Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanavup Pudhaiyal
Kanavup Pudhaiyal
Kanavup Pudhaiyal
Ebook242 pages2 hours

Kanavup Pudhaiyal

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

கனவு - ஓர் அற்புதமான விஷயம்

எல்லா சாதனைகளும் கனவுகளே!

சாதிக்க வேண்டுமெனில் கனவு காண வேண்டும்!

சூழ்நிலை பல் சக்கரங்களில் சிக்கி சில சமயம்

சில கனவுகள் செத்துப் போகின்றன!

மனதின் ஆழத்தில் புதைக்கப் படுகின்றன.

காதலும் ஒரு கனவே!

நனவு செய்யும் கனவு!

இந்தக் கதையில் ஒரு இளைஞன் தன்

கனவுகளைப் புதைக்கிறான்.

அவனுடைய மனதைத் தோண்டும் அவனுடைய

அன்பான மனைவி ரஞ்சனிக்குக் கிடைக்கிறது

அந்தக் கனவுப் புதையல்!

ஆனால் அவள் ஆத்திரப்படவில்லை,

அவசரப்படவில்லை. ரஞ்சனி என்ன செய்தாள்?

படியுங்கள், புரியும்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789385545344
Kanavup Pudhaiyal

Read more from Pattukottai Prabakar

Related to Kanavup Pudhaiyal

Related ebooks

Reviews for Kanavup Pudhaiyal

Rating: 5 out of 5 stars
5/5

1 rating1 review

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 5 out of 5 stars
    5/5
    Really the story is a dream treasure only for the readers hats off to the author I have read almost all the novels by the author each story is a gem means this one is a jewel in the crown again thanks to Scribd for including in my account

Book preview

Kanavup Pudhaiyal - Pattukottai Prabakar

http://www.pustaka.co.in

கனவுப் புதையல்

Kanavu Pudhaiyal

Author:

பட்டுக்கோட்டை பிரபாகர்

Pattukottai Prabakar

For more books

http://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

பொருளடக்கம்

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

அத்தியாயம் 3

அத்தியாயம் 4

அத்தியாயம் 5

அத்தியாயம் 6

அத்தியாயம் 7

அத்தியாயம் 8

அத்தியாயம் 9

அத்தியாயம் 10

அத்தியாயம் 11

அத்தியாயம் 12

அத்தியாயம் 13

அத்தியாயம் 14

அத்தியாயம் 15

அத்தியாயம் 16

அத்தியாயம் 17

அத்தியாயம் 18

அத்தியாயம் 19

அத்தியாயம் 20

அத்தியாயம் 21

அத்தியாயம் 22

அத்தியாயம் 23

அத்தியாயம் 24

அத்தியாயம் 25

அத்தியாயம் 26

அத்தியாயம் 27

அத்தியாயம் 28

அத்தியாயம் 29

அத்தியாயம் 30

அத்தியாயம் 31

அத்தியாயம் 32

அத்தியாயம் 33

1

"கா

ட்! ஒரு மாசமா?" என்றாள் ரஞ்சனி.

விளம்பரத்தில் போல அத்தனை ருசித்த காஃபியைப் பருகியபடி ஆமோதித்துத் தலையசைத்தான் கல்யாண்.

மேற்கொண்டு குடிக்க விடாமல் கையைப் பிடித்துத் தடுத்து, முதல்ல சொல்லுங்க கல்யாண், நீங்க எப்படி ஒத்துக்கிட்டீங்க? என்றவளின் உதடுகள் எஞ்சிய வார்த்தைகளை முணுமுணுப்பாக விழுங்கின.

நான் மறுக்க முடியாது ரஞ்சனி.

ஏன்?

நிர்வாகத்தோட உத்தரவு!

நிர்வாகம்தானே, நீதிமன்றம் இல்லையே…

ரஞ்சனி எதிர் சோபாவில் வெடுக்கென்று அமர்ந்து முதுகுக்கான சதுர தலையணையை மடியில் போட்டுக்கொண்டு அதில் எம்பிராய்டரி பூவைக் கிள்ளினாள்.

என்ன ரஞ்சனி, நான் என்னப்பா பண்ணுவேன்? என்மேல கோவிச்சுக்கிட்டா எப்படி?

மேனேஜர்கிட்ட எடுத்துச் சொல்லக் கூடாதா?

என்ன சொல்றது?

எங்களுக்குக் கல்யாணமாகி ரெண்டு வருஷம்தான் ஆச்சி, வீட்டுல என் வைஃப் தனியா இருக்கணும், ஒரு மாசம் ரெண்டு பேரும் பிரிஞ்சி இருக்கிறது கஷ்டம்னு சொல்லக்கூடாதா?

நான் சொல்லியிருக்கமாட்டேன்னு நினைக்கிறியா?

உங்க மேனேஜருக்கு என்ன வயது?

அம்பத்தி நாலு!

அதான்!

காரணம் அது இல்லை.

பின்னே?

நான் கொஞ்சம் மக்கா இருந்திருக்கணும்.

இருந்திருந்தா?

இந்த மக்கை பாம்பேக்கு அனுப்புறதால எந்தப் பிரயோசனமும் இல்லைன்னு என்னை லிஸ்ட்லேர்ந்துஎடுத்திருப்பாங்க.

பாம்பே பிராஞ்ச்ல இப்ப என்ன கேடு?

நியூ ப்ராஜெக்ட்ஸ் எடுத்திருக்காங்க ரஞ்சனி. அதுக்கு அனுபவமுள்ள புத்திசாலிகள் கொஞ்ச நாளைக்கு பக்கத்துல இருக்கணும். நான் போய்ட்டு வந்தப்புறம் எனக்கு புரொமோஷன் இருக்கு.

இந்த மாதிரி கேரட்டைக் காட்டித்தானே குதிரையை ஓட வைக்க முடியும்? உங்க மேனேஜர் உங்களைவிட புத்திசாலியா இருந்தாகணுமே.

கல்யாண் ஷு கழற்றியபடி, ஓ.கே. இந்த ஸாரிகூட நல்லாதான் இருக்கு. அப்படியே வர்றியா? என்றான்.

எங்கே?

கொஞ்சம் ஷாப்பிங் போறோம் டின்னர் ஹோட்டல்ல முடிச்சிட்டு வந்திடறோம். ஓ.கே?

இது எனக்கு நீங்க காட்ற கேரட்! இல்லையா?

வாட் ரஞ்சனி? வொய் காண்ட் யூ அண்டர் ஸ்டாண்ட் மி? முகம் கழுவிட்டு வந்துடறேன்.

சரி, ஷாப்பிங் மட்டும் போகலாம் டின்னர் வேணாம்.

ஏன்?

முருங்கைக்கீரை அடைக்கு ரெடி பண்ணி வெச்சிருக்கேன்.

அதை ஃபிரிஜ்ல வெச்சிடு காலைல தட்டிக் கொடு.

கல்யாண் படுக்கையறைக்கு வந்து லுங்கிக்கு மாறி குளியலறை சென்றான். கப்போர்டிலிருந்து புது சோப் எடுத்து உறை கிழித்து குளியலறைக்குள் வந்து வைத்துவிட்டு கட்டிலில் அவன் கழற்றிப் போட்டிருந்த உடைகளை ஹேங்கர்களில் மாட்டி ஸ்டாண்டில் தொங்கவிட்ட ரஞ்சனி பெருமூச்சு விட்டாள்.

அவன் அணிய வேறு உடை எடுத்து வைத்துவிட்டு டிரெஸ்ஸிங் மேஜை முன்பாக நின்றாள். ஹேர்பேண்ட் எடுத்து மீண்டும் சீவி டைட்டாகப் போட்டுக் கொண்டு லேசாக லிப்ஸ்டிக் தீற்றிக் கொண்டாள்.

போன் ஒலிக்க எடுத்தாள்.

ஹலோ.

ரஞ்சனி, அப்பா பேசறேன்மா.

அப்பா? எங்கேர்ந்து?

ஹேமா வீட்லேர்ந்துதான்.

எப்ப வந்திங்கப்பா?

இப்பதான் அரை மணி நேரமாச்சும்மா.

என்னப்பா இது திடீர்னு?

ஹேமா புதுவீடு மாறினதிலேர்ந்து நான் வரலை, வரலைன்னு சொல்லிட்டிருந்தா. அதான் புறப்பட்டு வந்துட்டேன். உன்னையும் பார்த்த மாதிரி இருக்குமே.

நேரா இங்க வந்திருக்கலாமில்ல?

அவதானே மூத்தவ. முதல்ல அவ வீட்டுக்கு வர்றதுதானே முறை? மாப்பிள்ளை நல்லா இருக்காரா?

இருக்கார்.

ஆபிஸ்லேர்ந்து வந்துட்டாரா?

வந்துட்டார். முகம் கழுவிட்டு இருக்கார். ஊர்ல எல்லாரும் நல்லா இருக்காங்களாப்பா?

நல்லா இருக்காங்கம்மா.

இங்க எப்ப வர்றீங்கப்பா?

ரெண்டு நாள் ஹேமா வீட்ல இருந்துட்டு அப்புறம் வர்றேனே…

நாளைக்கு நைட்டு உங்க மாப்பிள்ளை பாம்பே புறப்படறாருப்பா. திரும்ப வர்றதுக்கு ஒரு மாசம் ஆகும். கம்பெனி வேலையாப் போறாரு.

ஒரு மாசமா? நீயும் போறியாம்மா?

இல்லப்பா.

ஒரு மாசம் நீ எப்படிம்மா தனியா இருப்பே? என்னோட ஊருக்கு வந்துடறியா? அழைச்சிட்டுப் போகட்டுமா?

இல்லப்பா, இங்க நான் கம்ப்யூட்டர் கிளாஸ் போயிட்டிருக்கேன். அது கட்டாயிடும். நான் பார்த்துக்கறேன். நாளைக்கு இங்க வர்றீங்களா?

வர்றேம்மா. அப்புறம் மாப்பிள்ளையைப் பார்க்க முடியாமல் போயிடுமே. காலைல இங்க டிபன் சாப்பிட்டுட்டு புறப்பட்டு வர்றேன்.

எனக்கு ஸ்கூட்டர் வாங்கிக் கொடுத்திருக்காருப்பா. நான் வந்து பிக்கப் பண்ணிக்கட்டுமா? அம்பத்தூர்லேர்ந்து திருவான்மியூர் வர்றதுக்குள்ளே உடம்பெல்லாம் வலி எடுத்துடும்.

இல்லம்மா, உங்கக்கா கார்ல டிராப் பண்றதாச் சொல்றா உன்கிட்ட பேசணுமாம். பேசு.

ரிசீவர் கைமாறி ஹேமா பேசினாள்.

என்னடி பெரிய மனுஷி. ரொம்ப பிசியா இருக்கியா? போன ஸண்டே வர்றேன்னு சொன்னேயில்ல?

இல்லக்கா, திடீர்னு அவரோட ஆபீஸ் ஃபிரண்ட்ஸ் ரெண்டு பேரை வீட்டுக்கு சாப்பிடக் கூப்புட்டுட்டார். ஆமாம், கார் வாங்கியிருக்கியா என்ன? சொல்லவேயில்ல?

நான் எப்ப வாங்கினேன்? அவரோட ஆபீஸ் கார்லதான் டிராப் பண்ணச் சொல்றேன்னு சொன்னேன்.

நாளைக்கு அப்பா வர்றப்போ அவரோட நீயும் வாயேன்க்கா. இங்க ரெண்டு நாள் இருந்துட்டுப் போயேன்.

உனக்கென்னம்மா, இன்னும் பெத்துக்காம பிளான்ல இருக்கே. இங்க ரெண்டு குட்டிப் பிசாசுகள் இருக்கே. அதுங்களை ரெடி பண்ணி ஸ்கூலுக்கு அனுப்பறதே ஒரு போராட்டம்தான். யாருக்கும் அடங்காதுங்க. அப்பா என்னமோ நீ ஒரு மாசம் தனியா இருக்கப் போறியான்னு கேட்டாரே, என்ன அது?

அவர் அஃபீஷியல் ட்ரிப்பா பாம்பே போறார். அங்கே ஏதோ புது ப்ராஜெக்ட்டாம். வர ஒரு மாசமாகும்.

நீயும் போகவேண்டியதுதானே?

ஒரு மாசம் வீட்டை மூடிவெச்சிட்டுப் போற மாதிரியா ஊர் இருக்குது?

நகை எல்லாம் லாக்கர்லதானே வெச்சிருக்கே?

போன மாசம் எங்க ஃபிளாட்ல தர்ட் ஃப்ளோர்ல குடும்பத்தோட ஜஸ்ட் ரெண்டு நாள் திருப்பதிக்கு டூர் போயிருந்தாங்க. என்ன ஆச்சு தெரியுமா? மினி வேன் கொண்டுவந்து நிறுத்தி ஃபிரிட்ஜ், டிவி., பாத்திரம், சேர்ன்னு எல்லாம் ஏத்திக்கிட்டுப் போய்ட்டான். யாரோ ஒரு வீட்ல காலி பண்ணிட்டுப் போறாங்க போலிருக்குன்னு நினைச்சிக்கிட்டு அவங்கவங்க வேலையைப் பார்த்தோம். அப்புறம்தான் திருட்டுன்னு தெரிஞ்சுது.

சரி, ஊர்லேர்ந்து அம்மாவை வேணும்னா வந்து உன்னோட தங்கச் சொல்லேன்.

அதான் யோசிச்சிட்டு இருக்கேன்.

இப்பதான் இவர் சொன்னார். இனிமேதான் முடிவு செய்யணும். உன் மாமியாருக்கு முழங்கால் வலி இப்ப எப்படி இருக்கு?

வீட்ல பண்டிகை, கெஸ்ட் வந்திருக்கிற சமயங்கள்ல மட்டும் தாங்க முடியாம வலிக்கும் ரஞ்சனி என்று சிரித்தாள் ஹேமா.

சேர்ந்து சிரித்த ரஞ்சனி, நல்லவேளை, நான் தப்பிச்சேன். சரி, வெச்சிடட்டுமா? என்று வைத்தாள்.

ஷுவின் லேசைக் கட்டிக் கொண்டிருந்த கல்யாண், நீ போன் பேசி முடிக்கிறதுக்குள்ளே நான் குட்டித் தூக்கமே போட்டுட்டேன். என்றான்.

அப்பா வந்திருக்கார்.

புரிஞ்சது. இங்க எப்ப வர்றாராம்?

நாளைக்கு காலைல.

ரஞ்சனி, பேசாம அவரை ஒரு மாசம் இங்க தங்கச் சொல்லிடு.

அவர் தங்கமாட்டாரு. ஊர்ல நிறைய வேலை வெச்சிருக்கார். அம்மாவைக் கூப்புட்டுக்கலாமான்னு நினைக்கிறேன்.

உன் இஷ்டம்.

நாளைக்கு, பதிமூணாம் தேதி புறப்பட்டிங்கன்னா எப்ப வர்றீங்க? கரெக்டாச் சொல்லுங்க.

கல்யாண் திரும்பி சுவரில் மாட்டியிருந்த காலண்டரில் தேதி பார்த்தான்.

அக்டோபர் 12,

சட்டென்று அவன் முகம் மாறியது.

பஞ்சர் ஆன சைக்கிளின் டயர் போல அவன் முகத்திலிருந்த உற்சாகம் வடியத் துவங்கியது.

அப்படியே கட்டிலில் அமர்ந்து காலண்டரையே வெறித்தான்.

கைப்பையை எடுத்துத் தோளில் மாட்டிக் கொண்டு திரும்பிய ரஞ்சனி, என்னாச்சு கல்யாண்? என்றாள்.

இன்னிக்கு தேதி அக்டோபர் பனிரெண்டு ரஞ்சனி

ஆமாம், அதுக்கென்ன? என்றவளின் முகமும் சட்டென்று உற்சாகமிழந்தது.

மெதுவாக அவனருகில் வந்து அமர்ந்தாள்.

வேணாம் கல்யாண், வெளில எங்கயும் போகவேணாம்.

பரவால்லை ரஞ்சனி, ஐ’ம் ஆல்ரைட் போலாம்.

இல்லை, இப்ப நீங்க தனியா இருக்கணும். அழுகை வந்தா அழணும். நான் உங்களை மட்டும் இல்லை உங்களோட ஒட்டுமொத்த உணர்வுகளையும் சேர்த்து மதிக்கிறேன் கல்யாண். இப்ப நான் புறப்பட்டு அம்பத்தூர் போறேன். காலைல அப்பாவோட வர்றேன்.

பரவால்லை ரஞ்சனி.

வாழ்க்கைல எதையும் வலுக்கட்டாயமா மறக்க வேண்டியதில்லை கல்யாண். அது அபத்தமான முயற்சி. இன்னிக்கு நீங்களும் மதுமிதாவும் மனசுவிட்டு காதலை சொல்லிக்கிட்ட நாள்! அந்த நினைவுகளோட தயவுசெஞ்சி இருங்க. ப்ளீஸ்…

ரஞ்சனி வெளியேறி செருப்புகளணிந்தாள்.

2

ல்யாணுக்கு சங்கடமாகிப் போனது.

தன் ஸ்கூட்டரின் சாவியைச் சுழற்றியபடி அபார்ட்மெண்ட்சின் லிஃப்ட் நோக்கி நடந்த ரஞ்சனி பின்னால் வேகமாக வந்தான்.

நோ ரஞ்சனி, நீ போக வேணாம். ஐ’ம் ஆல்ரைட். நாளைக்கு வேற நான் ஊருக்குப் போறேன். ஷாப்பிங் போறதா புறப்பட்டுட்டு திடீர்னு இப்படி கேன்சல் பண்ண வேணாம்.

கல்யாண், நான் என்ன கோபமாவா போறேன். உங்களைப் புரிஞ்சுகிட்டுத்தானே போறேன். பல தடவை சொல்லிருக்கேன். அந்தந்த சமயம் அந்தந்த உணர்வுகளோட கொஞ்சம் வாழணும். காஃபி குடிச்சா அந்த டேஸ்ட் கொஞ்ச நேரம் நாக்குலயே இருக்கணும்னு வேற எதையும் சாப்பிடாம தக்க வெச்சுக்கலை? இப்போ அத்தியாவசியமா உங்களுக்கு தனிமை வேணும். யு லிவ் வித் யுவர் ரியல் ஃபீலிங்ஸ்! காலைல வர்றேன்.

வந்த லிஃப்ட்டுக்குள் நுழைந்து அதன் கதவு மூடும் முன்பாக உற்சாகமாகப் புன்னகைத்துவிட்டுப் போனாள் ரஞ்சனி.

தன் ஃபிளாட்டிற்கு வந்து கதவை மூடினான்.

படுக்கையறைக்கு வந்து ஜன்னலோரமாக நாற்காலி நகர்த்திப் போட்டுக்கொண்டு திரைச் சீலையைத் தள்ளினான். இரண்டு கதவுகளையும் விரியத் திறந்து வைத்தான். காத்திருந்த காற்று கட்டியணைத்தது.

ஆறாவது மாடியிலிருந்து பார்க்க, முழுக்க இருட்டுவதற்கு முன்பாக, கடலும் வானமும் சந்திக்கிற கோட்டைப் பார்க்க முடிந்தது. தூரத்தில், சில அவசர நட்சத்திரங்கள் ஆஜராகியிருந்தன. ஒலி துண்டிக்கப்பட்ட அலைகள் மௌனமாகப் பாய்ந்து கொண்டிருந்தன.

பார்வை திசை திரும்ப சட்டென்று சாலை விளக்குகள் எரிந்தன. வாகனங்கள் ஒவ்வொன்றாக வெளிச்சம் அணிந்துகொண்டன.

கல்யாண் ஆழ்ந்து மூச்சு விட்டான். நாற்காலியில் அமர்ந்தான்.

மதுமிதா!

இப்போது எங்கே இருப்பாள்? இதே சென்னையிலா? இல்லை வெளியூரிலா? சாலையில் விரையும் இந்த வாகனங்களில் ஏதோ ஒன்றில் அவள் இருக்கலாம்.

திருமணமாகி நான்கு வருடங்களாகி விட்டதால் கண்டிப்பாகத் தாயாகியிருப்பாள். ஒரு குழந்தையா, இரண்டா?

இந்த நாள் இந்த நேரம் என்ன செய்து கொண்டிருப்பாள்?

கணவனுக்குக் காஃபி கொடுத்துக்கொண்டு? குழந்தைக்கு தலை சீவிக் கொண்டு? ஓய்வாக நாவல் படித்துக்கொண்டு? (அவளுக்கு அதிகம் எழுதாத வண்ணதாசனையும் பிடிக்கும், அதிகம் எழுதின கண்ணதாசனையும் பிடிக்கும்) அல்லது இசை கேட்டுக் கொண்டு? அல்லது தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு?

இதே மாதிரி அக்டோபர் பனிரெண்டை நினைவுபடுத்திக் கொண்டு ஞாபகங்கள் கிளறப்பட்டு என்னைப் பற்றி யோசித்துக் கொண்டிருப்பாளா?

ச்சே! அவள் திருமணமான பெண்!

அதனால்?

இனி என்னை எதற்காக நினைக்க வேண்டும்?

நினைக்க காரணம் அவசியமா?

அதானே? நானும்தான் திருமணமானவன். இனி அவளை நினைத்துப் பார்ப்பதால் என்ன பிரயோஜனம்?

ஆனால்… நினைக்கச் சொல்கிறதே மனசு!

நினைவுகளோடு வாழச் சொல்லி அமைதி அளிக்கிற அற்புதமான மனைவி யாருக்குக் கிடைப்பாள்? ரஞ்சனி ஒரு பக்குவப்பட்ட பெண்ணாக இல்லாமல் போயிருந்தால் இந்த இல்லறம் என்றைக்கோ தரை தட்டியிருக்கும்!

நினைவுகள் நம் கட்டுப்பாட்டில் இல்லை! ‘நினை!’ என்று உத்தரவு போட்டு உருவாக்க முடியாது. ‘நினைக்காதே!’ என்று உத்தரவு போட்டு நிறுத்தி வைக்கவும் முடியாது.

அது புகை மாதிரி! காற்றுக்குத் தகுந்த மாதிரி உயரும், தாழும், தவழும்,

Enjoying the preview?
Page 1 of 1