Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Innum Sila Tajmahalgal
Innum Sila Tajmahalgal
Innum Sila Tajmahalgal
Ebook74 pages36 minutes

Innum Sila Tajmahalgal

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Indra Soundar Rajan, (b. 13 November 1958) is the pen name of P. Soundar Rajan, a well-known Tamil author of short stories, novels, television serials, and screenplays. He lives in Madurai.

He is something of an expert on South Indian Hindu traditions and mythological lore. His stories typically deal with cases of supernatural occurrence, divine intervention, reincarnation, and ghosts, and are often based on or inspired by true stories reported from various locales around the state ofTamil Nadu.
Two or three of his novels are published every month in publications such as Crime Story and Today Crime News.
Languageதமிழ்
Release dateApr 23, 2018
ISBN6580100700399
Innum Sila Tajmahalgal

Read more from Indira Soundarajan

Related to Innum Sila Tajmahalgal

Related ebooks

Reviews for Innum Sila Tajmahalgal

Rating: 5 out of 5 stars
5/5

1 rating1 review

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 5 out of 5 stars
    5/5
    so sad ? ending
    the police inspector was terrible and thatshayani also horrible characters.
    very ? sad.
    thanks

Book preview

Innum Sila Tajmahalgal - Indira Soundarajan

http://www.pustaka.co.in

இன்னும் சில தாஜ்மகால்கள்

Innum Sila Tajmahalgal

Author:

இந்திரா செளந்தர்ராஜன்

Indira Soundarrajan

For more books
http://www.pustaka.co.in/home/author/indira-soundarajan

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

பொருளடக்கம்

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

அத்தியாயம் 3

அத்தியாயம் 4

அத்தியாயம் 5

அத்தியாயம் 6

அத்தியாயம் 7

அத்தியாயம் 8

அத்தியாயம் 9

அத்தியாயம் 10

அத்தியாயம் 11

அத்தியாயம் 12

அத்தியாயம் 13

அத்தியாயம் 14

அத்தியாயம் 15

1

ந்த இயந்திரம் இயங்கிக் கொண்டிருந்தது. ஐந்து மில்லி மீட்டர் பருமனில் வட்டமான, வெளிப்பான கிரைண்டிங் சக்கரம் அசுர வேகத்தில் சுழன்று கொண்டிருந்தது.

அதனால் ஏற்படும் ‘விர்ர்ரி… ஃபிங்ங்’ எனும் சப்தத்திற்கு காதைக் கொடுத்துவிட்டு அந்த இயந்திரத்தை இயக்கிக் கொண்டிருக்கும் சீனியர் மாணவன் ஜோசப்பின் பெரிய கிருதாவின் மேல் பார்வையை வைத்துக்கொண்டு காற்று வீசினாலும் அலுக்காத கருவேல மரத்தைப் போல நின்று கொண்டிருந்தார் அவர்.

ஆஸ்திரேலியாவின் ஆர்ட்டீஷியன் வெந்நீர் ஊற்றுக் கணக்காய் மனதுக்குள் உஷ்ணத்தனமான எண்ணங்கள்.

அந்த எண்ணத்துக்குள்ளாய் அவன் மனது அமுங்கி நசுங்கி அழுவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தது.

‘விர்ர்ரி…ஃபிங்ங்’ என்று ஓடும் அந்த இயந்திரத்துக்கு பக்கத்தில் லேத் ஒன்று.

இரண்டுக்கும் பத்தடி அப்பால் சில கிரைண்டிங் மெஷின்கள். அவைகளை சுருக்கமாக எஸ்.ஜி.1, எஸ்.ஜி.2 என்று பெயரிட்டு அழைத்துக் கொண்டிருந்தார்கள். அவைகளுக்கு பத்தடி அப்பால் ஒரு இன்ஜின்லேத். அதற்கும் அப்பால், அந்த அப்பாலுக்கும் அப்பால் விர்ரி…ஃஃபிங்’ ஐப் போல் ‘கிர்ர்ர்…ட்ரொய்ங்ங்…’ என்று பலதரத்தில் மின்சார சக்தியோடு சப்தம் போட்டு பலதரப்பட்ட பொருட்களை உருவாக்கும் எந்திரங்கள்! எந்திரங்கள்.

‘சி.ஜி.-3, சி.ஜி.-2, எஸ்.ஜி-1, எஸ்-ஜி-2, என்ஜின் லேத், மில்லிங் மெஷின், டிரில் கிரைண்டிங்… இதெல்லாம் என்ன?’

அநியாயத்திற்கு மனசைக் குழப்பும் ஆங்கில எழுத்துக்களையும், அந்த வெள்ளை எழுத்து பதிந்த எந்திரங்களையும, அவன் முதன் முதலாய் நோக்கி மருண்டு சிலிர்த்து நின்றபோது, அந்த பெரிய தொழிற் பயிற்சிக் கூடத்தின் வாட்டசாட்டமான ‘ஜோஸ்’ மாஸ்டர்தான் அவனை இயல்பு நிலைக்குக் கொண்டு வந்தவர்.

அவரது தமிழ் கொஞ்சம் மனோகரமானது.

நமது சுத்த தமிழ் கலந்து அந்த மலையாளத்துக்காரனின் தமிழின் உச்சரிப்புக்குள் அவன் தனது கவனத்தை வலிந்து பதித்துக் கொண்டதுண்டு.

உன்பேரு என்னான்னு பறைஞ்சே?

கமலாதரன்.

ஆங்! கமலாதரன்!-கமலோதரன் இ இன்ஸ்ட்யூட்டின் ஸ்பெஷல் டிரெய்னி நீ. உனக்கு கிரைண்டிங்ல டிரெயினிங் கொடுக்கச் சொல்லி நின்னோட கம்பெனியில் பறைஞ்சிருக்கி… இது ‘சி.ஜி-3. சி.ஜி.-3 மீன்ஸ் சிலிண்டரிகல் கிரைண்டிங் மெஷின்னு அர்த்து. மனசிலாயா? த்ரீங்கறது அதோட நம்பராணு! இ மெஷினில் இது கிரைண்டிங் வீலாணு. இது ஹெட் ஸ்டாக். இது டெய்ல் ஸ்டாக். இது பெட்… என்று மேற்படிக்கும் மேற்படியாய் விளக்கிவிட்டு "கிரைண்டிங் டிரேட்ல ஒர்க் செய்ய கான்சன்ட் ரேஷன் ரொம்ப வேணு… இ மெஷினில் சீனியர் ட்ரெய்னீஸ் ஒர்க் செய்யச்சே க்ளீனாய் ஆப்சர்வ் செய்யணு… அப்பத்தான் நின்னோட ஒர்க் உஸ்தியாய் (செம்மையாய்) இருக்கும். – என்றெல்லாம் அவனது பயிற்சி துவக்க நாளின் பத்து மணி

Enjoying the preview?
Page 1 of 1