Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

En Devathai Sonnal
En Devathai Sonnal
En Devathai Sonnal
Ebook88 pages45 minutes

En Devathai Sonnal

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Pattukkottai Prabakar is a prolific writer of Tamil crime and detective fiction. He has also worked as a screenwriter in the Tamil film industry, and also for Paramapadham, the first Tamil-language "mega-serial" shown on Doordarshan.
First published in the 1977 in Anandha Vikatan. He has written more than three hundreds novels, more than two hundred short stories. Lots of his novels are translated in Telugu and Kannada. He has also worked as a Dialogue writer in more than ten movies in Tamil.
Prabakar's novels most commonly feature the adventures of the detective couple Bharat and Susheela, of Moonlight Agencies, and their employees Marikkozhunthu (a.k.a. Madhavi) and Ravi. There is a running gag in the books about the slogans on Susheela's T-shirts.

Pattukkottai Prabakar frequently collaborates with the detective fiction author duo Subha; some novels have appeared featuring both Bharat and Susheela and Subha's detective couple, Narendran and Vaijayanthi.
Languageதமிழ்
Release dateApr 23, 2018
ISBN6580100900152
En Devathai Sonnal

Read more from Pattukottai Prabakar

Related to En Devathai Sonnal

Related ebooks

Reviews for En Devathai Sonnal

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    En Devathai Sonnal - Pattukottai Prabakar

    http://www.pustaka.co.in

    என் தேவதை சொன்னாள்

    En Devathai Sonnal

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    1

    டு ராத்திரியில் திடீரென்று துக்கம் கலைந்து போவது ஒரு பெரிய அவஸ்தை. இந்த வாரத்தில் இது மூன்றாவது தடவை கொசுக்கடிஇகரண்ட்கட்இதெருவில் தூரமாக இரண்டு நாய்களின் சண்டை மலையின் விளிம்புக்குத் துரத்தப்படுகிற கெட்ட கனவு இப்படி ஏதாவதொன்று காரணமாகி விடுகிறது.

    திரும்பிப் பார்த்தால் கொஞ்ச நேரம் கண்களை இருட்டுக்குப் பழக்கிய பின் அலாரம் டைம் பீஸில் ரேடியம் முள்களின் நிலை வைத்து ரெண்டே கால் அல்லது மூணே கால் என்று உத்தேசிக்க முடிகிறது. கொஞ்ச விநாடிகளுக்குப் பிறகு முடிகிற ஊதுபத்தியின் கடைசி புகைவிலகி மௌனமாவது போல தூக்கக் கலக்கம் போய் ரொம்ப விழிப்பாகி விடுகிறது.

    அசாத்திய விழிப்பில் மெல்லிய நீலநிற இரவு விளக்கின் சன்ன வெளிச்சம கூடப் பெரிதாகப் படுகிறது. ஃபேனுக்குப் போல இரவு விளக்குக்கும்கூட ரெகுலேட்டர் இருந்தால் இன்னும் குறைக்கலாம் போலத் தோன்றுகிறது அலாரம் டைம்பீஸின் டிக்-டிக்-டிக்-டிக் பிரதான தாள நயமாகிறது. சுழல்கிற ஃபேனின் சப்தம் சுருதி என்றால் ஜன்னல் வழியாக வருகிற சில் வண்டுகளின் சப்தம் கோரஸ் வயலினாகக் கொள்ளலாம்.

    மார்பின் மேல் கிடந்த நிர்மலாவின் பிஞ்சுக்கையை எடுத்து வைத்துவிட்டு போர்வையை விலக்கி எழுந்து உட்கார்ந்து கொண்டு சில விநாடிகள் பிளாங்க்காக மாதவியைப் பார்ப்பேன்.

    அஞ்சரை அடி அகலக் கட்டிலில் இரண்டு குழந்தைகளும் புரண்டு விழுந்துவிடக் கூடாதேயென்ற ஒரு எல்லையில் நான். ஒரு எல்லையில் மாதவி. தூங்குவதில் கூட அவளிடம் ஒரு டிஸிப்ளின் இருக்கும். ஜிப் வைத்த நைட்டி அணிந்து. காலின் கொலுசு கூடத் தெரியாமல் சீர் செய்து மல்லாந்து படுத்துக் கொண்டாள் என்றாள் காலை வரை அதே பொசிஸன்தான். புரளல் கிடையாது. தலையைக் கலைத்து கொள்வதில்லை. பின்னல் நசுங்கி சப்பையாகிவிடக் குடாதென்று தலைக்குப் பின்னால் அதைத் தனியாக எடுத்து வைத்துக் கொண்டு படுக்கின்ற லாவகம் இந்த ஒன்பது வருடங்களில் ஒருமுறை கூட மாறினதில்லை. ஆக்ஷன் ரீப்ளே மாதிரி… அவள் நடையில் அருகில் வந்து நிற்பதில் முகம் நிமிர்த்திப் பார்ப்பதில் ஆமோதித்துத் தலையசைப்பதில் கொஞ்சமாக சிரிப்பதில் என்று எல்லாமே கம்ப்யூட்டர் மூலம் அமைக்கப்பட்ட சிஸ்டம் போல மாற்றமே இருந்ததில்லை.

    எனக்கு இந்த மாதிரி எல்லைகளே கிடையாது. அலுப்பாக இருந்தால் சிலசமயம் பேண்ட்லிருந்து லுங்கிக்குக்கூட மாறாமல் அப்படியே படுத்து விடுவேன். சிலசமயம் கட்டிலில் வெயில் காலமாய் இருந்தால் மொட்டை மாடியில் சிலசமயம் ஸோபா செட்டில் கூட.

    திவ்யா அப்படியே மாதவியைக் கொண்டிருக்கிறாள். பல் துவக்காமல் காபி சாப்பிடுவதில்லை. சுவாமி கும்பிட்டு விபூதி வைத்துக் கொள்ளாமல் டிபன் சாப்பிடுவதில்லை. ஷு கழற்றி அதில் உள்ள மண்ணெல்லாம் தட்டிஎடுத்துஅதன் ஸ்டாண்டில் வைத்து விட்டுத்தான் அறைக்குள் வந்து ஸ்கூல் யூனிஃபார்மைக்கழற்றுவாள்.

    திவ்யா. இன்னைக்கு உனக்கு ஹோம் வொர்க்நிறைய இருக்கு நாளைக்கு வேற டெஸ்ட் இருக்கு. அதனால ஆறு மணி வரைக்கும்தான் விளையாடணும் அப்புறம் படிக்க உக்காந்துடனும் என்று அம்மா சொன்னால் சரியென்று தலையாட்டிவிட்டுப் போகிறவள் சரியாக ஆறுமணிக்கு பக்கத்து வீட்டிலிருந்து விளையாடி முடித்துத் திரும்பி விடுவாள்.

    அதே வார்த்தையைத் தான் மாதவி நிர்மலாவிடம்சொல்லியிருப்பாள். அவளும் ‘சரிம்மா’ என்று தலையாட்டி விட்டுத்தான் போயிருப்பாள். ஆனால் ஏழு மணியானாலும் வரமாட்டாள். மூன்று முறை குரல் கொடுத்தும் ‘இதோ வந்துட்டேன்’ என்று பதில் மட்டும் வரும். பிறகு மாதவி புயல் மாதிரி சென்று சத்தம் போட்டுத் திட்டி இழுத்துக் கொண்டு வரவேண்டும்.

    நடுவில் நான் புகும் கட்டம் இது. நாடகத்தில் ஒரு பாத்திரத்திற்கு மட்டும் வசனமே இல்லாமல் நிறுத்தி வைக்க முடியாதென்பதால் நடுநடுவில் ‘அதெப்படி சரியாகும்?’‘ நீங்க என்ன தப்பாவா சொல்லப் போறீங்க?’‘நீங்க எப்பேற்பட்டவரு…’ இந்த மாதிரி ஏதாவது வசனம் கொடுப்பார்கள். அந்த மாதிரி குடும்பத் தலைவன் பேசாமல் இருப்பதா என்று.

    விளையாடற குழந்தையை ஏன் இப்படி பாதியிலே இழுத்துட்டு வர்றே? படி, படின்னு வற்புறுத்தாதே. நம்ம பிள்ளைங்க நல்லாத்தான் படிக்கிறாங்க. நீ வற்புறுத்தி கையில புத்தகத்தைக் கொடுத்தாலும் அவளுக்கு புத்தி விளையாட்டில இருந்திச்சுன்னா படிப்பு எப்படி ஒட்டும்? என்று சொல்லி வைத்தால்.

    உடனே சுள்ளென்று பதில் வரும்.

    "விளையாட வேணாம்னு யார் சொன்னாங்க? ஒரு லிமிட்

    Enjoying the preview?
    Page 1 of 1