Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Uthattil Kasiyum Sivappu
Uthattil Kasiyum Sivappu
Uthattil Kasiyum Sivappu
Ebook301 pages2 hours

Uthattil Kasiyum Sivappu

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

அலுவலகம் செல்லும் பெண்களின் பிரச்னைகளைப் பல கோணங்களில் அலசும் விறுவிறுப்பான கதை, நாம் தினமும் காணும் கதாபாத்திரங்களின்வாயிலாக நேர்ச்சிந்தனையை வலியுறுத்தும் நாவல்.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580110601344
Uthattil Kasiyum Sivappu

Read more from P. Muthulakshmi

Related to Uthattil Kasiyum Sivappu

Related ebooks

Reviews for Uthattil Kasiyum Sivappu

Rating: 3.84 out of 5 stars
4/5

25 ratings1 review

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 5 out of 5 stars
    5/5
    Oh. What a lovely story. Couldn't stop reading and finished in one sitting. The style, flow of language, subtle humor on field narration of the office atmosphere which is the center point of story are excellent. above all the author has demonstrated that it is possible to tell a really good story without the need of love or thrilling events and suspense.
    A good story teller .

Book preview

Uthattil Kasiyum Sivappu - P. Muthulakshmi

http://www.pustaka.co.in

உதட்டில் கசியும் சிவப்பு

Uthattil Kasiyum Sivappu

Author :

பி. முத்துலட்சுமி

P. Muthulakshmi

For more books

http://www.pustaka.co.in/home/author/p-muthulakshmi

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

பொருளடக்கம்

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

அத்தியாயம் 3

அத்தியாயம் 4

அத்தியாயம் 5

அத்தியாயம் 6

அத்தியாயம் 7

அத்தியாயம் 8

அத்தியாயம் 9

அத்தியாயம் 10

அத்தியாயம் 11

அத்தியாயம் 12

அத்தியாயம் 13

அத்தியாயம் 14

அத்தியாயம் 15

அத்தியாயம் 16

அத்தியாயம் 17

அத்தியாயம் 18

உதட்டில் கசியும் சிவப்பு

1

பேசிமுடித்து ரிசீவரைக் கீழே கொண்டு செல்வதற்குள் அடுத்த மணி ஙொணஙொணவென்று ஒலித்தது, 'குட்மார்னிங் ஸ்வர்ணா டெக்னாலஜிஸ்', யாரோ டெல்லியின் ஒரு கிணற்றுக்குள்ளிருந்து எம். டி.யோடு பேச விரும்பினார்கள், முதலாளியிடம் அனுமதி கேட்டுக்கொண்டு அவருக்கு இணைப்பை மாற்றிவிட்டு காபிக் கோப்பையைக் கையிலெடுத்தால் இன்னொரு அழைப்பு.

'குட்மார்னிங், ஸ்வர்ணா டெக்னாலஜிஸ்'

'ஹலோ, கொரியர் சர்வீஸ் மேடம், போன மாச பில் இன்னும் க்ளியராகலையே'

'இன்னிக்குதான் எம். டி. வந்திருக்கார், செக் வாங்கி வெச்சுடறேன், நாளைக்கு வந்து வாங்கிக்கோங்க', 'நோ நோ, கண்டிப்பா நாளைக்கு ! கவலைப்படாதீங்க', அவனை சமாதானப்படுத்திவிட்டு ஃபோனைவைத்தால் உள்அழைப்பு, 'தீபா, மும்பைக்கு டிக்கெட் கேட்டிருந்தேனே'

'வந்தாச்சு சார், இதோ அனுப்பிடறேன்', தலையைச் சாய்த்து தோளுக்கும் காதுக்கும் இடையே ரிசீவரைச் செருகியபடி மேஜை டிராயரைத் திறந்து ஒரு ஃபைலை எடுத்தாள், 'ஜெட் ஏர்வேஸ்தான் சார் போட்டிருக்கு, நாளைக்கு மார்னிங் சிக்ஸ் தேர்ட்டி', அவர் நன்றியேதும் சொல்லாமல் ஃபோனை வைத்ததும் அவள் மேஜை தற்காலிகமாய் அமைதிகண்டது. அவளுடைய காபி எப்போதும்போல் ஆறிப்போய் ஆடை படர்ந்திருந்தது.

அவள் பெருமூச்சோடு காபிக்கோப்பையைப் பார்த்தாள், இடதுபக்கம் திரும்பி, 'கங்காதர்' என்பதற்குள் அவன் வெளியேவந்தான். கையில் கத்தைகத்தையாய் காகிதங்கள் வைத்திருந்தான், 'இந்த ஜெராக்ஸ் மெஷின் வேஸ்ட் மேடம், ஒவ்வொரு காப்பிக்கும் பத்து நிமிசமாவுது' என்றான்.

அவன் சொன்னதை கவனிக்க விரும்பாதவள்போல் அவள் முழ நீள விமான டிக்கெட்டை மேஜைமேல் போட்டாள், 'இதை வெங்கடேஷ் சார்ட்ட கொடுத்துட்டு வந்துடு'

அவன் அதை எடுக்க வந்தபோது காபியை கவனித்தான், 'ஆறிப்போச்சா மேடம், இன்னொண்ணு கொண்டாரவா ?' என்றான். அவள் எப்போதும்போல் சிரித்து, 'அதுவும் ஆறிப்போறதுக்கா ?' என்றபோது இன்னொரு மணி ஒலித்தது, 'ஹலோ ஸ்வர்ணா டெக்னாலஜிஸ்', இனிமேல் அவளைப் பிடிக்கமுடியாது என்று முடிவுகட்டியவனாய் அவன் உள்ளே நகர்ந்தான்.

கட்டிடத்தின் மறுமுனையிலிருந்த வெங்கடேஷ் சாரிடம் டிக்கெட்டைக் கொடுத்துவிட்டு, அவரைப் பார்க்க வந்திருந்தவர்களுக்கு வண்ணமயமான கோப்பையில் காபி தந்து உபசரித்துமுடித்து கங்காதர் திரும்பி வந்தபோதும் தீபா ஃபோனில்தான் இருந்தாள், அவனுக்கு அரைநாள் லீவ் தேவைப்பட்டது, எப்போதாவது இரண்டு தொலைபேசி அழைப்புகளுக்கிடையே கிடைக்கிற முக்கால் நிமிட அவகாசத்துக்காக காத்திருந்தான்.

அறுபதுபேர் வேலை செய்கிற அந்த அலுவலகத்தின் கண், காது, மூக்கு, வாய் எல்லாமே தீப்தி என்கிற தீபாதான் - வெளியுலகத்தோடான ஒரே தொடர்பு. பளபளா கட்டிடத்தின் முன்னறையில் உலோகத்தீவாய் ஜொலிஜொலிக்கிற கூண்டுக்குள் எப்போதும் அமர்ந்திருக்கிற ரிசப்ஷனிஸ்ட் கிளி, கழுத்தில் அடையாள அட்டைத் தாலி, காதில் பொருத்தப்பட்ட டெலிஃபோனும், மைக்கும், எதிரில் கம்ப்யூட்டர் - கண்கள் எந்நேரமும் அதில்.

ரிசப்ஷனிஸ்ட் என்று பெயர்தானேதவிர, அவள் ஏகப்பட்ட வேலைகள் செய்யவேண்டியிருக்கிறது. அவளுடைய பெரும்பான்மை நேரம் தொலைபேசியில் கரைந்துவிடுகிறது. கண்ணாடிக் கதவைத் தள்ளிக்கொண்டு விசிட்டர்கள் யார் வந்தாலும் வரவேற்று உள்ளே அனுப்பிவைக்கவேண்டியது, அல்லது வெளியே துரத்தவேண்டியது அவளுடைய முக்கிய கடமை, அத்தோடு நில்லாமல் இன்னும் பல உபகடமைகள் - மூன்றாவது அறை காஃபிமெஷினில் சர்க்கரை தீர்ந்துபோனாலும் அவள்தான், ஆண்கள் பாத்ரூமில் விளக்கு எரியாவிட்டாலும் அவள்தான், அஸிஸ்டென்ட் மேனேஜருக்கு லண்டன் பறக்க டிக்கெட் முன்பதிவு செய்ய அவள்தான், எதற்கும் நேரமில்லாத முதலாளியின் ஈமெயில்களைப் படித்து நாசூக்காய் ஏமாற்று பதில்கள் அனுப்ப அவள்தான், ஆஃபீசில் யாருடைய செல்ஃபோனுக்காவது பில் வரவில்லையென்றால் ஃபோன் செய்து விசாரிப்பது அவள்தான், மும்பையிலிருந்து வருகிற 'கஷ்ட'மர்கள் தங்க நல்ல ஹோட்டலில், மலிவு விலையில் அறைபிடிக்க பேரம் பேசுவது அவள்தான், க்ளையன்ட்டை ஏமாற்றுகிற மீட்டிங்களுக்காக ப்ரொஜக்டர் ஒன்று தேவைப்படுகிறது, வாங்குவது மலிவா, வாடகைக்கு எடுப்பது மலிவா ? யார் வாடகைக்குக் கொடுப்பார்கள் ?- எதுவானாலும் விசாரிப்பது அவள்தான், இன்னும் எத்தனையோ 'அவள்தான்'கள், தீபாமட்டும் இல்லையென்றால், அந்த அலுவலகம் 'திருவிளையாடல்' படத்தில் வருவதுபோல் அசையாது நின்றுவிடும் !

கொஞ்சநேரம் தீபாவுக்காக காத்திருந்த கங்காதர் சலித்துப்போய் உள்ளறைக்குப் போனான். அவனுக்கான சிறிய அறை அது, சின்னஞ்சிறு ராஜ்ஜியம். அங்கே ஒரு ஜெராக்ஸ் யந்திரமும், ஏராளமான காகிதங்களும் உண்டு. அச்சிடாத காகிதங்களிலிருந்துவரும் ஈரமான மணம் அவனுக்கு ரொம்ப பிடிக்கும், சில சமயங்களில் ராத்திரி வெகுநேரம்வரை வேலை இருக்கும்போது அவன் அந்த அறையிலேயே தரையில் படுத்துத் தூங்கிவிடுவதும் உண்டு, அந்த நாட்களையெல்லாம் அவன் நாசி இன்னமும் நினைவு வைத்துக்கொண்டு ஏங்கியிருக்கிறது.

கங்காதர் கையிலிருந்த புத்தகங்களை அலமாரியின் கீழ் அடுக்கில் வைத்துவிட்டு வரிசையில் காத்திருந்த காகிதங்களையெல்லாம் ஒளியில் நனைத்துப் பிரதியெடுக்க ஆரம்பித்தான், மூன்றாவது நிமிடத்தில் கதவு திறந்து தீபா எட்டிப்பார்த்தாள், 'கங்காதர், லீவ் வேணும்னு கேட்டிருந்தேல்ல ?'

'ஆமா மேடம்' என்றான் அவசரமாய், காலடியிலிருந்த பொத்தானை அமுக்கி மெஷினை அமைதிக்குக் கொண்டுவந்தான்.

'பாஸ், முடியாதுன்னு சொல்றார்ப்பா, நிறைய வேலை இருக்காம்' என்றாள் தீபா.

கங்காதரின் முகம் உடனடியாய் சோகத்துக்குள் விழுந்தது, 'அக்காவைப் பொண்ணு பார்க்க வர்றாங்க மேடம், நான் கண்டிப்பா போயாகணும்' என்றான்.

அவள் கொஞ்சம் யோசித்து, 'ஒண்ணு பண்ணு, எம். டி. மூணு மணிக்கு ஏர்போர்ட் போறார், யாரையோ ரிசீவ் பண்றதுக்கு, அதுக்கப்புறம் நீயும் கிளம்பிடு, லீவெல்லாம் வேண்டாம், யாராவது கேட்டா நான்தான் வேலை விஷயமா வெளியே அனுப்சிருக்கேன்னு சொல்லிடறேன்'

அவன் மலர்ந்து, 'ரொம்ப தேங்க்ஸ் மேடம்' என்பதற்குள் கூண்டுக்குள் தொலைபேசி சிணுங்கியது, தீபா சட்டென்று பின்நகர, கதவு மூடிக்கொண்டதும் அவனுடைய நன்றி வழவழப் பலகையில் எதிரொலித்துத் திரும்பிவந்தது.

****

காலை நேரம் ஒரு அதிவேக ரயில்போல தொடங்குவதும் தெரியாமல், தொடர்வதும் தெரியாமல், முடிவதும் தெரியாமல் ஓடிவிடுகிறது. திரும்பிப் பார்ப்பதற்குள் சாப்பாட்டு நேரம் வந்துவிட்டது. களைத்த மென்பொருளாளர்கள் அணிஅணியாய் வெளியே போக ஆரம்பித்ததும் தீபாவுக்கும் பசித்தது. கூண்டுக்குள்ளேயே ஒரு பலகையை இழுத்துப்போட்டுக்கொண்டு அன்றைய தயிர் சாதத்தை விழுங்கலானாள்.

எப்போதும்போல் சாப்பாடு தொண்டையைக் கடிக்க ஏழே நிமிடங்கள் உணவு நேரம். அதற்குள் நான்கு ஃபோன்கால்கள் வந்தது, ஒவ்வொருமுறையும் தற்காலிகமாய் மெல்லுவதை நிறுத்திவிட்டு கோபமற்ற, சலிப்பற்ற கனிவோடு எதிர்முனையரிடம் பேசுவதற்கு அவளுக்கு ஆயாசமாய் இருந்தது, ஃபோன் வழியே தயிர்சாத வாடை அவர்களுக்கு அடிக்குமோ என்கிற அசட்டு சந்தேகம் இன்றைக்கும் வந்தது.

சாப்பிட்டு முடித்து டப்பாவிலேயே கையலம்பிக்கொண்டாள், 'டப்பாவைக் கழுவிவைக்கக்கூட முடியலையாடி உன்னால ?' என்று அம்மா தினந்தோறும் கத்துவது நினைவுக்கு வந்தது, 'கல்யாணத்துக்கு நிக்கற பொண்ணு இத்தனை சோம்பேறியா இருக்குமோ, பகவானே !'

சோம்பேறித்தனம் இல்லை அம்மா, எங்கோ ஒரு மூலையிலிருக்கிற பாத்ரூம்வரை சென்று பாத்திரத்தைக் கழுவி வருவதற்குள் இரண்டு ஃபோன் கால்கள் தவறிப்போகும், என் நேரம், அந்த இரண்டும் முக்கியமானவையாக இருந்து தொலைக்கும், முதலாளி என்னைக்கூப்பிட்டு 'திஸ் ஈஸ் ஹை-லி இர்ரெஸ்பான்ஸிபிள்' என்று கொலைக்குற்றவாளியைப்போல் கத்துவார், இதெல்லாம் உனக்குப் புரியுமா அம்மா ?

ஏஸி குளிரில் தண்நீர் அநியாயத்துக்கு ஜில்லிட்டிருந்தது. கொஞ்சமாய் பல்லில் படாமல் குடித்துவிட்டு உள்ளே பார்த்து, 'கங்காதர், காஃபி' என்றாள். பதில் இல்லை. அவன் எங்கே போனானோ !

யாரோ எம். டி-யைப் பார்க்கவந்தார்கள், வெய்யிலில் வியர்த்த நெற்றியை கைக்குட்டையில் நாசூக்காய் ஒற்றியபடி வந்து நின்றவனின் கழுத்துப்பட்டை அவளுக்கு ரொம்பவும் பிடித்திருந்தது, 'அவர் சாப்பிட்டுட்டிருக்கார் சார், பத்து நிமிஷம் காத்திருக்கமுடியுமா ?'

அவன் சிரித்தபடி நன்றி சொல்லிவிட்டு, வரவேற்பறையின் புதைகிற மெத்தையில் உட்கார்ந்துகொண்டான். மேஜைக்குள்ளிருந்து புதிய இந்தியா டுடே-யை எடுத்து அவனுக்குக் கொடுத்தாள், 'ரொம்ப தேங்க்ஸ் மிஸ்' என்று அழகாய்ச் சிரித்தான். எம். டி.க்கு அவன் வந்திருக்கிற விபரத்தை கணினிக் குறிப்பு எழுதி அனுப்பினாள்.

கொஞ்சநேரத்துக்கு டெலிஃபோன் அதிசயமாய் மௌனவிரதம் இருந்தது, அவள் அன்றைய செலவுகளைக் கம்ப்யூட்டரில் உள்ளிட்டு ரிப்போர்ட் தயாரித்தாள், அதை அச்சிட்டபிறகு முதலாளியின் கையெழுத்துக்காக சில காசோலைகள் எழுத வேண்டியிருந்தது. அதற்குள் எம். டி. தொலைபேசி, வந்தவனை உள்ளே அனுப்பச்சொன்னார், அவன் மீண்டும் நன்றி சொல்லிவிட்டு, படித்துக்கொண்டிருந்த பத்திரிக்கையை பொறுப்பாய் அவள்வசம் ஒப்படைத்துப்போனான்.

அச்சிட்ட காகிதங்களை எடுத்து வருவதற்காக அவள் கங்காதரைத் தேடியபோது அவன் உள்ளேதான் சாப்பிட்டுக்கொண்டிருந்தான், 'காபி கேட்டேனே கங்காதர்' என்று சொல்லிவிட்டு உடனே அதற்காக வருந்தினாள், 'சரி சரி, நீ சாப்பிட்டு முடி, வெயிட் பண்றேன்'.

கால் மணிநேரம் பொறுத்து அவன் கையைத் துடைத்துக்கொண்டு வெளியே வந்து, 'வழக்கமா மத்தியானம் டீதானே சாப்பிடுவீங்க மேடம் ?' என்றான் சந்தேகமாய்.

அவள் ஆர்வமில்லாமல், 'அதைவிடு, கொஞ்ச நேரம் சீட்ல உட்காரு, உள்ள ஒரு பிரின்ட் கொடுத்திருக்கேன், எடுத்திட்டு வந்துடறேன்' என்றாள், 'காஃபி ?'

'அங்கதானே போறேன், நானே அதையும் பார்த்துக்கறேன், டோன்ட் வொர்ரி', எழுந்துகொண்டாள்.

அவன் ஆர்வத்தோடு அவளுடைய கூண்டினுள் நுழைந்து சீட்டில் உட்கார்ந்தான், ஃபோனைக் காதில் மாட்டிக்கொண்டு ஒருமுறை இருமிப்பார்த்தான். அவள் சிரித்து, 'எப்பவாவது இதைத் தலையில மாட்டிக்கறது ஒரு மாதிரி சந்தோஷம்தான் கங்காதர், எப்பவும் மாட்டிக்கிட்டிருக்கறதுதான் கஷ்டம்' என்று சொல்லிவிட்டு பதிலுக்குக் காத்திராமல் நடந்தாள், அவனுக்குப் புரிந்திருக்குமா ?

கட்டிடத்தின் பின்பக்கத்தில் பிரின்ட்டர் இருந்தது. அவள் பாத்ரூம் சென்றுவந்து ஒரு காஃபி எடுத்துக்கொண்டாள், பிரின்ட்டரில் இறைந்துகிடந்த காகிதங்களிடையே அவளுடையதைத் தேடிப்பிடித்தபிறகு, மீதமிருந்தவற்றை ஒழுங்காய் அடுக்கிவைத்தாள். இதையெல்லாம் அச்சிட்டது யார் ? ஏன் வந்து எடுத்துப்போகவில்லை ? எத்தனை காகிதம் வீணடிக்கிறார்கள், பேப்பர் விலையை நினைக்க அவளுக்குக் கவலையாய் இருந்தது, ஆற்றோடு ஓடுகிற தண்நீர்தான் என்றாலும், என்றைக்காவது யாராவது கணக்குப்பார்த்தால் திக்கென்று போகும் !

இருக்கைக்குத் திரும்பியபோது மீண்டும் காஃபி ஆறிப்போயிருந்தது !

*****

மூன்று மணிக்கு எம். டி. கிளம்பினார், பின்னாலேயே கங்காதரும் போனபிறகு அவளுக்கு கொஞ்சம் ஓய்வு கிடைத்தது, சற்றே சாய்ந்து உட்கார்ந்துகொண்டு ஓரமாய் நின்றிருந்த பூங்கொத்து ரோஜாக்களைப் பார்த்துக்கொண்டிருந்தாள். ஏதோ ஒரு புள்ளியில் அந்த ரோஜாக்களும் அவளும் ஒன்றாய்ச் சேர்வதுபோல் உணர்வு காரணமில்லாமல் எழுந்தது.

'என்ன மிஸ். தீபா, எம். டி. இல்லைன்னதும் ஃப்ரன்ட் ஆஃபீஸ்லயே தூக்கமா ?', கிண்டலும் சிரிப்புமாய் வந்தான் சுகுமார்.

'அதெல்லாம் ஒண்ணுமில்லைப்பா', அவள் நிமிர்ந்து உட்கார்ந்தாள், 'இந்த ஃபோன் சனியன் கொஞ்சநேரம் தொல்லை பண்ணாம தூங்கிட்டிருக்கு, அதான் ரிலாக்ஸா உட்கார்ந்தேன்'.

'தீபா, எனக்கொரு வேலை பண்ணனுமே'

'என்னது ?'

'என் டீம்ல புதுசா ரெண்டு பசங்க சேர்ந்திருக்காங்க, சி ப்ளஸ் ப்ளஸ் தெரியுமா-ன்னு கேட்டா திருதிருன்னு முழிக்கறாங்க, அது தெரியாம எங்க ப்ராஜெக்ட்ல குப்பை கொட்றது கஷ்டம்'

அவள் மெல்ல தலையசைத்து, 'புரிஞ்சிடுச்சு, சகாய விலையில சி ப்ளஸ் ப்ளஸ் யார் சொல்லித்தராங்க-ன்னு நான் விசாரிச்சு சொல்லணும், அதானே ?'

'அதேதான் ... கொஞ்சம் அர்ஜென்ட், உடனே முடியுமா ?' கெஞ்சலும், உரிமையுமாய் கேட்டான் அவன்.

'எனக்கு ஒரு சாக்லேட் வாங்கித்தந்தா முடியும்' என்று கண்ணடித்தாள்.

'ஷ்யூர்' என்று சிரித்தான் சுகுமார். 'எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் டீடெய்ல்ஸ் வேணும் தீபா, இன்னும் ரெண்டு நாளைக்குள்ள அந்தப் பசங்களை ட்ரெய்னிங் அனுப்பியாகணும்', சொல்லிவிட்டு அவன் உள்ளேபோனான். தீபா டெலிஃபோன் புத்தகத்தைத் திறந்து வைத்துக்கொண்டு எண்களை ஒற்ற ஆரம்பித்தாள்.

******

சுகுமார் கேட்ட விபரங்களைச் சேகரித்து அனுப்பியபோது ஐந்தரை மணியாகியிருந்தது, கைப்பையை எடுத்து மாட்டிக்கொண்டு அவள் கூண்டைவிட்டு வெளியே வந்ததும் மறுபடி ஃபோன் ஒலித்தது, சற்று தயங்கிவிட்டு எடுத்தாள், 'குட் ஈவினிங், ஸ்வர்ணா டெக்னாலஜிஸ்'

'தீபா, ஆனந்த் ஹியர்'

'ஹாய் ஆனந்த், என்ன திடீர்ன்னு ?' அவள் மீண்டும் கூண்டுக்குள் வந்து உட்கார்ந்துகொண்டாள்.

மறுமுனையில் எந்த சப்தமும் இல்லை. சற்றுப் பொறுத்து அவள் மீண்டும், 'ஆனந்த் சார், என்னாச்சு ?' என்றாள், 'இன்னிக்கு ஏன் லீவ் ? சுதா கூட வரல்லை போலிருக்கு'

அவன் ஒரு விசும்பலோடு பேசினான், 'சுதாவுக்கு மறுபடி அந்த ப்ராப்ளம் வந்துடுச்சு தீபா'

தீபாவுக்கு சட்டென்று எல்லாம் புரிந்தது. நிஜமான வருத்தத்தோடு, 'ஐயாம் ஸாரி ஆனந்த்' என்றாள்.

அவன் தொடர்ந்து சொல்லிக்கொண்டே போனான், 'காலையில எழுந்திரிச்சதுமே சண்டை, எந்த காரணமும் இல்லை, சும்மா சண்டை, நீயெல்லாம் ஒரு புருஷனா, எனக்கு என்னடா பண்ணியிருக்கே, அது இது-ன்னு ஏகப்பட்ட சத்தம், கூச்சல், கையில கிடைச்சதையெல்லாம் எடுத்து வீசறா, போன வாரம் அவளே ஆசைப்பட்டு வாங்கிட்டு வந்த மீன்தொட்டியைக் கீழேபோட்டு உடைச்சாச்சு, பக்கத்து வீட்லயிருந்து என்ன கலாட்டான்னு ஃபோன் பண்ணி விசாரிக்கறாங்க, நான் பேசிட்டே இருக்கேன், என் கையிலிருந்து ஃபோனைப் பிடுங்கி அவங்களையும் கன்னாபின்னான்னு திட்டிட்டு ஃபோன் வயரைப் பிடுங்கி வீசிட்டா'.

தீபா சட்டென்று கண்களை மூடிக்கொண்டாள், சுதாவின் சிரித்த முகம் இருள் பின்னணியில் வந்துபோனது, அந்த அன்பான பெண்ணுக்கு இப்படியொரு வியாதியா ? 'ஸாரி ஆனந்த்' என்றாள் மறுபடி.

அவன் அவள் சொல்வதை கவனிக்காமல் கேட்பதற்கு ஒரு ஆள் கிடைத்த நிம்மதியில் பேசுவதுபோல் பரபரப்பாய் பேசிக்கொண்டிருந்தான், 'டாக்டர் வந்து இன்ஜெக்ஷன் போட்டிருக்கார், இப்பதான் கொஞ்சம் உறுமல் குறைஞ்சு தூங்கிட்டிருக்கா', கடைசி வாக்கியத்தைச் சொல்லும்போது அவனுடைய அழுகை துல்லியமாய்த் தெரிந்தது, 'எனக்குமட்டும் ஏன் தீபா இப்படியொரு வொய்ஃப் கிடைக்கணும் ?'

'அப்படி சொல்லாதீங்க ஆனந்த், ஏன் சுதாவுக்கு இப்படி ஆகுது-ன்னு கேளுங்க - அது நியாயம், இப்படி உங்களைமட்டும் பிரிச்சுப்பார்க்கறது சரியில்லை, அவங்களும் பாவமில்லையா ?'

'கேட்கிறவங்க எல்லாரும் இப்படித்தான் சொல்றாங்க தீபா, என்மேல குத்தம் சொல்றமாதிரிதான் பேசறாங்க, ஆனா நீங்க நேர்ல வந்து இவ பண்ற கலாட்டாவைப் பார்த்தீங்கன்னா அப்புறம் நான் பேசறதில இருக்கிற நியாயத்தை ஒத்துப்பீங்க' என்றான். தீபாவுக்கு அவன் சொல்வதையெல்லாம் கற்பனை செய்துபார்க்க சிரமமாய் இருந்தது, ஆஃபீசில் எல்லோரோடும் இனிமையாய், கலகலப்பாய் பழகுகிற ஒரு பெண்ணுக்கு ஏன் திடீரென்று இப்படியெல்லாம் ஹிஸ்டீரியா பிடிக்கிறது ? சினிமாவில் வருவதுபோல் சுதாவின் சின்ன வயதில் ஏதும் கொடூரமாய் நடந்திருக்குமோ ?

ஆனந்தின் கேள்வி அவள் சிந்தனையைக் கலைத்தது, 'தீபா, நான் ஒண்ணு கேட்டா தப்பா நினைச்சுக்க மாட்டீங்களே ?'

'சொல்லுங்க ஆனந்த்' என்றாள் சட்டென்று. வீட்டுக்குப்போகிற வழியில் சுதா வீட்டில் இறங்கி, அவளைப் பார்த்துவிட்டுப்போகலாம் என்று தோன்றியது.

ஆனந்த் ஒரு சிறு தயக்கத்துக்குப்பின் பேசினான், 'உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு தீபா, நான் சுதாவை டைவர்ஸ் பண்ணிடறதா இருக்கேன், அதுக்கப்புறம் நான் உங்களை கல்யாணம் செஞ்சுக்க விரும்பறேன், உங்களுக்கு சம்மதமா ?'

2

நெஞ்சுக்குள் ஒரு கூடை நெருப்பள்ளிக் கொட்டியதுபோல் இருந்தது அவளுக்கு. அருவருப்பான எதையோ விழுங்கிவிட்டதைப் போன்ற அவஸ்தை உணர்ச்சி, பஸ்ஸுக்குக் காத்திருந்த சொற்ப நேரத்தில் பத்து தடவையாவது காறி உமிழ்ந்திருப்பாள், எத்தனை முயன்றும் அந்த எண்ணத்தைமட்டும் வெளித்தள்ளமுடியவில்லை. அடக்கிவைத்த அழுகை எந்த நிமிடத்திலும் கட்டவிழ்ந்து பொங்கிவிடக்கூடும் என்று நினைக்கும்போதே அவளுக்கு இன்னும் அதிகமாய் அழத் தோன்றியது.

அவள் பொறுமையிழந்த வேளையில் பஸ் மெல்லமாய் ஊர்ந்து வந்தது, ஏகப்பட்ட கூட்டம், கும்பலோடு முண்டியடித்து ஏறி கம்பியைப்பிடித்துக்கொண்டு நின்றபிறகு மூச்சு விடுவதற்குமட்டும்தான் இடமிருந்தது. கண்டக்டர் சோகையாய் விசிலூத, வண்டி தேர்போல ஒருமுறை குலுங்கி நகர்ந்தது.

தீபா இன்னும் யோசனைகளிலிருந்து மீண்டிருக்கவில்லை. உடல்மட்டும் கைப்பையையும் இரண்டு ஃபைல்களையும் அழுத்தமாய் பற்றிக்கொண்டு நகரப் பேருந்தில் நிற்க, மனம் இன்னும் அலுவலகக் கூண்டுக்குள் இருந்தது. காதில் தேள்வந்து பாய்ந்ததுபோல அந்தக் கேள்வி உறுத்திக்கொண்டிருந்தது. வக்கிரமான அந்தப் பேச்சை அங்கேயே பிடுங்கிப்போட்டுவிட்டு வராததற்காக தன்னையே நொந்துகொண்டாள் அவள்.

எப்படி பிடுங்கிப்போடமுடியும் ? சாணத்தைக் கரைத்து

Enjoying the preview?
Page 1 of 1