Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thurathi Varum Dhurogam
Thurathi Varum Dhurogam
Thurathi Varum Dhurogam
Ebook64 pages33 minutes

Thurathi Varum Dhurogam

Rating: 3.5 out of 5 stars

3.5/5

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateApr 23, 2018
ISBN6580100600965
Thurathi Varum Dhurogam

Read more from Devibala

Related to Thurathi Varum Dhurogam

Related ebooks

Related categories

Reviews for Thurathi Varum Dhurogam

Rating: 3.5 out of 5 stars
3.5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thurathi Varum Dhurogam - Devibala

    http://www.pustaka.co.in

    துரத்தி வரும் துரோகம்

    Thurathi Varum Dhurogam

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    1

    பா

    த்ரூமிலிருந்து ஈரம் சொட்டச் சொட்ட உடம்பில் ஒட்டுத் துணியில்லாமல் மஞ்சு வெளிப்பட்டபோது அலறி விட்டான் பிரபு.

    ‘ஆர்த்தி, இங்க வா! சீக்கிரம் வந்து பாரு, இங்க நடக்கற கூத்தை!’ பிரபு குரலெடுத்து அலறினான் காட்டமாக.

    கிச்சனில், ரசத்துக்கு தாளித்துக் கொண்டிருந்த ஆர்த்தி, போட்டது போட்டபடி ஓடி வந்தாள். பதட்டத்துடன் கவலையோடு உள்ளே நுழைந்தவள். ‘பக்’ கென்று சிரித்து விட்டாள்.

    ‘நான் வந்து குளிப்பாட்டி விட மாட்டேனா? குழம்புக்கு அரைச்சிட்டு இருக்கிற நேரத்துல, இதுவா உள்ளே நுழைஞ்சு, பெரிய மனுஷிமாதிரி தானே, தண்ணியை எடுத்துக் கொட்டிக் கிட்டா. யார் தப்புங்க அது? என் மேல பாயத்தெரியுது. அஞ்சு வயசு முடிஞ்சும், விரல் சூப்பற பழக்கம் நிக்கலை. அதெல்லாம் கண்ணுல படாது!’

    முழுவதும் துவட்டி, டவலை இடுப்பில் கட்டி விட்டான்.

    ‘டாடீ... டாடீ...!’

    ‘என்னடா செல்லம்?’

    ‘நாளைக்கு ஸ்கூல்ல பேரன்ட்ஸ் டே டாடீ!’

    ‘இதை நீ ஆயிரத்தெட்டாவது தடவையா சொல்லிட்டியே கண்ணம்மா.’

    ‘நானு... திவாஜியா நடிக்கப் போறென்!’

    ‘திவாஜி இல்லம்மா... சிவாஜி...!’

    அவளுக்கு ‘சி. ‘ச’ எல்லாம் வராது. நல்ல பொண்ணைப் பெத்து வச்சிருக்கோம்!’

    ‘குழந்தையை கேலி செஞ்சா, கோவம்வரும் எனக்கு. நீ போ உள்ளே. நீ சொல்லுடா தங்கம்!’

    ஆர்த்தி முகவாயில் இடித்துக் கொண்டு,சரலென விலகிப் போக,

    ‘நா நடிச்சுக் காட்டட்டுமா டாடீ?!’

    ‘சரி!’

    ‘கையில வாள் வத்துக்கணும் டாடீ!’

    ‘இந்தா... இந்த முருங்கைக் காய் தான் வாள்...இப்ப பேசு!’

    ‘ஜெய் பவானி!’ என்று ஆவேசமாகத் தொடங்கியது. பள்ளிக்கூடத்தில் சொல்லிக் கொடுத்த வசனத்தை நன்றாகத்தான் பாடம் செய்திருந்தது.

    இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் பிரபு.

    ஃஃஃ

    அடுத்த நாள் பள்ளியில்...

    மேடையும், அதன் சுற்றுப்புறமும், பிரமாதமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    மேடையில் ஒரு ஓரத்தில் பெரிய மைக் வைக்கப்பட்டு, நடுவில் மேஜையிட்டு, நாலைந்து நாற்காலிகள், நடுவில் மாலைகள்.

    பிரின்ஸிபால்... இன்னும் ஒரு சிலர் வந்தாயிற்று.

    பிரதம விருந்தினருக்காக காத்திருப்பது போலத் தோன்றியது. அந்த நடு நாற்காலி ஆளில்லாமல் அதை ஆமோதித்தது.

    ‘யாருங்க சீஃப் கெஸ்ட்?’ கிசுகிசுப்பான குரலில் கேட்டாள் ஆர்த்தி,

    ‘ரங்கதுரையா இருக்கணும். இந்த ஸ்கூல் உருவாகக் காரணமே அவர் தான். இந்த ஊருக்கும் பெரிய மனுஷர் அவர் தானே?’

    ‘யார் அது?’

    ‘நீயும், நானும் இந்த ஊருக்கு வந்தே மூணு வருஷம்

    Enjoying the preview?
    Page 1 of 1