Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thottal Thodarum
Thottal Thodarum
Thottal Thodarum
Ebook310 pages2 hours

Thottal Thodarum

Rating: 3.5 out of 5 stars

3.5/5

()

Read preview

About this ebook

இது காதல் கதை என்று சொல்வதைவிட, காதலைப் பற்றின கதை என்பதே பொருத்தமாக இருக்கும். இந்தக் கதை எழுதியதன் மூலம், வாசகர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டதன் மூலம்... ஒன்று உறுதியானது. அது...

வயது, அந்தஸ்து, தரம், பதவி - என்று எந்த வித்தியாசமும் இன்றி, பொது மக்களோடு ஐக்கியமாகியுள்ள விஷயங்களில் முக்கியமானது 'காதல்'.

காதலித்தல் என்பது செக்ஷன் 302க்கு உரித்தான குற்றம் போல் கருதப்பட்ட காலம் எல்லாம் மலையேறி... இன்றைக்கு தினம் ஒரு காதல் செய்தி படிக்கிறோம்... பேசுகிறோம்.. கேள்விப்படுகிறோம்.

நம்பிக்கை உண்டோ இல்லையோ - ஆத்திகவாதி, நாத்திகவாதி இருவருமே கடவுளைப் பற்றிப் பேசுதல் போல்... ஆதரிப்பவரும், எதிர்ப்பவரும் - காதலைப் பற்றிப் பேசுகிறார்கள் (இதனால்தான் Love is God என்றார்களோ!)

காதல் - உணர்வுப் பூர்வமான உன்னத விஷயம். வாழ்க்கை யதார்த்தப் பூர்வமான கரடுமுரடான விஷயம். வயிற்றுப் பசிக்கு வழி அமைத்துக் கொள்ளாமல் உள்ளப் பசிக்கு அலையும் காதல்கள் மேல் எனக்குக் கவலை கலந்த கோபம் வரும். 'ஓடிப்போவது' ஒரு காதலின் க்ளைமாக்ஸாக இருக்கலாம். ஆனால், சவால்விடும் வாழ்க்கைக்கு அதுதான் சரியான ஆரம்பம். அதையே என் கதைக்கும் ஆரம்பமாக்கத் தீர்மானித்தேன்.

- பட்டுக்கோட்டை பிரபாகர்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789385545375
Thottal Thodarum

Read more from Pattukottai Prabakar

Related to Thottal Thodarum

Related ebooks

Related categories

Reviews for Thottal Thodarum

Rating: 3.5555555555555554 out of 5 stars
3.5/5

9 ratings1 review

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 5 out of 5 stars
    5/5
    I just love this one.My all fav one,hats off sir

    1 person found this helpful

Book preview

Thottal Thodarum - Pattukottai Prabakar

http://www.pustaka.co.in

தொட்டால் தொடரும்

Thottal Thodarum

Author :

பட்டுக்கோட்டை பிரபாகர்

Pattukottai Prabakar

For more books

https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

பொருளடக்கம்

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

அத்தியாயம் 3

அத்தியாயம் 4

அத்தியாயம் 5

அத்தியாயம் 6

அத்தியாயம் 7

அத்தியாயம் 8

அத்தியாயம் 9

அத்தியாயம் 10

அத்தியாயம் 11

அத்தியாயம் 12

அத்தியாயம் 13

அத்தியாயம் 14

அத்தியாயம் 15

அத்தியாயம் 16

அத்தியாயம் 17

அத்தியாயம் 18

அத்தியாயம் 19

அத்தியாயம் 20

அத்தியாயம் 21

அத்தியாயம் 22

அத்தியாயம் 23

அத்தியாயம் 24

அத்தியாயம் 25

அத்தியாயம் 26

அத்தியாயம் 27

1

காதல் என்பது…

வாயில் பிரஷ்ஷுடன்

குளியல் அறையில்

கனவு காண்பது

வானம் மழையின் மாநாட்டை நடத்துவதற்கு மைக் டெஸ்ட்டிங் செய்து கொண்டிருந்தது. சூரியனுக்கு அவசரமாக 144 உத்தரவு. அலுவலகங்களில் இருந்து காலி டிபன் பாக்ஸ்களோடு வெளிப்பட்டவர்களில் குடை வைத்திருந்தவர்கள் விரித்துக்கொள்ள… மொட்டை மாடிகளில் கிளிப்களிருந்து துணிகளை அவசரமாக உருவிக்கொண்டார்கள் பெண்கள்.

நீளமான மேஜைக்கும், கை வைத்த நாற்காலிக்கும் ‘பேட்’ மூலம் தொடர்பு ஏற்படுத்தி, ஆஷ் ட்ரேயின் பள்ளத்தில் புகையும் சிகரெட் காத்திருக்க எழுதிக்கொண்டிருந்த வெங்கடேஷ் மணியடித்து அழைத்து, சாரல் அடிக்கும். ஜன்னலை சாத்துப்பா. அப்படியே டியூப் லைட்டைப் போடு என்றான்.

சொல்லப்பட்டவன் செய்து முடித்துவிட்டு நகர இருந்தபோது நிமிராமல் கேட்டான், எடிட்டர் வீட்டுக்குப் போயிட்டாரா வேலு?

கார் நிக்கிறது… இன்னும் போகலை சார்.

இன்னும் போகலையா? என்று, மேஜைமீது தான் சுழற்றி வைத்திருந்த வாட்ச்சைப் பார்த்துவிட்டு, பேனாவை மூடி வைத்து எழுந்தான்.

கதவைத் தள்ளிக் கொண்டு தனியறையிலிருந்து வெளிப்பட்டு நீளமான ஹாலில் பிரவேசித்தான்.

டைப்ரைட்டரை மூடிக்கொண்டிருந்தாள் புவனா. காபியை சிப் செய்து கொண்டே லெட்டரிங் செய்து கொண்டிருந்தான் சுந்தர். மொத்தமாகக் கோந்து தடவி ஒவ்வொரு ஸ்டாம்ப்பாகப் பிய்த்து கவர்களில் ஒட்டிக் கொண்டிருந்தான் கணேசன். மேஜையைப் பூட்டிக்கொண்டு எழுந்து புவனாவுக்கு முதுகு காட்டி நின்று வேஷ்டியை இறுக்கிக் கட்டிக் கொண்டார் ராமமூர்த்தி.

போஸ்டர் ஆயிடுச்சா சுந்தர்? என்றான் வெங்கடேஸ்.

வந்துடுச்சு சார். பார்க்கறீங்களா?

எடு.

சுந்தர் பிரஷ்ஷைச் செருகிவிட்டு டிராயரை இழுத்து, எட்டாக மடிக்கப்பட்டிருந்த போஸ்டரை எடுத்துத் தந்தான். வெங்கடேஷ் அதை விரித்து சுவர் ஓரமாகப் பிடித்துவைத்துப் பார்த்தான். பரவாயில்லை, நல்லா வந்திருக்கு. படம்தான் கஸ்டமா இருக்கு. பாரு, இந்தப் பொண்ணுக்கு என்ன கஸ்டமோ… சேலை வாங்க முடியாம பிரா, ஜட்டியோட நிக்கிறா என்று சிரித்தான் வெங்கடேஷ்.

ஆர்ட்டிஸ்ட் மாடர்ன் டிரெஸ் போடட்டுமான்னு கேட்டார் சார். எடிட்டர்தான் இப்படிப் போடச் சொல்லி வற்புறுத்தினார். போன்ல பேசினப்போ நான் பக்கத்தலே இருந்தேன்.

படம் கவர்ச்சியா இருந்தாத்தான் கதையைப் படிப்பாங்கங்கிறது அவர் வாதம். இதிலே எனக்கு உடன்பாடே கிடையாது. கவர்ச்சி, படத்திலே கிடையாது. கதையிலேயும், எழுதற விதத்திலேயும்தான் இருக்கணும். பார்த்துட்டு வந்துடறேன். போயிடப் போறார். வெங்கடேஷ் போஸ்டரை மடித்துக் கொடுத்துவிட்டு நடந்து மாடிப்படிகளில் ஏறினான்.

அறைவாசலில் ஸ்டூலில் அமர்ந்து பல்குத்திக் கொண்டிருந்த பையன் எழுந்துக் கொண்டான்.

உள்ளே யாரும் இருக்காங்களா மணி?

இல்லை சார்.

சிங்கிள் டோரின் கைப்பிடியைக் கீழே அழுத்தித் தள்ளி, குளிர்காற்றின் வரவேற்புடன் உள்ளே நுழைந்து நின்று, சார்! என்றான்.

ரிஸீவரை கையில் வைத்துக்கொண்டு டயல் செய்து கொண்டிருந்த, தங்க ஃபிரேமில் கண்ணாடி அணிந்து, பட்டு ஜிப்பா அணிந்திருந்த எடிட்டர் மார்பில் கனத்த செயின் முடிவில் ஆலிலை கிருஷ்ணன் டாலர்.

வாங்க வெங்கடேஷ் என்று கூறிவிட்டு போனில், பார்த்தசாரதி இருக்காரா…? பேசச் சொல்லும்மா… முரளிதரன்னு சொல்லு என்று காத்திருக்கையில், பேப்பர் வெயிட்டை எடுத்து அடியில் இருந்த மெமோ காகிதத்தை நீட்டினார்.

அதில் ‘8000’ என்று எண்கள் இருந்தன.

என்ன சார் எட்டாயிரம்?

ஹலோ, சாரதியா? இன்னும் ஒரு மணிநேரத்துக்கு வீட்ல இருப்பியா? டென்னிஸா? மழை தூறிக்கிட்டிருக்கு. எப்படிய்யா விளையாடுவே? வீட்ல டென்னிஸ்னு சொல்லிட்டு ரம்மியா? ஒரு லீகல் அட்வைஸ் வேணும் சாரதி. அரைமணி நேரத்திலே வர்றேன், இருக்கியா? ரைட்டு என்று வைத்துவிட்டு, பிரச்சனை பெரிசாகும் போல இருக்கு வெங்கடேஷ் என்றார்.

எவ்வளவு பெரிய பிரச்சனையானாலும் சரி, நூறு வழிகள் யோசிப்போம். என்னை மறுப்பு மட்டும் எழுதச் சொல்லிடாதீங்க சார்.

உங்களுக்கு ஈகோ முக்கியம். எனக்குப் பத்திரிக்கை முக்கியம். ஏஜென்ட் போன் செய்தார். வழிப்பறி செய்து எரிக்கப்பட்ட காப்பிகள் எட்டாயிரமாம். அதுக்கு ஃபுல் காம்பன்சேஷன் கேக்கறார். மறுத்தா கோர்ட்டுக்குப் போவேன்றார். அந்தக் கட்டுரை கொஞ்சம் ப்ரவோக் பண்ணம்னு நான் அச்சுக்கு முன்னாடியே நினைச்சேன்.

வாக்கியங்கள் கடுமையா இருந்திச்சுங்கிறதை ஒப்புக்கறேன். ஆனா, ஜாதி எதையும் நான் குறிப்பிட்டு எழுதலை.

குறிப்பிட்டு எழுதலையே ஒழிய யூகம் பண்ற மாதிரிதான் எழுதியிருந்தீங்க வெங்கடேஸ்.

வந்த கடிதங்களிலே மெஜாரிட்டி பாரட்டித்தான் எழுதியிருக்காங்க சார்.

சார், அவங்க மாஸ். நாம சின்ன தீவு. ஒப்புக்கறேன். ஆனா, அவங்க புரியாம செயல்படறாங்க. புரிஞ்சு நாம பணிஞ்சு போறது கோழைத்தனம். பத்திரிக்கை நடத்தறது ஒருவகையிலே ஒரு அட்வெஞ்சர். நேரடியா நம்மோட தொடர்பு கொள்றப்போ நான் பேசறேன்…

நீங்க ஒரு வேகத்திலே பேசறீங்க. யோசனை செய்யுங்க. காலைல முடிவு செய்யலாம். ஒரு சின்ன மறுப்பு அடுத்த இதழ்ல வச்சிடலாம்னுதான் எனக்குப் படுது என்று மணியடித்து, உள்ளே வந்த பையனிடம், ஏ. சி-யை அணைச்சிடு. பிளாஸ்க்கை கார்ல கொண்டாந்து வை என்று சொல்லிவிட்டு, வர்றீங்களா டிராப் பண்ணிட்டுப் போறேன் என்றார்.

கொஞ்சம் வேலை இருக்கு சார். ரெண்டாவது ஃபாரத்தை முடிச்சு வச்சுட்டுப் போறேன். அத்தோடு நான் ஸ்கூட்டர் எடுத்துட்டு வந்திருக்கேன்.

எடிட்டர், அறையோடு ஒட்டிய பாத்ரூமுக்குள் நுழைய, வெங்கடேஷ் வெளியே வந்து தன் அறைக்கு நடந்தான்.

உங்க ரூம்ல தபால் எதுவும் இருக்கா சார் போஸ்ட்டுக்கு? என்றான் கணேசன்.

இல்லேப்பா. ராமமூர்த்தி சார், ரூமுக்கு வந்துட்டுப் போங்க என்று நடந்து அறைக்குள் நுழைந்தான். மேஜை மேல் புரூஃப் பார்க்கவேண்டிய காகிதங்கள் வைக்கப்பட்டிருந்தன.

நாற்காலியில் அமர்ந்தான். எதிரே சாத்தப்பட்ட ஜன்னலின் கண்ணாடிக் கதவுகளுக்கு வெளிப்பக்கம் மழை தீவிரமாக வரிவரியாய் வழிந்ததில் ஒரு நாட்டியம் இருந்தது.

வாயில் வெற்றிலையைக் குதப்பிக் கொண்டே வந்த ராமமூர்த்தி, என்ன வெங்கடேஷ்? என்று மேஜைமேல் இருந்த ஆங்கிலப் புத்தகத்தை ஆராய்ந்தார்.

சுதாகரோட சீரியல் சாப்டர் எப்போ வரும் சார்?

வந்துரும். அனுப்பிச்சிடுவான்.

இப்படி மேம்போக்கா சொல்லாதீங்க. சுதாகரோட நீங்கதான் கம்யூனிகேட் பண்ணக்கிட்டிருக்கீங்க. எத்தனாம் தேதி ஸ்கிரிப்ட் கிடைக்கும்னு போன் பண்ணித் தெரிஞ்சு என்கிட்டே சொல்லிட்டு வீட்டுக்குப் போங்க என்று புரூஃப் திருத்த ஆரம்பித்தான்.

ராமமூர்த்தி எதிர் நாற்காலியில் அமர்ந்து டெலிபோன் எடுத்து, சுதாகருக்கு போன் போடும்மா என்றார். கட்டுரை கான்ட்ரவர்ஸி ஆயிடுச்சா?

ஆமாம், மறுப்பு வைக்கணுமாம்.

ஒப்புக்காதே. ஹலோ! சுதாகரா, ‘கனவுகள்’லேர்ந்து ராமமூர்த்தி பேசறேன்ப்பா. சாப்டர் எப்போ அனுப்பறே? நாளைக்கா? அப்போ எழுதிட்டியா? நான் காலையிலே ஆள் அனுப்பி வாங்கிக்கறேன். வச்சிடட்டுமா? வைத்து, அப்போ நான் புறப்படறேன்.

அந்த பாலர் இல்லம் மேட்டர் என்ன சார் ஆச்சு?

நேரம் ஒழியலை. செஞ்சு தர்றேன் வெங்கடேஷ்

ராமமூர்த்தி போனதும், வேலையைத் தொடர்ந்தான் வெங்கடேஷ். டெலிபோன் ஒலிக்க… எழுவதை நிறுத்தாமல் எடுத்தான்.

சார், ‘சுதந்திர பறவை’ பட விமரிசனம் எழுதினது நீங்களா?

ஆமாம். ஏன்?

டைரக்டர் சிவராமன் போன்ல கூப்பிடறார். விமரிசனம் எழுதினவரோட பேசணுமாம். கனெக்ஷன் தரவா?"

கொடும்மா… ஹலோ! வெங்கடேஷ் கியர்.

ஏண்டா, நீதான் என் படத்துக்கு விமரிசனம் எழுதினதா?

சார், மரியாதையா பேசத் தெரிஞ்சா பேசுங்க.

என்னடா மரியாதை? பல்லு அத்தனையும் கழட்டி எடுத்துடுவேன். காதலுக்குத் தீர்வாகக் காதலர்களை ஊரைவிட்டே ஓடச்செய்வது கேனத்தனமான முடிவுன்னு எழுதியிருக்கியே… திமிரா? என்னடா கேனத்தனம்? க்ளைமாக்ஸ்ல ஒரு கவிதையா அதை செஞ்சிருக்கேன்; ஒரு பத்திரிக்கைலகூடத் தப்பா ஒரு வார்த்தை வரலை. பேனாவைக் கையில் எடுத்துட்டா தலைகால் புரியறதில்லையா? விமரிசனம் எழுதறப்போ நிதானத்திலே இருந்தியா?

மிஸ்டர் சிவராமன், ஒரு பிரபல டைரக்டர் பேசற பேச்சா இது? உங்க வசதிக்கு, உங்க எதிர்பார்ப்புக்கு நான் விமரிசனம் எழுத முடியாது. என் கருத்தைத்தான் நான் எழுத முடியும். விமரிசனத்துக்காக ஆத்திரப்படறது அநாகரிகம். அதை ஸ்போர்ட்டிவா எடுத்துக்கறதுதான் புத்திசாலித்தனம்.

பழமொழி தெரியுமாய்யா? விமரிசகன்கிறவன் எப்படி ஓடறதுன்னு சொல்ற ஒரு நொண்டி. டைரக்ஸனுக்கு ஸ்பெல்லிங் தெரியுமா உனக்கு? ஒரு முன்னணிப் பத்திரிக்கையிலே எழுதறப்போ பார்த்து எழுதணும். உன் விமரிசனம் என் படத்தோட ஓட்டத்தையே பாதிக்கும், தெரியுமா?

படம் பாதிக்கக்கூடாதுன்னு பார்த்தா ரிலீஸாகிற அத்தனை படங்களையும் ஓகோன்னு தூக்கி எழுத வேண்டியிருக்கும். சூட்கேஸீம், டிபன்கேரியரும் உங்ககிட்டே வாங்கிக்கிட்ட விமரிசகரிகள்தான் அப்படி எழுதுவாங்க.

திமிர் பேச்சா பேசறே? உன்னை உண்டு இல்லைன்னு பண்ணிடுவேன், ஜாக்கிரதை!

இந்த மிரட்டல் எல்லாம் என்கிட்டே வச்சிக்காதீங்க. போனை வைங்க என்று வெங்கடேஷ் கத்தலாகச் சொல்ல, அந்தக் கத்தலில் சுந்தர் எழுந்து வந்து, என்ன சார், யாரு? என்றான்.

டைரக்டர் சிவராமன்… ‘சுதந்திர பறவை’யை கிழிகிழின்னு கிழிச்சிருந்தேன். அதுக்குக் குதிக்கறார். ஸ்கூல் பிள்ளைங்க காதலிக்கிறாங்களாம். வீட்ல எதிர்ப்பு. எக்ஸ்கர்சன் வந்த இடத்திலே ரெண்டுபேரும் தனியா பிரிஞ்சு ஏதோ ஊருக்கு ரயில் ஏறிடறாங்க. கதாநாயகனுக்கு இன்னும் மீசையே முளைச்சிருக்காது. கதாநாயகி இப்பதான் பிரா போட்டு சட்டை போடறவ. மைனர் கேர்ள். போலீஸ்ல புகார் கொடுத்தா அந்தப் பையன் ஜெயிலுக்குப் போகணும்! இந்தக் காதல் அமர காதல்னு நான் எழுதணுமாம். அவங்க ஓடிப்போனது கவிதையாம். அதை நான் கேனத்தனம்னு எழுதினது தப்பாம். எதையாச்சும் படம் எடுத்துட வேண்டியது. எடுத்ததையெல்லாம் கண்ணை மூடிக்கிட்டு பாராட்டிட முடியுமா? மழை குறைஞ்சிருக்கா சுந்தர்?

வெங்கடேஷ் எழுந்து ஜன்னல் கதவைத் தள்ளி வெளியே பார்த்தான். வேகம் குறைந்து லேசான தூறல் மட்டும் இருந்தது.

மூடு அவுட் பண்ணிட்டான். இனி ஒரு எழுத்து ஓடாது. வீட்டுக்குப் புறப்படறேன். காலைல பார்க்கலாம் சுந்தர் ஆணியில் மாட்டியிருந்த ஹெல்மெட்டை எடுத்துக் கொண்டான்.

கட்டடத்துக்கு வெளியே வந்து ஸ்டெப்னி கவருக்குள் செருகி வைத்திருந்த வேஸ்ட் துணி எடுத்து ஸ்கூட்டரின் ஸீட்டை, ரியர்வியூ மிர்ரரைத் துடைத்தான்.

மேகம் இன்னும் மிரட்டிக் கொண்டிருந்தது. சாலையில் நீர் இரண்டு பக்கங்களிலும் வடிந்து கொண்டிருந்தது. வீசன காற்றில் அருகாமைக் கடலின் உப்பு கலந்திருந்தது.

வெங்கடேஷ் சாலைலில் நிதானமாக ஸ்கூட்டரைச் செலுத்தினான்.

சாலைலில் ஏதோ வாகனம் சிந்திச் சென்ற எண்ணெய் தேங்கிருந்த தண்ணீர் திட்டுகளில் வண்ண ஜாலம் செய்திருந்தது. கடந்த பஸ்களில், கார்களில் வைப்பர்கள் எக்ஸர்சைஸ் செய்து கொண்டிருந்தன. நடைபாதை முழுக்க குடைகள் நகர்ந்தன.

நுங்கம்பாக்கம் வந்து சௌராஸ்டிரா நகர் வந்தான். நான்காவது குறுக்குத் தெருவில் நுழைந்து எலெக்ட்ரிக் டிரெயினுக்கான ரயில்வே லைன் நோக்கிச் செலுத்தி, வேப்பமரம் நின்ற அந்தச் சிறிய வீட்டின்முன் வண்டியை நிறுத்தினான்.

விக்கெட் கேட்டைத் திறந்து வைத்துவிட்டு, ஸ்கூட்டரைத் தள்ளி உள்ளே போர்ட்டிகோ அடியில் நிறுத்தினபோது, மாடி போர்ஸனில் பால்கனியில் மூங்கில் நாற்காலியில் அமர்ந்திருந்த ஸ்வெட்டர் அணிந்த சாளராம், ஹலோ வெங்கடேஷ், சூடா கடலை சாப்பிடறீங்களா? என்றான்.

அகோரப் பசி. குடலை எல்லாம் தாங்காது. மழைக்கு முன்னாடியே ஆபிஸ்லேர்ந்து வந்தாச்சா?

மத்தியானமே வந்தாச்சு.

கொடுத்து வச்ச ஆளுப்பா. எனக்கு அப்படி ஒரு பாஸ் அமையலையே…!

வெங்கடேஷ் சாவி எடுத்துக் கதவைத் திறந்து, கீழே கிடந்த இரண்டு கடிதங்களையும் எடுத்துக்கொண்டு உள்ளே வந்து விளக்கைப் போட்டான். ஹெல்மெட்டைக் கழற்றி மாட்டிவிட்டு, சிக்களை உதறிவிட்டு சின்ன ஹாலை ஒட்டின பெட்ரூமுக்கு சட்டையைக் கழற்றிக்கொண்டே நடந்தான்.

படுக்கையில் அமர்ந்து, தலைமாட்டில் இருந்த ரேடியோவை ஆன் செய்துவிட்டு ‘ஜான்கி, கும்பகோணம்’ என்று ஃப்ரம் அட்ரஸ் இருந்த கடிதத்தை முதலில் படித்தான்.

அன்புள்ள அத்தான்,

நானும் அண்ணனும் இங்கு சுகமாக வந்து சேர்ந்தோம். இந்த முறை எனக்கு ஏக வரவேற்பு. எல்லோரும் விழுந்து விழுந்து கவனிக்கிறார்கள். டில்லியிருந்து அக்கா பார்ஸலில் குங்குமப்பூ அனுப்பியிருக்கிறாள். வாண்டுகள் அதற்குள் பெயரே வைத்து விட்டார்கள். பெண் என்றால் ரம்யாவாம். ஆண் என்றால் விஜய்யாம். வளைகாப்பு நிகழ்ச்சியை எப்போது நடத்தினால் சௌகரியம் என்று அம்மா கேட்டு எழுதச் சொன்னார்கள். ஓட்டல் சாப்பாடு உங்கள் உடம்புக்கு ஒத்துக் கொள்ளாது. முடிந்தவரை வீடடில் சமையல் செய்துக்கொள்ளுங்கள். காஸ் இருக்கிறது. குக்கர் இருக்கிறது. பத்து நிமிட வேலைதான். திருமணத்துக்கு முன்பு சமைத்துக் கொண்டிருந்தவர்தானே! வாரா வாரம் எனக்குக் கடிதம் எழுதுங்கள். நானும் எழுதுகிறேன்.

இப்படிக்கு,

ஜானகி.

உதடுக்குள் சிரித்துக் கொண்டான். வெங்கடேஷ் நண்பன் ஒருவன் எழுதியிருந்த மற்றொரு கடிதத்தையும் படித்துவிட்டு எழுந்து முகம் கழுவி தலைச்சீவிக் கொண்டான். ஃப்ரிஜ்ஜிலிருந்து பிரெட்டும், சாஸீம் எடுத்துக்கொண்டு சமையல் மேடைக்கு வந்தான் டோஸ்ட் செய்து நின்றுகொண்டே சாப்பிட்டுத் தண்ணீர் குடித்தான்.

முன் ஹாலுக்கு வந்து டெலிவிஷனைப் போட்டுக்கொண்டு, அடையாளம் வைத்திருந்த அந்த சரித்திர நாவலைக் கையில் எடுத்துக்கொண்டு சோபாவில் அமர்ந்தபோது… மறுபடி மழை இரைச்சலாய் பெய்யத் துவங்கியது.

அடித்துக்கொண்ட ஜன்னலின் கதவுகளைக் கொக்கி போட்டுவிட்டு, ‘வீரசிம்மன் சடுதியில் தன் புரவியில் இருந்து குதித்து தன் வாளை விரைவில் எடுத்து எதிரியின் புஜத்தில் வைத்தபோது என்ன நடந்தது…’ என்று படிக்க ஆரம்பித்தான்.

ஹா! மாற்றான் வலிமையை கணிக்கத் தவறிவிட்டார் வீரசிம்மர். உம் கரத்தில் இருப்பது வாள். ஆனால் போர் பல கண்டது என் தோள். வாளை உறையில் போடுவதே விவேகம்… கொட்டிலின் காவலர் உரைத்தபோது…

அழைப்புமணி டிங்-டாங் என்றது. தொடர்ந்து ஒரு ஆட்டோ நீரைக் கிழித்துக்கொண்டு ஓடி, சத்தம் தேய்ந்தது.

வெங்கடேஷ் வாசல் கதவைத் திறந்தான்.

ஆளுக்கு ஒரு சூட்கேஸீடன் முற்றிலுமாக மழையில் நனைந்துவிட்ட நிலையில் அவளும் அவனும் நின்றுக் கொண்டிருந்தார்கள்.

2

காதல் என்பது…

ஒரு ஐஸ்கிரீம்

வாங்கிக் கொண்டு

இரண்டு ஸ்பூன்கள்

கேட்பது!

வெங்கடேஷ் சமையலறையின் கண்ணாடி அலமாரியின் கதவைத் தள்ளி உயரமாய் நின்ற வரிசையான பிளாஸ்டிக் டப்பாக்களில் பெயர் படித்தான். ‘ரவா’ என்று எழுதி ஒட்டியிருந்ததை எடுத்து, மூடி திறந்து பாத்திரத்தில் சரித்தான்.

தலையைத் துவட்டிக்கொண்டே வந்த பாஸ்கர், ஏய் என்ன இது? பொம்பளை வேலையெல்லாம் செஞ்சிக்கிட்டு? பக்கத்திலே எதாச்சும் ஓட்டலுக்குப் போயிட்டு வந்துடலாம் வெங்கடேஷ் என்றான்.

இங்கே பக்கத்திலே ஓட்டல் எதுவும் இல்லை. ரொம்ப தூரம் போகணும். மழை இல்லைன்னா நானே ஆட்டோல அழைச்சுட்டுப் போவேன். நான் நல்லா சமைப்பேன் பாஸ்கர். அது சரி… சமைக்கிறது பொம்பளைங்களுக்கு மட்டுமா உரிமை? கல்யாண வீட்டுக்கும் ஸ்வீட் ஸ்டால்களுக்கும் சரக்கு மாஸ்டர் பொம்பளையா, ஆம்பளையா?

அட, விடுடா! ஒரு பேச்சுக்கு சொன்னதுக்கு முழு நீளத்துக்கு வாதம் பண்றியே… இப்ப என்ன செய்யப்போறே?

ரவா கிச்சடி என்ற வெங்கடேஷ், கூடையிலிருந்து பெரிய வெங்காயம் எடுத்து, கத்திக் கொண்டு வெட்டத் தொடங்கினான்.

ஒகே! கேரி ஆன். உன் கையால நாங்க அவதிப்படணும்னு இருக்கிறப்போ மாத்த முடியுமா? தலை சீவிட்டு வந்துடறேன் என்ற பாஸ்கர் ஹாலுக்கு வந்து, படுக்கை அறையின் கதவைத் தட்டி, வசந்தி, சேலை கட்டிக்கிட்டாச்சா? என்றான்.

ஒரு நிமிடம் ப்ளீஸ்…!

அந்த ஒரு நிமிடத்தில் பாஸ்கர் டி.வி-யில் செய்தி பார்த்தான்.

கதவு திறந்து, வரலாம் பாஸ்கர் என்ற வசந்தி கைத்தறிப் புடவை அணிந்திருந்தாள். கூந்தலை மார்பில் போட்டுக் கண்ணாடி பார்த்துக் கொண்டு பின்னிக் கொண்டிருந்தாள். கழற்றிப் போட்ட ஈரமான உடைகள் தரையில் தனியாய்க் கிடந்தன.

என் சட்டையோட கை எதைத் தொட்டுக்கிட்டிருக்கு பார் வசந்தி என்று சீப்பு எடுத்தான் பாஸ்கர்.

குனிந்து பார்த்து, சீ! என்று தான் கழற்றிப்போட்ட உள்ளாடையை தனியாய் விலக்கி வைத்து, இந்த ஆம்பளைங்க ரசனையே மோசம்ப்பா என்றாள்.

அதெல்லாம் ஒண்ணுமில்லை. நாங்க வெளியில சொல்லி மனசைக் காலி பண்ணிடறோம். நீங்க உள்ளுக்குள்ள புதைச்சு மேலமேல வளர்த்துக்குவீங்க

நல்லா இருக்கு பேச்சு, தலை சீவியாச்சுன்னா வெளியில போங்க. உங்க ஃப்ரெண்டை வெளில விட்டுட்டு ரெண்டுபேரும் அவர் பெட்ரூமுக்குள்ளே இருக்கிறது நல்லால்லை. இதுதான் அவர் வொய்ஃபா? அழகா இருக்காங்க இல்லே? என்று கட்டில் அருகே இருந்த போட்டோவை எடுத்துப் பார்த்தாள் வசந்தி.

"ஆமாம். இவங்களைத்தான் நான்

Enjoying the preview?
Page 1 of 1