Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Bharath Rajyam
Bharath Rajyam
Bharath Rajyam
Ebook99 pages59 minutes

Bharath Rajyam

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

Pattukkottai Prabakar is a prolific writer of Tamil crime and detective fiction. He has also worked as a screenwriter in the Tamil film industry, and also for Paramapadham, the first Tamil-language "mega-serial" shown on Doordarshan.
First published in the 1977 in Anandha Vikatan. He has written more than three hundreds novels, more than two hundred short stories. Lots of his novels are translated in Telugu and Kannada. He has also worked as a Dialogue writer in more than ten movies in Tamil.
Prabakar's novels most commonly feature the adventures of the detective couple Bharat and Susheela, of Moonlight Agencies, and their employees Marikkozhunthu (a.k.a. Madhavi) and Ravi. There is a running gag in the books about the slogans on Susheela's T-shirts.

Pattukkottai Prabakar frequently collaborates with the detective fiction author duo Subha; some novels have appeared featuring both Bharat and Susheela and Subha's detective couple, Narendran and Vaijayanthi.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789385545368
Bharath Rajyam

Read more from Pattukottai Prabakar

Related to Bharath Rajyam

Related ebooks

Reviews for Bharath Rajyam

Rating: 4.666666666666667 out of 5 stars
4.5/5

6 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Bharath Rajyam - Pattukottai Prabakar

    https://www.pustaka.co.in

    பரத் ராஜ்யம்

    Bharath Rajyam

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    கதை சுருக்கம்:

    பரத் - சுசிலா இருவரும் பெங்களூர் செல்கின்றனர். போகும் வழியில் ஒரு அருவிக்கு செல்கின்றனர். அந்த அருவியின் மேல் பகுதியில், ஒரு பெண் கொலை செய்யப்பட்டு கிடக்கிறாள். அவள் கழுத்தில் தாலி இருக்கிறது. பக்கத்தில் இருக்கும் கோயில் பூசாரியிடம் விசாரித்த போது… காலையில் அந்த கோயிலில் தான் கல்யாணம் செய்து கொண்டார்கள் என்று பூசாரி சொல்கிறார். அவளுடைய பேர் ரோகினி என்றும், கணவன் பெயர் பரணி என்றும் பூசாரி சொல்கிறார். ரோகினி எதற்காக கொலை செய்யப்பட்டாள்?

    1

    காரின் பானெட்டைத் திறந்து பார்த்தான் பரத்.

    ரேடியேட்டர் கோபமாக அனல்மூச்சு வெளியேற்றியது.

    என்னாச்சு பரத்? என்றாள் காதில் வாக்மென் மாட்டி, காருக்குள்ளிருந்த சிவப்பு பனியனில், TWIN HANDLES என்று எழுதி அணிந்திருந்த உங்கள் அபிமான நாயகி.

    பரத் பானெட்டை கொக்கி வைத்து விட்டு, காரின் ஜன்னலருகே வந்து, ஹெச் ட்டூ ஓ கொடு. ரேடியேட்டருக்கு தாகம். தட்ஸ் ஆல். என்றான். சின்ன சின்ன ஆசையை விசிலடித்தான்.

    சுசிலா வாக்மென் செட்டை விலக்கி விட்டு, என்ன? என்றாள்.

    தண்ணி பாட்டிலைக் கொடுன்னேன்.

    ஓ மை காட்! கொஞ்சம் முன்னாடித்தானே ரெண்டு பேரும் மாத்தி மாத்தி… கடைசி சொட்டு வரைக்கும் குடிச்சி தீர்த்தோம். அஞ்சி லிட்டர் கேன்ல தண்ணி பிடிச்சிக்கலாம்னு, நான் கிருஷ்ணகிரியிலேயே சொன்னேன். அந்த ஹோட்டல்ல தண்ணி கலங்கலா இருக்குன்னு, வேணாம்னு சொல்லிட்டிங்க. இப்ப என்ன செய்றது?

    தண்ணி கடன் கொடுக்கற கார் ஏதாவது வர்ற வரைக்கும் காத்திருக்க வேண்டியதுதான். கமலஹாசனா இருந்தா, வாழ வைக்கும் காதலுக்கு ஜேன்னு டூயட் பாடுவார். நீ தம் எடு.

    முன் சீட்டில் கிடந்த அவன் சிகரெட் பாக்கெட்டை எடுத்துத் தந்து விட்டு, காரை விட்டு இறங்கினாள் சுசிலா.

    அந்த சாலை அகலக் குறைவுடன் இருந்தது. மதியம் மூன்றுக்கே வெளிச்சத்தின் வீரியம் குறைந்து போயிருந்தது. சாலையோரத்தில், அசோகரின் கவனக் குறைவால் மரங்களையே காணோம். இரண்டு பக்கங்களிலும் தரிசல் நிலங்கள். பரத்தின் சட்டை பாக்கெட்டில் தைக்கப்பட்டிருந்த டிசைன் துணியில் தவிர, சுற்று வட்டாரத்தில் பச்சை நிறத்தைக் காணவில்லை. அண்டா நிறைய சோறு வைத்தாலும்… ஒரு காக்காயாவது வருமா என்பது சந்தேகமே.

    பரத், காரில் ஒரு காலை உதைத்து நின்று கொண்டு, சிரகெட் பற்ற வைத்தான். சுசிலா தூரத்தில் தெரிந்த கிலோ மீட்டர் கல்லை பைனாகுலர்ஸ் வைத்துப் பார்த்து, பெங்களூர் - அறுபத்தி ரெண்டு கிலோ மீட்டர் என்று படித்தாள். பெருமூச்சு விட்டாள். கவர்ச்சியான பெருமூச்சை ரசித்தான்.

    காற்று கொஞ்சம் புழுதி சுமந்து வீசியது. சூழ்நிலையில் ஒரு சோம்பல் ஞாயிற்றுக்கிழமை இருந்தது. சால்வை போர்த்தி சோகப் பாடலாம்.

    ஊருக்குத் திரும்பினதும்... கார் ஃபார் ஸேல்னு உடனடியா விளம்பரம் கொடுத்து, இதை வித்துடணும். ச்சே! என்றாள்.

    மக்கர் பண்ணினா கை கழுவிடறதுன்னு பாலிஸி வச்சிக்கிட்டா, நான் உன்னை எத்தனை தடவை கை கழுவியிருக்கணும் சுசி?

    உதை! நான் என்ன மக்கர் பண்ணினேன்?

    ரொம்ப டென்ஷனா இருக்கு, ஒரு நாலு நாளைக்கு பெங்களூருக்கு ஜாலி டூர் போய்ட்டு வரலாம்னு சொல்லிதானே என்னை உசுப்பினே?

    ஆமாம்.

    ஜாலி இல்லாம எப்படி ஜாலி டூர்? உன்னை காதலிச்சி நான் என்ன சுகத்தைக் கண்டேன்? ஒரு கிஸ்ஸிங் உண்டா? ஒரு ஹக்கிங் உண்டா? அட்லீஸ்ட் ஒரு டேட்டிங்காவது உண்டா? கற்போட காதலிச்சுக்கிட்டிருக்கிற அசட்டு ஜோடி நாமாதான் இருப்போம்.

    ஆரம்பச்சிட்டிங்களா? ரொம்ப ரொம்ப சீரியஸா கேக்கறேன். எப்போ மேரேஜ் பண்ணிக்கலாம். சொல்லுங்க?

    போற வழியில, பாதையோர பேர் தெரியாத சாமிக்கு முன்னாடி கூட பண்ணிக்கலாம். ஆனா, பிரதானமா ஒரு கண்டிஷன் இருக்கு.

    என்ன?

    கல்யாணத்துக்கப்புறம், இந்த மாதிரி பனியன் போடறதை நீ நிறுத்திக்கணும்.

    ஏன்? வொய்? எந்துகு? க்யோங்?

    நிறைய சிக்கல் இருக்கு சுசி. டு ஸ்டார்ட் வித்… நம்ம குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கறதை எடுத்துக்கலாம்.

    சுசிலா அவன் காதைத் திருகி, அதோ ஒரு வண்டி வருது. நிறுத்தி தண்ணி கேளுங்க என்றாள்.

    அந்தக் கார்... பெங்களூரை நோக்கி வந்து கொண்டிருந்த கார். டாடா சியாரா. வெள்ளை நிறம். சுவரில் பெயிண்ட் வழிவதைப் போல, ஓசையில்லாமல் அது வந்து கொண்டிருந்தது.

    பரத் நடுசாலையில் டிராஃபிக் கான்ஸ்டபிள் போல நின்று கொண்டு, தனது கர்சீப்பை அசைத்து, அந்தக் காரை நிறுத்த சைகை காட்டினான்.

    கிட்டே வந்து நின்றதும்... காரை ஓட்டி வந்தது ஒரு இளம்பெண். அருகில் தங்க ரோமக் கற்றையுடன் ஒரு ஆங்கிலேயப் பெண்.

    கறுப்பு ஜன்னல் கண்ணாடியை இறக்கி, "என்ன

    Enjoying the preview?
    Page 1 of 1