Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vedhalam Sonna Kadhai
Vedhalam Sonna Kadhai
Vedhalam Sonna Kadhai
Ebook64 pages19 minutes

Vedhalam Sonna Kadhai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"Jeya Venkatraman" has written many books about temples in India and America. He has translated a famous Kannada book-"Aavarana", written by S.L.Bhyrappa.
LanguageUnknown
Release dateJun 18, 2016
ISBN6580103600432
Vedhalam Sonna Kadhai

Reviews for Vedhalam Sonna Kadhai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vedhalam Sonna Kadhai - Jeya Venkatraman

    http://www.pustaka.co.in

    வேதாளம் சொன்ன கதை

    Vedhalam Sonna Kadhai

    Author:

    ஜெயா வெங்கட்ராமன்

    Jaya Venkatraman

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-prabha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    வேதாளம் சொன்ன கதை

    [மரத்தடியில் ஒரு இளைஞன் அமர்ந்து கொண்டிருக்கிறான். பயங்கரமான சிரிப்பொலியைத் தொடர்ந்து வேதாளம் ஒன்று மரத்திற்குப் பின்புறமிருந்து வெளிப்படுகிறது. இளைஞன் திரும்பிப்பார்த்துவிட்டு அலட்சிய பாவத்துடன் மீண்டும் எழுதத் தொடங்குங்குகிறான்.]

    வேதாளம்:    ஏ! மானிடப்பதரே! உனக்கு அவ்வளவு அலட்சியமா?

                நான் யார் தெரியுமா?

    இளைஞன்:    சே! கொஞ்ச நேரம் நிம்மதியா இருக்கலாமின்னா

                அதையும் கெடுக்க யாராவது வந்துடறாங்க! இப்ப

                என்ன வேணும்? (பையைத்துழாவிவிட்டு

                இரண்டுபத்துப்பைசா நாணயங்களை எடுத்து வீசுகிறான்)

                இந்தா இதஎடுத்துக்கிட்டு எடத்தைக்காலிபண்ணு!

    வேதாளம்:    (காசை எடுத்துப் பார்த்து விட்டு) இது என்ன? எதற்காக

                இதை என்னிடம் கொடுக்கிறாய்?     

    இளைஞன்:    எங்கிட்ட இதெவிட்டா வேறே காசு கெடையாது!

                    திருவிழா வந்துடிச்சின்னா இவுங்கபாடு கொண்டாட்டம்

                    தான்! ஏதாவது ஒருவேஷம் கட்டிக்கிட்டு இருக்கறவுங்க

                    உயிரை எடுக்கறாங்க! காசு குடுத்தாலும் வேணாங்கறே!

                    வேறே என்ன தான் வேணும்?

    வேதாளம்:    (பெரிதாகச்சிரிக்கிறது) பிள்ளாய்! என்னை வேஷக்காரன்

                என்றா எண்ணிக்கொண்டிருக்கிறாய்? நான் யார்

                தெரியுமா? நான் விக்கிரமாதித்தான் காலத்து வேதாளம்!

    இளைஞன்:    அடச்சீ! புளுகறத்துக்கும் ஒரு அளவேயில்லாமல்ல

                போயிடிச்சி! நீ விக்ரமாதித்தன் காலத்து வேதாளம்னா

                அத நம்ப நான் என்ன முட்டாளா? வேதாளம்னா ஒரு

                முருங்கமரம் இருக்கும், அது மேல ஒரு பிணம்

                தொங்கும், அதை எடுத்துக் கிட்டு விக்ரமாதித்தன்,

                எறங்கின ஒடனே வேதாளம் பேச ஆரம்பிக்கும், அது

                தான் எனக்கு தெரிஞ்ச விக்ரமாதித்தன் கதை. நீ

                என்னடான்னா ஏதோ ஒருகாட்டு மரத்துலே ஏறிக்கிட்டு

                நாடகத்துக்கு வேஷம் கட்டிக்கிற மாதிரி கட்டிக்கிட்டு,

                நான் வேதாளம்னு சொன்னா நம்ப நான் என் முட்டாளா?

    வேதாளம்:    இதையெல்லாம் விளக்கமாகச் சொல்ல இப்ப நேரம்

                இல்லே! இந்த முருங்கமரம், முருங்கக்காயி சமாச்சாரம்

                எல்லாம் இப்ப அவுட்டேட் ஆயிடிச்சி! அதுனால ஒங்க

                கண்ணுக்குத் தெரியற மாதிரி ஏதாவது ஒரு உருவம்

                வேணுமே! இல்லாத போனா நம்ப மாட்டீங்களே!

                அதுனால…

    இளைஞன்:    சரி! சரி! போதும் நிறுத்து. ஒன் கதையெல்லாம்

                கேக்கற நெலையிலே இப்ப நான் இல்லே! எனக்கு என்

                பிரச்னை தலையை

    Enjoying the preview?
    Page 1 of 1