Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Gnanam Piranthathu
Gnanam Piranthathu
Gnanam Piranthathu
Ebook375 pages2 hours

Gnanam Piranthathu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Mrs. Jyotirllata Girija, born in Chennai. She wrote her first story when she was at the age of thirteen. She has written in so many forms - Stories for children, novels, short stories, dramas etc. So far, she has written more than 600 short stories, 19 novels, 60 novelettes and 3 dramas. She has also written 25 short stories in English and she has written around 150 stories for children.
Languageதமிழ்
Release dateApr 23, 2018
ISBN6580101500296
Gnanam Piranthathu

Read more from Jyothirllata Girija

Related to Gnanam Piranthathu

Related ebooks

Reviews for Gnanam Piranthathu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Gnanam Piranthathu - Jyothirllata Girija

    http://www.pustaka.co.in

    ஞானம் பிறந்தது

    Gnanam Piranthathu

    Author :

    ஜோதிர்லதா கிரிஜா

    Jyothirllata Girija

    For more books

    http://www.pustaka.co.in/home/author/jyothirllata-girija

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. பக்குவம் வந்த பிறகு

    2. விட்டுக் கொடுத்தால்…

    3. இனி மாதந்தோறும் மணியார்டர் வரும்

    4. அது வேறு விஷயம்

    5. ஒட்டுண்ணிகள்

    6. கதிர் அரிவாள்

    7. கழுதைகளும் குதிரைகளும்

    8. ‘தங்க’ மனசு

    9. நான்கு ஆண்டுகள் x நாற்பது ஆண்டுகள்

    10. ‘மெமோ’தரன்

    11. வாரிசுகள் தொடர்வார்கள்

    12. வினை விதைத்தவர்கள்!

    13. ஒரு பிஞ்சுப் பூவைத் தேடி…

    14. கனவில் வந்த முகம்

    15. ஓட ஓட விரட்டினால்…

    16. வேலை கிடைத்தது

    17. வேறு வழி தெரியவில்லை

    18. மாதிரி மலர்கள்

    19. ஞானம் பிறந்தது

    20. மகன் என்னும் மயக்கம்

    21. பர்வதம் மாமியும் ஒரு வாய் மோரும்

    22. தானே வளரும் தன் பிள்ளை

    23. உறவுகள் முறியும்

    24. ‘இப்ப திருப்திதானே?’

    25. ஏகபோக உரிமைகள்

    26. ஒரு குழந்தையைக் காணவில்லை

    27. கிழிக்கப்பட்ட தந்தி

    28. வறியோர்கள்

    29. தேர்வு

    30. அப்பா அப்பாதான்!

    31. அம்மா, நீயும் அமெரிக்காவுக்கு வந்து இரேன்!

    32. திருவல்லிக்கேணியும் திருப்பதியும்

    1

    பக்குவம் வந்த பிறகு

    மங்களா பம்பாயிலேயே வாழ்ந்து விட்டவள். அவள் அப்பா தெற்குப் பக்கத்துத் தெலுங்கர். கொச்சையாகத் தெலுங்கு பேசத் தெரிந்தவர். ஆனால் எழுதத் தெரியாதவர். தமிழில் நல்ல தேர்ச்சியுள்ளவர். தம்மைத் தமிழர் என்றே சொல்லிக் கொள்ளுகிறவர். மைய அமைச்சரவையில் பெரிய பதவியில் இருக்கிறவர். மங்களா பிறந்த இரண்டு ஆண்டுகளுக்கெல்லாம் சென்னையிலிருந்து மாற்றப்பட்டுப் பம்பாய்க்குப் போய்ப் பெரும்பாலும் பம்பாய் விட்டால் பூனா. பூனா விட்டால் பம்பாய் என்று அவ்வப்போது தமது பதவியில் ஏற்படுகின்ற உயர்வுகளுக்கேற்ப இந்த இரு நகரங்களில் மட்டுமே சுற்றிக் கொண்டிருந்து விட்டவர். ஆனால் மற்ற தெற்குப் பக்கத்துக் காரர்களைப் போலல்லாது, தம் மகள் இந்தியிலேயே படிக்க நேர்ந்ததும், தமிழையும் சின்ன வயதிலிருந்தே கற்றுக் கொடுத்து, அதில் பெரும்புலமை என்று ஏற்படுத்தாவிட்டாலும், எழுதப் படிக்கவும் தமிழ்ப் பத்திரிகைகள் அனைத்தையும் உடனுக்குடனாகப் படித்து அலசவும் தேவையான ஒரு ரசனையை அவளிடம் அவள் அப்பா தேவநாதன் வளர்த்திருந்தார்.

    இருபத்து நான்காம் வயதில் ‘1901-இலிருந்து 1950 வரையில் தமிழ்ப் பத்திரிகைகள் என்கிற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை எழுதி அதற்காக டாக்டர் பட்டம் வாங்கியிருப்பவள் மங்களா. அந்த ஆய்வுக் கட்டுரையை வெளியிடுவதாகச் சென்னையில் இருந்த ஒரு வெளியீட்டாளர் தாமாகவே அவளுக்குக் கடிதம் எழுதினார். அந்தச் சாக்கில் அவள் சென்னைக்கு வந்தாள். பம்பாயில் அவளுடன் படித்த சரசுவின் வீட்டில் அவள் தங்க எண்ணி அவளுக்குக் கடிதம் எழுதிக் கேட்டபோது, சரசு, மறு அஞ்சலில், அவளை வரச்சொல்லி எழுதினாள். மங்களா அப்பாவிடமும் அம்மாவிடமும் சொல்லிக் கொண்டு புறப்பட்டு விட்டாள்.

    அவள் கிளம்புவதற்கு முன்னால், மங்களா, அது பம்பாய் இல்லைங்கிற பிரக்ஞையோட இருடி ஆம்பிளைகளோட இந்த ஊர்ல பழகற மாதிரிப் பழகாதே. தப்பாய் எடுத்துண்டுடப் போறா… என்றாள்.

    மங்களா பெரிதாகச சிரித்துவிட்டுச் சொன்னர்: மெட்றாஸ் பக்கம் நீ போயே வருஷக்கணக்காறது. மெட்றாஸ் ஒண்ணும் நீ நினைக்கிற மாதிரிக் கட்டுப்பெட்டி ஊராய் இருக்காது. நான் அப்பப்போ விசாரிச்சுண்டுதான் இருக்கேன்.

    சரி, சரி. எதுக்கும் ஜாக்கிரதையாய் இரு! கெக்க பிக்கன்னு பழகாதே. உனக்குக் கள்ளம் கபடமே போறல்லே. எல்லாரையும் நம்பிடறே… யார்கிட்டவாவது ஏமாந்துட்டு வந்து என்னிக்கு அழுதுண்டு நிக்கப் போறியோ தெரியல்லே!

    அப்படியெல்லாம் ஒண்ணும் ஏமாற மாட்டேன். அப்படியே ஏமாந்தாலும், அதுக்காக அலட்டிண்டு அழ மாட்டேன் என்று அறிவித்து விட்டு மங்களா சென்னைக்குப் பயணமானாள்.

    …சென்னையில் சரசுவின் அண்ணா பாஸ்கரன் - எப்போதோ ஒரிரு தடவைகள் மட்டுமே அவனை மங்களா சந்தித்திருந்தாள் - அவள் எதிர்பாராத அளவுக்கு இலக்கியத்தில் ஈடுபாடும் ரசனையும் உள்ளவனாக இருந்தான். ‘கதிரவன்’ என்கிற புனை பெயரில் புதுக்கவிதைகளை நிறைய எழுதி எந்தப் பத்திரிகைக்கும் அனுப்பாமல் வைத்திருந்தான். அவை மங்களாவுக்கு ரொம்பப் பிடித்தன. அவனைத் தேடிக்கொண்டு வந்த நண்பர்களும் அவனைப் போன்றே இலக்கிய ரசனையுள்ளவர்களாக இருந்தனர். இதனால் மங்களாவுக்குச சுவையாகப் பொழுது போயிற்று.

    அவர்கள் எல்லாருமே ‘ஓபியம்’ உண்பவர்களாக இருந்தனர். ஒளிவு மறைவு இல்லாமலும், கிட்டத்தட்ட தானும் ஓர் ஆண்பிள்ளை போலவும் வெளிப்படையாக அவர்களுடன் அவள் பழகியதால் அவர்களில் யாரும் அவளிடமிருந்து தங்களை ஒளித்துக் கொள்ளாமல் பழகினர். ‘செக்ஸ் பற்றிக்கூட நிறையப் பேசினர். மங்களாவின் வெகுளித்தனம் அந்த அளவுக்கு அவர்களை அடியெடுத்து வைக்கத் தூண்டியது. ‘கட்டுப்பாடற்ற செக்ஸ் வேண்டுமா வேண்டாமா?’ என்று பட்டிமன்றம் போடுகிற அளவுக்கு இரண்டே நாள் பழக்கத்தில் அவர்கள் முன்னேறினர் என்றால் மங்களா எவ்வளவு வெளிப்படையானவள் என்பதை ஊகித்துக் கொள்ளலாம்.

    தான் அமெரிக்காவில் இரண்டு ஆண்டுகள் தன் அண்ணன் குடும்பத்துடன் இருந்துவிட்டு வந்தவள் என்பதை அவள் பேச்சுவாக்கில் தெரிவித்தபோது, ஹேவ் யூ என்ஜாய்ட் ஃப்ரீ செக்ஸ் தேர்? என்று கேட்டுக் கண்ணபிரான் கண்ணடித்தான். மங்களாவுக்கு முகம் சிவந்து போயிற்று, சரசுவின் அண்ணா பாஸ்கரன் நண்பனை முறைத்தான்.

    நாம மனசு விட்டுப் பேசறோம். வேற ஒண்ணுமில்லே. நீங்க இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டாம். எல்லார் கிட்டவும் இதுமாதிரிப் பேசிற முடியுமா? நீங்க ஒளிவு மறைவு இல்லாம - உங்கள் எண்ணங்களை மறைக்காம - இருக்கிறதால நாங்களும் மனசு விட்டுபு பேசறோம். அவ்வளவுதான்… என்று கண்ணபிரான் வேறு பொருளுக்குத் தாவினான்.

    அங்கிருந்த சரசு ஒரு சங்கடமான உணர்வில் தவிக்கத் தொடங்கினாள். நீங்க பேசிட்டிருங்க. நான் போய் எல்லாருக்கும் டீ எடுத்துட்டு வறேன் என்று கூறி, மாடியிலிருந்து இறங்கிப் போனாள். மங்களாவின் மீது அவளுக்கு ஆத்திரம் எற்பட்டது. ஆனால் நீண்ட நாள் பரிவுக்குப் பின்னர் அயலூரிலிருந்து வந்திருக்கும் தோழியிடம் ‘மூஞ்சியைக் காட்ட’ முடியவில்லை. ‘ஆண் பிள்ளைகளுடன் - அதிலும் நம்மூர் ஆண் பிள்ளைகள் பிறத்தியான் பெண்டாட்டியுடன் இளித்துப் பேசத் தயாராகவும். அதே சமயத்தில் தன் மனைவியுடன் யாரும் வெறுமே சிரித்துப் பேசக்கூட அனுமதிக்காதவர்களாகவும் இருப்பவர்கள் என்பது ஏன் இவளுக்குத் தெரியவில்லை? ஜாக்கிரதையாக இருக்கும்படி சொல்லிவிடலாமா? மனம் விட்டுப் பேசுகிற பெண்களை இவர்கள் தப்பான கோணத்திலேயே பார்ப்பார்கள் என்பதும், அந்தச் சாக்கில் கொஞ்சம் வாலாட்டப் பார்ப்பார்கள் என்பதும் இவளுக்குத் தெரிய வேண்டாமோ? என்ன பெண் இவள்!"

    சிறிது நேரம் கழித்துச் சரசு கீழேயிருந்து மங்களாவைக் கூப்பிட்டாளமங்களா இறங்கிப் போனாள். அவளிடம் தேநீர்த் தட்டைக் கொடுப்பதற்கு முன்னால், மங்களா! ஜாக்கிரதையாயிரு அந்தப் பசங்ககிட்ட.. நான் அவாளோட பேச்சே வச்சுண்டதில்லே. இப்ப நீ மட்டும் அவா கும்பல்லே தனியாய் இருக்கியேங்கிறதுக்காகத்தான் நானும் மொட்டை மாடிக்கு வறேன். ஆண் பிள்ளைகள் எல்லைகளை மீறாம இருக்கணும்னா, நமக்குன்னு சில எல்லைகளை நாம வச்சுக்கணும். நாலு வருஷத்துக்கு முந்தி பார்த்த வெகுளிப் பெண்ணாவே இன்னும் இருக்கியேடி? தயவு செஞ்சு தப்பாய் எடுத்துக்காதே… என்றாள்.

    தட்டை வாங்கிக்கொண்டே, ஓ! அந்தக் கண்ணபிரான் என்னை ஏதோ கேட்டுட்டான்கிறதுதானே நீ இப்படிப் பேசறதுக்குக் காரணம் அவன் ஒரு நைஸ் சேப்! மனம் விட்டுப் பேசிட்டான். அவ்வளவுதான். அப்படியெல்லாம் பேசிப் பழகாமலும், அபிப்பிராயங்களை ஒருத்தருக்கொருத்தர் பரிமாறிக்காமலும் தான் நாம ஆண்-பெண் உறவிலே சிக்கல்களை வரவழைச்சுண்டுட்டோம்கிறது என்னுடைய அபிப்பிராயம்… என்று சிரித்தாள் மங்களா.

    உன்னுடைய சைக்காலஜி ஓரளவுக்கு சரிதான், மங்களா நான் ஒத்துக்குறேன். ஆனா, அதுக்கு முதல்லே ஆண் பிள்ளைகளைத் தான் பக்குவப்படுத்தணும். பக்குவமில்லாத ஆண் பிள்ளைகளைளோட உன்னை மாதிரி வெகுளிப்பெண் பேசிப் பழகறது அவங்களையும் தப்பு வழியிலே செலுத்தும், உனக்கும் சிக்கல்களை ஏற்படுத்தும்… அப்புறம் இன்னொன்ணு..! … அவாளோட இடிக்கிற மாதிரி உக்காரதேடி. நேத்து நான் கவனிச்சுண்டுதான் இருந்தேன். ரேழியிலே ராத்திரி எட்டு மணிக்கு அந்தப் பசங்களை வழியனுப்பறப்போ இந்தக் கண்ணபிரான் உன் தோளைத் தட்டிட்டுப் போனதை. நீ தாராளமா அவங்களோட பேசிப் பழகு. அதே சமயத்தில் உங்கிட்ட மிஸ்பிஹேவ் பண்ணிப் பார்க்கணும்கிற எண்ணம் அவாகிட்ட வராம இருக்கும்படி ஒரு எல்லையிலே இருடி. ஆணும் பெண்ணும் மனசுவிட்டுப் பேசிப் பழகணும்கிறதை நான் ஒத்துக்கறேன். ஆனா, அதுக்கு ஆண் பிள்ளைகள் முதல்ல மாறணும். அதுக்கு அப்புறந்தான் அது நல்ல முறையிலே பயனளிக்கும். இல்லைன்னா வெறும் மனத்துன்பந்தான் மிஞ்சும்! நான் லெக்சர் அடிக்கிறேன்னு நினைக்காதே. உன் நல்லதுக்குத்தாண்டி சொல்றேன்.

    மங்களா அவள் பேசியதில் எதையும் தப்பாக எடுத்துக் கொள்ளவில்லைதான். ஆனால் இடிஇடி என்று சிரித்தாள். நீ இன்னும் அதே கட்டுப் பெட்டியாத்தான் இருக்கே… நீ சொன்னதையெல்லாம் அப்புறம் நிதானமா யோசிச்சுப் பார்க்கறேன்… நீயும் வாடி மாடிக்கு.

    நீ முதல்ல போடி நான் பிஸ்கட்ஸ் எடுத்துண்டு பின்னாலேயே வர்றேன்…

    …இரவு எட்டு மணிக்குக் கூட்டம் கலைந்தபிறகு மங்களா, சரசு, பாஸ்கரன் ஆகிய மூவரும் சாப்பிட உட்கார்ந்தார்கள். பாஸ்கரனும் சரசுவும் அதிகம் பேசாமல் இருந்ததற்கு என்ன காரணம் என்பது மங்களாவுக்குப் புரியவில்லை.

    ஏன் ரெண்டு பேரும் கலகலப்பாய் இல்லே? என்று கேட்டு விட்டாள்.

    பாஸ்கரன், உங்ககிட்ட மனசுவிட்டுப் பேசலாம்கிறதுனாலே இப்ப பேசறேன், மங்களா. எல்லாரும் என்னுடைய சிநேகிதங்கதான். ஆனா, அவங்ககிட்ட கவனமாப் பழகுங்க. பாருங்க. அந்தக் கண்ணபிரான் அப்படி ஒரு கேள்வியைக் கேட்டுட்டான் என்றான்.

    மங்களா சிரித்தபடி. அப்படி ஒரு கேள்வியை அவன் கேட்டுட்டது என்னை ஒண்ணும் புண்படுத்திடல்லே. ஏதோ விளையாட்டுத்தனமாக் கேட்டுட்டான். போனாய் போறான்! ஐ டேக் திங்ஸ் ஈஸி என்றாள்.

    பாஸ்கரனுக்குச் சிறிது மனத்தாங்கல் ஏற்பட்டது அவனது முகத்தில் தெரிந்ததைச் சரசு பார்த்தாள். தங்கை ‘மேலே எதுவும் பேசாதே, அண்ணா!’ என்பது போல் தன்னை விழித்துப் பார்த்ததை உணர்ந்த அவன், ஈஸியா எடுத்துண்டா சரி. எல்லாரும் என் ப்ரண்ட்ஸ்தான். ஆனா, ஏமாந்தவங்க ஆப்டா யாருமே ஏமாத்த நினைப்பாங்க. என்றான்.

    தேங்க்யூ! ஆனா அவங்க என்னை என்ன ஏமாத்தப் போறாங்க? எனக்குப் புரியல்லே… எனிவே தாங்க் யூ! என்ற மங்களா புன்னகை செய்தாள்.

    …. மறுநாள் அவள் அந்தப் புத்தக வெளியீட்டாளரின் அலுவலகத்துக்குப் போக வேண்டியதிருந்தது. அவளும் சரசுவுமாகப் போவதாக இருந்தது. ஆனால் அன்று காலை படுக்கையை விட்டு எழும்போதே அவளுக்குத் தலைவலி மண்டையை உடைத்துக் கொண்டிருந்தது. அவளது உடல் நலக் குறைவு வெளிப்படையாகவே தெரிந்ததால் தானே தனியாகப் போய்க் கொள்ளுவதாக மங்களா சொல்லி விட்டாள். பாஸ்கரன் அதிகாலையிலேயே கிளம்பிப் போய்விட்டிருந்தான். ஒன்பதரை மணிக்கு அவள் கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்த வேளையில் கண்ணபிரான் தற்செயலாக வந்தான். அவள் தனியாகப் புறப்படுவதையும் பாஸ்கரன் இல்லை என்பதையும் தெரிந்து கொண்டு? என்னோட ஸ்கூட்டர்ல வந்துடுங்களேன். பப்ளிஷரைப் பார்த்துப் பேசிட்டு அப்படியே மாடினி எதுக்காவது போய்ட்டு வரலாம்… என்றான். அவள் ஒப்புக் கொண்டாள். ஸ்கூட்டரின் பின்னிருக்கையில் தாவி அமர்ந்துகொண்டு கண்ணபிரானின் தோளைப் பிடித்துக் கொண்ட அவளைப் பார்த்து ஒரு பெருமூச்சுடனும் உதட்டளவிலான புன்னகையுடனும் வாசலில் நின்று கையசைத்த சரசு தெரு முனையில் ஸ்கூட்டர் திரும்பி மறைந்த வரையில் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு உள்ளே போனாள்.

    ஸ்கூட்டர் பறந்தது. ஒருமுறை வண்டி மிகவும் குலுங்கியபோது அவள் அவன் மீது சாய நேரிட்டது. அப்போது கண்ணபிரான் கொஞ்சம் தேவையில்லாமலே பின்புறம் சாய்ந்ததாக அவளுக்குத் தோன்றியது. ஆனால் அவன் கருமமே கண்ணாக ஒட்டிக் கொண்டிருந்ததாகவும் பட்டது. ஆவளால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. சரசுவின் எச்சரிக்கை தன்னை அப்படிச் சிந்திக்க அடிகோலியாதாகவும் தோன்றியது. அவள் அப்படியெல்லாம் பேசாதிருந்திருந்தால் கண்ணபிரானைப் பற்றித் தன்னால் ஒருபோதும் தவறாக நினைக்க முடியாது என்றும் நினைத்தாள். இரண்டு நாட்களுக்கு முன்னால், ‘இந்த ஊரில சில ரூட்ஸ்ல பஸ்ல பயங்கரக் கூட்டம் சாயும். தலையிலேருந்து கால் வரைக்கும் ஈஷிண்டு பால்பேதமே இல்லாம ஆம்பிளைகளும் பொம்பளைகளும் ஒட்டி ஒரசிண்டு பிரயாணம் பண்ணும்படி இருக்கும். அது கூட்டத்து நெரிசல்னால மட்டும் ஏற்பட்ட தவிர்க்க முடியாத ஒரசலாய் இருந்தா, அது அருவருப்பாய் இருக்கிறதில்லே, ஆனா, ஒரு ஆம்பிளை வேணும்னுட்டே நம்ம மேலே லேசா ஒரு சதுர அங்குலத்துக்கு ஒரசினாலும் மனசுல ஒரு அருவருப்பு ஏற்பட்டுடும். உடம்பு கூசிடும். ஏன்னா அவன் வேணும்னுட்டே உரசறான்கிறது நமக்குத் தெரிஞ்சு போயிட்றது பாரு, அதனாலே’ என்று பேச்சு வாக்கில் சரசு சொன்னது அப்போது நினைவில் நெருடியது. சரசுவினுடையவும் பாஸ்கரனு டையவும் சிந்தனைகள் தன்னைப் பாதிப்பதாக அவள் உணர்ந்தாள். அது அவளுக்குப் பிடிக்கவில்லை. எனவே தனக்கென்று உள்ள இயல்புடம் இருப்பதென்று தீர்மானித்தாள்.

    வெளியீட்டகத்தை விட்டு வெளியே வந்து இருவரும் ஓர் ஓட்டலுக்குள் நுழைந்தபோது மணி ஒன்று ஆகியது. கண்ணபிரான் தான் செலவழித்தான். சாப்பிட்டு விட்டு இருவரும் ‘சிவப்பு ரோஜாக்கள்’ போனார்கள். கண்ணபிரான் மூன்று நான்கு தடவைகள் அவள் மீது இடித்துவிட்டு ‘ஸாரி’ சொன்னான். அவள் ‘பரவாயில்லை’ என்றாள். தியேட்டரை விட்டு வெளியே வந்தபோது கண்ணபிரான் அவளைப் பார்த்து வெளிச்சத்தில் சிரித்தது சற்று வேறுபட்டுத் தெரிந்தது. பார்வையில் ஓர் ஊடுருவல் இருந்தது.

    சில்னு ஏதாவது கூல்ட்ரிங்க் சாப்பிடணும்போல இல்லே? என்றான்.

    ஆமா, நான்தான் ‘பே’ பண்ணுவேன். அதுக்குச் சம்மதிச்சா, ஓகே. நீங்க சினிமா டிக்கெட்டும் வாங்கிட்டீங்க!

    ஆல் ரைட்..

    சில்லென்று சாத்துக்குடிச் சாற்றைக் குடித்துவிட்டு இருவரும் அந்தச் சின்ன விடுதியை விட்டு வெளியே வந்தனர். ஆறே முக்கால் மணி ஆகியது.

    கொஞ்ச நேரம் காத்தாட பீச்ல உக்காந்துண்டிருந்துட்டுப் போகலாமா? என்றாள்.

    நானே சொல்லணும்னு நினைச்சேன்… என்று அவள் சொன்னதும் அவன் உற்சாகத்துடன் ஸ்கூட்டரை உதைத்தான். அது கிளம்ப மறுத்தது. சிறிது நேரம் போராடியதற்குப் பிறகு கிளம்பியது.

    கடற்கரையில் உட்கார்ந்து இருவரும் பேசத் தொடங்கினார்கள். கண்ணபிரான் பொதுவான விஷயங்கள் பற்றியே பேசினான்.

    ஒரு கனவான் மாதிரித் தோன்றினான். இருட்டத் தொடங்கியது. அவர்கள் தேர்ந்தெடுத்திருந்தது ஓர் ஒதுக்கிடம்.

    அவன் திடீரென்று, நேத்தி நான் ப்ரீ செக்ஸ் பத்தி உங்கனை எல்லார் முன்னாலயும் கேட்டுட்டது ஹர்ட்டிங்கா இருந்ததா? என்றான்.

    அப்படியெல்லாம் இல்லே…

    அவன் சட்டென்று அவள் கையைப் பற்றினான். உங்களுக்குச் சம்மதமானா நாம கூட ஒரு நாள்… -தொடங்கியதை முடிக்காமல் அவன் இளித்தபோது அவள் தன் கையை வெடுக்கென்று விடுவித்துக் கொண்டாள்.

    எழுந்து நின்று, ஆடையில் ஒட்டிக் கொண்டிருந்த மணலைத் தட்டடியவாறு. …ஆர் நாட் யூ மேரீட்? ‘’’ஹேவ் இட் வித் யூர் ஒய்ப்…! என்று சொல்லிவிட்டு அவள் நகரலானாள்.

    மங்களா, என்னை மன்னிச்சுடுங்க. ஐ’ம் வெரி ஸாரி. ஸ்கூட்டர்ல வாங்க. கொண்டு போய் விட்டுடறேன்… என்றவாறு அவன் பின்தொடர்ந்தான்.

    போறும், போறும். ஒரு தரம் நான் உங்களோட ஸ்கூட்டர்ல போனதே போறும்… நான் பஸ்ல போய்க்கிறேன். நீங்க போங்க…

    பாஸ்கர் கிட்ட சொல்லுவீங்களா?

    அவள் திரும்பி அவனைப் பார்த்துச் சிரித்தாள்: "பாஸ்கர் கிட்ட சொல்ல மாட்டேன். உங்க ப்ரண்டஷிப் அழியறதுக்கு நான் காரணமாக மாட்டேன். ஆனா, சரசுகிட்ட மட்டும் சொல்லுவேன்.

    ‘நீ சொன்னது சரிதாண்டி, சரசு. போதுமான பழகக் கூடாதுன்னு நீ எனக்குப் புத்திமதி சொன்னியே,

    அது ரொம்ப சரிடின்னு சொல்லுவேன்’ விலகி விலகியே இதுவரைக்கும் வாழ்ந்துட்டோம். இப்ப திடீர்னு ஒட்டினா பத்திக்கும்.

    அதனாலே சிறுக்ச் சிறுகத்தான் மாறணும்னு அவ ஸ்கூல் டேஸ்லயே அடிக்கடி சொல்லுவா. அது ரொம்ப கரெக்ட்னு அவகிட்ட சொல்லுவேன்" - இப்படி நக்கலாக அறிவித்துவிட்டு அந்த ஏழரை மணி இருட்டில் அவள் தனியாகப் பேருந்து நிறுத்தும் நோக்கி விரைந்தாள்.

    -      1981

    2

    விட்டுக் கொடுத்தால்…

    சொக்கலிங்கம் சமையற்கட்டுக்குள் எட்டிப் பார்த்தான். செங்கமலம் அடுப்பிலிருந்து பாலை இறக்கிக் கொண்டிருந்தாள். அவனது காலடியோசை கேட்டுத் திரும்பிப் பார்த்தாள்.

    காபி போட்டாச்சா?

    எல்லாம் போட்டாச்சு என்றவாறு அவள் அடுப்பில் பாத்திரத்தை ஏற்றி அவனுக்குக் காபி கலக்கலானாள்.

    அந்த ‘எல்லாம் போட்டாச்சு’வில் அவன் அவளது எரிச்சலைப் புரிந்து கொண்டான். மனத்துள் சிரித்துக் கொள்ளவும் செய்தாள்.

    அவள் காபியைக் கலந்து ஆவி பறக்கத் தம்ளரில் அதை ஊற்றிச் சமையல் மேடையில் ஓர் ஓரமாக நகர்த்தி வைத்துவிட்டு, எடுத்துக்குங்க என்றாள்.

    அவனுக்குச் சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது.

    என்ன? கோவம் இன்னும் தணியல்லியா?

    என் கோவம் யாரை என்ன செய்யும்? அது தணிஞ்சா என்ன, தணியாட்டி என்ன?

    அடியம்மா! அவ்வளவு கோவம் வந்திருக்குதா உனக்கு? அப்ப அது லேசிலே தணியற கோவம் இல்லைன்னு சொல்லு.

    பின்னே என்ன? மத்தவங்களுக்காகக் கொஞ்சம் விட்டுக்குடுத்தா என்ன? கொறஞ்சா போயிறுவீங்க?

    இதில் விட்டுக் குடுக்கிறதுங்குற பேச்சுக்கே எடமில்லே, செங்கமலம்! யாரு யாருக்கு விட்டுக் குடுக்கிறது? எதுக்கு விட்டுக் குடுக்கிறது? நான் உன் வழிக்கு வர்றேனா? அதுமாதிரி நீயும் என் வழிக்கு வராம இருக்கணும். அதுதான் நியாயம்!

    ஆங், பொல்லாத நியாயத்தைக் கண்டுட்டீங்க… -செங்கமலம் ஆத்திரமாகச் சொன்னாலும், தன் பக்கம் போதுமான வலுவில்லை என்பதை உணர்ந்து கொண்டு விட்டதற்கான சோர்வுடன் குரல் கொஞ்சம் இறங்கி விட்டதைப் பார்த்துச் சொக்கலிங்கம் வாய்விட்டே சிரித்தான். அவள் திரும்பி எரிச்சலாக அவனைப் பார்த்துவிட்டு ‘ணங்’ கென்று எதையோ அடுப்பில் ஏற்றித் தன் வேலைகளைக் கவனிக்கலானாள்.

    பாத்திரம் நசுங்கிறப் போகுது! என்று கூறிப் பெரிதாகச் சிரித்துவிட்டு அவன் அப்பால் நகர்ந்தான். தனக்கும் தன் செயல்பாட்டிலும் உள்ள கொள்கை வேறுபாட்டைப் பற்றிய எண்ணங்களில் ஆழ்ந்தான். படிப்பு ஓடவில்லை.

    ‘இவள் ஏன் இப்படி என் சொந்த விஷயங்களில் எல்லாம் மூக்கை நீட்டுகிறாள்? அடுத்தாற்போல் நான் இவள் சொந்த விஷயங்களில் தலையிடுகிறேனா? இதை ஏன் இவள் புரிந்துகொள்ள மாட்டேன் என்கிறாள்? கடவுள் நம்பிக்கை எனக்கு இல்லா விட்டாலும், ஆயிரத்தெட்டுச் சாமி படங்களை மாட்டி வைத்துக்கொண்டு இவள் விளக்கேற்றிக் கும்பிடுவதற்கு நான் தடை சொல்லுவதில்லை. ஆனால், இவள் சாமி கும்பிடுவது மாதிரி நானும் சாமி கும்பிட வேண்டும் என்று இவள் எதிர்பார்ப்பது எப்படிச் சரியாகும், சில கணவன்மார்கள் தங்கள் கொள்கைகளை மனைவிகளில் மீது திணிப்பார்க்ள. அப்படிச் செய்யாது நான் பெருந்தன்மையுடன் அவள் விருப்பம்போல் அவள் சாமி கும்பிடலாம் என்று சொல்லியிருக்கையில் இவள் கொஞ்சம் கூட விட்டுக் கொடுக்கிற தன்மையே இல்லாமல் தனது நம்பிக்கையை என்மீது வலுக்கட்டாயமாகத் திணிக்கப் பார்ப்பது என்ன நியாயம்? இந்தச் சின்ன நியாயம் இவளுக்கு ஏன் புரியவில்லை?’ என்றெல்லாம் தனக்குள் எண்ணியவாறு அவன் தன் கையிலிருந்த புத்தகத்தின் தாள்களை வெறுமே புரட்டியவாறு உட்கார்ந்து கொண்டிருந்தான்.

    வேந்நீர் வெளாவி வெச்சாச்சு! குளிக்க வர்றிங்களா? என்கிற கடுப்பான குரலின் ஒலிப்பில் எண்ணங்கள் கலைந்து அவன் புத்தகத்தை மூடி வைத்துவிட்டுத் தலையை உயர்த்தி அவளைப் பார்த்தான். சிரித்தான். பிறகு சோம்பல் முறித்துக்கொண்டே எழுந்து அவளைப் பின்தொடர்ந்து போனான். அவள் தன்னை அவன் மனத்துள் கேலி செய்து சிரித்ததாக எண்ணிய சினத்தில் முகம் சிவந்து அதை உர்ரென்று வைத்தவாறு அகன்ற தப்படிகளில் நடந்தாள். அதைப் பார்த்து அவனுக்கு இன்னும் சிரிப்பு வந்தது.

    என்னது, ராணியம்மா கோவம் தணியவே தணியாதாக்கும்?

    போறும் நிறுத்துங்க. ஒரு சின்ன விஷயத்திலே விட்டுக் குடுக்க மாட்டேங்கறீங்களே? நீங்க என்ன புருசன்?

    விட்டுக் குடுக்கிறதுன்னு ஒரு தப்பான வார்த்தை சொல்றியே, செங்கமலாம்? நான் உன் வழிக்கு வர்றேனா? நான் நாஸ்திகன். ஆனா, சாமி கும்பிடக் கூடாதுன்னு உன்னைய வற்புறுத்தறேனா? என் சிநேகிதங்க என் வீட்டிலே சாமி படங்க தொங்குறதுக்கு என்னைய எப்டிச் கேலி செய்யிறாங்க தெரியுமா?’ நான் கும்பிடல்லேங்கிறதுக்காக என் மனைவியை நான் கட்டுப்படுத்த மாட்டேன், அது மனுசத்தனம் இல்லே’ன்னு நான் பதில் சொல்றதுண்டு. அது மாதிரி உனக்குப் பிடிச்சதை நானும் செய்யணும்னு நீ வற்புறுத்தக் கூடாது…

    நான் என்ன இப்ப உங்களைக் கோயில் கொளம்னு கூட வாங்கன்னு கூப்பிட்டேனா? நாளுங்கிழமையுமாப் பளைள வேட்டியிலே சுத்தாதீங்கன்னு சொல்றேன். அம்புட்டுத்தானே? அதுல கூடவா உங்க பிடிவாதம்?

    செங்கமலம், இதோ பாரு. எனக்கு எல்லா நாளும் நல்ல நாள்தான். நாளும்கிழமை, அது இதுன்னு எனக்கு நம்பிக்கை இல்லே…

    "சரி, அப்படியே இருக்கட்டும். எல்லா நாளும் ஒரே மாதிரிதான்னு சொல்றீங்களே? மத்த நாள்ளே புதுசு கட்றதில்லையா நீங்க? அந்த மத்த நாள்ளே ஒரு நாளா இதை நினைச்சு நீங்க ஏன் நாளைக்குப் புதுசு கட்டக்கூடாதுன்னு தான் கேக்கறேன். உள்ளே இருக்குற புதுத்துணியை நாளைக்கு ஞாபகமாக் கட்டாம இருக்கணும்னு அப்படி என்ன ஒரு பிடிவாதம் உங்களுக்கு? ஒர சாதாரண நாளாய் நினைச்சு நாளைக்கு நீங்க அதை உடுத்துனா அது எப்படி உங்க

    Enjoying the preview?
    Page 1 of 1