Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mana Oonjal
Mana Oonjal
Mana Oonjal
Ebook165 pages1 hour

Mana Oonjal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Anuradha was born in 1947 in Thanjavur, Tamil Nadu. Her grandfather R. Balasubramaniam was an actor who inspired Anuradha to become a writer. Anuradha started her career as an artist before making several unsuccessful attempts to get a job with popular magazines. This prompted her to join Mangai, a Tamil magazine after the editor found her writings very interesting. Anuradha's literary career started in 1977 while working for the magazine.

Apart from her literary contributions, she was well known for her "anti-divorce counselling" work. In a career that spanned over 30 years, Anuradha wrote nearly 800 novels and 1,230 short stories. Her works were mainly centered on family and everyday happenings. One of her early works Sirai, won a gold medal for the best short story from Ananda Vikatan. It was adapted into a film of the same name. Following this, her other novels Kootu Puzhukkal, Oru Malarin Payanam and Oru Veedu Iruvasal were adapted into films in various languages such as Tamil, Telugu and Kannada. Oru Veedu Iru Vasal, directed by Balachander won the National Film Award for Best Film on Other Social Issues in 1991. The 1988 Telugu film Oka Baarya Katha based on her work won five Nandi Awards. In addition to films, many of her stories such as Archanai Pookal, Paasam and Kanakanden Thozhi have been adapted into Television serials. She was awarded a gold medal by M. G. Ramachandran, the then Chief Minister of Tamil Nadu.

Languageதமிழ்
Release dateApr 23, 2018
ISBN6580110001256
Mana Oonjal

Read more from Anuradha Ramanan

Related to Mana Oonjal

Related ebooks

Reviews for Mana Oonjal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mana Oonjal - Anuradha Ramanan

    http://www.pustaka.co.in

    மன ஊஞ்சல்

    Mana Oonjal

    Author :

    அனுராதா ரமணன்.

    Anuradha Ramanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/anuradha-ramanan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    மன ஊஞ்சல்

    பொருளடக்கம்

    முன்னுரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    முன்னுரை

    என் அன்பிற்கினிய வாசகர்களுக்கு…

    வணக்கம். நான் நலம். அதுபோல நீங்கள் அனைவரும் நலம்தானே?

    இந்த மன ஊஞ்சலில் என்னுடன் சேர்ந்து நீங்களும் ஆடலாம். அதே சமயத்தில் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

    தலைப்பைப் பார்த்ததும் இதை நாவல் என நினைக்க வேண்டாம். இது, என் மனதில் காலம் காலமாய் ஆடிக் கொண்டிருக்கிற ஊஞ்சல். இதற்கு உருவம் இல்லையே தவிர, உணர்வுகள் இருக்கிறது. உயிர்…? இருக்கிறது… இருக்கும்; என் ஆயுள் உள்ள வரையில் ஊஞ்சலாட்டத்துக்கு ஒய்வில்லை… உறக்கம் இல்லை.

    எப்பொழுதாவது ஆடாமல், அசையாமல் துரங்குகிற மாதிரி தோன்றினாலும் அது பொய்த் துரக்கம். வீட்டில் சில பெருசுகள், ஈஸிசேரில் கண் மூடிப் படுத்திருக்குமே... தூக்கம் போலிருக்கு என்று யாரும் பெருசைத் தாண்டிப் போய்விட முடியாது.

    அரைக் கண்ணைத் திறந்து பார்க்கும். ‘அட அசடே, நானாவது, தூங்கறதாவது…’ இப்படி மணிபர்ஸ் வாய் ஏளனத்தில் நெளியும். ‘நான் முழிச்சிட்டுத்தான் இருக்கேன். என்னைத் தாண்டி ஒரு ஈ, காக்கா உள்ளே போகப்படாது’ என்கிற தோரணையில் தொண்டையைச் செருமும். அதையும் கவனிக்கா விட்டால், ‘யாருடாது… சிவசாமி பையன் வெங்கிட்டுவா? பூனை மாதிரி நுழையறப்பவே நினைச்சேன்... நீயாத்தான் இருக்கும்னு… அப்பன் நடை அப்படியே வந்திருக்கே’ என்று இழுத்து வைத்து விசாரிக்கும். கிண்டலடிக்கும். பழைய காலத்தை அசைபோடும். நடைமுறையில் உள்ளவற்றை ஒன்று விடாமல் துருவும். எதிர்காலத்தைப் பற்றி விமரிசிக்கும்.

    கடைசியில் ‘ஹாம்...’ என ஒரு ஹூங்காரத்துடன் மறுபடியும் நிஷ்டை போன்றதொரு நிலைக்குப் போய் விடும்.

    ஒரு இலை அசைந்தால், தெருவில் பாத்திரக்காரன் கூவிக் கொண்டு போனால், சின்னக் குழந்தைகள் பாவனையால் காரை ஒட்டிக் கொண்டு ஓடினால்… கிழப் பருந்து கண் திறந்து பார்க்கும். புன்னகைக்கும். பெருமூச்சு விடும்.

    அதுபோலத்தான் என் மன ஊஞ்சலும். குதித்து வீசி ஆடவும் செய்யும். மெள்ள ஏதோ குழந்தையின் தளிர் நடைபோல ஆடுவது தெரியாமலும் ஆடும். பெருசு போல அப்படியே ஜடம் போலவும் இருக்கும்.

    ஆனால் ஒன்று… உள்ளே ஏதோ ஒன்று ஒடிக் கொண்டேதான் இருக்கிறது. எத்தனைதான் வயதானாலும், செயலிழந்தாலும், ஞாபக மறதி ஏற்பட்டாலும், கடைசிக் காலத்தில் பிரக்ஞை தவறி கை, காலை அசைக்கக் கூடத் திராணி இன்றி கட்டையாகக் கிடந்தாலும் கூட… எல்லார் மனதிலும் இப்படியொரு ஊஞ்சல் ஆடிக் கொண்டுதான் இருக்கிறது.

    ‘எங்களுக்குள் கூடவா’ என்று கேட்கிறீர்களா… ஆமாம். உங்களுக்குள்… ஏன், சிந்திக்கத் தெரிந்த எல்லா ஜீவனுக்கும் தான் சொல்கிறேன். மன ஊஞ்சல் ஆடிக் கொண்டே தான் இருக்கிறது.

    ஆனால் அதை கவனிக்கக் கூட நம்மில் பலருக்கு நேரமில்லை. அதுதான் பெரிய சோகம்.

    கவனிக்க வேண்டும். மாடு அசை போடுவது போல… அப்பொழுதுதான் நாம் நமது நீண்ட வாழ்க்கையில் சந்தித்த அருமையான மனிதர்களையும், சம்பவங்களையும் புரட்டிப் பார்ப்போம். நடந்து வந்த பாதையில் தடுக்கி விழுந்த தடங்களும், நம்மை கை தூக்கி நிறுத்திய ஆத்மாக்களும் நம் மன ஊஞ்சலில் கொஞ்ச நேரம் நம்மோடு சேர்ந்து ஆடுவதை அனுபவிக்கலாம். நகைச்சுவையும், அறிவு சார்ந்த மனிதர்களுடன் பழகிய பழக்கங்களும்... அடடா… ஒவ்வொருத்தருக்குள்ளும் ஒளிந்திருக்கும் அருமையான, விலை மதிப் பற்ற பொக்கிஷங்கள்.

    என்ன... இந்தப் பொக்கிஷத்தை பங்கு போட்டுக் கொடுக்கச் சொல்லி, வாரிசு தகராறுகள் எதுவும் வராது. பார்த்தில்லையா… பல கிழவர்கள், தங்களின் இறந்த காலத்தைப் பற்றிப் பேசும்போது, ‘ஆரம்பிச்சிட்டியா… இதை எத்தனை தடவை சொல்லுவே…’ இப்படி பிள்ளைகளும், பேரக் குழந்தைகளும் ஒடுவதை.

    பாட்டி, தாத்தாவிடம் கதை கேட்கும் சுவையான அனுபவங்கள் எல்லாம் எங்கள் தலைமுறையோடு போய் விட்டது.

    நான் செய்த பாக்கியம் என் தாத்தா, பாட்டியிடம் வளர்ந்தது. தாத்தா சுதந்திரம் தந்து அன்பாக அரவணைப்பவர். எனக்கு டைரி வாங்கித் தருவது மட்டுமின்றி, அதை பாட்டிக்குத் தெரியாமல் எப்படி பத்திரப்படுத்துவது என்றும் சொல்லிக்

    இதைப் படிப்பதினால் அவரவர் உள்ளத்துக்குள்ளும் தூசும், தும்பும் படிந்து, ஒட்டடை சேர்ந்து கிடக்கும் ஊஞ்சல் கொஞ்சமேனும் அசைந்தால் அதுவே என் எழுத்துக்குக் கிடைக்கும் பரிசு!

    இத்தொடர் தினமணி கதிரில் வெளிவர உதவிய தினமணி கதிர் ஆசிரியர் திரு. சிவகுமார், இதற்கேற்ற ஒவியங்களை வரைந்ததுடன் நில்லாமல், தனது மன ஊஞ்சலின் அசைவுகளையும் என்னுடன் பகிர்ந்து கொண்ட ஒவியர் திரு.ஷ்யாம், ஒவ்வொரு அத்தியாயத்தையும் தினமணி ஆசிரியரிடம் சேர்ப்பித்து, பின், அச்சில் வெளியான ஒவ்வொரு அத்தியாயத்தையும் சேர்த்து வைத்த (எனக்கு அந்தத் துப்பு கிடையாது) திரு.பாண்டியன்- ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றி. இவர்கள் காலத்துக்கும் எனது மன ஊஞ்சலில் ஆடப் போகிறவர்கள்.

    நல்ல எழுத்துக்களை தேடிச் சென்று வாங்கி பிரசுரிக்க ‘தங்கத் தாமரை’ பதிப்பக ஆசிரியர்களான எழுத்தாளர்கள் திரு. சுரேஷ், திரு.பாலா (சுபா) என்றுமே அயர்ந்ததில்லை. அவர்களது பதிப்பகத்தில் இந்நூல் வெளிவருவது என் மகிழ்வுக்குரிய விஷயம்.

    இந்நூலை அழகாக வடிவமைத்த திரு. கணேஷூக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

    வணக்கம்.

    இப்படிக்கு,

    அன்புடன்

    அனுராதா ரமணன்.

    1

    இது கதையா, நாவலா, கட்டுரையா எனப் புருவம் உயர்த்தும் என் அன்பான வாசகர்களுக்கு....

    முதலில் உங்கள் சந்தேகத்தைத் தீர்த்து விட்டு மேலே சொல்லத் தொடங்குகிறேன்.

    எனக்கு ஊஞ்சல் பிடிக்கும். இன்றைக்கும் இந்த வயதிலும், யார் வீட்டுக் கூடத்திலாவது ஊஞ்சலைப் பார்த்தால், மனசு சிறு குழந்தை போலத் துள்ளும், கொஞ்ச நேரமாவது, அந்த ஊஞ்சலில் உட்கார்ந்து ஆடி விட்டுத்தான் திரும்புவேன்.

    அப்புறம் ஒரு விஷயம்… ஊஞ்சல் சங்கிலிகள் ‘கிறீச்’சிட்டால் பலருக்கு தலை வேதனையாக இருக்கும். உடனே, எண்ணெயைப் பூசி அதன் வாயை அடக்கி விடுவார்கள்.

    ஆனால், எனக்கு ஊஞ்சலின் சங்கிலிகள் பேச வேண்டும். கனமானப் பேர்வழிகள் (ஏன், என்னைப் போன்றவர்கள் என்று சொன்னால் குறைந்தாபோய் விடுவேன்.) உட்கார்ந்தால், இந்த சங்கிலிகள் ‘கிக்கும்’ என்று முனகும். சில நேரங்களில் உற்று கவனித்தால் ஊஞ்சலின் ஆட்டத்துக்கு ஏற்ப சங்கிலி ஒசையில் ஷட்ஜமமும் ரிஷபமும், அந்தர காந்தாரமும், மாறி மாறி ஒலிப்பது போல.

    இதெல்லாம் என் ஊகம்தான். ஆனாலும் சிறு வயதில் ஊஞ்சலில் உட்கார்ந்து வீசி, வீசி ஆடுவதிலும் மெள்ளக் காலால் உந்தியபடி பாட்டுப் பாடி பழகுவதிலும், அதிலேயே அமர்ந்து கனவு கண்டு, வயிற்றுச் சுமையினால் ‘புஸ் புஸ்’ஸென மூச்சிறைக்க, உள்ளே உதைக்கும் புதிய ஜீவனுடன் மானசீகமாய் உரையாடிக் கொண்டிருப்பதிலும் உன்னதமாய் உணர்ந்திருக்கிறேன். இப்பொழுது அத்தனை பெரிய வீடும் இல்லை; ஊஞ்சலுமில்லை. என்றாலும் மனசுக்குள் ஒர் ஊஞ்சல் ரீ… கா… என்று ஆடிக் கொண்டிருக்கிறது…

    இந்த மன ஊஞ்சல் முன்னால் போகையில் இன்றைக்கு நடந்த சம்பவங்களும், படித்த புத்தகங்களும், கேட்ட கதைகளும், பழகிய மனிதர்களும், இன்றும் ரசித்த, சிரித்த, வியந்த, துக்கித்த நிகழ்வுகளெல்லாமும் வருகிறது.

    பின்னோக்கிப் போகையில், பழைய நாட்களும், சின்னதும் பெரிசுமாய் என் வாழ்வில் நடந்த கதைகளும், துண்டும் துணுக்குமாய் கிடைத்த அனுபவங்களும், வெற்றிகளும், தோல்விகளும், வந்து வந்து நிற்கிறது.

    ஊஞ்சல் சுனாமி மாதிரி… வேகமாய் பின்னோக்கிப் போனால், உள் வாங்கினால், அதே வேகத்தோடு முன்னோக்கியும் வரும்… உற்சாகத்தில் வேகம் எடுக்கலாம். அனுபவ லயிப்பில் தியானம் பழகலாம்; ‘சரிதான் போ’ என அலுத்துக் கொள்ளலாம்... ‘...க்கும்...’ என, எண்ணத்தின் சுமை தாங்காது முக்கலாம். முனகலாம்.

    ஆனால் ஓர் செளகரியம்… இந்த ஊஞ்சலில் எத்தனைப் பேர் வேண்டுமானாலும் ஒரே சமயத்தில் ஏறி அமரலாம்.

    Enjoying the preview?
    Page 1 of 1