Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nandhipurathu Naayagi Part - 2
Nandhipurathu Naayagi Part - 2
Nandhipurathu Naayagi Part - 2
Ebook760 pages7 hours

Nandhipurathu Naayagi Part - 2

Rating: 3 out of 5 stars

3/5

()

Read preview

About this ebook

அமரர் கல்கி அவர்கள் பொன்னியின் செல்வனை முடிக்கின்றபோது பல கேள்விகளை எழுப்பிவிட்டு, இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் வருங்கால எழுத்தாளர்கள் பல படைப்புகளைத் தருவார்கள் என்று சொன்னார் அந்த அடிப்படையில், மீண்டும் வந்தியத்தேவனையும் குந்தவைப் பிராட்டியையும் அருள்மொழிவர்மனையும், பார்த்திபேந்திரன் என்கிற பல்லவனையும் கொண்டுவந்து நிறுத்தி, ‘நந்திபுரத்து நாயகி’ என்கின்ற அற்புதமான நவீனத்தை நாவலாக எழுதி உள்ளார் விக்கிரமன் அவர்கள்.

கல்கியின் பொன்னியின் செல்வனை படித்தவர்கள் கண்டிப்பாக இந்த புதினத்தையும் படியுங்கள்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580103201334
Nandhipurathu Naayagi Part - 2

Read more from Vikiraman

Related to Nandhipurathu Naayagi Part - 2

Related ebooks

Related categories

Reviews for Nandhipurathu Naayagi Part - 2

Rating: 3 out of 5 stars
3/5

3 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nandhipurathu Naayagi Part - 2 - Vikiraman

    http://www.pustaka.co.in

    நந்திபுரத்து நாயகி – பாகம் 2

    Nandhipurathu Naayagi – Part 2

    Author:

    கலைமாமணி விக்கிரமன்

    Kalaimamani Vikiraman

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vikaraman

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. காளாமுகரின் புதுக் கருத்து

    2. அவர்தானா இவர்!

    3. கதை சொல்லு இன்பவல்லி!

    4. காஞ்சிப் போர்

    5. அண்ணலும் நோக்கினான்

    6. அவளும் நோக்கினாள்

    7. வெற்றித் திரு வீசிய மாலை

    8. போகாதே, நில்!

    9. நள்ளிரவில் நடந்தது

    10. இரு உள்ளங்கள்

    11. புயல் எழுந்தது

    12. வீரன் மகள்

    13. ஓவியன் கண்ட இன்முகம்

    14. இதோ மணி மகுடம்

    15. சுமதியின் நெஞ்சம்

    16. இசையும் உயிரும்

    17. பழுவேட்டரையர் கோரிக்கை

    18. அவர் கேட்ட வரம்

    19. அக்காவும் தம்பியும்

    20. இளையபிராட்டியின் உள்ளம்

    21. மலை மறைந்தது

    22. கதையும் கண்ணீரும்

    23. பிரிந்தவர் கண்டனர்

    24. வந்துவிட்டாயா, வந்தியத்தேவா!

    25. அந்தஸ்து

    26. இன்பவல்லியின் இதயம்

    27. நெஞ்சு விம்மியது

    28. வந்தியத்தேவனும் ரவிதாசனும்

    29. வானதியின் நெஞ்சம்

    30. நாள் நெருங்கியது

    31. வந்தியத்தேவன் ஆவி

    32. சபை கூடியது

    33. நந்திபுரத்தில் திருவிழா

    34. மறந்து விடு இன்பவல்லி!

    35. நீதி விசாரணை

    36. காளாமுகர் யார்?

    37. மன்னரின் தீர்ப்பு

    38. காதல் சிகரம்

    1

    காளாமுகரின் புதுக் கருத்து

    செந்திலாண்டவனின் திருக் கரங்களில் தவழும் வடிவேலினைப் போன்று கூர்மையான வேல்கள் பாண்டிய வீரர்கள் கரங்களில் மிளிர்ந்தன. தீவர்த்தியின் ஒளியில் பளபளக்கும் அந்த வேல்கள் மாற்றார் குரதியைச் சுவைக்கத் துடிப்பதுபோல் காட்சியளித்தன. எஃகினால் ஆகிய கேடயங்கள் ஒரு புறம் மலைபோல் குவிந்திருந்தன. வீரர்களின் இடையில் வாட்கள் வெளியே வரத் துடிதுடித்துக் கொண்டிருந்தன. மார்பிலே தாக்கும் வேலையும் தாங்கும் உறுதிபடைத்த கவசங்கள் வீரர்களின் மன உறுதியைப் புலப்படுத்திக் கொண்டிருந்தன. அகன்ற மார்பு படைத்த இவ வீரர்களின் திண்தோள்கள் தங்கள் தாய்நாட்டைக் காக்கப் போரிடத் தினவெடுத்துத் துடித்துக் கொண்டிருந்தன. நெடுநாள் எதிர்பார்த்த போர் வரப் போகிறது.

    அணிவகுத்து நின்ற வீரர்களைச் சரிபார்த்து ஆங்காங்கே சிற்சில கருத்துகளைக் கூறியவாறு, ஆபத்துதவிப் படையின் தலைவன் செழியன் பேரரையன், அமரபுஜங்க பாண்டியனுடன் நடந்து வந்து கொண்டிருந்தான். அமரபுஜங்கன் தன் கூர்மையான கண்களை அந்த வீரர்களை நோக்கி வீசி வந்தது, அவர்களுடைய பலத்தை ஆராய்வது போலிருந்தது.

    காளிங்கா! நீ ஒருவனே போதுமே! உன் பிரிவுப் படையில் இவ்வளவு பேர் வேண்டுமா? என்று அமரபுஜங்கன் அணிவகுத்து நின்ற ஒரு வீரனைப் பார்த்துக் கேட்டான்.

    காளிங்கன் ஒன்றும் பேசவில்லை. ஒன்றும் பேசக் கூடாதென்பது அணிவகுத்து நிற்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய மரபு. மன்னரின் புகழ்ச்சியை ஏற்று மரியாதையாகப் புன்னகை புரிந்தான். தலைதாழ்த்தாது மார்பு முன்னுக்கு வர, நிமிர்ந்து நின்ற அவன் முகத்தில் தனிக் கம்பீரம் இருந்தது.

    காளிங்கன் குணம் தங்களுக்குத் தெரியாதா? மதுரையை மீட்டு மன்னரின் மகுடத்தை மீண்டும் பெறும் முயற்சியில் தான் ஒருவனே பெயர் பெற்றுவிடக் கூடாது எனும் நல்ல எண்ணம் அவனுக்கு என்று கூறிச் சிரித்தான் செழியன். நகைச்சுவை ததும்ப அவன் அவ்வப்போது பேசினாலும் கண்டிப்பு மாறாக குணமுடையவன்.

    வரிசை வரிசையாக நின்று கொண்டிருந்த படைகளைப் பார்த்து வெளியே களிப்படைந்தாலும், அமரபுஜங்கன் உள்ளத்தில் சிறிது சந்தேகமிருக்கத்தான் செய்தது. மதுரையை மீட்க இந்தப் படைகளின் எண்ணிக்கை போதுமா எனும் கவலையும் அவனுக்கு இல்லாமலில்லை. ஆனால், மதுரையினின்று வந்த ஒற்றர்கள் கூற்றின்படி, நூறுபேர் வந்து தாக்கினால்கூட எதிர்த்துப் போரிடச் சோழர் படைகள் அங்கில்லை என்பதை அமரபுஜங்கன் தெரிந்துதான் வைத்திருந்தான். மதுரையை மீட்டுவிடுவது எளிது; ஆனால் தோற்றோடிய சோழர்படைகளைத் தொடர்ந்து தஞ்சையினின்று மேலும் படைகள் அலையலையாய் வரமாட்டா என்பது என்ன நிச்சயம்? எந்தச் சமயத்திலும் கண்ணை இமை காப்பதுபோல் எல்லையில் பெரும் படைகளைக் கொண்டு காத்திருக்க வேண்டும். இப்போது மதுரையை நோக்கிச் செல்லச் சேர நாட்டுப் படைகளின் உதவி வேண்டாமே. பிறகு வேண்டுமானால் சோழ நாட்டின் மீது தொடர்ந்து படையெடுத்துச் செல்வதற்குச் சேர மன்னனின் இரண்டு விதக் குழப்பங்கள் அவன் உள்ளத்தில் புகுந்து சிந்தனையைக் கலைத்தன. வீரர்களின் அணிவகுப்பைப் பார்த்து முடிந்தபின், அவன் தலைவியின் இருப்பிடம் நோக்கி விரைந்தான்.

    அணிவகுத்து நின்ற படையினரைப் பலகணியின் வழியாய்க் கண்டவாறிருந்தாள் தலைவி. மங்கிய நிலவொளியில்,தீவர்த்தியின் வெளிச்சத்தில், மின்னும் வேலுடனே உயர்த்திய வாளுடனே நிற்கும் உண்மை வீரர்களின் தோற்றம், அவளுள்ளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுவரை எந்த ஒரு மகத்தான செயலுக்காக அவள் அந்தக்கானகத்தில் தங்கியிருந்தாளோ, அந்தச் செயல் நிறைவேறுங்காலம் நெருங்கிவிட்டதற்கான ஆரம்ப வாயிலை அவள் கண்டாள். தன் சொல்லுக்குக் கட்டுப்பட்டு, இம்மாபெரும் பணியை முடிக்க இத்தனை ஆண்டுகளையும் கழித்த வீரர்களை அவள் புகழ்ந்து பாராட்டினாள்.

    அந்தக் காட்டிற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னர் தான் குதிரை மீதேறி ஆத்திரத்துடனும் பழிவாங்கும் எண்ணத்துடனும் வந்து சேர்ந்ததை அவள் மறந்துவிடவில்லை. அப்பொழுது ஆனைமலைக் காட்டின் பயங்கரம் அஞ்சா நெஞ்சினரையே திகைக்க வைக்கும். அவள் துணிந்து காட்டில் வாழத் தீர்மானித்தாள். எரிமலை போன்று குமுறிக் கொண்டிருந்த அவள் இதயத்திற்குக் காட்டின் அமைதி தண்மையை அளித்தது. ரவிதாசன் போன்ற பாண்டியனின் ஆபத்துதவிகளும் அமரபுஜங்கனுடன் வந்து சேர்ந்தன. அமரபுஜங்கன் அப்போது எட்டு வயதுப் பாலகன்; அரண்மனையில் தாதிகள் புடைசூழ வாழ வேண்டியவன். பஞ்சணை மெத்தையில் படுத்துறங்க வேண்டியவன். அவனை வளர்த்துப் பெரியவனாக்கி அரச குமாரனுக்குண்டான பண்பும், பாசமும், அறிவும், ஆற்றலும் உள்ளவனாக்கி, மதுரை அரியணையில் அவனை ஏற்ற வேண்டிய பெரும் பொறுப்பு அவளுக்கு ஏற்பட்டது.

    காட்டிலே வாழ்வது சில காலத்திற்கு மிகவும் கடினமாக இருந்தது. சோழ வீரர்களின் கண்களுக்குத் தெரியாமல் வசிக்க வேண்டியிருந்தது. கொடிய பிராணிகளுடனும், மிகக் கொடிய ஐந்துக்களுடனும் போராட வேண்டிய நேர்ந்தது. ரவிதாசனையும், செழியன் பேரரையனையும் தவிர, மற்ற ஆபத்துதவிகள் கடுங்காய்ச்சலால் இறந்தனர். இத்தகைய கொடுந் துன்பங்கள் தலைவியின் இதயத்தைக் கலக்கிடவில்லை. நாளுக்கு நாள் அவளுடைய மென்மையான இதயம் கடினமாகி வந்தது. பழி வாங்கும் உறுதி பலப்பட்டு வந்தது. ஆனால், அந்த உறுதியிலே பயங்கரமில்லை. அந்த உறுதியிலே கொடும் குணமில்லை. பாண்டிய நாட்டை மீட்டு அமரபுஜங்கனை அரியணையில் அமர்த்தும் ஒரே எண்ணம் மட்டுமே இருந்ததால், அவளுக்கு அடுத்த நாட்டு அரசியலிலும் அதிக அக்கறை ஏற்படவில்லை. நாளாக ஆகப் பாண்டிய நாட்டின் பல பகுதிகளிலிருந்து உண்மை ஊழியர்கள் ஆனைமலைக் காட்டை வந்தடைந்தனர். போர் வீரர் பரம்பரையினர் வந்து சேர்ந்தனர்.

    காட்டையே தங்கள் வாழிடமாகக் கொண்ட சமணத் துறவிகள் பலர் அவ்வப்போது வந்தனர். அவர்கள் அமரபுஜங்கனுக்குக் கல்வி அறிவு போதித்தனர். அந்த இடத்திற்கு வரும் ஒவ்வொருவரையும் கடுமையான சோதனைக்கு ஆட்படுத்தியே தான் அவள் அங்கு தங்கியிருக்க அனுமதித்தாள். தன் உருவத்தை வெளியில் காட்டவே இல்லை. தன் உருவத்தை எவரும் அறியமுற்படாதவாறு கண்டிப்புடன் வாழ்ந்து வந்தாள்.

    அமரபுஜங்கன் மட்டுமே அந்தச் சிறு குடிலுக்குள் வாழ்ந்து வந்தான். இலட்சிய வெற்றிக்குப் பாடுபட்ட ஆபத்துதவிகள் அனைவரும் அவளுடைய கட்டளையைத் தலையாய கட்டளையாய்க் கொண்டு நிறைவேற்றினர்.

    ரவிதாசன் தலைவியைத் தொடக்கத்தில் சந்தேகித்தது உண்டு. ஆனால், அவளுடைய ஆற்றலை உணர்ந்த அவனும் மற்றவரைப் போன்று அவள் கட்டளைகளை ஏற்று, அவள் திட்டத்தை மதித்து நடந்து வந்தான். பல நாள்கள் அவன் ஆனைமலைக் காடுகள் பக்கமே திரும்பாமல் அலைந்து கொண்டிருப்பான். இரவும், பகலும், மழையும், வெயிலும், காடும், மேடும், முள்ளும் புதரும் அவனுக்குச் சமம்தான். ஒரே குறிக்கோள் கொண்டவனாயினும் அவனுக்குச் சில நாள்களாகத் தலைவியின் திட்டத்தில் நம்பிக்கைக் குறைவு ஏற்பட்டது.

    தலைவி அவற்றை அறியாமலில்லை. ரவிதாசனின் மனப்போக்கு அவளுக்குப் பிடிக்கவில்லை. கோழை போன்று மறைந்திருந்து சோழவர்க்கத்தையே நிர்மூலமாக்குவதற்கு அவள் ஒப்பவில்லை. கடைசியாக அவனுடைய திட்டத்தைக் கேட்டுத் தலைவி சம்மதம் தெரிவிக்கவில்லை. அதனுடன் அவன் நெருங்கிப் பழகும் காளாமுகர் பேரிலும் அவளுக்கு நம்பிக்கை இல்லை. சோழர்களிடம் வெறுப்புப் பூண்டவர் போல் நடிக்கும் அவரால், என்றைக்கும் பாண்டியர்களுக்கு ஆபத்து என்ற திட முடிவுடன் இருந்தாள். அதை எளிதில் ரவிதாசன் நம்பமாட்டான் என்பதும் அவளறிவாள். அவனுடைய திட்டத்திற்கு ஆதரவாக இருக்கும் காளாமுகர் மீது அவன் ஒரு நாளும் சந்தேகம் கொண்டுவிட மாட்டான் என்பதும் அவளுக்குத் தெரியும். கடைசியாக, காட்டிற்குள்ளே வந்துவிட்ட காளாமுகரையும், பரமேச்வரனையும் ரவிதாசன் சந்திக்கவொட்டாமல் திட்டம் தீட்டினாள். என்ன பயன்? காளாமுகர் ஒரு மாயாவியா? மறுநாள் காலையே அந்தக் காட்டினின்று மறைந்து விட்டாரே. அவருடன் ரவிதாசனையும் காணவில்லை. இப்போது அமரபுஜங்கன் - ரவிதாசனைத் தேடுவான்.

    தாயே, ரவிதாசன் எங்கே? என்று கேட்பான் அமரபுஜங்கன். அமரபுஜங்கன் ரவிதாசனைப் பற்றி வினவுவான் என்பது தலைவிக்குத் தெரியும். ஆபத்துதவிகள் படையில் முதன்மை இடம் கொண்டவனன்றோ ரவிதாசன்? சோழ நாட்டில் எதிரிகள் நடுவே நடமாடிப் பல செயல்களை முடித்தவனன்றோ அவன்!

    காளாமுகரும், பரமேச்வரனும் வந்த அன்று, அவர்களைச் சந்திப்பதற்குத் தலைவி தடைவிதித்திருந்தாளன்றோ? ரவிதாசன் அவர்கள் தங்கியிருந்த குடிலுக்குச் சற்றுத் தொலைவிலுள்ள மரத்தடியில் சிந்தனையிலாழ்ந்த வண்ணம் கண்ணயர்ந்தான். தலைவியின் மீது அவனுக்கு ஒரு கணம் கோபம் வந்தது. மற்றொரு கணம் சோழ வம்சத்தைப் பூண்டோடு நசுக்குவதற்குத் தடையாகத் தலைவி ஏனிருக்கிறாள் என்ற ஐயமும் அவனுக்கு எழுந்தது. எனினும், தனக்கும் தடைவிதிக்கும் அளவுக்குப் புதிய நிலை உருவாகிவிட்டதென்றால், இனி இந்த இடத்தில் இருப்பதால் பலனில்லை என எண்ணினான்.

    பொழுது புலரச் சில நாழிகைகள் இருக்க வேண்டும். தன்னை யாரோ தட்டி எழுப்புவது போன்ற உணர்ச்சி ஏற்படவே ரவிதாசன் துள்ளி எழுந்தான். புதரின் மறைவில் ஓர் உருவம் தெரிந்தது. அது காளாமுகருடையதாகத் தானிருக்க வேண்டும்; ரவிதாசனைத் தன்னுடன் வருமாறு சைகை செய்தது அந்த உருவம். காட்டின் கொடி வழிகளின் வழியே புகுந்தும் நெளிந்தும் குனிந்தும் செல்வதைக் கண்ட ரவிதாசனே வியப்பில் ஆழ்ந்தான். காளாமுகருக்கு அந்தக் காட்டின் ஒவ்வொரு பகுதியும் மனப்பாடமா? காவல் வீரர்களுக்குத் தெரியாமல் அவர் எப்படித் தன்னை எழுப்பினார் என்பதெல்லாம் அவனுக்கு வியப்பாக இருந்தது. அவனைப் பேசவிடாமல் சைகை செய்த காளாமுகர் வேகமாகச் சென்று கொண்டிருந்தார். குறிப்பிட்ட இடத்தில் பரமேச்வரனும் நின்று கொண்டிருந்தான். ரவிதாசன் அடைந்த வியப்புக்கு எல்லையில்லை. மந்திர தந்திரம் அறிந்தவனென்று அவனைக் கூறுவார்கள். காளாமுகர் அவனையும் வென்று விட்டாரே! காளாமுகர் மீது உள்ள நம்பிக்கை அவனுக்கு உயர்ந்தது. பருத்த உடலையும் தாங்கிக் கொண்டு, வயதின் நிலையையும் பொருட்படுத்தாமல், அவர் பாறைகளைத் தாண்டியும் புதர்களை விலக்கியும் தாழ்ந்த கிளைகளில் குனிந்தும் சென்ற நிலை கண்டு அவனுக்கு அவர்மீது மதிப்பு உயர்ந்தது.

    கடைசியில் கீழ்வானத்தில் கதிரவன் பொன்னொளி வீசிப் புறப்பட்டபோது, சலசலவென்று ஓடும் காட்டாறு ஒன்றின் கரைக்கு வந்து சேர்ந்தனர். பரமேச்வரனுக்கு அந்தக் குளிர் வேளையிலும் உடல் வியர்த்து விட்டிருந்தது. அவன் தஞ்சையைத் தவிர வேறெங்கும் சென்றறியாதவன். இது போன்று விரைந்து நடந்ததனால் அவனுக்கு உடல் வியர்த்திருக்கலாம். அல்லது சில நாள்களாக எப்படி ஆகுமோ என்று எதிர்பாராதவை நடப்பதால் ஏற்பட்ட நடுக்கத்தால் அவனுடலில் வியர்வை ஆறு பெருகியிருக்கலாம்.

    சாமி! இன்னும் எவ்வளவு தொலைவு நாம் நடக்க வேண்டும்? என்று பரமேச்வரன் கேட்டான்.

    ஜெய் மகாதேவ் என்று கூறிய காளாமுகர், ரவிதாசனை நோக்கி நகைத்து,அபாய எல்லையைத் தாண்டும் வரை! என்றார்.

    அபாய எல்லையை எப்போது தாண்டுவோம்? என்று கேட்டான் பரமேச்வரன், மேல் மூச்சு வாங்க.

    எந்த அபாயத்தைக் கூறுகிறீர்கள் சாமி? என்று கேட்டான் ரவிதாசன். உண்மையிலேயே அவன் தெரிந்து கொள்வதற்காகத் தான் கேட்டான்.

    காளாமுகர் மீண்டும் நகைத்தார். ரவிதாசா! எந்த ஆபத்து என்று உனக்குத் தெரியாதா? ஆபத்துடனேயே எப்போதும் உறவாடும் உனக்கு நான் சொல்ல வேண்டுமா? என்று கேட்டார்.

    ரவிதாசன் பயமும், பக்தியும் நிறைந்த குரலில் பேசினான். இதற்கு முன்பு இப்படிப்பட்ட வார்த்தைகளை அவன் கேட்டிருந்தால் கடகடவென்று நகைத்திருப்பான். அவன் விழிகளும் சிரிப்புக்கு ஏற்றவகையில் சிவக்கும். இப்போது அவனுக்கு இன்னது செய்வதென்று தெரியவில்லை. ‘ஆனைமலைக் காட்டைவிட்டு யாரும் அறியாமல் புறப்பட்டாகி விட்டது. தலைவியின் உதவியும் யோசனையும் இனிக் கிடைக்காது. தன் எண்ணங்களை நிறைவேற்றக் காளாமுகர் உதவிதான் வேண்டும்; அவர் உதவுவாரா! ஆபத்தான பகுதி என்று அவர் கூறுகிறாரே, அவர் எதைச் சொல்கிறார்?’ உண்மையில் அவன் அறிந்து கொள்ள விரும்பினான்.

    சாமி, உண்மையில் எனக்குத் தெரியவில்லை; சொல்லுங்கள் என்றான்.

    இதோ இந்தக் காட்டாற்றைத் தாண்டிவிட்டால் தலைவியின் வீரர்கள் வந்து உங்களைப் பிடித்துவிட முடியாது. இனி நாம் சோழநாட்டில் நுழையலாம் - காளாமுகர்.

    சோழ நாட்டிலா? என்று பரமேச்வரன் திடுக்கிட்டுக் கேட்டான்.

    ஆம்! சோழநாட்டில்தானே இனி உன் வேலைகள் எல்லாம் ரவிதாசா? என்று கேட்டார் காளாமுகர். ரவிதாசன் தலையை அசைத்தானே தவிர, அவனால் பேச முடியவில்லை.

    ரவிதாசா, ஏன் மௌனமாகி விட்டாய்? சரி சரி; நாம் ஆற்றைக் கடந்தவுடன், இளைப்பாறிவிட்டுப் பேசுவோம் என்றார்.

    காட்டாற்றில் தண்ணீர் குறைவாகத்தான் ஓடிக் கொண்டிருந்தது. இடையிடையே உள்ள சிறு சிறு பாறைகளின்மீது காலை மெல்ல ஊன்றியவாறு அந்தப் பாறையில் அவர் எப்படி லாவகமாகக் கால்களை ஊன்றிச் சென்றார் என்பது ரவிதாசனுக்கு வியப்பாக இருந்தது. காளாமுகர் மந்திர சக்தி படைத்தவரோ என எண்ணினான்.

    விசாலமான புல்வெளி ஒன்றிற்கு அவர்கள் வந்து சேர்ந்தார்கள். புல்வெளியைச் சுற்றி மரங்கள் நிறைந்திருந்தன. நெல்லி மரமும், மாதுளை மரமும், கொய்யா மரமும் செழித்து வளர்ந்திருந்தன. ஒவ்வொரு மரத்திலும் பழங்களும் காய்களும் குலுங்கிய வண்ணமிருந்தன. காளாமுகர் மரங்களினருகே சென்று, கைத்தடியால் நெல்லிக் காயையும், மாதுளையையும், கொய்யாவையும் தட்டி உதிர்த்து எடுத்து வந்து கீழே பரப்பி, அந்த இடத்தில் தானும் அமர்ந்து மற்றவர்களையும் அமரச் சொன்னார்.

    இங்கிருந்து வெகு தொலைவிற்கு எந்த ஊரும் இல்லை என நினைக்கிறேன். இருந்திருந்தால் இந்த மரங்களில் இப்படித் தன்னிச்சையாகப் பழங்கள் நிறைந்திருக்க விடுவார்களா? என்று காளாமுகர் பேச்சைத் தொடங்கி, பரமேசுவரனுக்கும் ரவிதாசனுக்கும் பழங்களைக் கொடுத்து,உம். ஆகட்டும், உங்கள் பயத்தை விட்டுச் சற்றுக் கோபத்தைப் பழங்களிடம் காட்டுங்கள். சம்ஹாரம் செய்யுங்கள். இவற்றைச் சோழ அரச பரம்பரையினர் என எண்ணி நசுக்குங்கள்! என்றார். மாதுளையை ரவிதாசனிடம் நீட்டினார்.

    மாதுளை இருக்கிறதே ரவிதாசா, அது உடலில் புது ரத்தத்தை ஊட்டும். அத்துடன் வயிற்றுச் சங்கடங்களைப் போக்கும் என்றார்.

    ரவிதாசன் காளாமுகரையே உற்று நோக்கியவாறிருந்தான். அவனுக்கு நல்ல பசி. ஆனால், பரபரப்பான காரியங்கள் நடைபெறும் போது பசி என்ன செய்யும்? காளாமுகர் வேளை அறிந்து பழங்களைக் கொண்டு வந்து கொடுத்ததைக் கண்டு, மெல்லக் கொய்யாப் பழத்தை எடுத்துக் கடிக்கலானான். பரமேச்வரனோ கொய்யாப் பழத்தை நசுக்கி விதைகளை எடுத்துவிட்டு உண்ணலானான்.

    ரவிதாசா! ஆபத்துதவிப் படைகளில் சேர்ந்த பிறகு உன் குலதர்மத்தையே நீ விட்டு விட்டாயல்லவா! எச்சில், தீட்டு எல்லாம் உனக்கு நண்பர்களாகி விட்டனவல்லவா? என்றார் காளாமுகர் நகைத்தபடி. ரவிதாசன் அமணர் குடிப்பிறந்த அந்தணன். அமணர்களின் உயிரை நேசிக்கும் அன்பு நெறியும், அந்தணர்களின் ஒழுக்கமும் அவனிடமிருந்து மறைந்து பலகாலமாகி விட்டது. அவன் உடலில்க்ஷத்ரிய வேகம்தான் துள்ளி நின்றது ஆனால், பரமேச்வரன் செய்கையில் தீமை இருந்தாலும் அவன் மத தர்மத்தை விடவில்லை.

    சாமி! இப்போது மதத்தையும் குலத்தையும் பற்றி ஏன் பேசுகிறீர்கள்? காரியம் என்று தடுத்தால் மறந்துவிட வேண்டியது தான். தங்களைத்தான் எடுத்துக் கொள்ளுங்களேன். தாங்கள் எந்தத் தர்மத்தையும் இப்போது கடைப்பிடிப்பதாகத் தெரியவில்லையே என்றான்.

    காளாமுகர் குலுங்கக் குலுங்க நகைத்தார். அவன் கூறியதை அவர் ஆமோதிக்கவும் இல்லை. எதிர்க்கவும் இல்லை. ரவிதாசன் சும்மாயிருக்கவில்லை. சாமி, இப்போது எதற்கு என் குலத்தையும் குடியையும் இங்கு இழுக்கிறீர்கள்? என்னால் அந்தத் தூய மதத்திற்கு இழுக்குக் கற்பிக்கப் பார்க்கிறீர்களா? பாண்டிய சேவையை ஏற்று உயிரையும் உடலையும் தியாகம் செய்யத் தீர்மானித்த பிறகு எனக்குச் சமய நம்பிக்கையும், குல நம்பிக்கையும் அற்று விட்டன சாமி! அதெல்லாம் இப்போது எதற்கு? சோழ நாட்டெல்லையில் எங்களை உட்கார வைத்துவிட்டு கனியைக் கொடுத்துப் பசியைப் போக்கினீர். பயத்தைப் போக்கினீரா? ரவிதாசனின் குரலில் உறுதி இருந்தது. பரமேச்வரன் அங்குள்ளவற்றைத் தீர்ப்பதிலும், ஒன்றிரண்டு எடுத்து ஆடையில் முடிந்து கொள்வதிலும், கருமமே கண்ணாக இருந்தான்.

    பயமா ரவிதாசா? உனக்கா? உன் உள்ளத்தில் பயம் இருந்தால் இப்போதே கூறிவிடு. நான் என் வழியே போகிறேன். எனக்கு ஆகவேண்டியது ஒன்றுமில்லை. குடகுமலைச் சாரலுக்குப் போய் அமைதியாய் என் காலத்தைக் கழிப்பேன். உன் திட்டங்களுக்கும் எண்ணங்களுக்கும் தலைவி உடன்பாடு தெரிவிக்கவில்லையே. அதை நாமாவது நிறைவேற்றுவோம் என்பதற்காகவே, இவ்வளவு தொலைவு அழைத்து வந்தேன்... என்று கூறி எழுந்திருப்பதுபோல் பாவனை செய்தார்.

    ரவிதாசன் திடுக்கிட்டான்.‘தஞ்சை அரண்மனையிலுள்ள அரச பரம்பரையினர் அனைவரையும் கொன்றுவிட்டால்தான் பாண்டியப் பேரரசு நிலைக்கும், எனும் அவனுடைய எண்ணத்தைத் தலைவி ஒப்புக்கொள்ளவிட்டாலும்,காளாமுகரே அதை நிறைவேற்ற வருகிறார் என்றால், அவன் அந்தச் சந்தர்ப்பத்தை நழுவ விட்டுவிடுவானோ!

    சாமி, சாமி! கோபப்படாதீர்கள். என் எண்ணங்கள் நிறைவேறாமல் போய்விடுமோ, சோழநாட்டில் அகப்பட்டுக் கொண்டுவிடுவோமோ, என்ற அச்சத்தால் தான் அப்படிக் கேட்டேன். உங்களை நம்பித்தானே இப்போது நானிருக்கிறேன்? சொல்லுங்கள் சாமி; நான் அப்படியே செய்கிறேன். என் சகோதரனும் அப்படியே செய்வான். ஆனால், சோமன் சாம்பவன் நிலைதான் என்ன ஆனதென்று தெரியவில்லை. அவன் இன்னும் வந்து சேரவில்லை. செலவுக்கு என்று பொன் நாணயங்கள் எதையும் வைத்திராமல் எல்லாவற்றையும் தலைவியிடம் செலுத்தி விட்டேன்... என்றான். அவன் குரலில் கவலை நிறைந்த தழுதழுப்பு இருந்தது.

    காளாமுகர் அவன முதுகைத் தடவி,ரவிதாசா! கவலைப்படாதே. எல்லாப் பொன்னையுமா ஆனைமலைக் காட்டில் கொண்டு சேர்த்துவிட்டாய்? வெகுளி நீ! உன்னுடைய பிற்காலத்துக்கென ஏதாவது சேர்க்க வேண்டாமா? என்றார்.

    பரமேச்வரன் குறுக்கிட்டு,நல்ல வேளையாக ஏதோ சொற்பம் சேர்த்திருக்கிறோம். நஞ்சை, புஞ்சை நிலங்களாக வாங்கி வைத்திருக்கிறோம் என்றான்.

    ஆகா, ரவிதாசா! உன் சகோதரன் மிகக் கெட்டிக்காரன்,இல்லாவிடில் பழுவேட்டரையரின் கண்களில் மண்ணைத் தூவிப் பொற்கட்டிகளாக வெளியே அனுப்பி இருப்பானா? சாமர்த்தியமாகச் சொத்துச் சேர்த்திருப்பானா? எங்கே நிலம் வாங்கியிருக்கிறீர்கள்? என்று கேட்டார் காளாமுகர்.

    காட்டு மன்னார் கோயில் அருகில். அதிலிருந்து வரும் வருவாயைக் கொண்டு, என் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ளப் போகிறேன். என் காரியம் வெற்றியடைந்த பிறகு தலைவி பாராட்டுவாள். அமரபுஜங்க பாண்டியர் ஆனந்தமடைவார். அப்போது நான் சொல்வேன்: பேரரசே! என் பணி முடிந்துவிட்டது! என்று ஒரே வார்த்தை கூறிவிட்டுப் புறப்பட்டு விடுவேன்.

    எங்கு?

    தங்களுடன் குடகுமலைச் சாரலுக்கு. நானும் உங்கள் மதத்தில் சேர்ந்துவிடுவேன்.

    மத நம்பிக்கையற்ற நீயா பேசுகிறாய்? அது போகட்டும். வெயில் ஏறுமுன் நாம் பயணத்தைத் தொடங்குவோம். பேசிக் கொண்டே போவோம் என்றார் காளாமுகர்.

    அன்று மாலைப்பொழுதில், அவர்கள் கிராமமொன்றை அடைந்தனர். ரவிதாசனும், பரமேச்வரனும் செய்ய வேண்டிய திட்டங்கள் அனைத்தும் பேசி முடிவு செய்யப்பட்டன. ரவிதாசனும், பரமேச்வரனும் மாறுவேடத்தில் தஞ்சையிலும், நந்திபுரத்திலும் உலவித் தக்க தருணத்தை எதிர்பார்த்திருப்பது என்ற முடிவுக்கு வந்தனர்.

    மதுரையில் அமரபுஜங்கனுடைய படைகள் நுழையும் போது, நீங்கள் உங்கள் திட்டத்தை முடித்து விட்டால், பிறகு பாண்டியப் பேரரசை வீழ்த்த ஆள் இனிப் பிறக்க வேண்டும். மண்ணியாற்றங்கரையில் திருப்புறம்பியத்தில் உங்கள் மூதாதையரான பாண்டியர்களைக் கொன்றுதான் விசயாலயன் சோழ சாம்ராஜ்யத்தை நிறுவினான், தெரியுமா?, என்று கேட்டார் காளாமுகர்.

    அதுமட்டுமா? சேவூரிலே எங்கள் அரசர் வீரபாண்டியனை, நிராயுதபாணியாயிருந்தவரைக் கண்டந் துண்டமாக வெட்டினவனும் சோழன்தான் சாமி என்றான் ரவிதாசன்.

    சோர்வடையும் போது இவற்றை நினைத்துக் கொண்டால் போதும் என்றார் காளாமுகர்.

    சோர்வா? இனி என் கண் உறங்காது; வயிறு எதையும் கேட்காது என்று ரவிதாசன் சபதம் செய்வதுபோல் கையை மடக்கி உயர்த்தினான்.

    ரவிதாசன் பாண்டிய நாட்டிற்காகத் தன் உயிரையும் பெரிதாகப் பொருட்படுத்தாது, சோழ நாட்டிலே நடமாடி, மிகப் பயங்கரமான காரியங்களைச் செய்ய முற்பட்டபோது, ஆனைமலைக்காட்டில் அமரபுஜங்க பாண்டியன் ரவிதாசன் எங்கே? என்று தலைவியை நோக்கிக் கேட்டான்.

    படைகள் அணிவகுத்து நிற்கும் இந்தக் காட்சியை ரவிதாசன் கண்டால் மிகவும் மகிழ்வாரே. அவர் எங்கே தாயே? என்று பாண்டிய குமாரன் கேட்டான். ரவிதாசனும், காளாமுகரும், பரமேச்வரனும் தப்பிப் போய் விட்டதை அவளறிவாள். ரவிதாசன் கூறிய கருத்தையும், அவர்களுக்குத் தான் தடை விதித்ததையும், அவர்கள் தப்பிச் சென்றதையும் தலைவி அமரபுஜங்கனுக்கு விளக்கிக் கூறினாள். அமரபுஜங்கன் முகத்தில் வியப்பும், சீற்றமும், ஆவலும் மாறிமாறித் தோன்றின. சோழர் குலத்தைப் பூண்டுடன் நசுக்கும் கருத்தை ஏன் தலைவி எதிர்க்கிறாள் என்பது அவனுக்குப் புரியவில்லை.

    தாயே! ரவிதாசனின் திட்டம் சரிதானே! தன் உயிரையும் பொருட்படுத்தாமல் பெரும் செயலை நிறைவேற்ற முற்படும் அவரை நீங்கள் ஏன் கண்டிக்கிறீர்கள்? எனக்குப் புரியவில்லையே. நம் படைகள் மதுரையை அடையும்போதில் ரவிதாசனும் தன் திட்டத்தைத் தஞ்சையில் நிறைவேற்றினால் நமக்கு நல்லதுதானே? என்று அமரபுஜங்கன் படபடப்புடன் கேட்டான்.

    தலைவியின் முகம் கறுத்தது; அமரபுஜங்கன் தூய வீரனாக வளர்ந்து அரியணை ஏற வேண்டும் என்பது அவள் எண்ணம். அவனோ பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்ற எண்ணத்தை இதயத்தில் வளர்க்கிறான்.

    அமரபுஜங்கா! பழிக்குப்பழி வாங்குவது எளிதுதான். அதனால் விளையும் பலன்தான் கடுமையாக இருக்கும் என்றாள் தலைவி.

    மாற்றானிடம் தர்மம் பார்க்கவா சொல்கிறீர்கள்?

    யுத்த தர்மத்தை நான் மறுக்கவில்லை.

    போர்க் காலத்தில் வேவு பார்ப்பதும், கொலை புரிவதும் தவறில்லையே?

    போர்க்காலத்தில் கொலை புரியலாம். போர் நடக்காத இடத்தில் அதைச் செய்வது கொலைக் குற்றம்.

    தாயே! என் தந்தையை நிராயுதபாணியாக இருக்கும்போது கொன்ற செய்தியை நீங்கள் தானே கூறினீர்கள்? அதை அவ்வப்போது எடுத்துக் கூறித்தானே என் உள்ளத்தில் வீர உணர்வை ஊட்டினீர்கள்?

    'ஹூம்; வீர உணர்வை ஊட்டிப் போர்க்களத்தில் விந்தை பல செய்யப் பலத்தை வளர்த்தேன். மறைந்திருந்து கோழைத் தனமாகக் கொல்வது நியாயமன்று;"

    ரவிதாசன் செய்வது கோழைத்தனமென்கிறீர்களா?

    ஆம்; அதை நான் ஒப்புக் கொள்ளவில்லை.

    சோழ நாட்டு அரச குமாரனைக் கொன்று, பெரும் கலக்கத்தை விளைவித்த சம்பவம் மட்டும் கோழைத்தனமில்லையா?

    ஆம். அதுவும் நேர்மையற்ற செயல்தான். அப்போதே சோழ நாட்டில் மூன்று பெருங்கொலைகள் நேர்ந்திருக்கும். நல்ல வேளையாக அப்படி நடக்கவில்லை. பாண்டியர் ஆபத்துதவிகள் அனைவரும் கோழைகள் என்ற பெயர் ஏற்படவில்லை.

    அந்தச் செயலை நீங்கள் தடுத்திருக்கலாமே? அப்போது அப்படிச் செய்யாமல் இப்போது குறைகூறுவது சரியா? ஆதித்த கரிகாலனை அப்போது மறைந்திருந்து கொல்லாமல் இருந்தால், அவனுடன் நான் நேருக்கு நேர் சண்டையிடுவேன். அவன் வாட் போரில் வல்லவன் என்ற பெயரை நான் பரீட்சை செய்திருப்பேன். சிங்கக் குட்டிபோல் வீரபாண்டியன் தலையைப் பந்தாடிய அந்த இளங்கன்றின் ஆற்றலுக்கு ஒரு முடிவு கட்டியிருப்பேனே... அமரபுஜங்கன் கூறிவரும் போது தலைவி தன் செவிகளை மூடிக்கொண்டாள்.

    ஆம்; கொன்றிருக்கக் கூடாதுதான்; சோழ குலத்துத் தலைப்பிள்ளை சாய்ந்திருக்கக் கூடாதுதான்; அதைத் தடுக்க முடியாத நிலையில் இருந்துவிட்டேன். அதை எண்ணி இப்போது வேதனைப் படுகிறேன் என்று வாய்விட்டுக் கூவியவள், மனதில் நினைத்தாள்: ‘ஆதித்தன் அற்ப ஆயுளில் இறந்து போகாதிருந்தால் எல்லாருடைய தலைவிதியுமே மாறியிருக்கும். நேரக்கூடாதது நேர்ந்திருக்கும். சோழ நாட்டில் பெருங் கலவரம் பல காரணங்களுக்காக நிகழ்ந்திருக்கும். அமரபுஜங்கனை மாபெரும் வீரனாக வளர்க்க முடியாது போயிருக்கலாம். ஆபத்துதவிகளுக்கு நான் கொடுத்த வாக்கு நிறைவேறாது போயிருக்கலாம். என்றுமே பாண்டியர்கள் அரியணை ஏற முடியாது நேர்ந்திருக்கலாம். ஐயோ! அந்த நினைவு இந்தச் சமயத்தில் ஏன் வருகிறது? மறைந்து மறந்து போயிருந்த சம்பவங்களும், எண்ணங்களும் மீண்டும் ஏன் தோன்றுகின்றன? இதயத்தில் மறைந்து மண் மூடிப் போன ரகசியங்களை மீண்டும் தோண்டி வெளிப்படுத்துவானேன்?’

    தலைவியின் சொல் அமரபுஜங்கனை உருக்கியது. ‘அதை எண்ணி இப்போது வேதனைப்படுகிறேன்’ - இந்தச் சொற்கள் அமரபுஜங்கன் செவிகளில் ரீங்கார மிட்டன. ‘எதை எண்ணித் தலைவி வேதனையடைகிறாள்? என்னை மாபெரும் வீரனாக வளர்த்த தேவி, தாய்க்குத் தாயாக, ஆசானுக்கு ஆசானாக, மதி மந்திரிக்கு மந்திரியாக விளங்கும் தாய் எதை எண்ணி வேதனைப்படுகிறாள்? மதுரையில் மீண்டும் நாம் அரியணை ஏறவேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்த தலைவி எதை எண்ணி வேதனைப்படுகிறாள்? சோழர்களை முறியடிக்கச் சேரர் உதவிபெற யோசனை கூறி அனுப்பிய தலைவி எதை எண்ணி வேதனைப்படுகிறாள்? எதிரியின் முகாமிலே புகுந்து கொன்ற செய்கைக்கா? நெஞ்சில் இரக்கமின்றிப் படுபாதகம் புரிந்து சோழ அரசகுமாரனைக் கொன்ற செய்கைக்கா வேதனைப்படுகிறாள்?’ அவன் கேட்கத் துடித்தான். உறுதிபடைத்த நெஞ்சினளாயினும், கண்ணீர் உகுக்கத் தயாராக இருந்த தலைவியை, அவன் காரணம் கேட்கத் துடி துடித்தான்.

    பிறர் நெஞ்சில் இருப்பதை நொடியில் அறியவல்ல தலைவி, அமரபுஜங்கனை நோக்கி,அமரபுஜங்கா! நீ கேட்கத் துடிப்பதை இப்போது கேட்க வேண்டாம். நீ கேட்டுவிட்டு அதற்கு மறுமொழி கூறாது உன்னிடம் மறைக்க நான் விரும்பமாட்டேன். என் இதயத்தில் எங்கோ ஒரு மூலையில் மறைந்திருக்கும் அந்த ரகசியத்தைச் சமயம் வரும்போது கூறுவேன். இப்போது நீ கேட்பதாலும் நான் கூறுவதாலும் நடைபெற வேண்டிய செயல்கள் யாவும் உற்சாகக் குறைவால் தடைப்படலாம். மதுரை மாநகரில் உன் முடியில் பொற்கிரீடம் விளங்கும்போது, நான் அந்தக் கதையைக் கூறுவேன். நீ போகலாம். மேலே ஆக வேண்டியதைச் செய்யலாம் என்று கூறி அந்த இடத்தைவிட்டு எழுந்துவிட்டாள்.

    அமரபுஜங்கன் சிறிது நேரம் திகைத்து நின்றான். வீரனாக வளர்க்கப்பட்டவன்; அறநூல் படித்தவன். தலைவி கூறிய கடைசிச் சொற்களை அவன் மதித்தான். அங்கு நிற்காமல் வெளியே வந்த அமரபுஜங்கனுக்கு அற்புதச் செய்தி நிறைந்த ஓலையொன்று காத்திருந்தது. அந்த ஓலை சேர நாட்டிலிருந்து வந்திருந்தது. அந்த ஓலையை எழுதியிருந்தவர், சேர நாட்டு மாமன்னர் பாஸ்கர ரவிவர்மனின் அருமைக் குமாரி இளவரசி மாதங்கி தேவி. அதைக் கொண்டுபோய் வெளிச்சத்தில் படித்தான். அமரபுஜங்கனுக்குச் சற்று முன்னர் ஏற்பட்ட குழப்ப மனநிலையை ஒரு நொடியில் அந்த ஓலை மாற்றிவிட்டது.

    2

    அவர் தானா இவர்!

    ஐப்பசி மாதத்துச் சதய நாள்,அருண்மொழிவர்மரின் பிறந்த நாள். தஞ்சை அரண்மனை விழாக்கோலம் பூண்டு விளங்கியது. இளைய பிராட்டி குந்தவ்வை தேவியார் தன் இளவலின் பிறந்த நாளைச் சிறந்த முறையில் கொண்டாட வேண்டும் என விரும்பினாள். ஆனால், முன் தினம்தான் அது பற்றி நினைத்தபடியால், நகரமும் முழுவதும் அறிவித்து ஊரையே கோலாகலமாக்க இயலவில்லை. அரண்மனையில் மட்டும் அந்தச் செய்தி தெரிந்தது. கண்டரன் மதுரன் அதை அறிந்து பெருமகிழ்ச்சி யடைந்தான். அரண்மனையை இயன்றவரை அலங்கரிக்க வழி செய்தான். எல்லா அழகு அலங்காரங்களையும்விட அரண்மனையில் நடுமுற்றத்தில் அமைந்திருந்த நடராசருக்கு விசேஷ அபிஷேக ஆராதனை செய்வது சாலச் சிறந்ததாயிருக்கும் என எண்ணினான். பூக் குடலையை எடுத்துக் கொண்டு, முதல் நாளே மலர்களைப் பறிக்க நந்தவனத்திற்குச் சென்றான்.

    பழுவேட்டரையர் மாளிகை நந்தவனத்தில்தான் விதவிதமான நறுமண மலர்கள் அதிகம். மதுரன் நந்தவனத்தில் நுழைந்தவுடனேயே மலர்கள் தங்கள் இனிய முகத்தை அவன் எதிரே காட்டின. நகைத்தன. இருவாட்சி இனிய குரல் கொடுத்தது. பொன்னரளி புதுப்புன்னகை செய்தது; குண்டு மல்லிகை குதூகலமாக நகைத்தது; சரக்கொன்றை சலசலத்து ஆடியது; சண்பகமும் சாமந்தியும் களுக்கென்று சிரித்தன; பவழமல்லிகை அவன் காலடியில் வீழ்ந்து வணங்கியது. குவளை கண் விழித்து நோக்கியது. மதுரன் கரம்படாதா என மலர்கள் ஏங்கின. ஆண்டவன் கழுத்தை அலங்கரிக்கும் பேறு நமக்குத்தான் கிடைக்கும் என எதிர்பார்த்து, ஒவ்வொரு மலரும் மணம் வீசி நின்றன.

    பாடலொன்றை முணுமுணுத்தவாறு மதுரன் எந்த மலரைப் பறிக்கலாமென்று தேடினான்.

    "நந்தவனத்தில் வந்து சிந்தனையிலாழ்ந்து விட்டீர்களே! என்ன புதுத் திட்டமோ?’ என்ற குரல் கேட்டு மதுரன் திடுக்கிட்டுத் திரும்பினான். மலர்கள் உருப்பெற்று வந்து விட்டனவா? ஆம்; மலர்கள்தாம் வடிவெடுத்து வந்துவிட்டன. காட்டு மல்லிகையான இன்பவல்லியும், தோட்டத்து மெல்லரும்பான பஞ்சவன் மாதேவியும் லதா மண்டபத்திலிருந்து வெளியே வந்தனர். பஞ்சவன் மாதேவிக்கு இப்பொழுது பொழுதுபோவதே தெரியவில்லை. இன்பவல்லியை அவள் ஒரு கணம் கூடப் பிரிவதில்லை. இளைய பிரர்டடியாருக்கு மூச்சுவிடக் கூட முடியாத அளவுக்குத் தஞ்சை வந்தது முதல் அலுவல்கள் இருந்தன. நீண்ட காலத்திற்குப் பிறகு அவள் தஞ்சைக்கு வந்திருப்பதால், இளைய பிராட்டியைச் சந்திக்க வருபவர்கள் அதிகமாயினர்.

    தான தரும கைங்கர்யத்தில் இளைய பிராட்டிக்கு ஈடுபாடு அதிகம். கற்றளியாக மாறிய பல கோயில்களுக்கு வேண்டிய பூசைக் கலன்கள்; விளக்கெரிக்க நெய் முதலியவற்றிற்காகப் பல நிபந்தனைகளைத் தன் பெயரில் அளித்து வந்தாள். வெள்ளாடும் பசுக்களும், இறையிலி நிலங்களும் தன் சொந்தச் சொத்தில் இருந்து அளித்து வந்தாள். சிவன் கோயிலுக்கும் விண்ணகரங்களுக்கும் உதவி வந்ததைக் கேள்விப்பட்ட பௌத்தர்களும் பிராட்டியை அணுகி உதவி கேட்க முயன்றனர். காஞ்சிக்குச் சென்று கேட்கத் திட்டமிட்டும் இயலவில்லை. இப்போது தஞ்சைக்கு வந்திருப்பதை அறிந்து அவர்கள் கூட்டமாக வந்தனர். அவர்களுள் சிலர் அருண்மொழியைக் கண்டு பேச முயன்றனர். கவனிப்பாரற்றுப் போன ஆதல சாலைகளை மீண்டும் சீர்ப்படுத்த ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருந்தன.

    இவற்றால் எல்லாம் அரண்மனையில் இளையபிராட்டியாருக்கு இடையராத பணிகள் இருந்து கொண்டே இருந்தன. இன்பவல்லிக்கு இளையபிராட்டியை அணுக முடியவில்லை. அருண்மொழி வர்மருக்கு வரவேற்புக் கோலாகலம் நடந்த அன்று இரவு, இருட்பகுதியில் விம்மியவாறே கீழே படுத்திருந்த இன்பவல்லி, கண்ணீர் மாலையை மண் மாதாவுக்குச் சூட்டியவாறு தூங்கி விட்டாள். அப்படியே எவ்வளவு நேரம் உறங்கியிருப்பாளோ - காலையில் அவளை யாரோ தட்டி எழுப்புவது தெரிந்தது. பஞ்சவன் மாதேவி அவள் எதிரே நின்று கொண்டிருந்தாள். அவளுடைய கருணை நோக்கு இன்பவல்லிக்குப் பிடித்திருந்தது. இனிய விழிகள் சுழல, நொடிக்கு ஒரு தடவை முத்துப் பற்கள் தெரிய அவள் சிரித்தவாறு பேசுவது அவளுக்குப் பிடித்திருந்தது. நெஞ்சைத் துயரம் வந்து தாக்க, ஊர்வலம் கொண்டு வந்த செய்தி அவள் இதயத்தைப் பிழிய, விம்மி விம்மி அழுதவாறு அவள் கண்ணுறங்கினாளே, அவளை வந்து தேற்றியவர் யார்? கண் விழித்தபோது முதல் நாள் வேதனை லேசாக இருந்து கொண்டுதானிருந்தது. அதைத் துடைக்க வந்தவள் பஞ்சவன்மாதேவி. அவள் இதயத்துக்கு இனியவளாகவும் ஆகிவிட்டாள்.

    வானதிதேவி இன்பவல்லியைத் திரும்பிப் பார்ப்பதில்லை. பஞ்சவன் மாதேவியின் ஆறுதல் சொற்கள் கூடிய இனிய பேச்சைக் கேட்டுத் துயர் மறந்திருந்த இன்பவல்லி, பஞ்சவன் மாதேவியைத் தன் பாடல்களால் மகிழ்வித்தாள்.

    இன்பவல்லி ஆடும் அழகு கண்டு பெருமூச்சு விட்டாள் பஞ்சவன்மாதேவி.

    ஏன் தேவி பெருமூச்சு விடுகிறீர்கள்? என் நடனம் தங்களுக்குச் சோர்வளிக்கிறதா? என்று கேட்டாள்.

    சோர்வா? இவ்வளவு காலமாக எதிர்பார்த்திருந்த எண்ணம் நிறைவேறும் காலம் வந்துவிட்டதையெண்ணி மகிழ்ச்சி ஏற்பட்டு விட்டது. அதற்காக நான் பெருமூச்சு விடவில்லை. ஒருவர் மிக அழகிய குரலில் பாடுவார்;அவர் பாடலுக்கு ஏற்ப அபிநயம் பிடிக்க வேண்டும் எனும் ஆசை எனக்கு. பரதக் கலையை எனக்குப் பயில்விக்குமாறு அவரைக் கேட்டேன். ‘தில்லையம்பதிக்குச் செல்கிறேன்; அங்குத் தக்கவர்கள் கிடைப்பார்கள்’ என்றார். அவர் மறந்து விட்டார். அதை நினைத்துப் பெருமூச்சு விட்டேன் என்றாள் பஞ்சவன் மாதேவி.

    யார் அவர் தேவி? என்றாள் இன்பவல்லி. அவளுக்கு அந்த அரண்மனையில் எவரையும் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆடவர்கள் அந்தப் பக்கமே வருவதில்லை. அவள் இதயத்திற்கு வேதனை மூட்டிய அந்தச் சித்திரசேனரையே மற்றொரு முறை பார்க்க விரும்பினாளே; முடியவில்லையே! அரண்மனை என்பது சகல வசதிகளும் உடைய சிறைக் கூடமா? முல்லைத் தீவோடு சுதந்திரம் போய்விட்டதா? வண்ணப்பறவை தானே கூண்டில் அடைபட்டுக் கொண்டுவிட்டதா?

    அவரா? அவர் இனிமையாகப் பாடுவார். உன் குரலின் இனிமை அவருக்கும் இருக்கிறது. கர்வமில்லாதவர்; வனப்பு மிக்கவர்; எளிமையானவர்; நீ பார்த்ததில்லையா? இளங்காலை வேளையில் நடராசர் திரு உருவத்திற்குப் பூசை செய்துவிட்டுப் போகிறாரே...

    ஓகோ பூசாரியா?

    பஞ்சவன் மாதேவி நகைத்து விட்டாள். பூசாரியா? அவர் இளவரசர் இன்பவல்லி; அவர் இளவரசர்! என்றாள்.

    இளவரசரா? என்று வியப்புடன் கேட்டவள், மேலே பேசாமல் மௌனமானாள். சோழநாட்டில் இளவரசர்களுக்குக் குறைவே இல்லை போலிருக்கிறது! ஆண்கள் எல்லாரும் இளவரசர்களாகிப் பேதைப் பெண்களை ஏமாற்றிப் பேசுவதே வழக்கமாகிவிட்டது போலிருக்கிறது!

    என்ன சொல்கிறாய் இன்பவல்லி? ஏன் சட்டென வாயடைத்துவிட்டாய்? நீ அழகாகப் பாடும் அந்த அரச குமாரனைப் பார்த்திருக்கிறாயா? என்று பஞ்சவன் மாதேவி கேட்டாள்.

    இன்பவல்லி பார்த்திருக்கிறாள். ஒரே கணம் நேரம் வந்த அன்று கண்டிருக்கிறாள். அவளுக்கும் தெரியாது, அந்த அழகன் தான் பஞ்சவன் மாதேவி கூறும் அரசகுமாரனென்று. ஆனால் இன்பவல்லி அந்தப் பேச்சை மாற்ற விரும்பினாள்.

    அரசகுமாரன், அரண்மனை எல்லாம் எனக்குப் புதியவையாக இருக்கின்றன என்றாள். பஞ்சவன் மாதேவி அவள் தோளைப் பிடித்துக் கொண்டு,இப்படித்தான் ஏதாவது அரைகுறையாக உன்னைப் பற்றிச் சொல்கிறாயே தவிர, உன் முழுக் கதையையும் நீ எங்கே கூறுகிறாய்? எனக்குச் சொல்லமாட்டாயா? என்று கெஞ்சினாள். அவள் முகவாய்க் கட்டையைப் பிடித்து இழுத்துக் கன்னத்தை மெல்லக் கிள்ளினாள்.

    சொல்கிறேன் தேவி! சொல்லாமல் போய்விட மாட்டேன். இந்த அபாக்கியவதியின் கதையைக் கேட்டு என்மீது வெறுப்படைந்து என்னைவிட்டுப் பிரிந்துவிட எண்ணமா தேவி? என் சோகம் நிறைந்த கதையைக் கேட்டுத் துன்பம் அறியா உங்கள் இதயம் துயரமடைவானேன்...? என்றாள்.

    அடி பைத்தியமே! பெண் உள்ளத்தில் துன்பமும் இன்பமும் மாறி மாறித்தான் வரும். கண்ணீர் சிந்தினால் தான் களிப்பின் மதிப்பும் புரியும்.

    நான் அநாதை தேவி!

    நானும் அப்படித்தான். என் தந்தை இந்தச் சோழ சாம்ராஜ்யத்தின் தனாதிகாரியாக இருந்தவர் பழுவூரின் அரசராய் இருந்தவர். தாயைச் சிறு வயதில் இழந்தேன். தந்தையையும் இழந்தேன். இங்கே அரண்மனையில் ஆதரவுதேடி அலைந்து கொண்டிருக்கிறேன். நானும் பெற்றோரற்றவள். நீயும் அப்படியே. ஆனால் நீ கலை அரசி, உன் கதையைக் கூற மாட்டாயா? என்று பஞ்சவன் மாதேவி பரிவுடன் கேட்டாள்.

    சொல்கிறேன் தேவி. மற்றொரு நாள் சொல்கிறேன். பாடலொன்று கேட்டீர்களே! என்று அவள் கூறியபோதுதான், மதுரன் மலர் பறிக்கப் பாடலொன்றை மெல்ல முணு முணுத்தவாறு அந்தப் பக்கம் வந்தான்.

    அதோ பார்த்தாயா, அந்தக் குரல்தான். நான் கூறினேனே அரச குமாரன், அவருடையது என்று கூறியவாறு, பஞ்சவன் மாதேவி சட்டென அங்கிருந்து புறப்பட்டு மதுரன் இருக்குமிடம் வந்தாள்.

    மதுரன் உடல் சிலிர்த்தது. இரு மலர்கள். ஒரு மலர் செம்பவழவாய் திறந்து பேசுகிறது. ஒரு மலர் கண்களால் பேசுகிறது. அங்கே நிற்காமல் போய் விடலாமா என்று ஒரு கணம் எண்ணினான். அவன் கால்களில் ஒருவிதப் படபடப்பு. அருகே இருந்த பொன்னரளி ஒன்றைப் பறித்தான்.

    இதோ மல்லிகை; இதைத் தொடுத்துப் போட்டால் ஆண்டவனுக்கு அழகாயிருக்கும் என்று பஞ்சவன் மாதேவி தன் அருகே அருந்த மல்லிகைப் பந்தலிலிருந்து மல்லிகையைப் பறித்தாள்.

    இன்பவல்லிக்கு ஏதாவது பேசவேண்டும் போலிருந்தது. பஞ்சவன் மாதேவியை நோக்கி,இங்கெல்லாம் மருக்கொழுந்து கிடைக்காதா? எங்கள் தீவில் அவை ஏராளம் என்றாள்.

    ஓ! இருக்கிறதே! உம்; அதையும் பறித்துத் தருவோம். ஆண்டவனுக்கு அளிக்கப்படும் மலர் மாலைத் திருப்பணியில் நமது பங்கும் கொஞ்சம் இருக்கட்டுமே! என்று கூறியவாறு, மகாதேவி மதுரனை நோக்கினாள். அவன் கண்கள் தாழ்ந்தன. அவன் கரங்கள் மளமளவென்று பொன் அரளியைப் பறித்துக் கொண்டிருந்தன. பஞ்சவன் மாதேவியின் கரங்கள் மல்லிகையைப் பறித்தன.

    தினமும் எங்கள் நந்தவனத்திலிருந்தே மலர்களைப் பறித்துப் போகலாமே. தாங்கள் வருவது தெரிந்தால் நானும் உதவி செய்ய வந்துவிடுவேன். இந்த வனத்து மலர்கள் பறிக்கப்படாமல் வீணே செடியிலேயே கருகி வீழ்ந்து விடுகின்றன. தங்கள் கரம் பட்டால் அவற்றிற்குப் பெருமை தானே?... என்றாள் பஞ்சவன் மாதேவி. அந்தச் சொற்களைக் கேட்டு இன்பவல்லி களுக்கென்று சிரித்தாள். மதுரனைக் கடைக்கண்ணால் நோக்கினாள்.

    பஞ்சவன் மாதேவியின் பேச்சும், இன்பவல்லியின் சிரிப்பும் மதுரனின் கூச்சத்தை அதிகப்படுத்தின. அவன் அரண்மனைக் கூடத்திலேயே இன்பவல்லியைக் கண்டிருக்கிறான். ஆனால், நேருக்கு நேர் அவளைக் கண்டது இதுதான் முதல் தடவை. ஆனால், கூச்சமற்ற பார்வை. உள்ளத்துக் கள்ளம் கபடமற்ற தன்மையைப் பிரதிபலிக்கும் முகம். பஞ்சவன் மாதேவியின் கண்கள் வட்ட வடிவமானவை. இன்பவல்லியின் கண்கள் கூரிய வேலைப் போன்றவை. பஞ்சவன் மாதேவியின் உதடுகள் மாதுளை மொக்கைப் போன்று குவிந்திருந்தன. இன்பவல்லியின் அதரங்கள் கோவைப் பழம் பிளந்தாற்போல் இருந்தன. பஞ்சவன் மாதேவியின் முகம் வட்ட வடிவமானது. இன்பவல்லியின் முகம் சற்று நீண்டிருந்தது.

    போதும்... போதும். கண்டரன் மதுரன் இனியும் அங்கிருக்க விரும்பவில்லை; அவன் மனக்குளத்தில் மெல்லச் சலனம் ஏற்பட்டது. அவன் அங்கிருந்து மெல்ல நகர விரும்பி,தேவி! எனக்கு அரண்மனையில் ஏராளமான வேலைகள் இருக்கின்றன. நாளைக்கு இளவரசரின் பிறந்த நாள் விழா. எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகு நம் அரண்மனையில் கொண்டாடப் போகிறோம். நடராசருக்கு விசேடமான அபிஷேக ஆராதனைகள் செய்யத் திட்டமிட்டுள்ளேன். நாமெல்லாம் கூடி இளவரசர் நீடூழி வாழ இறைவனைப் பிரார்த்திக்க வேண்டாமா? என்றான். அவன் அதற்குமெல் அங்கு நிற்கவில்லை. மீண்டும் ஒருமுறை அவர்களைத் திரும்பிப் பார்க்க விரும்பினான்- வேண்டாம் என உள்ளம் எச்சரித்தது. விரைந்து சென்று விட்டான்.

    அவன் சென்ற பிறகு இன்பவல்லி பரபரப்புடன் கேட்டாள்: 'தேவி! நாளை யாருக்குப் பிறந்த நாள் விழா? குரவைக் கூத்தும் பாட்டும் அமர்க்களப்படும் அல்லவா?" முல்லைத் தீவில் பிரபலமானவர் பிறந்த நாள் விழா என்றால் அது திறந்த வெளியில் நடைபெறும். ஆடவரும் பெண்டிரும் அழகாகக் கூடி ஆடுவர். அந்த நினைப்பு அவளுக்கு வந்தது. விரைவில் வருகிறேன் என்று கூறிச்சென்ற சொற்கள் ஒலித்தன. அவர்தானோ இங்கு இளவரசர்? தான் கண்டது கனவா-நனவா-அதை உறுதிப்படுத்திக்கொள்ள இயலவில்லையே! இப்போது இளவரசருக்குப் பிறந்த நாள் விழா என்கிறார்களே! அவருக்கேதானா? சித்திரசேனருக்குத் தானா?

    இன்பவல்லி கேட்ட கேள்விக்கு உடனே மறுமொழி கூற பஞ்சவன் மாதேவியால் இயலவில்லை. மதுரன் செல்லும் திசையை உற்று நோக்கியவாறிருந்தாள்.

    தேவி! யாருக்கு நாளை பிறந்த நாள்? என்று மீண்டும் இன்பவல்லி கேட்ட பிறகு தான், பஞ்சவன் மாதேவி சுய உணர்வு பெற்றாள்.

    யாருக்கா? இளவரசருக்குத்தான்?

    யார் இளவரசர்? தஞ்சையில் பல இளவரசர்கள் இருக்கிறார்கள் போலும். அதில் யார் என நான் அறியலாமா?

    ஆகா; இளவரசர்கள் இருவர். ஒருவர் அருண்மொழி வர்மர். மற்றவர் இப்போது வந்து சென்றாரே மதுராந்தக சோழதேவரின் திருக்குமாரர்.

    இருவரும் இளவரசர்கள். இருவருக்கும் இந்த நாட்டில் உரிமை உண்டல்லவா?

    அதெல்லாம் எனக்குத் தெரியாது. யாருக்கு உரிமை என்று முடிவு செய்ய வேண்டியவர் என சிறிய தந்தை.

    அவசர நிமித்தமாக அவர் காஞ்சிக்குப் படைகளுடன் போயிருக்கிறார்.

    அருண்மொழி வர்மரை வரவேற்கும்போதுகூட அவர் இருந்தாரல்லவா?

    ஓ! அருண்மொழி வர்மரை நீ பார்த்தாயா?

    ஆம், உங்கள் அருகே நின்று கோலாகலமாக வரவேற்பைக் கண்டேன்; அணிவகுத்து வந்த படை வீரர்களைக் கண்டேன். திருச்சின்னம் தாங்கி வந்தவர்களைக் கண்டேன். யானை மீது இளவரசர் கம்பீரமாக அமர்ந்து வருவதைக் கண்டேன். தேவி! அவர் இப்போது தான் தஞ்சைக்கு வருகிறாரா?

    ஆமாம்! அவர் இந்த நாட்டை விட்டுப்போய்ப் பல ஆண்டுகள் ஆகின்றன. அவரது அண்ணன் அகால மரணமடைந்த பிறகு இளைய பிராட்டியார் அவரைக் கடல் கடந்த நாடுகளைச் சுற்றிப் பார்த்துவர அனுப்பினார். அவர் போய்ப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. கடைசியாக அவர் திரும்பி வரும் சேதி கிடைத்தது. அவர் வருகிறார் வருகிறார் என எதிர்பார்த்து எல்லாரும் காத்திருந்தார்கள். என் சிறிய தந்தையும் அதற்காகத் தான் என்னைப் பழுவூரினின்று வரவழைத்தார்.

    தங்களை எதற்காக வரவழைத்தார்?

    எதற்காக வரவழைத்தார்...? பஞ்சவன் மாதேவி தன்னையே ஒருமுறை கேட்டுக் கொண்டாள். அதன் காரணம் அவளுக்குத் தெரியும். அதை அவள் எப்படிச் சொல்வாள்?

    ஆமாம்; நீ கேட்கும் கேள்விகளுக்கு ஒவ்வொன்றாக நான் மறுமொழி கூறி வருகிறேன். என் வாய்மூலம் எல்லாவற்றையும் வரவழைத்து விடு. நீ மட்டும் ஒன்றும் சொல்லமாட்டேன் என்கிறாயே... என்று பஞ்சவன் மாதேவி அலுத்துக் கொண்டாள்.

    துயரம் கொஞ்சங் கொஞ்சமாக இப்போது அவள் இதயத்தை அழுத்த முயன்றாலும், அவள் மெல்ல நகைத்து,என் கதையிலே ஒருவிதச் சுவையும் இருக்காது தேவி! நீங்கள் பழுவூரினின்று ஏதோ முக்கியக் காரணத்திற்காக வரவழைக்கப்பட்டீர்கள். நானோ ஒரு குறிக்கோளும் இல்லாமல் வந்தேன். உங்கள் கதையும் என் கதையும் சமமாகி விடுமா? என்றாள்.

    இப்போது சமம் பற்றிச் சீர்தூக்கிப் பேசவேண்டாம். நான் பழுவூரினின்று இங்கு வந்த காரணமே வேறு. வருங்கால ராணியாக என்னை உருப்படுத்த என் சிறிய தந்தையார் வரவழைத்தார் - ஆனால்... பஞ்சவன் மாதேவி பெருமூச்சு விட்ட வண்ணம் கூறினாள்: ஆம், யாருக்கும் கிடைக்காதது தான். என் சிறிய தந்தைக்கோ சோழநாட்டுப் பேரரசியாக நான் ஆகவேண்டும் எனும் எண்ணம்... ஆனால்...

    ஏன் அந்த ஆசை நிறைவேறாதா?

    யார் மன்னராவார் என்றே தெரியவில்லையே!...

    இந்தச் சொல் இன்பவல்லிக்கு எரிச்சலை ஊட்டியது. அரசராக யார் வருவர் எனத் தெரிந்து அவரை மணப்பது எனும் முடிவு அவளுக்கு உடன்பாடாக இல்லை. இன்பவல்லி தொடர்ந்து அதைப் பற்றிப் பேச விரும்பவில்லை. அவள் உள்ளம் வேறொன்றை அறியத் துடித்தது.

    தேவி! நாளை யாருக்குப் பிறந்த நாள் விழா என்று கேட்டேன்... என்று பேச்சைத தொடங்கினாள்.

    கோலாகலமான வரவேற்பு நிகழ்ந்ததே அவருக்குத் தான்... அருண்மொழி வர்மருக்குத்தான் என்றாள் பஞ்சவன் மாதேவி.

    அருண்மொழி வர்மருக்குப் பிறந்த நாள் விழா; இரத்தின வியாபாரியாக நடித்தாரே அவருக்குப் பிறந்த நாள் விழா. ‘காத்திரு வருவேன்’ என்று உறுதி கூறிச் சென்றாரே அவருக்குப் பிறந்த நாள் விழா. இன்பவல்லி தன் தலைப்பின் ஒரு மூலையில் முடிந்து கொண்டிருந்த ரத்தினக் கல்லை ஒருமுறை தடவிப் பார்த்துக் கொண்டாள். அவளால் அங்கு நிற்க முடியவில்லை. தனியே சென்று விம்மி அழ வேண்டும்போல் தோன்றியது.

    மறுநாள் பொழுது புலர்ந்தது. கதிரவனின் தங்கக் கதிர்கள் தஞ்சை அரண்மனையில் மூலை முடுக்குகளிலெல்லாம் புகுந்து புத்தொளி கொடுத்த வேளையிலே, நடுமுற்றத்தில் திகழ்ந்த மண்டபத்தில் நடராசரின் திரு உருவம் எழிலுடன் விளங்கியது. பளபளத்த விக்கிரகத்தின் திருமேனியின் மீது அழகிய மலர் மாலை திகழ்ந்தது. பொன் அரளியும், மல்லிகையும் தொடுக்கப்பட்ட அந்த மாலை அழகுக்கு அழகு செய்து கொண்டிருந்தது. அகிலின் புகையும், சந்தன நறுமணமும் கலந்து அந்த இடத்தை தெய்வீக நிலைக்கு உயர்த்திக் கொண்டிருந்தன.

    கண்டரன் மதுரன்,‘நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க’ என்று மெல்லரும்பு எடுத்து, குஞ்சித பாதத்தில் சமர்ப்பித்துக் கொண்டிருந்தான். செம்பியன் மாதேவியார் ஐந்தெழுத்தை உச்சரித்தவாறு கண்மூடிய நிலையில் நின்று கொண்டிருந்தார். மூத்த பஞ்சவன் மாதேவியார், பூசை மண்டபத்தருகே நின்று பூசையைக் கவனித்துக் கொண்டிருந்தார். மேன்மாடத்தில் பூசை மண்டபம் தெரியும் இடத்தில் அமர்ந்து மதுராந்தக சோழ தேவர் அங்கு நடப்பதைக் கண்டறிந்தார். அவரருகே பட்டத்து அரசி லோகமாதேவியார் நின்று மன்னருக்கு வேண்டிய பணிவிடை செய்வதும் பூசையைக் கவனிப்பதுமாக இருந்தார். மன்னரின் உடல்நிலை முன் எப்போதையும் விட மோசமாகியது. அவரது இடப்புறப் பாகம் ஏதும் இயங்க மறுத்து விட்டது. தாய் கூறியது போல் முன்னே சிவநெறியில்

    Enjoying the preview?
    Page 1 of 1