Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mouna Yutham
Mouna Yutham
Mouna Yutham
Ebook677 pages6 hours

Mouna Yutham

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் என்ற ஊரில் பிறந்த நான், சிறு வயது முதலே வாசிப்பில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்தேன். சிறுகதைகள், கவிதைகள் பக்கம் இருந்த என் கவனத்தை, எங்கள் ஊரில் இருந்த நூலகம், நாவல் பக்கம் திருப்பியது.
கல்லூரிப் படிப்பு, வேலை, திருமணம் என என் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும், புத்தகம் எனக்கு உற்ற தோழியாக இருந்தது மட்டும் உண்மை. ஒரு கட்டத்தில், எனக்குள் இருந்த எழுத்தார்வம் தலை தூக்க, என் வாழ்க்கைத் துணைவரின் ஒத்துழைப்போடு என் எழுத்துப் பயணம் இனிதே துவங்கியது. இப்பொழுதுதான் துவங்கியதுபோல் இருந்த என் எழுத்துப் பயணத்தில்..., ஒவ்வொரு கதையையும் என் முதல் கதையாகவே கருதி எழுதுகிறேன். ஒவ்வொரு கதையின் கருவை தேர்ந்தெடுப்பதும், அதை சுற்றிய என் கற்பனையை விரிவு படுத்துவதிலும், ஒரு தனி கவனம் செலுத்தியே என் படைப்புக்களை படைக்கின்றேன்.
என் வாசிப்பு ரசனை எப்பொழுதும் பொழுதுபோக்கு சார்ந்ததாகவே இருக்கும். எனவே என் படைப்புக்களும் சிறந்த பொழுதுபோக்கு அம்சம் நிறைந்ததாகவே இருக்கும்.
புத்தக வடிவில் உரு மாறிய என் கதைகள், அடுத்த கட்டமாக மின்நூல்களாக உங்கள் வீட்டுக்கு வருவதை எண்ணி மிகுந்த சந்தோஷமடைகிறேன். ‘புஸ்தக்’ நிறுவனத்தோடான என் பயணம் இனிமையாக இருக்கும் என எண்ணுகிறேன். என் படைப்புக்களை வாசிக்கும் நீங்களும், உங்கள் கருத்துக்கள், நிறைகள், குறைகள் என அனைத்தையும் என் infastories@gmail.com என்ற முகவரிக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் கருத்துக்களை அறிய ஆவலாக காத்திருக்கிறேன்.
Languageதமிழ்
Release dateApr 22, 2018
ISBN6580109201146
Mouna Yutham

Read more from Infaa Alocious

Related authors

Related to Mouna Yutham

Related ebooks

Reviews for Mouna Yutham

Rating: 3.8598130841121496 out of 5 stars
4/5

107 ratings3 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 5 out of 5 stars
    5/5
    How to read this book
    Fulla read panna mudiyala please help me.
  • Rating: 4 out of 5 stars
    4/5
    mam novel full ah padika mudila interesting ah iruku padika

    14 people found this helpful

  • Rating: 5 out of 5 stars
    5/5
    nice story. very interesting. Infaa mam, I am reading all ur stories every story is unique and excellent

    3 people found this helpful

Book preview

Mouna Yutham - Infaa Alocious

http://www.pustaka.co.in

மெளன யுத்தம்…….

Mouna Yutham…….

Author:

இன்பா அலோசியஸ்

Infaa Alocious

For more books

http://www.pustaka.co.in/home/author/infaa-alocious

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

பொருளடக்கம்

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

அத்தியாயம் 3

அத்தியாயம் 4

அத்தியாயம் 5

அத்தியாயம் 6

அத்தியாயம் 7

அத்தியாயம் 8

அத்தியாயம் 9

அத்தியாயம் 10

அத்தியாயம் 11

அத்தியாயம் 12

அத்தியாயம் 13

அத்தியாயம் 14

அத்தியாயம் 15

அத்தியாயம் 16

அத்தியாயம் 17

அத்தியாயம் 18

அத்தியாயம் 19

அத்தியாயம் 20

அத்தியாயம் 21

அத்தியாயம் 22

அத்தியாயம் 23

அத்தியாயம் 24

அத்தியாயம் 25

அத்தியாயம் 26

அத்தியாயம் 27

அத்தியாயம் 28

அத்தியாயம் 29

அத்தியாயம் 30

அத்தியாயம் 31

அத்தியாயம் 32

அத்தியாயம் 33

அத்தியாயம் 34

அத்தியாயம் 35

அத்தியாயம் 36

அத்தியாயம் 37

அத்தியாயம் 38

அத்தியாயம் 39

அத்தியாயம் 40

அத்தியாயம் 41

அத்தியாயம் 42

அத்தியாயம் 43

அத்தியாயம் 44

அத்தியாயம் 45

அத்தியாயம் 46

அத்தியாயம் 47

அத்தியாயம் 48

அத்தியாயம் 49

அத்தியாயம் 50

பகுதி – 1.

பார்வைகள் பேசும் மொழியில்

ஜாடைகள் பேசும் அழகில்

உன் மௌனம் கூட மொழியாய்..................

நூறு கிலோமீட்டர் வேகத்தில் அந்த ஹோச்பிட்டலின் வளாகத்தில் நுழைந்தது அந்த BMW கார். வேகத்தை குறைக்காமலேயே கதவை திறந்து, கார் அங்கிருந்த தூணில் மோதுவதைக் கூட கவனிக்காமல் தனக்கு அடிபடும் என்ற உணர்வும் இல்லாமல் குதித்து விழுந்து எழுந்து ஓடினான் நம் கதையின் நாயகன் ராம், ரகு ராம்.

அங்கிருந்த செக்யூரிட்டி அவனை தடுக்கவில்லை, திட்டவில்லை எதுவும் செய்யாமலேயே, "தம்பிக்கு அடி பட்டுருக்குமே, அதையும் கவனிக்காமல் இப்படி போறார், அப்படி என்ன அவசரம்?.

அதுவும் ராம் தம்பி மாதிரி இருக்கு?. இவர் எப்போ ஊர்ல இருந்து வந்தார்?.

அவருக்கு தெரிஞ்சவங்க யாராவது இங்கே உடம்பு சரியில்லாமல் சேர்ந்து இருக்காங்களா?. எப்பவுமே நிதானமா இருப்பாரே?", யோசனையுடன் அவன் நிறுத்தி சென்றிருந்த காரை,

மன்னிக்கவும் இடித்து தள்ளிவிட்ட காரை டிரைவர் உதவியுடன் மீட்டு நிறுத்தும் முயற்சியில் இறங்கினார்.

உள்ளே சென்ற ராமோ, குறுக்கே வந்த ஸ்ட்ரெச்சர், நர்ஸ், டாக்டர்ஸ், ஆட்கள் அனைவரையுமே இடித்து தள்ளிவிட்டு ஒரே மூச்சாக ICU க்குள் புகுந்தான்.

அவனை யாரும் எதுவும் சொல்லவில்லை. ஆச்சரியமாகவே பார்த்தார்கள். ராமா இப்படி என்ற ஆச்சரியம் மட்டுமல்ல, இப்படி ஆகிவிட்டதே என்ற சோகமும் அவர்கள் கண்களில் தெரிந்தது.

மாடிப் படிகளை இரண்டு இரண்டாக தாவியவன் நேராக சென்று ICU வின் கதவை தள்ளி திறந்து யாரின் அனுமதி இன்றி உள்ளே நுழைந்தான்.

அங்கே ஒரு கட்டிலை சுற்றி நான்கு ஐந்து மருத்துவர்கள் நின்றிருக்க, அந்த படுக்கையில் படுத்திருந்த நோயாளியின் உடலில் இனி குத்துவதற்கு எந்த இடமுமே பாக்கி இல்லை, என்ற நிலையில் படுத்திருந்த அந்த நோயாளியை பரிசோதித்துக் கொண்டிருந்தனர்.

அனைவரின் முகங்களிலும் கவலை மண்டிக் கிடந்தது. அவர்கள் யாரையுமே சட்டை செய்யாமல், ஜெய் நான் வந்துட்டேண்டா, சொன்னவாறு மருத்துவர்களை விலக்கிவிட்டு ஜெய் என்று அழைக்கப்படும் ஜெய் ராமின் அருகில் சென்றான்.

உடம்பு முழுக்க கட்டுகளும், அவன் உயிரைக் காக்க பொருத்தப் பட்டிருந்த உபகரணங்களையும், செயற்கை சுவாச கருவிகளையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, தன் இரட்டை சகோதரனான ஜெய்யை கண்ணீர், பார்வையை மங்கலாக்க, இதயம் பிளக்கும் வலியுடன் பார்த்தான் ராம்.

படுத்திருந்த ஜெய் இவன் வரவுக்காகவே காத்திருந்தவன் போல கண்களை திறந்து அவனைப் பார்த்தான்.

அவன் இதழ்களில் புன்னகை அரும்பியது. வா ராம், இயலாத நிலையிலும் தன் சகோதரனைக் கண்ட மகிழ்ச்சி அவன் கண்களில் தெரிந்தது.

வந்துட்டேண்டா உனக்கு எதுவும் ஆகாது. நீ நல்லாதான் இருக்க, உனக்கு நான் இருக்கேண்டா, சொன்னவாறு அவன் கையை பிடித்துக் கொண்டான் ராம்.

எனக்கு தெரியும் நீ வருவன்னு. எனக்கு ஏதாவது ஒண்ணுன்னா நீ வராமல் இருப்பியா, கேட்டவாறு சோபையாக சிரித்தான்.

டேய் இனிமேல் இப்படி பேசுனா நானே உன்னை.........., இல்லடா நீ பேசாதே, டாக்டர் நீங்க சொல்லுங்க அவனுக்கு பயப்படுற மாதிரி இல்லன்னு சொல்லுங்க, ஜெய்யை விட்டு மருத்துவர்களிடம் கேட்டான்.

அவனது கேள்விக்கு பதில் சொல்லும் நிலையில்தான் யாரும் இல்லை. ராமின் தோளை அவனது நண்பன் பரத் அழுத்தினான்.

அவனது அழுத்தத்தில் அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்க, அவன் பார்வை சென்ற இடத்தை தொடர்ந்தது ராமின் பார்வை. அங்கே ஜெய்யின் இதய துடிப்பை காட்டிய கருவி தாறு மாறாக எகிறிக் கொண்டிருப்பதை காட்டியது.

சட்டென பார்வையை விலக்கி ஜெய்யைப் பார்க்க அவன், நான் என்னோட நிமிஷங்களை எண்ணிட்டு இருக்கேன்னு எனக்கு தெரியும், திணறி பேசினான்.

அப்படியெல்லாம் எதுவும் இல்லடா, அவனிடம் சொல்லிவிட்டு மருத்துவர்களிடம் திரும்பினான்.

ஏன் எல்லோரும் இப்படி மரம் மாதிரி நிக்கறிங்க, ஏதாவது செய்யுங்க. பரத் நீயாவது ஏதாவது பண்ணுடா, அவன் கைகளை பிடித்து கெஞ்சினான்.

ராமின் கெஞ்சல் அனைவரின் கண்களையும் குளமாக்கியது. ஜெய்யின் உயிரை பிடித்துவைக்கும் சக்தி அங்கே யாருக்கும் இல்லை என்பது அவர்களின் பார்வையிலேயே தெரிந்தது.

ராம், இங்கேபார் எனக்கு நேரம் ரொம்ப கம்மியா இருக்கு. அதுக்கு முன்னாடி நான் செய்ய வேண்டியதை செய்தே ஆகணும், தீர்மானமாக பேசினான்.

அப்படியெல்லாம்............,

ராம் என்னை பேசவிடு, எனக்கு பேசியே ஆகணும். இப்போ நீ அழுற நேரமில்லை இது. எனக்கு ஒரு வாக்கு தா, நான் எதை சொன்னாலும் தட்ட மாட்டேன்னு, அவன் கைகளை அசைக்க முயன்றான்.

அவனால் முடியவில்லை, அவன் கைகளை ராமே பற்றிக் கொண்டான். எதுவாக இருந்தாலும் சொல்லுடா நான் நிறைவேற்றி வைக்கிறேன், உடனடியாக வாக்கு கொடுத்தான்.

ராம் முதல்ல கண்ணை துடை, என்னை பார், என் பக்கத்தில் இருக்கும் சேரை பார்.

அப்பொழுதுதான் தன் இரட்டை சகோதரனை முழுமையாக பார்த்தான். அவனது தோற்றத்தில் சிறு வித்தியாசம் தெரிந்தாலும் என்னவென்று புரியவில்லை. ஆனால் பக்கத்தில் இருந்த சேரில் இருந்தது ஒரு பட்டு வேஷ்டி சட்டை. அதுவும் ரத்தத்தில் தோய்ந்து  இருந்தது. அதில் இருந்த ரத்தத்தை வைத்தே அது ஜெய்போட்டிருந்த உடையாகத்தான் இருக்கும் என்ற சந்தேகம் எழுந்தது அவனுக்கு.

ஜெய் ஏதாவது கல்யாணத்துக்கு போயிட்டு இருந்தியா, நான் ஏதாவது உதவி செய்யணுமா, அந்த ஆடையை பார்த்து கேட்டான்.

ஜெய், பரத்தை பார்க்க, அவன் வேகமாக சென்று, ICU வின் நடுவில் வைக்கப் பட்டிருந்த தடுப்பை நீக்கினான்.

அவர்களது செய்கையை புரியாமல் பார்த்தவன், பக்கத்து படுக்கையில் படுத்திருந்த பெண்ணைப் பார்த்து முழுதாக அதிர்ந்தான்.

ஜெய்........., அதிர்ச்சியாக அவனைப் பார்க்க, ஜெய் மருத்துவர்களைப் பார்க்க அனைவரும் வெளியேறினர்.

என்னோட வாழ்க்கை............ , இப்போ உன்னோட வாழ்க்கை..........., பொடி வைத்து பேசினான்.

ஏன்டா இப்படி செஞ்ச, நீ என்ன அனாதையா உனக்கு நாங்க எல்லாம் இல்ல, இப்படி............., பேச்சை பாதியில் நிறுத்தினான்.

என் சூழ்நிலை அப்படி, தயக்கம் அவன் குரலில் எட்டி பார்த்தது.

ஜெய் எல்லாத்திலும் உனக்கு அவசரம் எனக்கு அது நன்றாகவே தெரியும். ஆனால் இப்படி அவசரமாக கல்யாணம் செய்யுமளவு என்ன தலை போகும் காரியம், என்னிடமாவது சொல்லி இருக்கலாமே ஜெய், கொஞ்சம் கோபம் கலந்து கேட்டான்.

என் வாரிசு அவ வயிற்றில் வளருதுடா..........., கண்கள் கலங்கி கண்ணீர் வழிந்தது அவன் கண்களில். 

"என்..... என்ன........, நீ அவசரக்காரன்னு தெரியும். இப்படி உன் வாழ்க்கையிலுமா அவசரப்படுவ. சரி எல்லாவற்றையும் நான் பாத்துக்கறேன்.

அவ இனிமேல் என் பொறுப்பு. அவளையும் அவ குழந்தையையும் நான் பாத்துக்கறேன், இப்போ நீ எதையும் யோசிக்காதே", உறுதி கூறினான்.

என.....க்கு  அ....து  மட்.....டும் போதாது, திணறினான் அவன்.

இதுக்கும் மேல என்னடா செய்யணும், அவன் கைகளை இறுக பற்றிக் கொண்டு கேட்டான். இப்பொழுது அவன் இருக்கும் நிலையில் உன் உயிரை தா என்று கேட்டால் கூட கொடுக்கும் நிலையில் இருந்தான் ராம்.

முதல்லையே சொன்னேனே..........., என் வாழ்க்கை............ இனிமேல் உன் வாழ்க்கைன்னு, முழுதாக திணறினான்.

இங்கே இருவரும் போராடிக் கொண்டிருக்க, அந்த படுக்கையில் படுத்திருந்த அவளோ பதுமையென படுத்திருந்தாள். வெங்காய வண்ண பட்டில், முழு ஜரிகை வேலைப் பாட்டுடன், அதை நேர்த்தியாக உடுத்திருந்தாள் அவள்.

அவளுக்கு கையில் சின்ன சின்ன சிராய்ப்பும். தலையில் சின்ன கட்டு மட்டுமே போட்டிருந்தது. கன்னத்திலும் சிறு சிராய்ப்புகள் இருந்தன.

ஜெய் நீ என்ன சொல்ல வாற, புரிந்தும் புரியாமல் கேட்டான்.

என் கண்ணை பார்த்து சொல்லு, நான் சொல்லுவது புரியவில்லை என்று, ஜெய் கேட்டான்.

ராம் மிகவும் புத்திசாலிதான், அனைவரின் கண்களின் மொழியை வைத்தே அவர்கள் என்ன நினைக்கின்றார்கள் என்று புரிந்துகொள்ளும் வல்லமை உள்ளவன்தான்.

ஆனால் இன்று சகோதரனின் நிலைக்கு முன்னால் அவன் மூளை வேலை செய்யவில்லை.

ஜெய் அதுதான் நான் பாத்துக்கறேன்னு சொன்னேனே இன்னும் என்ன.

"நீ பாத்துப்ப எனக்கும் அது தெரியும். நீ அவளை உரிமையா பாத்துக்கணும். என் குழந்தைக்கு அப்பாவா இருக்கணும். நம்ம குடும்பத்தில் பெண் வாரிசே கிடையாது, அது இந்த தலைமுறையோட போய்டும்.

அவ வயிற்றில் என்னோட பொண்ணு இருக்கா, நானே பொண்ணா பொறப்பேண்டா. இதெல்லாம் நடக்கணும்னா நீ அவ கழுத்தில் இந்த தாலியை கட்டணும்", சொன்னவாறு தன் படுக்கையின் அருகில் இருந்த மாங்கல்யத்தை, கைகள் நடுங்க, கையை அசைக்க முடியாத அந்த வேதனையையும் தாங்கியவாறு எடுத்து அவன் கையில் கொடுத்தான்.

இப்போ எதுக்குடா இதெல்லாம், அதுக்கு அவ சம்மதிக்கணுமே. என்னால் இது முடியாது ஜெய், கண் கலங்க சொன்னான்.

உன்னால் கண்டிப்பா முடியும் ராம்.

என்னால் முடியவே முடியாது ஜெய், இது அவளுக்கு செய்யும் துரோகம். அவ சுய நினைவில் இல்லாத போது..........

நீ அவ கழுத்தில் தாலி கட்டவில்லை என்றால்தான் துரோகம் ராம். உனக்கும் எனக்கு உருவ ஒற்றுமை ஒன்றே. நம்முடன் பழகியவர்களால் மட்டுமே நம் நடத்தையை வைத்து வித்தியாசம் கண்டு பிடிக்க முடியும். அப்படி இருக்கும் போது, என்ன தயக்கம் உனக்கு.

அவ இதுக்கு எப்படி சம்மதிப்பா........., அவன் தயக்கத்தை விடுவதாக இல்லை.

அவளை உன்னால் மாற்ற முடியும் ராம்............, அவன் உறுதியாக பேசினான்.

ராம் இன்னுமே தயங்கவும், ஜெய் ஒரு வெடியை கொளுத்தி போட்டான். அது சரியாக வேலை செய்தது.

ராம் அவ உன்னோட சீதா தான்..........., நிதானமாக சொன்னான்.

ஜெய்............., அவன் அதிர்ச்சியாக கேட்கவும்,

எனக்கு எல்லாம் தெரியும். இப்போ கட்ட போறியா இல்லையா, அவன் முகம் இறுக கேட்டான்.

ராமால் மேலே மறுத்து பேச முடியவில்லை. தன் வாழ்வின் ரகசியத்தை ஜெய் நொடியில் உடைத்ததில் சில்லிட்டு போனான்.

மாங்கல்யத்தை எடுத்துக் கொண்டு அவள் அருகில் நெருங்கினான். ஜான்வி..........., ஜான்வி............, மெதுவாக அழைத்தான்.

ஜெய் விரிந்த புன்னகையுடன் பார்த்தவாறே இருந்தான். ஜான்வி மெதுவாக கண் விழித்தாள். விழித்தவள் மலங்க மலங்க பார்த்தாள்.

கட்.....டு.....டா................., ஜெய் தன் கடைசி மூச்சை வைத்துக் கொண்டு பேசினான்.

அவன் திணறல் குரலில் எழுந்து அமர்ந்தாள் ஜான்வி. அவள் எழுந்து நிற்கவும் அவள் சுதாரிக்கும் முன்னர் அவள் கழுத்தில் தாலியை கட்டினான் ராம்.

அவள் கையை பற்றியவாறு ஜெய்யின் அருகில் வந்தான். அவன் பிடியிலிருந்து தன் கையை உருவிக் கொண்டு ஜெய்யின் மார்பில் வந்து விழுந்தாள் அவள்.

ராம்......... ராம்........... ஏன் இப்படி செஞ்சீங்க. நான் உங்களுக்கு என்ன கெடுதல் செஞ்சேன். இப்படி செஞ்சுட்டிங்களே, தாலியை காட்டி அவனிடம் கண்ணீர் வடித்தாள்.

ஜானு....... அவன்தான் உன் ராம்...... . நான்தான் அவன். இனிமேல் உன் வாழ்க்கை அவனோடுதான். ராம் உன் பொண்டாட்டியை பிடிடா, அவன் குறும்புத்தனம் மீள பேசினான்.

ராம்......... ராம்..........., கைகளை அசைக்க ராம் அருகில் வந்தான். ஜெய்யின் கைகளை பிடித்தான்.

இருவரின் கைகளையும் பிடித்துக் கொண்டான். ராம் கிஸ் ஹெர், திடீரென சொன்னான்.

இருவருமே அதிர்ந்தனர். ஜெய் அதெல்லாம் முடியாது. நான் டாக்டர்களை கூப்பிடுறேன், விலகப் போனான்.

ராம் ஏன் இப்படி என்னை வதைக்கிறங்க, முகத்தை மூடிக் கொண்டு விம்மினாள்.

நீங்க என் கண் முன்னாடியே வாழ்க்கையை துவங்கணும், கண்கள் மின்ன கனவில் பேசுபவன்போல் பேசினான்.

இருவரும் அசையாமல் நிற்கவே, ராம் என் கடைசி ஆசை, அவன் அம்பு எய்தான்.

அது சரியாக வேலை செய்ய, ஜான்வியை நெருங்கினான் ராம். அவள் பின்னால் விலகவும் ஜெய்யின் குரல் தடுத்தது அவளை.

ஜானு........, என்னை நிம்மதியா அனுப்பி வை, கெஞ்சினான் அவன்.

‘உங்க நிம்மதிக்காக என் மனசை கொல்லுறிங்களே’, மனதுக்குள் போராடியவாறு அசையாமல் நின்றாள்.

ராம் அவள் நெற்றியில் இதழ் பதிக்க போகையில் மீண்டும் குறுக்கிட்டான் ஜெய்.

ராம்.......... கிஸ் லைக் எ லவ்வர்........... நாட் லைக் எ பிரதர்.........., அவன் சொல்ல வருவது புரிய,

ஜான்வி இன்னும் உறைந்தாள். கண்ணீர் மடைதிறந்த வெள்ளமாக பாய, இமைகளை மூடி கட்டில் காலை கைகளால் இறுக பற்றிக் கொண்டான்.

ராம் அவளை நெருங்கினான், திரும்பி ஜெய்யை பார்க்க, அவன் இதழில் உறைந்த புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருப்பது புரிந்தது.

ஜான்வியின் கன்னங்களில் கைகளைத் தாங்கி அவள் முகத்தையே உற்று பார்த்தான். அவள் இமைகளை இறுக மூடி இருந்தாள்.

சீதா............, அவனுக்கே கேட்காத குரலில் அழைக்க, இமைகளை வேகமாக திறந்து அவனைப் பார்த்தாள்.

அவள் இமைகளை பிரிக்கவும், மென்மையாக மிகவும் மென்மையாக அவள் இதழ்களை தன் இதழ்களால் பட்டும் படாமல் தீண்டி விலகினான்.

அவனது சீதா என்ற அழைப்பில் உறைந்து நின்றாள் அவள்.

பகுதி - 2.

பேசாத வார்த்தையில் இருக்கும்

ஆயிரம் அர்த்தங்கள் புரிந்த பொழுது

உன் மௌனமே மொழியாய்................ 

ராம் ஐ’ம் சாரி, சாரி போர் எவ்ரிதிக் ஐ ஹேட் டன் டு யூ, சொல்லிவிட்டு அவன் கண்களும் இதழும் அவ்வாறே நிலைத்தது. ஜெய்யின் உயிர் அவன் உடலை விட்டு விடை பெற்றிருந்தது.

ராம் அவளிடமிருந்து விலகி ஜெய்யை நெருங்கினான். ஜெய் முகத்தில் புன்னகை உறைய அதே பார்வையுடன் அமைதியாய் இருந்தான்.

அவன் மௌனம் அவர்களை அலைக்களிக்க, ஜான்வி அவனை நெருங்கி உலுக்கினாள். ராம் ராம் ராம்............ ராஆஆஆஆ...........ம்.

அவள் கூச்சலில் வெளியில் இருந்த பறவைகள் கூட்டம் கூட சிறகடித்துப் பறந்தது.

ராம் என்ற கூச்சலில் மயங்கி சரிந்தாள் அவள். அவளை ஓடிச் சென்று தாங்கிக் கொண்டான். அவளை தூக்கி பக்கத்து படுக்கையில் படுக்க வைத்தான்.

பரத்..........., ராமின் சத்தத்தில் அனைத்து மருத்துவர்களும் உள்ளே வந்தார்கள்.

பரத் வந்து ராமின் தோளை அழுத்த, "இவ்வளவு பெரிய ஹோச்பிட்டல் இருந்து என்ன பிரயோஜனம்டா, என் ஜெய்யை காப்பாத்த முடியலையே.

இது எப்போ எப்படி நடந்துது, எந்த வண்டி இவன் உயிரை வாங்கியது. எனக்கு உடனே தெரிஞ்சு ஆகணும்", கண்கள் சிவக்க  ராம் கேட்டான்.

"ராம் உன்னோட ஆதங்கத்தில் நியாயம் இருக்கு. ஆனால் அந்த வண்டியை ஓட்டிட்டு வந்த ஆள்மேல் தப்பே இல்லையாம் அதை ஜெய்யே சொல்லிட்டான். அதுமட்டும் இல்லை ஜெய்யையும் அந்த பொண்ணையும் கூட்டி வந்து சேர்த்ததும் அந்த ஆள்தான்.

நானும் போலீசுக்கு தகவல் கொடுத்தேன். ஜெய் மரண வாக்குமூலம் கொடுத்ததால்..........", ராம் புரிந்ததற்கு அடையாளமாக தலையை ஆட்டினான்.

"அவனுக்கு எல்லாவற்றிலும் அவசரம், அது அவனோட மரணத்திலும் நடக்கும்னு நான் எதிர் பார்க்கவே இல்லை பரத். இப்போ எப்படி நான் என் வீட்டில் சொல்லுவேன்.

என் அம்மாவோட செல்ல பிள்ளை அவன். அவங்க எப்படி தாங்குவாங்க", தாங்க முடியாமல் விம்மி அழுதான்.

வாழ்க்கையின் எதார்த்தங்களை ஏற்றுக் கொண்டுதான் ஆகணும் ராம். நீயே இப்படி சோர்ந்து உக்காந்துட்டா மேலே நடக்கவேண்டிய விஷயங்களை யார் கவனிப்பாங்க. எழுந்து நடக்க வேண்டியதை கவனி, அவனை தேற்றினான்.

"என்னால் முடியலையேடா நான் பிறந்ததுமுதலே என்னோட வளர்ந்தவன். இப்போ இரண்டு வருஷமாதான் நான் அவனோட இல்லை.

ஆனால் இனிமேல் காலம் முழுவதும் அவன் வரவே போவதில்லை என்பதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியலை பரத். அவனுக்கு இப்படி ஒரு முடிவு காத்துக் கொண்டிருப்பது தெரிந்திருந்தால் நான் அவனை விட்டு சென்றே இருக்க மாட்டேன்", சொல்லிவிட்டு குலுங்கி அழுதான்.

"இப்படியே எவ்வளவு நேரம் உக்காந்து இருக்க போற, எழுந்து ஆகவேண்டிய காரியங்களை கவனி. இல்லையென்றால் நீ இரு அனைத்தையும் நானே பார்த்துக் கொள்கிறேன்.

சரி அந்த பெண்ணை என்ன செய்வதாக இருக்கிறாய். அவளோட ஹெல்த்துக்கு ஒரு ரெண்டுநாள் அவ இங்கேயே இருந்தால் நன்றாக இருக்கும். பிறகு என்ன செய்வதென்று யோசிக்கலாம்.

நீ எப்போ லண்டனில் இருந்து வந்தாய். இல்லை நாம அதைப் பற்றி பிறகு பேசலாம்", கேள்வியும் நானே பதிலும் நானே என்ற நிலையில் பேசிக் கொண்டே இருந்தான் அவன்.

பரத் இப்போ அவ என் ஒய்ப். அதனால் அவளையும் நான் கூடவே கூட்டி போக போகிறேன். எதற்கும் நீ ஒரு நர்ஸ்சை ஏற்பாடு செய். அதுவும் அவங்க ஒரு இரண்டு நாள் அவளோடவே இருக்கணும், இறுகிய குரலில் கூறினான்.

மனைவியா......... கல்யாணம்............, மேலே கேட்கப் போனவன் ஜான்வியின் கழுத்தில் கிடந்த மாங்கல்யத்தைப் பார்த்து எதுவும் சொல்லாமல் அமைதியானான்.

நீ சொன்னபடியே எல்லா ஏற்பாட்டையும் கவனிக்கிறேன் ராம், சொல்லிச் சென்றான்.

அவன் விலகப் போகையில், பரத், எனக்கு என் ஜெய் முழுசாவே வேணும், சொல்லிவிட்டு தலை கவிழ்ந்தான்.

ராம் என்ன சொல்லவருகிறான் என்பது பரத்திற்கு சரியாக புரிந்தது. போஸ்ட்மார்ட்டம் என்ற பெயரில் அவன் உடலை கீறுவதை அவன் விரும்பவில்லை என்பதும் புரிந்தது.

தன்னால் இயன்றதை செய்வோம் என்று எண்ணிக் கொண்டு அனைத்து செயல்முறைகளையும் அவனே செய்தான். ஜெய்யின் உடல் ஆம்புலன்சில் ஏற்றும் வரை கூடவே இருந்து அனைத்தையும் பார்த்துக் கொண்டான்.

இடை இடையே வந்து ராமை அவனது அறைக்கு செல்லுமாறு எவ்வளவோ சொல்லியும் அவன் கேட்பதாக இல்லை. அந்த மருத்துவமனையில் வேலை பார்க்கும் அனைவரும் கருப்பு பட்டை அணிந்து கொண்டார்கள்.

மருத்துவர்களும், செவிலி மார்களும் தங்கள் பணிகளை செய்துகொண்டிருந்தாலும் அனைவரின் முகங்களிலும் துக்கம் குடி கொண்டிருந்தது.

அதற்கு காரணமும் இருந்தது. அந்த மருத்துவ மனையின் இரண்டு முதலாளிகளில் ஒருவர் இறந்து போனால், அவர்கள் மகிழ்ச்சியாகவா இருப்பார்கள்.

JR ஹோச்பிடல், இதுதான் அந்த மருத்துவமனையின் பெயர். மருத்துவமனை வளாகமே சோக மயமாக மாறியது. ஆரம்ப கட்ட பரபரப்பு அனைவரையும் தொற்றிக் கொண்டது.

இறந்தது ஜெய்யா, ராமா என்பதில் குழப்பம் ஏற்பட்டது. ஆனால் ராம் அமர்ந்திருந்த நிலையும், அவன் வலக்கையில் இருந்த வாட்ச்சும் அவன் ராம் என்பதை உறுதி படுத்தியது.

இரண்டு வருடங்கள் கழித்து ராமை பார்த்தாலும் யாராலும் அந்த மகிழ்ச்சியை கொண்டாட முடியவில்லை. அவனை நெருங்கி தங்கள் சோகத்தை பகிர்ந்து கொள்ளவும் முடியாமல் விலகினார்கள் அனைவரும்.

அதைவிட ஜெய்யின் இழப்பு அனைவரையுமே தாக்கியது. ஜெய்யும்  ராமும் உருவத்தில் அச்சில் வார்த்ததுபோல் இருந்தாலும் குணத்தில் இருவருமே இரண்டு துருவங்கள்.

ஜெய் எப்பொழுதுமே கலகலப்பாக இருப்பான். அவனை சுற்றி எப்பொழுதும் நண்பர்கள் கூட்டம் மொய்க்கும். ராம் அமைதியே உருவானவன். ஜெய் எதையும் அவசர கதியில் செய்து முடிப்பான். நிதானம் என்பதே இருக்காது.

ஆனால் ராம் எல்லாவற்றிலும் மிகுந்த நிதானத்துடன் செயல் படுவான். ஜெய் பணம் படைத்தவராக இருந்தாலும், ரோட்டில் திரியும் பிச்சை காரர்களாக இருந்தாலும் நொடியில் பேசி அவர்களை நட்பு வட்டத்தில் இணைத்து விடுவான்.

ராம் மிகுந்த கூச்ச சுபாவம் உடையவன். ராமை ஜெய் என நினைத்து யார் பேசினாலும் கொஞ்சம் கூச்சத்தோடு நெளிவான் அதிலேயே அவன் ஜெய் இல்லை என்பது தெரிந்துவிடும்.

அதைவிட ராம் பேசாமல் இருந்தாலே அது ராம் தான், ஜெய் இல்லை என்பது நொடியில் விளங்கிவிடும்.

இப்பொழுதும் ராம் அங்கிருந்து நகரவே இல்லை. ஜான்வி மயக்கம் தெளிந்து எழுந்தவள் மறுபடியும் மயக்கத்துக்கே போனாள்.

பரத் அவ இப்படி மயக்கமாகிட்டே இருக்கா, இதனால் உடம்புக்கு, இழுத்தான்.

அவங்க இப்போதைக்கு மயக்கத்தில் இருப்பதே நல்லது. பிறகு எழுந்து ரொம்ப உணர்ச்சிவசப் பட்டாங்கன்னா அவங்க வயிற்றில் வளரும் குழந்தைக்கு நல்லதில்லை. அதனால் நானே லைட் டோஸ் போட்டு தூங்க வைச்சுட்டேன், அவன் கேட்காததற்கும் சேர்த்தே பதில் சொன்னான்.

ராம் எதுவுமே மேலே சொல்லவில்லை. பரத் சென்றுவிட்டான். சென்றவன் ஜெய்யின் காரியங்கள் முடிந்ததும் ராமிடம் வந்து சொன்னான்.

ஜான்விக்கு மற்றொரு ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. ராம் ஜெய்யின் ஆம்புலன்சில் ஏறிக் கொள்ள, பரத்தும் அவனுடன் இருந்தான்.

ஜான்வியுடன் ஒரு செவிலி ஏற இரண்டு ஆம்புலன்ஸ்களும் ராமின் வீட்டை நோக்கிச் சென்றது.

வீட்டின் முன்னால் ஆம்புலன்ஸ் வந்து நிற்கவும் வாட்ச்மேன் வேகமாக கேட்டை திறந்தான். ஆம்புலன்சில் இருந்து இறங்கி முதலில் ராம் வீட்டுக்குள் சென்றான்.

ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டு புவனா வெளியே வந்தார். ராமைப் பார்த்ததும் பூரித்துப் போனார்.

ராம் என்ன சொல்லாமல் வந்துட்ட, இரு ஆரத்தி..........., அவரது பேச்சு பாதியில் உறைந்தது.

ராம் யாருக்கு என்ன.........., கேட்டவாறு அருகில் சென்றவர் ஜெய்யின் உடலைப் பார்த்து கதறினார்.

இந்த அதிர்ச்சி விலகும் முன்னர், அடுத்த ஸ்ரெச்சரில் ஜான்வி வீட்டுக்குள் கொண்டுவரப் பட்டாள். அவளை, பரத்தே ராமின் அறைக்கு அழைத்து சென்று விட்டு வந்தான்.

உடனடியாக அனைத்து பத்திரிக்கைகளிலும் அறிவிப்பு வெளியிடப் பட்டது. வீடு முழுக்க உறவினர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது.

யாருக்கு யார் ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை. ராம் தாயை தாங்கிக் கொண்டான்.

என் பிள்ளைக்கு என்னடா ஆச்சு சொல்லு, கேட்டபடி ராமின் மார்பில் விழுந்து கதறினார்.

ராமால் பதில் சொல்ல முடியவில்லை. பள்ளிக்கு சென்றிருந்த அவனது தம்பி (வளர்ப்பு மகன்) வீட்டிற்கு வரவழைக்கப் பட்டான்.

அண்ணா, என்று அவன் கதறுவதையும் பார்க்க முடியவில்லை.

"என்னடா ஆச்சு, ஏன் இப்படி மௌனமா இருக்க. ஒரு இடத்தில் இருக்காமல் துறு துறுன்னு இருப்பானே, இப்போ இவ்வளவு நேரமா ஒரே இடத்தில் இப்படி படுத்து இருக்கானே.

அவனால் எப்படி முடியுது, அவனை எழுப்புடா", ராமால் தன் துக்கத்தை வெளியிடக் கூட முடியவில்லை.

அம்மா, நான்தான் ஜெய்ன்னு நினச்சுக்கோங்க. இறந்தது....

வேண்டாம் அப்படி சொல்லாதேடா. இப்போதான் ஒருத்தனை பறிகொடுத்து இருக்கோம். இப்படி அச்சாணியமா பேசாதே, அவன் வாயை மூடினார்.

நேரம் சாயங்காலம் ஆகிவிடவே காரியங்கள் அனைத்தும் மறுநாளைக்கு மாற்றி வைக்கப் பட்டது. யாரும் எதுவும் செய்யாமல் அங்கேயே சுருண்டிருந்தனர்.

தூங்கிவிட்ட தம்பியை அவன் அறையில் படுக்கவிட்டு வந்தான். அவனது அறைக்குள் சென்று பார்த்தான். அங்கே அவனது படுக்கையில் ஜான்வி தூங்கிக் கொண்டிருக்க, செவிலி அவள் அருகில் இருந்த சோபாவில் முடங்கி இருந்தார்.

முழுதாக ஒரு நிமிடம் அங்கே நின்று பார்த்துவிட்டு, கீழே இறங்கி வந்து தாயின் அருகில் சென்று அமர்ந்தான். பரத் அவர்களுக்கு காபி கொண்டுவந்து கொடுத்தான்.

புவனாவை ராம் பிடிவாதமாக அந்த காப்பியை பருக வைத்தான். காலையில் விடியும் முன்பே ஜான்வி விழித்துவிட்டாள். தான் மெத்தென்ற படுக்கையில் இருப்பது புரிந்தது.

தலைக் காயத்தில் தலை கொஞ்சம் பாரமாக இருக்க, எழுந்து அமர முயன்றாள். நடந்து முடிந்தவை எல்லாம் கனவோ என்ற எண்ணம் தோன்றியது.

ஆனால் தலைக் காயமும், கையின் காயமும் அதை உண்மை என்றே அறிவித்தது. கண்கள் குளமாக நேரம் பார்க்க முனைந்தாள். நேரம் நான்கை காட்டியது.

சாயங்காலமா என்று சுற்றி பார்க்க, AC யின் சத்தத்தை தவிர வேறு சத்தமில்லை. விடி விளக்கும் ஒளிர்ந்து கொண்டிருந்தது. கழுத்தை தொட்டு பார்க்க, மாங்கல்யம் கையில் சிக்கியது.

அதையே வெறித்து பார்த்தவாறு அமர்ந்திருந்தாள். ராம்...., கேவல் வெளிப்பட்டது அவளிடமிருந்து.

‘என் ராம் எங்கே’, சுய உணர்வை அடைந்து சுற்றிலும் பார்வையை சுழலவிட்டு கதவு எங்கே என்று தேடினாள். கண்ணில் விழவும் எழுந்து கதவை நோக்கிச் சென்றாள்.

அவள் எழுந்த அரவம் கேட்டு செவிலி படுக்கையிலிருந்து எழுந்துவந்து அவளைத் தடுத்தாள். அதை சட்டை செய்யாமல் அவளை தள்ளி விட்டு வெளியில் வேகமாக வந்தாள்.

மேடம் எங்கேயும் போகாதீங்க, செவிலியின் குரல் அங்கிருந்த நிசப்தத்தை குலைக்க, ராம் எழுந்து அவன் அறைக்கு விரைந்தான்.

அவன் அறையின் அருகே செல்லவும் ஜான்வி வெளியே வரவும் சரியாக இருந்தது. எதுவும் பேசாமல் அவளையே பார்த்தவாறு நின்றான்.

ராம்..... என் ராம்......, அழுகையில் உதடு துடிக்க கேட்டாள். கண்முன்னால் நிற்கும் இவனை நம்பவும் முடியவில்லை, தன் ராம் இந்த உலகத்தில் இல்லை என்ற உண்மையை ஏற்கவும் முடியவில்லை அவளால்.

அவள் கையைப் பிடித்து அழைத்துவந்து அங்கிருந்தே ஹாலைக் காட்டினான். அவன் கையை உதறி போக எண்ணினாலும் ஏதோ ஒன்று தடுத்தது அவளை. அது அவனது தோற்றமோ.

‘எனக்கு பாக்கணும்’, பார்வையை ஜெய்யின் கண்ணாடிப் பெட்டியில் நிலைக்கவிட்டு ராமை ஏக்கமாக பார்த்தாள்.

பாக்கலாம் ஆனால் இப்போ இல்ல பிறகு. நீ போய் ரெஸ்ட் எடு, அவள் பார்வை உணர்ந்து பதில் சொல்லியபடி, அவளை கட்டாயமாக அழைத்துவந்து படுக்கையில் அமர்த்தினான்.

‘எப்போ’, அவள் பார்வை சந்தேகமாக கேட்கவும்,

கொஞ்ச நேரத்தல் நானே வந்து உன்னை அழைச்சுட்டு போறேன். அதுவரை நீ இங்கேயே இரு, கண்டிப்புடன் சொல்லிவிட்டு சென்றான்.

காலையில் அவளை கட்டாயப் படுத்தி செவிலியே சாப்பிட வைத்தாள். நேரம் பத்தை நெருங்கவும் ஜெய்யின் இறுதி சடங்குக்கான ஆயத்தங்கள் நடைபெறத் துவங்கின.

ராம் சென்று ஜான்வியை அழைத்து வந்தான். அவள் இறங்கி வரும் வேளையில் சொன்னான், நீ என்னோட மனைவி, இதற்குமேல் நான் எதுவும் சொல்ல தேவையில்லை உனக்கு, மிக மெதுவாக ஆனால் அழுத்தமாக அவள் காதில் சொன்னான்.

ஜான்வி விதிர்த்து நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்க்க, குரலில் இருந்த கடுமை முகத்தில் துளி கூட இல்லை.

‘இப்போ நான் வரவா இல்லை திரும்ப போகவா’, என்ற பாவனையில் அவள் பார்க்க, அவன் அழுத்தமாக அவள் கைகளை பற்றிக் கொண்டு ஜெய்யின் அருகில் சென்று அவளை நிறுத்தினான்.

ஜெய்யின் மார்பில் புரண்டு அழவேண்டும்போல் இருந்த உணர்வை சிரமப் பட்டு அடக்கினாள். கால்கள் பலமிழப்பதாக தோன்றியது. கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது.

ஆனால் இப்பொழுது அனைவரின் பார்வையும் தன்னை மொய்ப்பதை உணர்ந்து தன்னை கட்டுப் படுத்திக் கொண்டாள். ராம் சொன்ன வார்த்தைகள் காதில் ஒலிக்க தன் உணர்வுகளை மென்று முழுங்கினாள்.

அன்னை, தம்பியின் பார்வை தன்மேல் விழுந்தும் எதுவும் சொல்லமல் ஜான்வியுடன் அங்கேயே நின்றான் ராம்.

ஜான்வி இதற்குமேல் இங்கே நிற்க முடியாது என்று தோன்றவும் அவன் கைகளை உதறிக் கொண்டு அறைக்கு விரைந்தாள். இவள் செல்லவும் ஜெய்யின் பயணமும் தொடர்ந்தது.

அறையில் புகுந்து கட்டிலில் விழுந்து பெருங் குரலெடுத்து அழுதாள். தன் நிலையை எண்ணி எண்ணி கண்ணீர் வடித்தாள்.

தன்னை விட்டு சென்ற ஜெய்க்காக அழுதாளா, தன் வயிற்றில் வளரும் குழந்தைக்காக அழுதாளா, இனிமேல் தன் எதிர்காலம் எப்படி இருக்குமென்று நினைத்து அழுதாளா அவளுக்கே தெரியவில்லை. 

பகுதி - 3.

நங்கூரமிட்டு நிற்கும்  உன் நினைவில்

ஆயிரம் அலைகள் வந்து தகர்த்தாலும்

அழிக்க முடியாது என் மௌனத்தை.............

ஜெய்யின் இறுதி பயணம் முடிந்து இன்றோடு மூன்று நாட்கள் முடிந்து விட்டன. பதினாறாம் நாள் காரியங்கள் அனைத்தையும் ஐந்தாம் நாளே வைப்பதென முடிவு செய்யப் பட்டது.

வீட்டில் இருந்த உறவினர்கள் அனைவரும் அவர்கள் அவர்கள் வேலைகளை கவனிக்க செல்ல வேண்டுமே. எவ்வளவு நாள்தான் அங்கேயே இருக்க முடியும், ராமே சொல்லிவிட அதன் ஏற்பாடும் செய்யப் பட்டுக்கொண்டே இருந்தது.

உறவினர்களுக்கு இடையில் ஜானவியைப் பற்றிய பேச்சு நிகழ்ந்த வண்ணமே இருந்தது. பெரிய இடத்தின் விவகாரம் என்று அனைவரும் அடக்கியே வாசித்தாலும், புரளிகளை தவிர்க்க முடியாதே.

கேட்டியா ராம் வெளிநாட்டில் இருந்தே அந்த பொண்ணை கல்யாணம் செஞ்சு கூட்டி வந்துட்டானாம்.

அவ வீட்டில் வந்து ஏறிய நேரம் இந்த வீட்டு பிள்ளையே போய்ட்டான்.

சரியான ராசி இல்லாதவ.

இன்னும் இருக்குற ஒரு புள்ளையாவது அவளுக்கு (புவனா)  நிலைக்கணும்னா உடனே இவளை தலை முழுக சொல்லணும்.

வந்தவ பெரிய மகாராணி மாதிரி ராம் தம்பி அறையை விட்டு வெளியவே வர மாட்டிக்காளே.

அன்னைக்கும் என்னமோ செத்தவங்களையே பாத்ததில்லை என்பது மாதிரி சீன் போட்டா, ஒருத்தி சொல்ல அனைவருக்கும் சுவாரசியம் கூடியது.

என்னடி சொல்லுற.

"அட ஆமாங்குறேன். பொணத்தை (உயிர் இருக்கும் வரை ஜெய் என் பெயர் சொல்லி அழைக்கப் பட்டவன். இறந்ததும் அவன் பெயர் பிணம்).பாக்கதுக்கு ராம் தம்பி அவளை கையை புடிச்சு அழைச்சுட்டு வந்து காமிச்சார்.

ஒரு நிமிஷம் தான் நின்னுருப்பா, அதுக்குள்ள ஓடியே போய்ட்டா. எல்லாம் கலி காலம். நம்ம புவனாவா இருக்க போய் அவளை இங்கே இருக்க வச்சுருக்கா.

நானாக இருந்திருந்தால் தெரிந்திருக்கும் சங்கதி", ஜான்வியின் உண்மையான நிலை தெரியாமல், நரம்பில்லாத நாக்கு எந்த பக்கம் வேண்டுமென்றாலும் வளையும் என்பதுபோல் பேசினர் அனைவரும்.

புவனாவிடமும் அதைப் பற்றி சொல்லி அவரின் மனதையும் கலைக்க முயன்றனர். 

அவரவர்களுக்கு தெரிந்த விதங்களில் ஜான்வியைப் பற்றி பேசினர். அனைத்தையும் உணர்ந்தாலும் அந்த நேரத்தில் கவனிக்க வேண்டிய விஷயம் அதுவல்ல என்று ராம் பேசாமல் இருந்தான்.

பரத் புவனாவை துக்கம் விசாரிப்பது என்ற பெயரில் உறவினர்கள் மேலும் துன்புறுத்தாவண்ணம் பார்த்துக் கொண்டான். அவங்களுக்கு மயக்கமா இருக்கு, BP அதிகமா இருக்கு, அவங்களை இப்போ தொந்தரவு செய்ய வேண்டாம்.

இப்படி பல விதங்களில் பேசி, உறவினர்கள் அதிகமாக நெருங்காமல் பார்த்துக் கொண்டான். அதுவே அவருக்கு பெரிய ஆறுதலாக இருந்தது.

புவனாவிற்கும் உறவினர்கள் வந்திருக்கும் புது பெண்ணைப் பற்றி பேசுவது தெரிந்தே இருந்தது. ஆனால் தனக்கே தெரியாத ஒரு விஷயத்தை எப்படி அவர் அவர்களுக்கு சொல்ல முடியும்.

ராம் அவனது அறைக்கு தினமும் சென்று ஜான்வியை பார்த்துக் கொண்டான். அவளை கவனிக்க வந்திருந்த செவிலியை இன்னும் பத்துநாள் அங்கேயே தங்கி ஜான்வியை பார்க்க சொன்னான்.

அவர் வந்து அவளை கட்டாயப் படுத்தி சாப்பிட, குளிக்க செய வைத்து விடுவார். எனவே அவன் அவளது கவலை நீங்கி இருந்தான்.

ஆனாலும் அவளை அப்படியே விட்டுவிட வில்லை. தினமும் அவளை சென்று பார்ப்பான். இவன் வரும் சத்தம் கேட்டவுடன் கண்களை மூடி தூங்குவதுபோல் படுத்துக் கொள்வாள்.

அவனை நேராக பார்க்கவோ, பேசவோ விரும்பவில்லை அவள். அதை அவனும் உணர்ந்தே இருந்தான். ராம் பேசிய பேச்சை மறக்க முடியவில்லை அவளால்.

‘நான் உன் கணவன், இதற்குமேல் எதுவும் உனக்கு சொல்ல வேண்டியது இல்லை’, என்ற ஒற்றை வாக்கியத்தில் அவளை அன்று கட்டி போட்டு விட்டானே. அதை எண்ணி எண்ணி துடித்தாள்.

அதை சொன்னவன் மட்டும் சந்தோசத்தோடா சொன்னான். அவளை மட்டும் அன்று எச்சரிக்காமல் இருந்திருந்தால், இன்று இந்த வீட்டில் உலவும் பேச்சுக்கள் எப்படி இருந்திருக்கும் என்பதை அவனால் சிந்தித்தே பார்க்க முடியவில்லை.

ஜான்வியின் கௌரவம், இறந்த ஜெய்யின் கௌரவம், ராமின் கெளரவம், இந்த குடும்பத்தின் கெளரவம் அனைத்துமே அதில் அடங்கி இருந்தது.

அவளை அழவிட்டு, இறந்த ஜெய்யின் பெயருக்கு ஒரு களங்கத்தை ஏற்படுத்த அவன் விரும்பவில்லை. அவனை விட்டு விட்டாலும் இனிமேல் வாழப்போகும் வாழ்க்கை முழுவதும் ஜான்வி ஒரு அவப் பெயரை சுமக்க விட முடியுமா.

அதைவிட அவள் வயிற்றில் வளரும் குழந்தை எந்த காரணம் கொண்டும் ஜெய்யின் வாரிசாக அல்ல, என் வாரிசாகத்தான் மற்றவருக்கு தெரிய வேண்டும். அவள் என் குழந்தை, ஜெய்க்கு செய்து கொடுத்த சத்தியத்தை காப்பாற்றியே தீருவேன்.

இவ்வாறு அனைத்தையும் எண்ணியே அவன் இவ்வாறாக நடந்து கொண்டான். அவள் முதலில் கோபமாக இருந்தாலும் நாள்பட அவள் கோபத்தை மாற்ற முடியும் என்றே எண்ணினான் அவன்.

வீட்டில் உலவும் இம்மாதிரி பேச்சுக்களில் அதிகம் பாதிக்கப் பட்டான் பூமா என்கிற பூபாலன். அந்த வீட்டின் செல்ல பிள்ளை, வளர்ப்புப் பிள்ளை. அவன் இந்த வீட்டுக்கு வந்ததே பெரிய கதை.

அவனை அழைத்து வந்ததே, இல்லை இல்லை தூக்கி வந்ததே ஜெய் தான். ரோட்டு ஓரத்தில் குப்பை தொட்டியில் இவனை கண்டெடுத்து வீட்டுக்கு தூக்கி வந்துவிட்டான்.

அவன் மேல் ஜெய்க்கு அதிக பாசம், அவனுடனே இருப்பான், வம்பிழுத்து விளையாடுவான், கொஞ்சுவான் அனைத்துமே செய்வான்.

அப்படி பாசமாக இருந்த ஜெய்யின் இறப்பு பூமாவை வெகுவாக பாதித்தது. அதுவும் வந்திருக்கும் பெண்ணால்தான் அவன் இறந்தான் என்பதை கேட்டதும் அவனால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

ராமை தேடி வந்துவிட்டான். ராம் இப்பொழுது ஜெய்யின் அறையில் இருந்தான். அண்ணா.........., தயக்கமாக அழைத்தான்.

வாடா பூமா ஏன் அங்கேயே நிக்க, உள்ளே வா, அவனை அழைத்து மடியில் அமர்த்திக் கொண்டான்.

அண்ணா அவங்களை நீ வீட்டை விட்டு அனுப்பிடு, எடுத்தவுடன் இவ்வாறு பேசினான்.

திடுக்கிட்டான் ராம். யாரைம்மா, அவன் யாரை சொல்கிறான் என்று தெரிந்தும், அவன் வாயாலே வரட்டும் என்று கேட்டான்.

அதான் உன் ரூம்ல இருக்காங்களே அவங்களைத்தான்.

ஏண்டா........., அவன் வாயை கிளறினான்.

அவங்களாலதான் ஜெய்அண்ணா இறந்தாங்களாம். அவங்க வந்த நேரமே சரியில்லையாம். இன்னும் அவங்க இங்கேயே இருந்தால் நீங்களும்............, சொல்லிவிட்டு அவன் கழுத்தை கட்டிக் கொண்டு அழுதான்.

இந்த பிஞ்சின் நெஞ்சில் நஞ்சை விதைத்தவர்கள் மேல் ஆத்திரமாக வந்தாலும், இப்பொழுது அதைவிட இவன் மன நிலையை மாற்றுவதுதான் முக்கியம் என்பதை உணர்ந்து அவனிடம் பேசினான்.

உன் கிட்டே யாரும்மா அப்படி சொன்னது.

யாரும் சொல்லலை, அவங்க பேசினாங்களா நான் கேட்டேன்.

வேற என்ன சொன்னாங்க...........

அவங்க இருக்குற வரைக்கும் இந்த வீடு விளங்காதுன்னு பேசிட்டு இருந்தாங்க.

யார் யார் கிட்டே பேசுனாங்க.

நம்ம...... ரா.....ணி அத்தைதான் சொன்னாங்க, தயக்கமாக பேசினான்.

ராமிற்கு சட்டென அனைத்தும் விளங்கியது. ராணி அத்தைக்கு அவரது மகளை இந்த வீட்டு மருமகள் ஆக்க வேண்டுமென்று நீண்ட நாள் ஆசை. அதுவும் அவர் ஒன்றும் நேரடி அத்தை கிடையாது. ஒன்று விட்டவோ, இரண்டு விட்டவோ அத்தை. அது இனிமேல் நிறைவேறாது என்ற ஆதங்கத்தில் இப்படி எல்லாம் பேசுவதை புரிந்து கொண்டான்.

ஏற்கனவே பூமா வீட்டிற்கு வந்ததை பலம்மாக எதிர்த்தார். இவனை பார்க்கும் போதெல்லாம் எதையாவது சொல்லி நோகடிப்பார், யாருக்கும் தெரியாமல் தான்.

இப்போ புது விஷயம் கிடைக்கவும் இவனை விட்டு விட்டார் போல, என்ன செய்யிறிங்களா, அவன் யோசனையை கலைத்தான் பூமா.

நான் அவங்களை அனுப்புறது இருக்கட்டும், இந்த அண்ணா ஒண்ணு கேட்பேன் நீ பதில் சொல்லுறியா.

கேளுங்கண்ணா.

ராணி அத்தை எப்பவும் உண்மையவா சொல்லுவாங்க, அவனிடம் கேட்டு அவனை  யோசிக்க வைத்தான்.

‘நான் எழுந்து வரும்போது எதிரில் வராதடா விடியா மூஞ்சி’ என்பார் அவர். ஆனால் ஜெய் அவன் முகத்தில் முழித்தால்தான் அந்த நாள் நல்லா இருக்குன்னு சொல்லுவாங்க.

‘என் புது புடவையை ஏண்டா தொட்ட அது விளங்குனாப்புலதான்’, ராணியின் குரல் ஒலிக்க, ‘பூமா குட்டி உங்க கையால அண்ணாவுக்கு அந்த பேனாவை எடுத்து தருவீங்களாம் அண்ணா இந்த பென் வச்சு எழுதி நிறைய மார் வாங்குவேனாம்", ஜெய்யின் குரல் மனதில் ஒலித்தது.

இவ்வாறாக பூமாவின் மூளையில் ராணி அத்தை சொல்லும் வார்த்தைகள் அனைத்தும் ஊர்வலம் போனது. ஒரு முடிவுடன் சொன்னான்,

இல்ல ராணி அத்தை எப்போ பாத்தாலும் குறை சொல்லிட்டே இருப்பாங்க. அவங்க பொய் மட்டும்தான் சொல்லுவாங்க.

இப்போ சொல்லு அண்ணியை வீட்டை விட்டு அனுப்பவா.

அண்ணியா.........., அண்ணின்னா , ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுவன் வாய் பிளந்தான்.

அண்ணின்னா உனக்கு அம்மா மாதிரி. அது மட்டும் இல்லை இன்னும் கொஞ்ச நாள்ல உன் கூட விளையாட ஒரு குட்டி பாப்பா வருவாங்க, அவனை உற்சாகப் படுத்த மேலும் சொன்னான்.

ஹை, என் கூட விளையாடவா, பவித்ராவுக்கு தங்கச்சி இருக்கே அது மாதிரியா, அவன் உற்சாகமானான்.

ஆமாடா அதே மாதிரிதான்.

இப்போ எங்கே, ஓ......... , அண்ணி வயித்துக்குள்ள இருக்காளா. நான் போய் அண்ணியை பாக்கவா, இப்போவே போய் ராணி அத்தைட்ட சொல்லுறேன், புது உறவை இப்பொழுதே ஏற்க தயாரானான் அவன்.

‘இவன் காரியத்தையே கெடுத்துருவான் போல இருக்கே’, மனதுக்குள் நினைத்துக் கொண்டான்.

பூமா, இப்போ யாருக்கும் இந்த பாப்பா விஷயத்தை சொல்ல கூடாது. ராணி அத்தைக்கு தெரிஞ்சா நம்ம குட்டி பாப்பாவையும் திட்டுவாங்க இல்ல, அவன் கேள்வியாக கேட்க,

"ஹையோ ஆமா அண்ணா. நான் யார் கிட்டயும் சொல்ல மாட்டேன். நாம ரகசியமா வச்சுக்கலாம். அவனிடம் உடனடியாக கூட்டணி வைத்துக் கொண்டான் அவன்.

ஒரு பிரச்சனை முடிவுக்கு வந்ததில் நிம்மதியானான் ராம். இன்னும் செய்ய வேண்டிய விஷயங்கள் இருப்பது புரிய அவற்றுக்கு தயாரானான்.

இன்று ஜெய்யின் பதினாறாம் நாள் காரியங்கள் முடிய விருந்தினர்கள் அனைவரும் கிளம்பினர்.

ராணி அத்தை கிளம்பும் நேரம் ராம் அவர்களை அழைத்து கண்டித்து அனுப்பினான். அதுவும் அவர்கள் நேரடி அத்தை கிடையாது இரண்டு விட்ட அத்தை. எனவே அவனுக்கு அது சுலபமாகவும் இருந்தது.

அவர்கள் அனைவரும் செல்லவும் தன் அறைக்குச் சென்றான். இவன் செல்லவும் வழக்கம்போல் ஜானு கண்களை மூடி படுத்துக் கொள்ள, அவளை கைகளைப் பிடித்து எழுப்பி அமர வைத்தான்.

அவள் அவன் கைகளை தட்டிவிட்டு, தொடாதீங்க, என சீறினாள். அவன் அதை கண்டுகொள்ளவில்லை.

செவிலியின் புறம் திரும்பி  , "நீங்க இவ்வளவுநாள் இவளை பார்த்துக் கொண்டதில் ரொம்ப சந்தோசம். இனிமேல் நீங்க உங்க பழைய டியூட்டிக்கே போங்க.

இங்கே இருந்த நாளுக்கான சம்பளம்", என்று சொல்லி நூறு ரூபாய் கட்டு ஒன்றை எடுத்துக் கொடுத்தான்.

சார் எனக்கு ஹோச்பிட்டலிலே சாலரி தருவாங்க. எனக்கு இது வேண்டாம், முதலாளியிடம் பணம் வாங்க மறுத்தாள் அவள்.

இது உங்க வேலைக்கு நான் தரும் கூலி மட்டும் இல்லை. ஐந்து நாள் இருபத்திநாலு மணி நேரம் வேலை பார்த்து இருக்கீங்க. அதுக்கு உண்டான நியாயமான பணம். வாங்கிக்கோங்க, அவள் கையில் திணித்தான்.

செவிலி விடை பெற்று கிளம்பினார். சீக்கிரம் போய் குளிச்சுட்டு வா, அவளை விரட்டினான்.

எனக்கு தோணும்போது நான் குளிச்சுக்கறேன். நீங்க சொல்ல வேண்டாம், முகத்தை திருப்பிக் கொண்டாள்.

இப்போ நீயா போய் குளிக்கிறியா இல்லை நான் போன நர்ஸ்சை வர சொல்லவா, கேட்டவாறு அலை பேசியை எடுத்தான்.

அவன் அலை பேசியை எடுக்கவும் அவளே பாத்ரூம் நோக்கி சென்றாள்.

அவள் வெளியே வரும்பொழுது அவனும் குளித்து வேறு உடை உடுத்திருந்தான். அவள் கேள்வியாக பார்க்கவும், அம்மாவை பாக்க போறோம் வா, அவள் பதிலை எதிர் பார்க்காமல் அவள் கையை பற்றியபடி நடந்தான்.

அவனிடமிருந்து கையை உருவிக் கொண்டாள், அவன் நின்று திரும்பிப் பார்க்கவும் தலை கவிழ்ந்துகொண்டாள். அவளால் அவனை ஒரேடியாக விலக்கி தள்ள முடியவில்லை.

அதற்கு ஒரே காரணம், ராமும் அச்சு அசல் ஜெய்யை கொண்டிருந்ததே. இம்மி அளவுகூட வித்தியாசம் தெரியவில்லை உருவத்தில், ஆனால் செயல் பாட்டில் மலையளவு வித்தியாசம் தெரிந்தது.

இப்பொழுது அதை யோசிக்க நேரமில்லாமல் அவன் பின்னல் நடக்க முயன்றாள். ஆனால் அவன் நடக்காமல் இருக்கவே அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

அவனது இடக்கையை அவள் புறம் நீட்டியவாறே அழுத்தமாக நின்றான். வேறு வழி இல்லாமல் தன் கையை அவன்புறம் விருப்பமே இல்லாமல் மெதுவாக தகர்த்தினாள்.

அதுவே அவனுக்கு போதுமானதாக இருக்க, அவள் கையை அழுத்தமாக பற்றிக் கொண்டு நடந்தான். அவன் செயல்பாடு அவளுக்கு வித்தியாசமாக இருந்தது.

அவனிடம் கொஞ்சம்கூட தயக்கமே இல்லை. நீ என் மனைவி, நான் உன் கணவன் அந்த உரிமை பளிச்சென தெரியும்படி இருந்தது அவனது நடவடிக்கை.

அவளது சிந்தையை கலைத்தது அவனது அம்மா என்ற

Enjoying the preview?
Page 1 of 1