம்

Oru Mazhai Kaalathu Maalai Neram

Author:

எண்டமூரி வீரேந்திரநாத்

Yandamoori Veerendranath

For more books

http://www.pustaka.co.in/home/author/yandamoori-veerendranath

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

பொருளடக்கம்

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

அத்தியாயம் 3

அத்தியாயம் 4

அத்தியாயம் 5

அத்தியாயம் 6

அத்தியாயம் 7

அத்தியாயம் 8

அத்தியாயம் 9

அத்தியாயம் 10

அத்தியாயம் 11

அத்தியாயம் 12

அத்தியாயம் 13

அத்தியாயம் 14

அத்தியாயம் 15

அத்தியாயம் 16

அத்தியாயம் 17

அத்தியாயம் 18

அத்தியாயம் 19

அத்தியாயம் 20

அத்தியாயம் 21

அத்தியாயம் 22

அத்தியாயம் 23

அத்தியாயம் 24

அத்தியாயம் 25

அத்தியாயம் 26

அத்தியாயம் 27

அத்தியாயம் 28

அத்தியாயம் 29

அத்தியாயம் 30

அத்தியாயம் 31

அத்தியாயம் 32

அத்தியாயம் 33

அத்தியாயம் 34

அத்தியாயம் 35

1

எந்த ஒரு கதையும் ஏதோ ஒரு இடத்தில் தொடங்கும். இந்தக் கதையை ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் தொடங்குவோம்.

கி.மு.1026 ...

கூராஸக் ... தி லாண்ட் ஆஃப் ரைஸிங்க் சன்.

ரத்ன மாணிக்கங்களுக்கு பெயர் பெற்ற பாரதநாட்டை கொள்ளை அடிப்பதற்கு ஆயிரம் வருடங்களுக்கு முன் முஹம்மத் கஜனி அந்த எல்லையிலிருந்துதான் பயணித்து வந்தான். இமயமலைகளுக்கு நடுவில் இருக்கும் பாதை வழியாக வந்து சோம்நாத் ஆலயத்தை துவம்சம் செய்தான்.

அதற்குப்பிறகு நூறாண்டுகள் கழித்து கோரி முஹம்மத் அதே வழியில் வந்து டாரியன் போரில் பிருத்விராஜை தோற்கடித்தான். அந்த நாட்களில் இந்த இடத்திற்குப் பெயர் ஆரியானா. ஆரியர்கள் வசித்து வந்த இடம் என்பதால் அந்தப் பெயர் வந்ததாக சொல்லுவார்கள். திருதராஷ்ட்ரரின் மனைவி காந்தாரி பிறந்த நாடு அது. மங்கோலியாவிலிருந்து வந்த செங்கீஜ்கான் அந்த மலைகளுக்கு உள்ளே இருக்கும் குகைகளில்தான் தங்கியிருந்தான். அதற்குப் பின்னால் முன்னூறு வருடங்கள் கழித்து அக்பர் அந்த எல்லையை ஆண்டான்.

மலைகளுக்கு இந்தப் பக்கம் காஷ்மீரி ரோஜாக்கள், பசும் புல்வெளிகள்.

அந்தப் பக்கம் கல் குன்றுகள், பாலைவனங்கள், காய்ந்த கட்டாந்தரை!

தி லாண்ட் ஆஃப் ரைசிங்க் சன்!!

அங்கே இருப்பவர்கள் பேசும் மொழி புஸ்தூ.

அங்கே மலைகள், நதிகள், குளங்கள், அருவிகள் எல்லாம் அப்படியே இருந்தன. பனிப்புயல்கள், அவலாஞ்சிகள் எதுவும் மாறவில்லை. ஆண்டு வந்த அரசர்கள் மாறினார்கள். ராஜ்ஜியங்களின் எல்லைகள் மாறின. வம்சங்கள் மாறின. பெயர்கள் மட்டும் வரலாற்றில் நிலைத்துவிட்டன.

காலவெள்ளத்தில் மேலும் எண்ணூறு வருடங்கள் உருண்டோடிவிட்டன.

எங்கே செழிப்பு இல்லையோ அங்கே போரைத் தவிர்க்க முடியாது. எங்கே பசியும் பட்டினியும் ஆட்சி புரிந்துகொண்டிருக்குமோ அங்கே ஆயுதம்தான் சட்டத்தை உருவாக்கும்.

வேளான்மை செழிக்காத இடத்தில் நாகரீகம் வளராது. பசியிருக்கும் இடத்தில் நம்பிக்கைக்கு இடமில்லை. அதனால்தான் அங்கே மக்கள் பல பிரிவுகளாக, சின்னச் சின்ன கும்பல்களாக பிரிந்து போனார்கள். தி லாண்ட் ஆஃப் ரைசிங்க் சன்!

மேலும் நூறு ஆண்டுகள் கழிந்தன.

கி.பி. 1826 –

பாபரும், அக்பரும் ஆண்டுவிட்டு, விட்டுவிட்ட அந்த ஆரியானா எல்லையின் மலைகுகைகளில் பல பிரிவுகளைச் சேர்ந்த மலைவாசிகள் வசித்து வந்தார்கள். என்போதும் சண்டையும், ரத்தக்களறியுமாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அந்த மலைவாசிகளில் ஒரு பிரிவின் பெயர் புஸ்தூன்.

1826ம் ஆண்டில் பிரிந்துபோன கும்பல்களை எல்லாம் ஒன்றாகத் கூட்டி அந்த நாட்டிற்கு தன்னை அமீராக அறிவித்துக் கொண்டான் ஒருவன். அவன் பெயர் தோஸ்த் முஹம்மத்.

காலம் வேகமாக சுழன்றுக்கொண்டுதான் இருந்தது. ஆங்கிலேயர்கள் போகும் முன் இந்தியாவையும், பாகிஸ்தானையும் பிரித்தார்கள். ஜவஹர்லால் பிரதமராக இருந்த காலத்திலேயே காஷ்மீர் பிரச்னை தொடங்கிவிட்டது. அமெரிக்கா, ரஷியாவும் இரண்டும் சூப்பர் பவர் நாடுகளாக வளர்ந்துவிட்டன. இந்தியா ஜனநாயகத்தின் பக்கம் சாய்ந்ததால் ரஷியாவுக்கு நெருக்கமாகிவிட்டது. அத்துடன் அமெரிக்கா பாகிஸ்தானை கைநீட்டி அணைத்துக் கொண்டது.

இத்தனை நடந்துகொண்டிருந்தாலும் லாண்ட் ஆஃப் ரைஸிங் சன் அப்படியே இருந்தது. ஆங்கிலேயர்களால் ஆதரிக்கப்பட்ட ஜஹீர்ஷா கொடுங்கோலனாக இருந்தான். பசியிருக்கும் இடத்தில் எந்த அரசும் சாசுவதமாக இருக்காது இல்லையா? ஜஹீர்ஷாவுக்கு எதிராக 1973யில் ரஷியர்களின் ஆதரவில் புரட்சி தொடங்கியது.

ஆனால் அதே இடத்தில் இருக்கும் மற்றொரு இனம் முஜஹிதீன். புஸ்தூன் மொழியில் முஜஹிதீன் என்றால் புனிதமான போர் என்று அர்த்தம். இவர்கள் இன்னொருவரின் கீழ் வேலை செய்வதை விரும்ப மாட்டார்கள். அதனால் கம்யூனிஸ்டுகள் மீது போர் அறிவித்தார்கள்.

பக்கத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த பாகிஸ்தானுக்கு ரஷியாவை எதிர்ப்பதற்கு நல்ல வாய்ப்பு கிடைத்துவிட்டது. முஜஹிதீன்களுடன் நட்புகரம் நீட்டியது. கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக புரட்சி தொடங்கிவிட்டது. இதற்கு அமெரிக்காவின் பக்கபலமும் இருந்தது.

அத்துடன் ரஷியாவுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. ஒரு சின்ன இடத்தின்மீது தன்னுடைய ஆதிக்கத்தை, மற்றொரு சிறிய நாடான பாகிஸ்தான் கேள்வி கேட்பதை ரஷியாவால் சகித்துக்கொள்ள முடியவில்லை. மற்றொரு பக்கம் முஜஹிதீன்கள் கமய்யூனிஸ்டுகளை பதவியிலிருந்து இறக்குவதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். எல்லாவற்றையும்விட முக்கியமாக அமெரிக்கா ஆசியாவில் அடியெடுத்து வைப்பதற்கு வாமனனுக்கு கிடைத்தாற்போல் சிறிய இடம் கிடைக்கப் போகிறது. சின்ன இடம் கிடைத்தால் போதும் முழுவதுமாக ஆக்ரமித்துக் கொண்டுவிடும் என்று ரஷ்யாவுக்குத் தெரியும்.

நன்றாக யோசித்துவிட்டு ரஷ்யா ஒரு முடிவை எடுத்துக் கொண்டது.

அதன் விளைவாக ஏப்ரல் 27ம் தேதி 1978 அன்று விடியற்காலையில் லட்சக் கணக்கான ரஷியன் வீரர்கள், ஆயிரக்கணக்கான டாங்குகளுடன் லாண்ட் ஆஃப் ரைஸிங்க் சன் உள்ளே நுழைந்தார்கள். குறுக்கே வந்தவர்களை வெட்டினார்கள். எதிர்த்தவர்களை பிணமாக மாற்றி பள்ளத்தாக்கில் தள்ளினார்கள். விரைவிலேயே ஆரியன் பிரதேசத்தை சுவாதீனம் செய்துகொண்டார்கள்.

இதைத்தான் ஏப்ரல் ரெவல்யூஷன் என்பார்கள்.

ஆரியன் பிரதேசத்தில் மலைவாசிகள் எல்லோரையும் சேர்த்தாலும் இரண்டு கோடியைவிட அதிகம் இருக்காது. அதாவது தற்போதைய நம் மாநிலத்தின் மக்கள் தொகையைவிட குறைவு. ஆனால் அவர்கள் இயற்கையுடன் ஒன்றியிருப்பவர்கள். சுபாவத்திலேயே சுதந்ததிரத்தை விரும்புகிறவர்கள்.

அவர்கள் ரஷ்ய வீரர்களின் வாழ்க்கையை துர்பரமாக்கி விட்டார்கள். இருட்டிலிருந்து மின்னல் போல் தாக்குதல் நடத்துவார்கள். கொரில்லா முறையில் பின் பக்கமாக தாக்கினார்கள்.

ரஷ்யர்களும் குறைந்தவர்கள் ஒன்றும் இல்லை. பிடியை மேலும் இறுக்கினார்கள். அந்த எல்லையில் அமெரிக்காவும், பாகிஸ்தானும் அடியெடுத்து வைக்கக் கூடாது என்பது அவர்களுடைய எண்ணம்.

விளைவாக சூரியன் உதயிக்கும் நாடு சிவந்தது, அருணோதய கிரணங்களால் அல்ல. ரத்தத்தால் நடந்த மாரண ஹோமத்தால்.

அந்த விதமாக சுமார் பத்தாண்டுகள் அந்த மலைப் பிரதேசம் பயங்கரமான போர்களமாக மாறிவிட்டது. ஒரு பக்கம் ரஷ்யா... இன்னொரு பக்கம் அமெரிக்கா. இரண்டு நாடுகள் ஆடிய சதுரங்க ஆட்டத்தில் அந்த சின்ன பிரதேசம் பகடைக்காயாக மாறிவிட்டது.

வரலாறு உருவானது முதல் பல கைகள் மாறி, சுயநலம் பிடித்தவர்களின் செயல்களால் சின்னச் சின்ன பிரிவுகளாகப் பிரிந்துபோய், பலவிதமான போர்களைக் கண்டு நலிந்துபோன நாடு அது.

வாய்ப்பாடு கற்றுக்கொடுப்பதற்கு பதிலாக சின்னக் குழந்தைகளுக்கு துப்பாக்கியைப் பிடிக்கக் கற்றுக்கொடுக்கும் நாடு அது.

உயிர் என்றால் கிள்ளுக் கீரைக்கு சமமாக, துச்சமானவற்றுக்கும் உயிரை பலி வாங்கும் நாடு அது.

அந்த நாட்ன் பெயர் ஆஃப்கனிஸ்தான்.

ஜனவரி 15ம் தேதி, 1989 –

தி லாண்ட் ஆஃப் ரைஸிங்க் சன்னில் ரஷ்ய நாட்டுக் கொடி பறப்பதில் அமெரிக்காவுக்கு விருப்பம் இல்லை. இந்த வாய்ப்பை பாகிஸ்தான் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டது. தன்னுடன் கூட்டு சேர்ந்தால் ஆஃப்கனிஸ்தானை தம் கட்டுக்குள் கொண்டு வரமுடியும் என்று அமெரிக்காவுக்கு ஆசை காட்டியது.

ரஷ்யர்களுடன் போராடிக் கொண்டிருந்த முஜஹிதீன்களுக்கு ஏற்கனவே உதவி செய்ய ஆரம்பித்திருந்தது பாகிஸ்தான். அதன் விளைவாக ஆஃப்கனிஸ்தானை தம் அதீனத்திற்குள் வைத்துக் கொள்வது ரஷியர்களுக்கு அசாத்தியமாயிற்று. நாளுக்கு நாள் பிடி தளர்ந்து கொண்டிருந்தது. அதோடு ரஷியாவின் பொருளாதாரநிலையும் அவ்வளவு சரியாக இருக்கவில்லை.

விளைவாக 14 அக்டோபர் 1988ல் ஆஃப்கனிஸ்தானிலிருந்து தங்களுடைய ராணுவத்தை விலகிக் கொள்வதாக ரஷ்யா அறிவித்தது. அப்படி விலகிக் கொள்வதற்கு ஏறக்குறைய இரண்டு வருடங்கள் பிடித்தன. 1989 ஜனவரியில் ரஷிய ராணவத்தின் கடைசி டாங்கர் ஆஃப்கனின் எல்லையைத் தாண்டி போய்விட்டது. ரஷ்ய ராணுவம் விலகிய அடுத்த நிமிடம் நஜீபுல்லாவை ஜனாதிபதியாக்கினார்கள்.

இது வரையிலும் பாகிஸ்தான் நினைத்தது போலவே நடந்தாலும், இந்த இடத்தில்தான் அவர்கள் போட்ட கணக்கு பிசகிவிட்டது. அதுவரையிலும் நிசப்தமாக தங்களுடைய வேலையை செய்துகொண்டிருந்த முஜஹிதீன்கள் தாம் சுதந்தரமாக இருப்போம் என்றும், யாருடைய ஆளுமையின் கீழும் தாங்கள் இருக்க மாட்டோம் என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டாகச் சொல்லிவிட்டார்கள்.

அத்துடன் பாகிஸ்தான் பலமாக அடிவாங்கியது போல் பின் வாங்கியது. இந்தியாவுக்கு நண்பர்களாக இருக்கும் புனித போர் வீரர்கள் ஆஃப்கனிஸ்தானில் ஸ்திரவாசம் ஏற்படுத்திக் கொண்டால் ஏற்படப் போகும் நஷ்டத்தைப் பற்றி பாகிஸ்தானுக்கு நன்றாகவே தெரியும்.

'என்ன செய்யலாம்?' பாகிஸ்தான் கேட்டது.

'பிரித்துவிடுவோம்' என்றது அமெரிக்கா.

'எப்படி? யாரை? எதுக்கு?'

'ஆஃப்கனிஸ்தான் என்றால் வெறும் முஜஹிதீன்கள், ஃபகூன்கள் மட்டுமே இல்லை. இன்னும் பல மலைவாசிகள் இருக்கிறார்கள். நாம் யாருக்கு உதவி செய்கிறோமோ அவர்கள் வலிமை பெறுவார்கள். நாம் அந்த வேலையில் இறங்குவது நல்லது.'

பாகிஸ்தான் உடனே களத்தில் இறங்கியது. முஜஹிதீன்களுக்கு எதிரான வேறொரு ஜாதியைத் தூண்டிவிட்டது. பழமைவாதத்தை உடல் முழுவதும் ஜீரணித்துக்கொண்ட அந்த ஜாதி, லாண்ட் ஆ:ப் ரைஸிங்க் சன்னின் வரலாற்றை ரத்தத்தால் திரும்ப எழுத கங்கணம் கட்டிக்கொண்டது. கருணை, தாட்சிண்யம் என்ற வார்த்தைகளை அகராதியிலிருந்து நீக்கிவிட்டது. முகத்தைக் காட்டிய பெண்களை, உடலை மறைக்கும் புர்காவை அணிந்துகொள்ளாத காரணத்திற்காக நடுத்தெருவில் நிற்க வைத்து அடிக்கச் செய்தது. திருட்டுக்கு தண்டனையாக கற்களால் அடித்துக் கொல்லச் செய்தது. ஆண்களுக்கு தாடியை கட்டாயமாக்கியது. சினிமாக்களை, தொலைக்காட்சியைத் தடைசெய்தது. பள்ளி மற்றும் அலுவலகங்களில் பெண்களைத் தடை செய்தது. பாகிஸ்தான் அளித்த ஊக்கத்தால் ஆஃப்கன் தலைநகரமான காபூலை முற்றுகையிட்டது. உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஐக்கியநாட்டு சங்கத்தின் கட்டிடத்தில் தலைமறைவாக இருந்த மாஜீ ஆஃப்கன் ஜனாதிபதி நஜீபுல்லாவை வெளியே இழுத்து வந்து உலகம் முழுவதும் கூடாது என்று கூக்குரல் இட்ட போதும் லாந்தர் போஸ்டில் தொங்கவிட்டு தூக்கில் போட்டது. ஆஃப்கான் நாட்டின் அதிகாரத்தை வலுக்கட்டாயமாக கைப்பற்றிய அந்த தீவிரவாதக் கும்பலின் பெயர் தாலிபான்.

2 ஜூன், 1990 –

பாகிஸ்தான் தந்த ஊக்கத்தில் தாலிபான்கள் எல்லை மீறிவிட்டார்கள்.

ஆஃப்கனிஸ்தானில் இந்த விதமான மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டு இருந்தபோது ரஷ்யாவின் நிலைமை வேறு விதமாக இருந்தது. ரஷ்ய ராணுவம் அங்கிருந்து விலகுவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு உலக வரலாற்றில் எதிர்பாராத விதமாக ஒரு மாற்றம் ஏற்பட்டது.

கோர்பசேவ் என்ற அரசியல் பொருளாதார நிபுணர் பெரிஸ்த்ரோயிகா என்ற புதிய வார்த்தையை ரஷ்யன் அகராதியில் நுழைத்தார். பெரிஸ்த்ரோயிகா என்றால் மீண்டும் உருவாக்குவது என்று அர்த்தம். ஏற்கனவே திவாலா எடுக்கும் நிலையில் இருந்த ரஷ்யர்கள் இந்த மாற்றத்தை வரவேற்றார்கள். அவர்களுக்கு வேறு வழியிருக்கவில்லை.

விளைவாக ரஷ்யா துண்டுத் துண்டாக உடைந்துவிட்டது. கம்யூனிஸம் வீழ்ந்துவிட்டது. ஜூன் 2, 1990 அன்று அமெரிக்கா ஜனாதிபதி புஷ், ரஷ்யன் சீஃப் கோர்பசேவ் சேர்ந்து இரண்டு நாடுகளுக்குமிடையே கோல்ட் வாரை தடை செய்து கையெழுத்திட்டார்கள். ரஷ்யா போட்டியிலிருந்து விலகிக் கொண்டு மரியாதையைக் காப்பாற்றிக் கொண்டது.

உலக நாடுகளில் அமெரிக்கா ஒன்றுதான் சூப்பர் பவர் கொண்ட நாடாக எஞ்சியிருந்தது.

இதற்கிடையே ஆஃப்கனிஸ்தானில் தாலிபான்களுக்கும், முஜஹிதீன்களுக்கும் நடுவில் போர் தொடங்கியது. 50,000 பேர் காபூலை விட்டுவிட்டு ஓடிப்போனார்கள். லட்சக் கணக்கானவர்கள் ஆதரவின்றி தவித்தார்கள். தாலிபான்கள் நாட்டை ஆக்ரமித்துக் கொண்டு மேலும் மேலும் முன்னேறிக் கொண்டிருந்தார்கள். இஸ்லாம் சட்டங்களை கடுமையாக திணிக்கச் செய்து, எதிர்த்தவர்கள் வெட்டிச் சாய்த்துக் கொண்டிருந்தார்கள். பெண்களையும் விட்டு வைக்கவில்லை. பெரியப் பெரிய புத்தரின் சிற்பங்களை சிதைத்தார்கள்.

உலக நாடுகள் பெரும் அளவில் எதிர்ப்பு தெரிவித்தன. உள்நாட்டு பிரச்னைகளில் மூழ்கியிருந்து ரஷ்யா எதையும் பொருட்படுத்தும் நிலையில் இல்லை.

பாகிஸ்தானின் நிலைமை பாக்குவெட்டியில் அகப்பட்டுக் கொண்டதுபோல் ஆயிற்று. தாலிபான்களை சப்போர்ட் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இல்லாவிட்டால் இந்தியாவை சப்போர்ட் செய்யும் கட்சி அதிகாரத்திற்கு வரும் ஆபத்து இருந்தது. தன்னை இந்த சங்கடமான நிலையிலிருந்து மீட்க வேண்டுமென்று பாகிஸ்தான் அமெரிக்காவிடம் வேண்டுகோள் விடுத்தது.

ஆனால் அமெரிக்காவுக்கு இந்த விவகாரத்தில் கொஞ்சம்கூட ஆர்வம் இருக்கவில்லை. எப்போ ரஷ்யா போட்டியிலிருந்து விலகிக் கொண்டு விட்டதோ, இனி அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் மீதும், ஆஃப்கனிஸ்தான் மீதும் என்ன ஆர்வம் இருக்க முடியும்? இந்த விவகாரத்தில் தான் தலையிடப் போவதில்லை என்று சொல்லிவிட்டது.

எந்த ஒரு நாடும் வெளிநாட்டு விவகாரத்தில் தன்னுடைய சுயநலத்திற்கு ஏற்றாற்போல்தான் கொள்கையை அவ்வப்பொழுது மாற்றிக் கொண்டிருக்கும். இதில் நிரந்தர நட்போ, பகையோ, நன்றியோ இருக்காது என்று சொல்வதுதான் இந்த முன்னுரையின் நோக்கம்.

27, செப்டெம்பர் 1996 –

காபூலை ஆக்ரமித்துக் கொன்ட தாலிபான்கள் ஆஃப்கன் நாட்டு அதிபதிகளாக தம்மை அறிவித்துக் கொண்டார்கள். ஆனால் உலகத்தில் எந்த நாடும் அவர்களை அதிகாரப் பிரதிநிதிகளாக பொருட்படுத்தவில்லை. மூன்று நாடுகள் மட்டும் அவர்களை ஏற்றுக் கொண்டன.

அதில் முக்கியமானது பாகிஸ்தான்! அந்த விதமாக அது தன்னந்தனியாகிவிட்டது. ஆனால் தாலிபான்கள் புத்திசாலிகள். புத்திசாலிகள் என்று சொல்வதைவிட குள்ளநரித்தனம் அதிகம் என்று சொல்வது சரியாக இருக்கும்.

அமெரிக்காவுடன் நட்பு வைத்துக்கொள்ளவில்லை என்றால் தங்களால் வாழ முடியாது என்று அவர்களுக்குத் தெரியும். அதேபோல் இந்தியாவுடனும். அதனால் சந்தி செய்துகொள்வதுபோல் செய்தி அனுப்பியது.

ஆஃப்கனில் திருட்டுத்தனமாக வளர்க்கும் கஞ்சா செடிகளை நாசமாக்குவோம் என்றும், தீவிரவாதிகளை அடக்குவோம் என்றும் அமெரிக்காவுக்கு செய்தியை அனுப்பியது. தன்னுடைய நேர்மையை நிரூபிப்பதற்காக அயிமல்கான்ஸீ என்ற தீவிரவாதியை 1997ல் அமெரிக்காவிடம் ஒப்படைத்தது. இவன் 1995ல் அமெரிக்கன் ஒற்றர்களைக் கொன்றுவிட்டு பெலூசிஸ்தானுக்கு ஓடிப் போனான். இவனை ஒப்படைப்பதன் மூலமாக அமெரிக்காவுக்கு நெருக்கமாக வேண்டும் என்று திட்டம் போட்டது.

அதேபோல் இந்திய நாட்டின் விமானத்தைப் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடத்தல் செய்து காந்தஹாருக்குக் கொண்டுபோனபோது,பெரிய மனிதர்களைப் போல் நடுநிலைமை வகித்து சமாதானம் (?) செய்தது. ஆனாலும் இந்தியா தன்னுடைய கொள்கைக்கு கட்டுப்பட்டு தாலிபான்களிடமிருந்து விலகியே இருந்தது.

போகப் போக அமெரிக்காவுக்கு தாலிபான்களிடம் அன்பு ஏற்படத் தொடங்கியது. கஞ்சா செடிகளை நாசமாக்குவோம் என்று சொன்னதற்காக இல்லை. அவ்வளவு சின்ன விஷயத்திற்கு அமெரிக்கர்கள் சமாதானத்திற்கு வந்துவிட மாட்டார்கள். அசல் விஷயம் வேறு ஒன்று இருந்தது.

ஏற்கனவே அமெரிக்கா இராக்கை தன் ஆதீனத்திற்குள் கொண்டு வர முடியாமல் திண்டாடிக் கொண்டிருந்தது. அது போதாது என்று இரான் நாடு கூட இப்பொழுது எதிரியாகிவிட்டது.

முஸ்லிம்களில் இரண்டு பிரிவுகள் இருக்கின்றன.

இரானியர்கள் ஷியாக்கள்.

இரான் நாட்டிற்கு அண்டையில் இருக்கும் தாலிபான்கள் சுன்னிக்கள்.

தாலிபான்களை தம் பக்கம் சேர்த்துக்கொண்டு அவர்களுக்கு ஆயுதங்களை சப்ளை செய்தால் தம் எதிரிகளான இரானியர்களுக்கு புதிதாக எதிரிகள் உருவாகிவிடுவார்கள். இதுதான் அமெரிக்காவின் எண்ணம். அதனால்தான் தாலிபான்களின் அட்டுழியங்களைக் கண்டிக்கவில்லை. பாகிஸ்தானுக்கு பழம் நழுவி பாலில் விழுந்தாற்போல் இருந்தது.

தாலிபான்களுக்கு அமெரிக்காவின் சப்போர்ட் கிடைத்தால் இந்தியாவை ஆட்டிவைக்கலாம். பாகிஸ்தானால் ஆக்ரமித்துக்கொள்ளப் பட்ட காஷ்மீர் வழியாக ஸ்ரீநகருக்குள் அனுப்பி வைத்தால் தாலிபான்கள் தம் ரத்தத் தாகத்தைத் தீர்த்துக்கொள்வார்கள். அமெரிக்காவும் தடைசொல்லப் போவதில்லை.

இந்த விதமாக எல்லா திட்டங்களையும் தீட்டி சதுரங்கத்தில் காய்களை நகர்த்தி, இந்தியாவுக்கு 'ஷோ' சொன்னது பாகிஸ்தான்.

அந்தக் கடைசித் திட்டத்தின் பெயர் 'கார்க்கில்.'

20 மே, 1999 –

நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்த டிஃபென்ஸ் மினிஸ்டர் ஜார்ஜ் ஃபெர்னான்டஸ், கடமையை யதார்த்தமாக எடுத்துக்கொண்ட இன்டெலிஜென்ஸ் டிபார்ட்மென்ட் திடுக்கிட்டு விழித்துக் கொள்வதற்குள் மூவாயிரம் இந்திய ராணுவ வீரர்கள், பொது மக்கள் இறந்துபோனார்கள்.

இந்தியா ஸ்ரீநகரை இழந்து விடுமோ என்பதுபோல் ஆபத்து கண்ணுக்கெட்டிய தூரத்தில் வந்துவிட்டது.

அந்த நிலைமை நீடித்திருந்தால் அமெரிக்காவுக்கு ரொம்ப சங்கடமான நிலைமை ஏற்பட்டிருக்கும். ஏன் என்றால் ஏற்கனவே அது முஸ்லிம் நாடுகளான இரான், இராக்குடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தது. மற்ற முஸ்லிம் நாடுகள் பலத்தைப் பார்த்து தம்மை சப்போர்ட் செய்தாலும் உண்மையில் அவர்களுக்கு தங்களிடம் மதிப்பு இல்லை என்று அமெரிக்காவுக்கும் தெரியும். பாகிஸ்தானை சப்போர்ட் செய்தால் என்ன லாபம் என்று யோசித்தது.

பாகிஸ்தானின் நிதி நிலைமை ரொம்ப மோசமாக இருந்தது. யுத்தத்தில் இந்தியாவை ஜெயித்து ஸ்ரீநகரைக் கைப்பற்றினாலும் எதிர்காலத்தில் அதைக் காப்பற்றிக் கொள்ள முடியாது. எல்லாவற்றையும் விட தம்மிடமிருந்து ஆயுதங்களை வாங்கும் அளவுக்கு நிதி பாகிஸ்தானிடம் இல்லை. ஏற்கனவே இரண்டாயிரம் மில்லியன் டாலர் தங்களிடம் கடன் பட்டிருக்கிறது.

இந்த சமயத்தில் இந்தியாவை விட்டு விலகியிருந்தால், ரஷ்யா, இராக், இரான், இந்தியா எல்லாம் ஒன்று சேர்ந்துவிட்டால் தங்களுக்குத்தான் ஆபத்து. தானிபான்கள், பாகிஸ்தான் வீரர்கள் காஷ்மீர் எல்லையில் போர் புரிவதைவிட இரான், இராக்கிற்கு நிம்மதியில்லாமல் செய்தால் தங்களுக்கு நல்லது. இதையெல்லாம் யோசித்து, உடனே வரச்சொல்லி பாகிஸ்தான் பிரதமருக்கு செய்தி அனுப்பியது. ஜூலை நான்காம் தேதி இது நடந்தது.

அமெரிக்கா ஜனாதிபதி பில் கிளின்டன், பாகிஸ்தான் பிரதமர் நவாஜ் ஷரீஃபுடன் நிலைமையை விளக்கினார்.

ஷரீஃப் அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு 'எனக்கு எதுவும் தெரியாது மிஸ்டர் பிரசிடென்ட்! தாலிபான்களும், காஷ்மீர் புனித போர் வீரர்களும் செய்யும் யுத்தம் அது. எங்கள் நாட்டிற்கு எந்த சம்பந்தமும் இல்லை' என்றான்.

'காதுகளில் பூ வைக்க வேண்டும் என்றால் பாகிஸ்தானில் அதிகமாக கிடைக்காது ஷரீஃப்! காஷ்மீரில் கிடைக்கும். அதற்காகத்தான் நீங்கள் காஷ்மீரை ஆக்ரமித்துக்கொள்ள முற்படுவதாகநினைக்கிறேன்.'

'நீங்க என்ன பேசுகிறீங்களோ எனக்குப் புரியவில்லை.'

'பாகிஸ்தான் ராணுவம் இல்லாமல் வெறும் காஷ்மீர் வீரர்கள், தாலிபான்கள் இணைந்து இமய மலைகளுக்கு நடுவில், எலும்பை உலுக்கியெடுக்கும் குளிரில் பலம் வாய்ந்த இந்திய ராணுவத்துடன் தனியாகப் போராடி ஜெயிக்கப் பார்க்கிறார்களா? யார் காதில் பூவைக்க இதையெல்லாம் சொல்றீங்க?'

'ஜம்மூ, ஸ்ரீநகரை இணைக்கும் நெடுஞ்சாலையை கார்க்கில் என்ற இடத்தில் ஆக்ரமித்துக் கொண்டால் காஷ்மீர் பிரிந்து போய் விடும் மிஸ்டர் பிரசிடென்ட்!'

'ஆனால் தற்போது இருக்கும் நிலைமையில் அமெரிக்கா எந்த இரு நாடுகளுக்குமிடையே போர் நடக்க வேண்டும் என்று விரும்பவில்லை ஷரீஃப்! யுத்தம் என்று ஒன்று நடந்தால் அமெரிக்காதான் அதை நடத்தணும், அதுவும் மற்ற நாடுகளுக்கு அமைதி ஏற்படுத்துவதற்காக.'

பாகிஸ்தான் பிரதமர் மற்றொரு முறை யோசியுங்கள் என்பதுபோல் சொன்னான். 'ஆஃப்கனை ஜெயித்த பிறகு தாலிபான்கள் ரொம்ப உற்சாகத்துடன் இருக்கிறார்கள். அதோடு பாகிஸ்தானால் ஆக்ரமித்துக்கொள்ளப்பட்ட காஷ்மீரிலிருந்து சுதந்திர போர் வீரர்கள் அவர்களுக்குத் துணையாய் இருக்கிறார்கள். காஷ்மீருக்கு விடுதலையளிப்பதற்கு இதைவிட நல்ல வாய்ப்பு கிடைக்காது. எங்கள் பக்கத்திலிருந்து யோசியுங்கள்.'

பிரசிடென்ட் சிரித்தான். 'அமெரிக்கா தன் பக்கத்திலிருந்து தவிர வேறு யார் பக்கத்திலிருந்தும் யோசிக்காது மிஸ்டர் பிரைம் மினிஸ்டர்! ஏற்கனவே நாங்கள் ரொம்ப ஏமாற்றத்தில் இருக்கிறோம். இராக் போன்ற சிறிய நாட்டை, சத்தாம் ஹுஸேனை கட்டுப்படுத்த முடியாமல் போய்விட்டோம். இரானில் ஏறத்தாழ தோற்றுப்போன நிலையில் உங்கள் தாலிபான்களின் உதவியை நாட வேண்டியிருந்தது. இந்த சூழ்நிலையில் இந்தியாவுடன் யுத்தம் நடந்தால் உங்களுக்கு உதவி செய்யும் நிலையில் இருக்கமாட்டோம். இந்தியாவும் காஷ்மீரை அவ்வளவு சுலபமாக விட்டுக் கொடுக்காது. நஷ்ட மடையப் போவது நீங்கள்தான். யோசித்துக் கொள்ளுங்கள். போய் யுத்தத்தை நிறுத்துங்கள்.'

பாகிஸ்தான் பிரதமர் எதுவும் பேசவில்லை. பேசுவதற்கு எதுவும் பாக்கியிருக்கவில்லை.

சில ஆயிர மில்லியன் டாலர்கள் கடன் கொடுத்தவனிடம் வலிமையில்லாதவன் என்ன பேச முடியும்? எழுந்து பாகிஸ்தானுக்கு திரும்பி வந்துவிட்டான்.

போர் நின்றுவிட்டது.

கார்க்கில் போருடன் தங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று முதலில் சொன்னது பாகிஸ்தான். ஆனால் அமெரிக்கா எச்சரித்ததும் போர் நின்றுவிட்டது. இதன் அர்த்தம் அந்தக் கடவுளுக்குத்தான் தெரிய வேண்டும்.

பதில் எல்லா நாடுகளுக்கும் தெரியும். ஆனால் வெளியில் சொல்ல மாட்டார்கள். அவரவர்களின் பிரச்னைகள் அவரவர்களுக்கு. தங்களுடைய வாழ்க்கை முக்கியம்.

மொத்தத்தில் அமைதி நிலைநாட்டப் பட்டது.

இந்த அமைதி இப்படியே நீடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் அப்படி நீடித்தால் அப்புறம் அது வரலாறு எப்படியாகும்?

ஒரு நாடகத்தனமான மாற்றம் இங்கேதான் நிகழ்ந்தது.

அமெரிக்கன் பிரசிடென்டிடம் விடைபெற்றுக் கொண்டு போகும் முன் பாகிஸ்தான் பிரதமர் இவ்விதமாக சொன்னான். 'நீங்கள் விரும்பியது போலவே கார்க்கில் போரை நிறுத்திவிடுவோம். ஆனால் காஷ்மீரின் சுதந்திரத்திற்காக தவித்துக் கொண்டிருக்கும் ஜிஹாத் வீரர்களையோ, இந்தியா மீது பகையால் துடித்துக் கொண்டிருக்கும் தாலிபான்களையோ எங்களால் தடுத்து நிறுத்த முடியாது.'

இரு அரசியல்வாதிகள் பேசிக்கொண்டால் மூடுமந்திரமாகத்தான் இருக்கும். ஷரீஃப் என்ன சொல்கிறான் என்று புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு அப்பாவி இல்லை அமெரிக்காவின் ஜனாதிபதி.

'எங்களுடைய வேலையை எங்களை செய்து கொள்ள விடுங்கள். குறுக்கே வராதீங்கள். பாயின் அடியில் இருக்கும் நீரைப் போல் எங்களுடைய லட்சியத்தை நாங்கள் அடைந்தே தீருவோம். நீங்கள் சொன்னதுபோல் நேரடியாக யுத்தத்தில் ஈடுபட மாட்டோம்.' இதுதான் பாகிஸ்தான் பிரதமர் ஷரீஃப் சொன்னதன் அர்த்தம்.

தனக்கு எதுவும் புரியாதது போல் அமெரிக்கன் ஜனாதிபதி சொன்னான். 'யாரோ தீவிரவாதிகள், உங்கள் நாட்டில் ரகசியமாக கூடாரங்களைப் போட்டுக் கொண்டு இந்தியாவின் மீது போர் தொடுத்தால், பாவம்.... உங்களால் என்ன செய்ய முடியும்? நாம் அதைப் பற்றிப் பேசிக் கொள்ள வேண்டியதில்லை.'

(இந்த வார்த்தைகளைச் சொன்ன இரண்டு வருடங்கள் கழித்து தாம் எவ்வளவு தவறாக பேசியிருக்கிறோம் என்று அமெரிக்கன்களுக்குப் புரிந்தது.)

கார்க்கில் களத்திலிருந்து பாகிஸ்தான் ராணுவம் விலகிக் கொண்ட பிறகு காஷ்மீரில் மறைமுகமாக தாக்குதல் அதிகமாயிற்று. மதவெறி கொண்ட கும்பல்கள் மனித வெடிகுண்டுகளைத் தயாரிக்க முற்பட்டன. காஷ்மீரில் அமைதிப்படையின் மீது மாரணஹோமம் தொடங்கிவிட்டது. ஆறுதல் வார்த்தைகளை சொல்வதைத் தவிர யாரால் என்ன செய்ய முடியும்? மறைமுகப் போர் என்றால் எங்கேயோ இருந்துகொண்டு இங்கே கலவரத்தைத் தூண்டிவிடுவது. இதற்கு எந்த நாடாலும் தீர்வு சொல்ல முடியவில்லை. இந்த போரில் பலியானது முக்கியமாக இந்தியா, இஜ்ராயில் மற்றும் அயர்லாண்டும்.

சரியாக அதே சமயத்திற்கு வெவ்வேறு நாடுகளில் இருக்கும் அமெரிக்கன் தூதரக காரியாலயங்களில் ஒரே நேரத்தில் வெடிகுண்டுகள் வெடித்தன. நூற்றுக் கணக்கானவர்கள் இறந்துபோனார்கள். கெனடா, யூரோப் நாடுகள் கொந்தளித்துப் போய்விட்டன. இந்த வெடிகள் நிகழ்ந்ததற்குக் காரணம் இஜ்ராயில் யுதர்களுக்கும், பாலஸ்தீனா முஸ்லிம்களுக்கும் இடையில் நடக்கும் யுத்தம்.

பலதலைமுறைகளாக தொடர்ந்துகொண்டிருக்கும் யுத்தத்தில் இஜ்ராயிலை அமெரிக்கா சப்போர்ட் செய்து வந்தது. பாலஸ்தீனா முஸ்லிம்கள் தாக்கப் படுவதை விரும்பாத பழமைவாத மதத்தைச் சார்ந்த நிறுவனம் ஒன்று அமெரிக்கன்களை ஒழித்துக் கட்டுவதற்காக கங்கணம் கட்டிக் கொண்டது. தூதரக அலுவலகங்களில் வெடிகுண்டுகளை வைப்பதன் மூலம் தன் முயற்சியைத் தொடங்கியது. உலக வரலாற்றில் காலங்காலமாக முஸ்லிம்களுகளுக்கு நிகழ்ந்து கொண்டிருக்கும் அநியாயங்களை எதிர்ப்பதற்காகத்தான் தான் பிறவி எடுத்ததாக நம்பும் ஒரு நபர், இந்த பழமைவாத நிறுவனத்திற்கு மூலகர்த்தா.

11 செம்டம்பர் 2001 -

'யாரோ தீவிரவாதிகள் உங்கள் நாட்டில் கூடாரங்களைப் போட்டுக்கொண்டு அண்டை நாட்டின்மீது கொரில்லா தாக்குதல் நடத்தினால். பாவம் ... உங்களால் என்ன செய்யமுடியும்?' என்று சொன்ன அமெரிக்கா இப்பொழுது அந்த வார்த்தைகளை பின் வாங்க வேண்டி வந்தது. இதற்குக் காரணம் செப்டம்பர் 11ம் தேதி நடந்த சம்பவம்.

அன்று நான்கு விமானங்கள் அமெரிக்கா ராணுவத்தை, உளவுத்துறையைப் பரிகாசம் செய்வதுபோல் ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களை, பென்டகன் போர் வீரர்களை கொன்றுவிட்டு தரையில் சாய்ந்தன. எதிர்பார்க்காத இந்த தீவிரவாதச் செயலுககு உலகமே அதிர்ச்சியடைந்தது. சமீபகாலத்தில் இதுபோன்ற அரக்கத்தனமான செயல் வேறொன்று நடக்கவில்லை.

இதற்குப் பின்னால் இருந்தது ஒஸாமா பின் லாடென் என்பது அமெரிக்காவின் நம்பிக்கை. சாட்சியங்கள் இல்லை. ஆனால் பலமான நம்பிக்கையிருந்தது. முஸ்லிம் மதத்தைக் காப்பாற்றும் பொறுப்பை தன் தோளில் ஏற்றுக் கொண்ட லாடென்தொடக்கத்தில் மேற்கு ஆசியாவின் இருந்து வந்தான். அவனுடைய கொடுமைகளைத் தாங்க முடியாமல் தாய்நாடே அவனை வெளியேற்றிவிட்டது. சௌதி அரேபியாவிலிருந்து ஓடிப்போய் ஆஃப்கனில் தலைமறைவாக இருந்து வந்தான்.

அசல் கதை இங்கே இருந்துதான் தொடங்கியது. நல்லதோ கெட்டதோ, மனிதர்களோ அரக்கர்களோ தெரியாது, ஆனால் வார்த்தைக்கும், மதத்திற்கும் கட்டுபட்டு இருப்பவர்கள் தாலிபான்கள். இவர்கள்தான் லாடெனுக்கு அடைக்கலம் கொடுத்தார்கள். ஒரு காலத்தில் அவர்களை அரவணைத்து ஆதரவு தந்தது அமெரிக்காதான், ஆனால் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக ஆஃப்கனிலிருந்த தாலிபான்களை அழிக்க வேண்டும் என்று அமெரிக்கா முடிவு செய்தது. உலகநாடுகளில் சப்போர்டும் கிடைத்தது. மாட்டேன் என்று சொல்லும் தைரியம் யாருக்கு இருக்கிறது?

ஆனால் ஒரு சிக்கல் இருந்தது. தாலிபான்களை, ஒருநாடாக அடையாளம் கண்டுகொண்ட மூன்று நாடுகளில் பாகிஸ்தான் முதலாவது. தாலிபான்களும், பாகிஸ்தான் மக்களும் நெருங்கியவர்கள். ஆனால் பாகிஸ்தானின் உதவியில்லாமல் ஆஃப்கானில் ஒளிந்துகொண்டிருக்கும் லாடெனை கண்டுபிடிப்பது ரொம்ப கஷ்டம். அமெரிக்காவுக்கு சில ஆயிரம் கோடி டாலர்கள் கடன் பட்டிருக்கிறது பாகிஸ்தான். அமெரிக்கா அதை துருப்புச் சீட்டாக பயன்படுத்தியது.

'தாலிபான்களை ஒழித்துக்கட்டினால் நீங்கள் தரவேண்டிய கடன்களை எல்லாம் ரத்து செய்து விடுவோம்' என்று அமெரிக்கா வற்புறுத்தியது.

பாகிஸ்தானால் எதுவும் செய்யமுடியவில்லை. மறுத்தால் அதனுடைய பொருளாதாரம் சீர் குலைந்துவிடும்.

நீதி, நேர்மை, சொன்ன வார்த்தையைக் காப்பாற்றுவது, நட்பு ... இவை எதுவுமே ராஜநீதியில் சாசுவதமில்லை.

தாலிபான்களுக்கு எதிராக அமெரிக்காவுடன் கைகோர்த்துக் கொண்டது.

பன்னிரெண்டு வருடங்களுக்கு முன்னால் ரஷ்யர்களை, இந்தியர்களை ஆஃப்கானிடமிருந்து விலக்குவதற்காக எந்தக் கும்பலை ஆதரித்து, அரவணைத்ததோ, அந்தக் கும்பலையே சமூலமாக நாசம் செய்வதற்கு கங்கணம் கட்டிக்கொண்டன அமெரிக்காவும் பாகிஸ்தானும்.

இந்த இடத்தில்தான் இந்தியா கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் ஒன்று இருக்கிறது. அதற்காகத்தான் இந்த முன்னுரை.

'நீ பலவானாக இருந்தால், நீ என்ன சொன்னாலும் எல்லோரும் கேட்டுக் கொள்வார்கள். விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தலையாட்டுவார்கள். உனக்கு பலம் மட்டும் இல்லாமல் போனால், நியாயம் உன் பக்கம் இருந்தாலும் தனக்கு மிஞ்சிய தர்மம் எதற்கு என்று நினைப்பார்கள். உனக்கு உதவி செய்ய மாட்டார்கள். முதலில் பலத்தைத் திரட்டிக்கொள். அதற்கு முன்னால் தைரியத்தைக் கூட்டிக்கொள். உன் கோழைத்தனத்திற்கு நல்லத்தனம் என்று பெயர் சூட்டாதே.'

உலகத்தில் உள்ள எல்லா நாடுகளும் அமெரிக்காவை சப்போர்ட் செய்தது இந்தக் காரணத்தினால்தான். லாடென் நரரூப ராட்சஸனாகவே இருக்கட்டும். சாட்சியங்களைக் காட்டச் சொல்லி ஒருத்தரும் கேட்கவில்லை. மற்றொரு நாட்டின் மீது குண்டு மழை பொழிந்தாலும் வாயைத் திறக்கவில்லை. இந்தியா கற்றுக் கொள்ள வேண்டிய மற்றொரு விஷயம், இதைவிட உயர்ந்தது வேறு ஒன்று இருக்கிறது.

ஒரு கடினமான முடிவை எடுத்துக்கொள்ளும் போது எதிர்ப்பு வருவது சகஜம். அந்த முடிவிற்கு பலமாக கட்டுப்பட்டிருந்தால் சீக்கிரத்திலேயே அந்த எதிர்ப்பு குறைந்துவிடும். எதிர்ப்பைக் காட்டுவதைவிட செய்ய வேண்டிய காரியங்கள் மக்களுக்கு வேறு இருக்கின்றன. 1989ல் சைனா தியான்மன் ஸ்க்வேரில் மாணவர்கள் புரட்சி செய்தாலும், 2000ம் வருடத்தில் மின் கட்டணம் உயர்வைப் பற்றி எதிர்க்கட்சிகள் ரகளை செய்தாலும் அந்த போராட்டங்கள் அப்படியே அடங்கிவிட்டன.

தாலிபான்கள் மீது அமெரிக்கா போர் அறிவித்ததும் நிறைய இடங்களில் எதிர்ப்பு கிளம்பியது. ஹைதராபாத்தில் ஒரு சிறுவனுக்கு லாடென் போல் வேடமிட்டு கையில் துப்பாக்கியைக் கொடுத்து ஊர்வலமாக அழைத்துச் சென்றார்கள். இந்த ஊர்வலத்திற்கு போலீஸார் பந்தோபஸ்து கொடுத்தது நம் நல்லதனத்திற்கும், கையாலாகாதத்தனத்திற்கும், ஊழல்கள் நிறைந்த அரசியலுக்கும் எடுத்துக்காட்டு. நாம் பிடிவாதமாக இருக்கிறோம் என்று தெரிந்தால் தவிர எதிராளி வாலை சுருட்டிக்கொண்டு போகமாட்டான். அப்படி இருந்திருந்தால் நம் வெளிஉறவுத் துறை அமைச்சர் காந்தஹார் சென்று தீவிரவாதிகளின் கால்களில் விழும் அவலம் நேர்ந்திருக்காது. அதற்குப் பின்னால் விடுதலை செய்யப் பட்ட கடத்தல்காரர்கள் எவ்வளவு அட்டுழியம் செய்தார்கள் என்று எல்லோருக்கும் தெரியும்.

ஐம்பதாண்டுகள் பின்னொக்கிச் சென்றால்.....

சுதந்திரம் கிடைத்த நாட்களிலேயே சர்த்தார் வல்லபபாய் பட்டேலை அனுப்பி நைஜாமை பணிய வைத்ததுபோல், காஷ்மீரையும் இணைத்திருந்தால், இந்த சுதந்திரத்தன்மை பிரச்னை உருவாகியிருக்காது. அந்தச் சமயத்தில் ரகளை நடந்திருக்கும்.

Enjoying the preview?
Page 1 of 1