Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Undhan Manam Nandhavanam
Undhan Manam Nandhavanam
Undhan Manam Nandhavanam
Ebook347 pages2 hours

Undhan Manam Nandhavanam

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateApr 23, 2018
ISBN6580100600180
Undhan Manam Nandhavanam

Read more from Devibala

Related to Undhan Manam Nandhavanam

Related ebooks

Reviews for Undhan Manam Nandhavanam

Rating: 4.5 out of 5 stars
4.5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Undhan Manam Nandhavanam - Devibala

    http://www.pustaka.co.in

    உந்தன் மனம் நந்தவனம்!

    Undhan Manam Nandhavanam!

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books
    http://www.pustaka.co.in/home/author/devibala

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    1

    லாரம் அடித்தது.

    படுக்கையில் புரண்டு படுத்தான் கிருஷ்ணா. அதன் ஓசை ஓய்ந்ததும், கண்களை இறுக மூடிக் கொண்டு உறங்கத் தொடங்கினான். ஒரு காலை சற்றே மடக்கி, மற்றொரு காலை நன்றாக நீட்டி, ஒருக்களித்துப் படுத்தபடி தூக்கத்தைத் தொடர்ந்தான்.

    ‘கிருஷ்ணா… கிருஷ்ணா!’

    அம்மாவின் தீனமான குரல் செவிக்குள் நுழைந்தது.

    ம்! தூக்கக் கலக்கத்தில் கிருஷ்ணா.

    எழுந்திருக்கலையா? படிக்க வேண்டாமா?

    ம்!

    இரண்டு நிமிட அவகாசம் தந்து, அதன் பின் எழுந்து உட்கார்ந்தான். கண்களை இழுத்தது.

    இந்தக் காலை நேர உறக்கத்தை விட சுகமான ஒன்று உலகத்தில் இருக்க முடியுமா?

    அட! அந்தஸ்துக்கும், ஆஸ்திக்கும் தான் கொடுத்து வைக்கவில்லை. இந்த உறக்கத்துக்கும் கூடவா?

    கிருஷ்ணா!

    எழுந்தாச்சும்மா!

    எழுந்து நீல விளக்கைப் போட்டான். கிழக்குப் பக்கச் சுவரில் தேவி கருமாரியின் காலண்டர் மின் விசிறி தந்த காற்றில் படபடத்துக் கொண்டிருந்தது.

    ஒருநொடி பிரார்த்தித்தான்.

    பின் கட்டுக்கு வந்தான். வெளியே மழை பெய்து கொண்டிருந்தது. குழாயைத் திருகியதும் தண்ணீர் ‘ஜில்’லென்று வந்தது.

    வாய் கொப்பளித்து, முகத்தில் நாலுகை நீரை அறைந்து கொண்டதும் தூக்கம் காணமால் போனது. பல்தேய்த்து, முகம் கழுவி உள்ளே வந்தான். திருநீறை எடுத்து புருவங்களின் மத்தியில் அழுத்திக் கொண்டான்.

    கூடத்து விளக்கைப் போட்டான்.

    அம்மா உட்கார்ந்திருப்பது தெரிந்தது. மெல்லிய வயலின் சப்தம் கேட்டது.

    அப்பாவுக்கு முன்னாலேயே அம்மாவைக் கல்யாணம் செய்து கொண்டுவிட்ட ஆஸ்த்மா. அப்பா போய் பத்து வருடங்களாகியும் இது போக மாட்டேன் என அழிச்சாட்டியம் செய்கிறது.

    குளிர் காலத்தில் அம்மாவின் மேல் ஆதிதக் காதல் கொண்டு விடும் ஆஸ்த்மா.

    அருகில் நெருங்கினான். உட்கார்ந்தான்.

    ரொம்ப அதிகமாக இருக்காம்மா?

    நீ போய்ப் படிப்பா! திணறித் திணறி சொன்னாள் அம்மா.

    ஒரு ஃபெனிக்ஸ் எடுத்துக்கறியா?

    கேக்காதுப்பா. தாண்டியாச்சு அதையெல்லாம்!

    ரிக்ஷா கொண்டு வரட்டுமா? 24 மணி நேர ஆஸ்பத்திரில போய் ஒரு டெரிஃபிலின் ஊசி போட்டா அடங்கும்!

    வேணாம் கிருஷ்ணா கொஞ்சம் வெந்நீர் தா. சரியாப் போகும்!

    ஃப்ளாஸ்கில் இருந்த வெந்நீரை ஊற்றி அம்மாவிடம் தந்தான். முதுகை மெல்ல வருடிக் கொடுத்தான்.

    நீ போய்ப்படி கிருஷ்ணா. உன் நேரம் என்னால பாழாப் போகுது!

    சற்று நேரம் அம்மாவின் அருகில் இருந்தான். சற்று மட்டுபட்டது போலத் தோன்ற எழுந்து வந்தான். தன் மேஜைக்கருகில் உட்கார்ந்தான். ட்ரா திறந்து புத்தகங்களை வெளியே எடுத்தான்.

    மேஜையில் பரப்பினான்.

    இந்த நேரம் கிருஷ்ணா பற்றி சின்னதாக ஒரு அறிமுகம் அவசியம்.

    ஏப்ரல் மாதம் தனது முப்பதாவது வயதை முடித்துக் கொண்ட கிருஷ்ணா, அயல்நாட்டு வங்கி ஒன்றில் பணி புரிகிறான்.

    உயர் அதிகாரியாக பதவி உயர்வு பெற மேலே படிக்கிறான். வங்கித் தேர்வுக்கான படிப்பு தற்சமயம் அந்த வீட்டில் அம்மாவும், கிருஷ்ணாவும் மட்டும்தான்.

    இப்போதைக்கு இது போதும்.

    கிருஷ்ணா தன் படிப்பில் ஆழ்ந்து விட்டான். நன்றாக விடிந்துவிட்டது.

    அம்மா, ஆஸ்த்மாவின் வேகம் குறைந்து சன்னமான உறக்கத்தில் இருந்தாள்.

    மணி ஆறரை!

    கிருஷ்ணா புத்தகத்தை மூடி வைத்தான். கதவு ஜன்னல்களை திறந்து சூரியனை உள்ளே அனுமதித்தான்.

    வாசலில் கிடந்த ஆவின் பால் கவரை உள்ளே எடுத்துச் சென்றான். உடைத்த பாத்திரத்தில் ஊற்றி அடுப்பின் மேல் வைத்தான். கேஸைப் பற்ற வைத்தவன், தன் லுங்கியைக் களைந்து விட்டு ஜட்டியோடு உடற்பயிற்சியை ஆரம்பித்தான்.

    கிருஷ்ணா! மணி என்ன?

    ஏழாகப் போகுதும்மா!

    அம்மா வாரிச்சுருட்டிக் கொண்டு எழுந்தாள்.

    ஏன் பதட்டம்?

    உனக்கு சமையல் ஆக வேண்டாமா?

    முடியலைனா விடும்மா. வெளில பார்த்துக்கறேன் இன்னிக்கு!

    அம்மா பதில் பேசாமல் பரபரவென எழுந்து செயல்படத் தொடங்கிவிட்டாள்.

    கிருஷ்ணா உடற்பயிற்சியை முடித்துக் கொண்டு, குளியலுக்கு தயாராகி விட்டான்.

    முப்பது வயது கிருஷ்ணா தன் வசீகரத் தோற்றத்தால் இப்போதும் கல்லூரி மாணவன் போலதான் இருக்கிறான். அவனது ஆறடி உயரமும், டெல்லி கோதுமை நிறமும், அகலமான நீண்ட அந்தக் கண்களும், அறிவை சேமித்துக் கொண்டே நெற்றியும் வங்கியில் ஹீரோ என்ற பெயரை வாங்கித் தந்திருந்தது.

    உடன் வேலை செய்யும் ஓரிரு கன்னிப் பெண்கள் கல்யாணத்துக்கு நேரடியாக மறைமுகமாக மனுகூட செய்து பார்த்து விட்டார்கள்.

    கல்யாணமாகி இரண்டு குழந்தைகளைப் பெற்ற காதம்பரிகூட கிருஷ்ணாவைப் பார்த்து அவ்வப்போது பெருமூச்சு விடுவது உண்டு.

    குளியல் முடித்து, தன்னை அலங்கரித்துக் கொண்டு சாப்பாட்டு மேசைக்கு அவன் வந்தபோது ஆவி பறக்கும் இட்லி காத்திருந்தது. கூடவே கத்தரிக்காய் - வெங்காய கொத்சு.

    எதிரே மூச்சிரைக்க அம்மா.

    தலைக்கு தண்ணியை கொட்டிக்கிட்டியா?

    ம்…!

    புத்தியிருக்கா உனக்கு?

    குளிக்காம அடுப்பைத் தொட பிடிக்கலை கிருஷ்ணா.

    உன் ஆசாரத்தை விடமாட்டியா? உன்னைப் பார்த்தா எரிச்சல் வருது எனக்கு. என்ன செஞ்சா தேவலை உன்னை?

    இழுத்துக் கொண்டே சிரித்தாள் அம்மா.

    கொத்சுல காரம் அதிகமோ?

    அதுவா இப்ப முக்கியம்? உனக்கு ரெஸ்ட் வேணும்.

    அதுக்கு என்ன செய்யலாம்?

    இந்துகிட்ட போய் கொஞ்ச நாள் இருக்கியா?

    ப்ஸ்!

    சுமதிகிட்டசரிப்படுமா உனக்கு?

    கிருஷ்ணா… என்னிக்கு பொண்ணுகள் வீட்ல போய் நான் தங்கியிருக்கேன்? சொல்லு!

    உன்னை உட்கார வச்சு செய்ய என்னால முடியலையேம்மா. எனக்கு நேரமில்லையே!

    உன்ன எப்ப நான் வேலை செய்ய விட்டிருக்கேன்? நீ நெனச்சா எனக்கு ஓய்வு தரலாம்தான்!

    எப்படி? சொல சட்டென நாக்கைக் கடித்துக் கொண்டான் கிருஷ்ணா. அம்மா என்ன கேட்டாள் என அவனுக்குத் தெரியும். தினசரி மூன்று வேளை அம்மா அவனிடம் கேட்கும் யாசகம். அவன் பதில் சொல்லாமல் மழுப்பும் சங்கதி. இப்போதும் கேட்டு விட்டாள் அம்மா.

    நீ கல்யாணம் முடிச்சு ஒருத்தி இந்த வீட்டுக்கு வந்துட்டா, என் ஆஸ்த்மா பறந்துரும். பண்ணிக் கோடா கிருஷ்ணா!

    காபில சர்க்கரை கொஞ்சம் தூக்கல். ரெண்டு தடவை போட்டுட்டியா?

    உனக்கும் வயசு முப்பதாச்சு. இதுவே அதிகம். இனிமேலும் ஏன்பா காலம் தாழ்த்தணும்?

    நாலு தேங்காய் கிடக்கே மேசைக்கடில. ஓசில வந்ததா? நீங்க தேங்கா பால் கேக் பண்ணினா ஜோரா இருக்குமே. சாயங்காலம் செஞ்சு வைக்கிறியா?

    "கிருஷ்ணா நான் பேசலை. எப்ப என் வார்த்தைகளுக்கு உன்கிட்ட மதிப்பில்லையோ, அந்த நிமிஷமே நான் பேசறதை நிறுத்தியிருக்கணும்.

    கிருஷ்ணா நிமிர்ந்து அம்மாவைப் பார்த்தான். மெல்லச் சிரித்தான்.

    கோவப்படாதேம்மா. எனக்குக் கல்யாணத்துல இஷ்டமில்லைனு ஆயிரம் தடவை உன்கிட்ட சொல்லியாச்சு. விடேன்!

    அதுக்கு என்ன காரணம்?

    எல்லாத்துக்குமே காரணம் இருக்குணும்னு அவசியமில்லையா! என் சாப்பாடு ரெடியா?

    டிபன் பாக்ஸில் தேங்காய் சாதத்தை அடைத்தாள் அம்மா. கவரில் வறுவல் அப்பளப்பூ இத்யாதிகளை நுழைத்தாள். அவனிடம் நீட்டினான்.

    கோவமாம்மா? அவள் முகவாயை நிமிர்த்திக் கேட்டான் கிருஷ்ணா.

    அவனது சிரிப்பில் சட்டென பூவாக மலர்ந்து விட்டாள் அம்மா.

    உன்கிட்ட கோவிச்சுகிட்டா, நான் இருந்தென்ன லாபம்?

    நான் வரட்டுமா? மத்தியான மாத்திரையை தவறாம சாப்பிடு. ம்யுகோடில் சிரப் தீர்ந்து போச்சு. வரும்போது வாங்கிட்டு வர்றேன் நான்.

    சரிப்பா அப்படியே காஸ_க்கு போன் பண்ணிச் சொல்லிரு!

    வர்றேம்மா!

    வாசலில் இறங்கி, ஸ்கூட்டரை ஸ்டாண்ட் விடுவித்து, உதைத்து கால் மாற்றி மறுபுறம் வந்து ஏறி அமர்ந்து அம்மாவைப் பார்த்து தலையசைத்தபடி புறப்பட்டான் வேகமாக. அம்மா பெருமூச்சு விட்டபடி அவனையே புள்ளியாகும் வரை பார்த்துக் கொண்டு நின்றாள். உள்ளே வந்தாள்.

    என்ன ரங்கம்மா… சமையல் ஆச்சா?

    பக்கத்து வீட்டு மாமி மடிசார் கொசுவத்தை இழுத்த விட்டபடி உள்ளே நுழைந்தாள்.

    வாங்க மாமி! உட்காருங்க!

    மூஞ்சி நட்டுகிட்டு இருக்கு. காலைல கச்சேரியா?

    ம்! நம்ம ஒடம்போட ஒட்டினது. பிராணன் போகும்போது அதுவும் போகும்!

    உன் பிள்ளைக்கு உன்மேல இரக்கமே இல்லையா?

    ஏன் அப்படி கேக்கறீங்க? என்னை உள்ளங்கையில வச்சுத் தாங்கறான். அவனைப் போல ஒரு புள்ளை அமையணுமே!

    பார்த்தா அப்படி தெரியலியே!

    ஏன்?

    ஒரு மருமகளுக்காக நீ ஏங்கறே! உன் பிள்ளை ஒப்புக்க மாட்டேங்கறானே லேசுல!

    அவனுக்கு கல்யாணத்துல இஷ்டமில்லை மாமி!

    அதான் ஏன்?

    தெரியலை!

    என்ன அம்மா நீ? புள்ளை மனசு புரியாம குடித்தனம் பண்ணிண்டு? தபாரு ரங்கம்மா காதல், கத்திரிக்காய்னு தானும் இருக்கப் போறது. கேட்டியா?

    இருந்தா எங்கிட்ட சொல்லுவானே!

    வேற ஜாதிப் பொண்ணா இருந்தா?

    வேற ஜாதி, வேற மதம் எதுவானாலும் எனக்கு சம்மதம் தான். அது கிருஷ்ணாவுக்கே தெரியும்!

    இல்லைங்கறியா?

    ஆமாம்! கல்யாணப் பேச்சை எடுத்தாலே அவனுக்குப் புடிக்கலை. மூஞ்சில ஒரு வெறுப்பு தென்படறது. ரெண்டு சகோதரிகளை கரையேத்தி, கடனை உடனே வாங்கி சலிச்சிட்டானா இருக்கும். பாவி நான்! குருவி தலைல பனங்காய் வச்சிட்டேன்!"

    இல்லை ரங்கம்மா! கடமையை நிறைவேத்தினா சலிப்பு வராது. பெருமிதம் பொங்கும். சாதிச்சிட்டோம்னு கர்வம் வரும். அது நிச்சயம் காரணம் இல்லை. அழகுக்கோ, உத்யோகத்துக்கோ, படிப்புக்கோ, அந்தஸ்த்துக்கோ எதுல உன் பிள்ளைக்குக் குறைச்சல்?

    பின்ன ஏன் மாமி?

    எனக்கு ஒண்ணு தோணறது ரங்கம்மா!

    என்ன அது?

    நீ கோச்சுக்கப் படாது!

    இல்லை. சொல்லுங்க!

    உன் பிள்ளைக்குக் காதல் தோல்வி ஏற்பட்டு இருக்கலாம் இல்லையா? அதுதான் விரத்தில கொண்டு போய் விடும். உறவுகளை நிராகரிக்கும்.

    நிச்சயமா இல்லை மாமி!

    நீ எப்படி சொல்லுவே?

    நான் வேண்டாம்னு அவன் காதலை வெட்டினாத் தானே. அவனுக்குத் தோல்வி? அப்படி எதுவும் நடக்கலையே!

    அசடு! காதல்ங்கறது உன் பிள்ளை மட்டும் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை! ஒரு பொண்ணும் உண்டு அவபக்கத்துல மறுத்திருக்கலாம் இல்லையா? அப்பவும் இவனுக்குத் தோல்விதானே?

    ரங்கம்மா சிரித்தாள்.

    ஏன் சிரிக்கற?

    எனக்கு தெரிஞ்சு அப்படி எதுவும் இல்லை மாமி. ஒரு பெண்ணை கிருஷ்ணா நேசிச்சிருந்தா அது வெளில வராமலா இருக்கும்?

    வேர்ல வென்னீர் கொட்டப்பட்டிருந்தா? முளைக்கறதுக்கு முன்னாலேயே முறிக்கப்பட்டிருந்தா, எப்படி தெரியும் உனக்கு? இனி நமக்கு இல்லைனா என் பின்னால கிருஷ்ணா அதைப் பற்றி ஏன் பேசணும்?

    மாமி!

    மனசுக்குள்ள எத்தனை நாள் குமைஞ்சாலோ? உனக்குத் தெரியுமா அதெல்லாம்?

    ரங்கம்மா அதிர்ந்து போனாள்.

    காயத்ரி நீ இங்கே இரு! நான் கிருஷ்ணாவுக்கு போன் பண்ணிட்டு வந்திர்றேன்!

    அவர் ஓடினார்.

    அதே சமயம் வங்கியில் மானேஜர் அறையில் இருந்தான் கிருஷ்ணா.

    என்ன சார்?

    அவசர வேலை எதுவும் இருக்கா கிருஷ்ணா?

    இல்லை சார்!

    உங்ககூட பர்சனலா நான் கொஞ்சம் பேசலாமா?

    புருவம் சுருக்கினான் கிருஷ்ணா.

    மானேஜருக்கு அவனை ரொம்பவும் பிடிக்கும். வேலை தவிர வேறு எதிலும் கவனம் திருப்பாத, கடமையே கண்ணான கிருஷ்ணா அவருக்கு சுலபமாக ஸ்நேகிதனாகி விட்டான்.

    ஐம்பது வயது மானேஜர், அவனை ஒரு இளைய சகோதரன் போலதான் நடத்தினார்.

    அவரும் கட்டை பிரம்மச்சாரி. அதனால் அவர்பால் ஈர்ப்பு கிருஷ்ணா. ஓரிரு முறை அவர் வீட்டுக்குக் கூட சென்றதண்டு.

    சொல்லுங்க சார்!

    நாளைக்கு என்சிஸ்டர் சொப்னாவுக்கு பிறந்த நாள். வீட்ல ஒரு பார்ட்டி ஏற்பாடு செஞ்சிருக்கேன். வரணும் நீங்க. இது அவளோட ரிக்வெஸ்ட்.

    எதுக்கு சார் இதெல்லாம்?

    அது மட்டுமல்லை. அங்கே வச்சு என் மனசைத் திறந்து உங்ககிட்டக் காட்டணும் நான்!

    கிருஷ்ணா தாடையை வருடிக் கொள்ள, டெலிபோன் ஒலித்தது.

    எடுத்தார் மானேஜர்.

    கிருஷ்ணா உங்களுக்குத்தான்!

    ரிசீவரை வாங்கியவன் முகம் கணிசமாக மாறிக் கொண்டே வந்தது.

    தடாலென எழுந்து விட்டான்.

    சார்! அம்மா ஆஸ்பிட்டல்ல அட்மிட் ஆகியிருக்காங்க!

    உடனே போங்க கிருஷ்ணா. ப்ளீஸ்!

    கிருஷ்ணா ஓட்டமாக வெளியே வந்தான்.

    மறுபடியும் டெலிபோன். எடுத்தார் மானேஜர்.

    கிருஷ்ணா இருக்காரா? அவருக்கொரு அவசர மெஸேஸ்!

    நர்சிங் ஹோம்லேருந்தா?

    இல்லை. நான் கிருஷ்ணாவோட ஸ்நேகிதன் பேசறேன். என் பேரு கோகுல்!

    விஷயத்தை சொல்லுங்க!

    கிருஷ்ணாவை வேரோடு சாய்க்கும் செய்தி ஒன்று அதில் இருந்தது.

    2

    தட்டமாக உள்ளே நுழைந்தான் கிருஷ்ணா. எதிரில் காயத்ரி.

    காயத்ரி! என்னங்க ஆச்சு அம்மாவுக்கு?

    டாக்டர் உள்ளே இருக்கார். தெரியலை கிருஷ்ணா! மற்ற விவரங்களை அவள் சொல்லும் நேரம் டாக்டர் வெளியே வந்தார்.

    கிருஷ்ணா பாய்ந்தான்.

    டாக்டர்…

    நீங்கதான் அவங்க மகனா? தற்சமயம் ஆபத்தான கட்டத்தைக் கடந்தாச்சு. ஆனா இதயம் ரொம்ப பலவீனமா இருக்கு. இன்ஃபாக்ட், ரொம்ப நாள் தாக்குப் பிடிக்க மாட்டாங்க, சந்தோஷமா வச்சிக்குங்க.

    நான் அம்மாவை?

    போய்ப் பாருங்க. ரொம்ப உணர்ச்சி வசப்படாம பேச்சை அமைச்சுக்குங்க.

    தேங்க்யூ டாக்டர்!

    கிருஷ்ணா உள்ளே வந்தான். அம்மா கண் மூடிக் கிடந்தாள். மானிட்டர் விலக்கப்பட்டிருந்தது. ட்ரிப்ஸ் ஏறிக் கொண்டிருந்தது.

    கட்டிலின் அருகில் வந்து உட்கார்ந்தான். அம்மாவின் கையை மெல்லப் பிடித்தான்.

    அந்த ஸ்பரிசத்தில் மெல்லக் கண் விழித்தாள் அம்மா.

    கிருஷ்ணா என அவள் உதடுகள் மட்டும் அசைந்தது மெல்ல. பேச முயற்சித்தாள் முடியவில்லை.

    பேசாதேம்மா! உனக்கு ஒண்ணுமில்லை. வழக்கமான வியாதிதான். கொஞ்சம் அதிகமாயிருக்கு. நான்தான் வந்துட்டனே!

    அம்மாவின் கண்களில் ஈரம்.

    ம்ஹ_ம்! எதுக்கு அழுகை? கண்ணீரைத் துடைத்து விட்டான்.

    அவனையே பார்த்துக் கொண்டிருந்த அம்மா மெல்ல உறங்கப் போனாள்.

    நர்ஸ் உள்ளே வந்தாள்.

    நான் பார்த்துக்கறேன் சார். நீங்க உங்க வேலையை கவனிக்கலாம்!

    கிருஷ்ணா வெளியே வந்தான்.

    பக்கத்து வீட்டு அய்யர் மாமி அலைய குலைய ஓடி வந்து கொண்டிருந்தாள்.

    என்னடா கோந்தே! எப்படியிருக்கா ரங்கம்மா?

    ஆபத்தில்லை மாமி தூங்கறாங்க!

    தெய்வமே! நீ கைவிடலை இந்தப் பிள்ளையை. அவ பிழைச்சிட்டா ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தறதா வேண்டிண்டு இருக்கேன்!

    தேங்க்ஸ் மாமி!

    எதுக்குடா தேங்க்ஸ்? நானும் உங்கம்மா வாட்டதான். என்னைப் பிரிக்காதே!

    "சிரித்தான் கிருஷ்ணா.

    சிரிச்சே ஆளை மயக்கிடு! உன் கண்ணத்தல விழற குழியைப் பார்த்தா, நேக்கே என்னவோ பண்றது! ஏண்டா உங்கம்மாவைப் போட்டு இப்படி படுத்தற?"

    நான் என்ன மாமி படுத்தினேன்?

    கார்த்தால நன்னா இருந்தாளா! மனசுக்குள்ளே குமைஞ்சு குமைஞ்சு போனா, மூச்சு முட்டாதோ? மூத்தரத்தாலே பேரன் நனைக்க வேண்டிய ஒடம்பை சலைனும், ஊசி மருந்தும் நனைச்சா தாங்குமடா மனசு?

    மாமி…

    ஏன்? ஏன்னு கேட்டேன். மிரட்டலை. உங்கம்மா கிட்ட வச்சிக்கோ. அவ மனசுதான் ழஞ்சை என்னன்டா காட்டாதே உன் வீரத்தை! உரிச்சுப் புடுவேன் உரிச்சு!

    அதானே!

    என்னடா அதானே?

    மாமா உடம்புல சதையே இல்லான ஆனதுக்குக் காரணம் இப்பதானே புரியுது!

    கொல்லுடா அவனை!

    கலகலவென சிரித்தான் கிருஷ்ணா.

    கண்ணா… இது மாதிரி ரங்கம்மாவையும் சிரிக்க வைடா ராஜா. நீ நெனச்சா அது முடியும். இது வரைக்கும் நீ ஏன் கல்யானத்தை விலக்கினேன்னு நான் கேக்கலை. இனிமே ஒப்புக்கோடா. உன் மனசுல உள்ளதை விண்டு சொல்லுப்பா. இனி ரங்கம்மா ரொம்ப நாளைக்கு இருக்க மாட்டா. திருப்தியோட அவளை அனுப்பி வைடா கண்ணே!

    அவன் கைகளைப் பிடித்துக் கொண்டாள் மாமி. அவளது கண்ணீர் முத்துக்கள் அவனது மணிக்கட்டில் தெரிந்தது. கிருஷ்ணா தவித்தான்.

    என்ன சம்மதிக்கறியா?

    என்ன மாமி நீங்க? ஒரு நிமிஷத்துல சொல்ற முடிவா இது?

    படவா! ஒரு யுகமா போராடறா உங்கம்மா. பதில் சொல்லிக் கிழிச்சிட்டே நீ! போடா! பாசம்னு சொல்லிண்டு வேஷம் போடற உன்னைப் பார்க்கவே வெறுப்பா இருக்கு நேக்கு!

    நர்ஸ் வெளியே வந்தாள்.

    கிருஷ்ணா. உங்க மதர் கூப்பிடறாங்க.

    மாமி! நீங்களும் வாங்கோ!

    இருவருமாக உள்ளே நுழைந்தார்கள். ட்ரிப்ஸ் எடுக்கப்பட்டிருந்தது.

    வாங்கோ மாமி!

    உனக்கு ஆர்லிக்ஸ் கொண்டு வந்திருக்கேன். உம்புள்ளைக்கு சப்பாத்தி! அலட்டிக்காதே படுத்துக்கோ!

    எழுந்து உட்கார முயன்றாள் ரங்கம்மா.

    வேணாம்மா!

    இல்லை கிருஷ்ணா! எனக்கு சரியா ஆயாச்சு. கொஞ்சம் உட்காரணும் போல இருக்கு!

    டாக்டர் உள்ளே நுழைந்தார்.

    டாக்டர், அம்மா…

    உட்கார ஆசைப்படறாங்களா? உட்காரட்டும். ஷீ ஈஸ் ஆல்ரைட் நௌ. நாளைக்கு டிஸ்சார்ஜ் பண்ணிக் கூட்டிட்டுப் போயிரலாம். ஈஸியா இருங்கம்மா!

    போய் விட்டார்.

    மாமி கொஞ்ச நேரம் இருந்து விட்டுப் புறப்பட்டுப் போய் விட்டாள்.

    கிருஷ்ணா!

    சொல்லும்மா!

    இப்ப நான் பிழைச்சிட்டேன். ஆனா ரொம்ப நாள் நான் இருக்கமாட்டேன்!

    நீ கடவுளா? சும்மாரும்மா!

    இல்லைப்பா. நெருப்புனா வாய் வெந்துராது. நாளைக்கு வீட்ல போய் சில முக்கிய விஷயங்களை நான் பேசணும்!

    அம்மா நான்…

    உன்மனசுல உள்ள பாரம் விலகலைனா. என் மூச்சு பிரியாது!

    என்னம்மா சொல்றே நீ?

    நாளைக்குச் சொல்றேன்!

    மே ஐ கம் இன்?

    வங்கி மானேஜர் உள்ளே நுழைந்தார். பின்னால் அவரது தங்கை சொப்னா.

    பரஸ்பர நல விசாரிப்பு.

    அம்மா பாத்ரூம் போக எழுந்தாள்.

    இரு! சிஸ்டரைக் கூட்டிட்டு வர்றேன்!

    வேணாம். நான் உதவறேன்! சொப்னா வந்து அம்மாவைப் பிடித்துக் கொண்டாள். மெல்ல நடத்தி அழைத்துச் சென்றாள்.

    கிருஷ்ணா அதையே பார்த்துக் கொண்டிருந்தான்.

    அம்மா தவிர வேற. லேடீஸ் உங்க வீட்ல கிடையாதே!

    இல்லை சார்!

    நான் சொப்னாவை வேணும்னா ஒரு வாரத்துக்கு உதவிக்கு அனுப்பட்டுமா?

    சார் நீங்க!

    ஏன் கிருஷ்ணா? அதுல என்ன தப்பு? பரஸ்பர உதவிகள் மனிதாபிமானம்!

    தேங்க்யூ சார். பக்கத்து வீட்டு மாமி செய்யறாங்க. அவங்க ஃபீல் பண்ணப் போறாங்க!

    சாதுர்யமா தவிர்த்திட்டீங்க!

    இல்லை சார். நாளைக்கு சொப்னா பாத்டேக்கு!

    நீங்க வரவேண்டாம். தனக்கு பிறந்த நாள் கொண்டாட்டமே வேண்டாம்னு சொப்னா சொல்லியாச்சு!

    காரணம் நானா?

    இருக்கக் கூடாதா? அதுல தப்பில்லையே!

    சொப்னா அம்மாவுடன் திரும்பினாள்.

    உனக்கு ஏம்மா சிரமம்?

    இப்பிடி நீங்க பிரிச்சுப் பேசினாத்தான் ரொம்ப சிரமம். கொஞ்சம் ஆர்லிக்ஸ் கரைச்சுத் தரட்டுமா?

    பதிலை எதிர்பாராமல் கரைத்தாள். படுக்க வைத்து வாயில் புகட்டினாள்.

    இருட்டியாச்சு. போலாமா சொப்னா?

    அம்மாவுக்கு பெண் உதவி தேவைப்படுமா கிருஷ்ணா? நான் இருக்கணுமா?

    தேவையில்லை. நான் கவனிச்சுப்பேன்!

    என்னதான் செல்ல மகனா இருந்தாலும், பல விஷயங்களுக்கு உங்க தாய்க்கு உங்க துணை உதவாது கிருஷ்ணா. வரட்டுமா?

    அவள் ‘நறுக்’கென சொல்லிவிட்டு நகர, மானேஜரும் புறப்பட்டு அவளைப் பின் தொடர்ந்தாள்.

    "பொண்ணு சூட்டிகையா அழகா இருக்கா! இவளை

    Enjoying the preview?
    Page 1 of 1