Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aranmanai Ragasiyam
Aranmanai Ragasiyam
Aranmanai Ragasiyam
Ebook155 pages1 hour

Aranmanai Ragasiyam

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

இந்த நாவலை முதலில் இன்டெர்நெட்டில் உள்ள ஒரு வெப் சைட்டிற்காகத்தான் எழுதினேன். தொடர்.காம் என்கிற முகவரியில் வெளியான இது பலத்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுத் தந்தது. தொடர் எழுதும் முன்பே சற்று வித்யாசமாக நமது தேசத்தின் கலாச்சாரம் மற்றும் ஆன்மீக நம்பிக்கைகளின் பின் புலத்தில் கதை இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று சொல்லியே கதையை கேட்டிருந்தனர். ஏனென்றால் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பார்வைக்கு செல்ல வேண்டியிருப்பதால் அப்படி எழுதுவது நல்லது என்றனர்.
Languageதமிழ்
Release dateApr 22, 2018
ISBN6580100700692
Aranmanai Ragasiyam

Read more from Indira Soundarajan

Related to Aranmanai Ragasiyam

Related ebooks

Related categories

Reviews for Aranmanai Ragasiyam

Rating: 4.285714285714286 out of 5 stars
4.5/5

7 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aranmanai Ragasiyam - Indira Soundarajan

    http://www.pustaka.co.in

    அரண்மனை ரகசியம்

    Aranmanai Ragasiyam

    Author:

    இந்திரா செளந்தர்ராஜன்

    Indira Soundarrajan

    For more books
    http://www.pustaka.co.in/home/author/indira-soundarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    1

    ரு ராட்சத இரும்பு பறவையாட்டம் தரையிறங்கியது அந்த விமானம். பார்க்க பரவசமூட்டும் லேண்டிங், பரணிக்கும் பரவசமாக இருந்தது!

    மதுரை விமான நிலையம் ஒன்றும் மகா பிரமாதமான விமான நிலையம் இல்லை. சில கிராமப்புற இரயில் நிலையங்களுக்கு எப்பொழுதாவது இரயில் வந்துகிட்டுப் போகின்ற மாதிரி மதுரை விமான நிலையத்துக்கும் ஒரு நாளைக்கு ஒரு முறையோ இரு முறையோ தான் விமானம் வந்து போய்க் கொண்டிருக்கிறது.

    அதிலும் சுமாரான ‘ஆவ்ரோ’ டைப் விமானங்கள்தான் அதிகம் வரும். விமான நிலையத்துக்கு வெளியே பயணிகளை நம்பி யாரும் பெரிதான கடை போடவோ, இல்லை ஹோட்டல் கட்டவோ தயாராக இல்லை. விமான நிலையம் வெறிச்சோடித்தான் எப்பொழுதும் கிடக்கும். அன்றும் பரணி விமான நிலையத்துக்கு வந்தபோது கிட்டத்தட்ட வெறிச் சோடித்தான் கிடந்தது. அங்கும் இங்குமாக சில டாக்ஸிகள் மட்டும் வந்திருந்தன. போனால் போகிறது என்று சில ஆட்டோக்காரர்களும் வந்திருந்தார்கள். பார்க்க ஆச்சரியமாக இருந்தது. பரணிக்கு மதுரைதான் சொந்த ஊர். மதுரையில் அவனுக்குத் தெரியாத இடம் இல்லை. இருந்தாலும் இத்தனை நாளில் ஊருக்கு 10 கிமீ வெளியே பெருங்குடியை ஒட்டியுள்ள விமான நிலையத்துக்கு அவன் போனதேயில்லை. போவதற்கும் வாய்ப்பு வந்ததில்லை. ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இரயில் நிலையத்திற்குப் போவதே பெரிய விஷயம். இதில் விமான நிலையத்திற்குப் போக வேண்டிய அவசியம்? விமானம் என்பது அவனைப் பொறுத்தவரையில் ஒரு பெரிய ஆகாயப் பறவையாகத்தான் இருந்து வந்திருக்கிறது. வானில் ஒரு புள்ளியாக அது பறக்கும் போது பார்த்திருக்கிறான்.

    இன்று அதை நேரில் பார்க்கும் வாய்ப்பும் அதில் பயணம் செய்து வரும் பனார்ஸிதாஸைக் கண்டுபிடித்து அழைத்துச் செல்லும் பொறுப்பும் அவனுக்கு அவனது முதலாளியால் விதிக்கப்பட்ட ஒன்று என்றாகிவிட்டது.

    பரணிக்கு தற்சமயம் ஒரு நகைக்கடையில் உத்யோகம் ‘நடச்சிவம் பிள்ளை ஜுவல்லரி’ என்றால் மதுரையில் தெரியாதவர்கள் இருக்க முடியாது. ஒரு நாளைக்கு சராசரியாக ஐந்நூறு பவுன் விற்பவர்கள். அதில்தான் பரணிக்கு மேனேஜர் போஸ்ட்! அப்ளிகேஷன் போட்டு இன்டர்வியூ அட்டெண்ட் செய்து ஆர்டர் அடித்துத் தந்து வாங்கிய வேலையில்லை இது.. பரணியின் அப்பா பஞ்சநாதன் நடச்சிவம்பிள்ளையிடம் முப்பது வருஷமாக வேலையில் இருந்தார். மிக நம்பிக்கையான மனிதர். எனவே பம்பாய் வரை போய் தங்கம் வாங்கித்தர நடச்சிவம் பிள்ளை பஞ்சநாதனைத்தான் அனுப்புவார். அப்படிப் போன சமயத்தில் ஹார்ட் அட்டாக்கில் பரலோக பிராப்தி அடைந்துவிட்டார். மனிதர், இப்போது அவரது இடத்தை பரணிதான் நிரப்பிக் கொண்டிருக்கிறான். பாவம் பரணி என்று நமச்சிவம்பிள்ளை அவனுக்கு வேலை போட்டுக் கொடுத்துவிடவில்லை. பஞ்சநாதன் நடச்சிவம் பிள்ளையிடம் லட்ச ரூபாய் வரை கடன் வாங்கியிருந்தார். அதில் கால் பங்கைக் கூட அடைக்கவில்லை. காலன் வந்து கூட்டிக் கொண்டு போய்விட்டான். எனவே மீதத்தை வசூல் செய்து கொள்ளத்தான். பரணிக்கு வேலை போட்டு தந்திருக்கிறார். மாதச் சம்பளம் ஐந்தாயிரம் இதில் சரிபாதி கடனுக்கு. சொச்சம் தான் கையில் தரப்படும்.

    இதை எல்லாம் நினைக்கவே பரணிக்குப் பிடிக்காது. அவனது கனவுகளே வேறு.

    லட்ச லட்சமாய் சம்பாதிக்க வேண்டும். கார், பங்களா என்று அளப்பரை செய்ய வேண்டும். எந்த காரணத்திற்காகவும் ஒருவரிடம் கை கட்டி வேலை பார்த்துவிடக் கூடாது... etc.. etc..

    ஆனால் காலம் எப்பொழுதுமே இப்படி நினைப்பவர்களைத்தான் பந்தாடி மகிழ்கிறது. பரணிக்கும் இந்த அடிமைத் தொழில் அலுத்துவிட்டது. எப்பொழுது பார் ஊரைச் சுற்றி வர வேண்டியிருக்கிறது. எவனாவது எங்கிருந்தாவது வந்தால் வரவேற்று காலையும் அமுக்கிவிட வேண்டியிருக்கிறது.. தூத்தேறி... என்ன பிழைப்பு இது? பரணி தனக்குத்தானே பரிதாபப்பட்டு சலித்துக் கொள்ளவும் செய்தபோது தான் விமானம் வந்து தேங்கியது. வைத்த விழியை எடுக்க முடியவில்லை. அப்படியே என்னென்னவோ எண்ணங்கள்.

    ‘இந்த விமானம்தான் எத்தனை பெரியது! அறுபது, எழுபது மீட்டர் அகலத்தோடு அசத்தலாக இருந்தபடி நியூட்டனின் புவிஈர்ப்பு விதியை ஜெயித்து வானத்தில் இது சீறிப் பறப்பதை என்னவென்று சொல்ல?’

    ‘ஒரு துக்குணூண்டு கல்லை விட்டெறிந்தால் அது போன வேகத்தில் கீழே வந்து விடுகிறது. ஆனால், துக்குணூண்டு கல்லைப் போல பல கோடி மடங்கு பெரியதும் பாரமானதுமான ஒரு விமானம் மட்டும் எப்படி பறக்கிறது? அந்த நாளில் ரைட் சகோதரர்கள் எதை வைத்து விமானத்தால் பறக்க முடியும் என்று நம்பினார்கள்?’

    ‘முடியாது என்ற ஒன்றே கிடையாதோ?’

    ‘நமக்குத்தான் முயற்சி செய்யத் தெரியவில்லையோ? இந்த நடச்சிவத்திடம் மாட்டிக் கொண்டு சாகிறோமோ?’

    கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டுக் கொண்டு நின்றதில் யாரை பிக்-அப் செய்ய வந்தானோ அவர் நினைவே சுத்தமாக இல்லை.

    ‘பனார்ஸி தாஸ்னு ஒரு அட்டைல எழுதி அதைக் கைல பிடிச்சுக்கிட்டு நில்லு... அந்த ஆளுக்கு அப்பத்தான் உன்னைத் தெரியும்.... அப்புறமா அவரோட பாண்டியன் ஹோட்டலுக்கு போய் ரூம் போட்டுடு... மிச்சத்தை நான் பார்த்துக்கறேன்..." என்று நடச்சிவம்பிள்ளை சொன்னது கூட மறந்தே போய்விட்டது... விமானம் அவனை அந்த அளவு கவிழ்த்து வேறு பக்கம் திசை திருப்பிவிட்டது. கிட்டத்தட்ட எல்லோரும் போன பிறகுதன் பிரக்ஞையே வந்தது.

    ‘அடடா! வந்த வேலையை மறந்து ஏதேதோ நினைப்பில் திசைமாறிவிட்டோமே!’

    தன்னைத் தானே நொந்து கொண்டான். சுற்றும் முற்றும் பார்த்தான்.

    ‘அந்த மனிதர் காத்திருக்கிறாரா. இல்லை போய்விட்டாரா?’ –பார்வை பருந்தாக அலைந்து தேடியது.

    ‘யாராவது எங்காவது யாரையாவது தேடிக் கொண்டிருக்கிறார்களா? இருந்தால் அவர்தான் பனார்ஸிதாஸ்! ஹலோ மிஸ்டர் பனார்ஸிதாஸ்..’ –விமான நிலையத்துக்கு வெளியில் சுற்றி வந்தான்.

    விமானத்திலிருந்து ஒரு முப்பது பேர் இறங்கியிருக்கலாம். அவர்களை எல்லாம் கொத்திக் கொண்டு ஆட்டோக்களும் டாக்ஸிகளும் போய்விட்டன.ஆள் இல்லாத மைதானமாட்டம் காட்சி தர ஆரம்பித்துவிட்டது விமான நிலையம்.

    ‘போச்சுடா.. அந்த மனிதர், யாரும் வரவில்லை என்று தானாகவே கிளம்பிப் போய்விட்டாரா?’ –பரணி தத்தளித்துப் போனான். சுற்றச் சுற்றிப் பார்த்தான். வந்த விமானம் கிளம்பத் தயாராகிவிட்டிருந்தது. ஊய்ங்ங்ங்ங்... என்கிற சப்தம் காதைத் திருகி தலையில் குட்டிற்று.

    ‘போச்சு... அந்த மனிதர் போய்விட்டார். நடச்சிவம்பிள்ளை தூக்கிப்போட்டு மிதிக்கப் போகிறார். பனார்ஸிதாஸ் யாரோ இல்லை நவரத்ன வியாபாரியாம். வருஷம் ஒன்றுக்கு 2000 கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்யும் மனிதராம்.. புருனே சுல்தானே பனார்ஸிதாஸ் என்றால் எழுந்து வந்து வரவேற்பாராம்..!

    அப்படிப்பட்ட பெரிய மனிதரைப் போய் நழுவ விட்டு விட்டோமே... இந்தக் கோபம் பிசினஸிலும் எதிரொலிக்கப் போகிறது. நடச்சிவம்பிள்ளை நிச்சயம் என்னை சும்மா விடப் போவதில்லை.’ –பரணி தனக்குத்தானே மாய்ந்து போகத் தொடங்கினான்.

    கையைப் பிசைந்து கொண்டு தான் வாடகைக்குப் பிடித்து வந்திருந்த காரை நோக்கி நடந்தான். டிரைவர் சீட்டில் தயாராக இருந்தான். போய் ஏறி அமரப் பார்த்தபோது தான் கண்ணில்பட்டது அந்த உருவம். பின் சீட்டில் அமர்ந்து கொண்டு பேப்பர் பார்த்துக் கொண்டிருந்தார்.

    பரணி வந்து பார்த்து வியப்பதை லட்சியமே செய்யாமல் ஏறு பரணி. உனக்காக எவ்வளவு நேரம் காத்திருக்கிறது? என்று வேறு கேட்டார்.

    சார்... நீங்க?

    அ’யம் தாஸ்.. பனார்ஸிதாஸ்!

    பனார்ஸிதாஸ்! தமிழ் பேசறீங்க..

    இருபத்தி நாலு பாஷை பேசுவேன். கமான் மேன், கெட் இன். நேரமாகுதுல்ல

    சார்.. என்னை... என்னை... உங்களுக்குத் தெரியுமா?

    உம்... டிரைவர் காரை எடு..

    எப்படி சார்.. நான் உங்களைப் பார்த்ததே இல்லையே? – ஓடும் காருக்குள் பின்பக்கமாக திரும்பியபடி கேட்டான் பரணி.

    ஏய்... இதெல்லாம் ஒரு விஷயமேயில்லை என்று சொன்னவரின் பத்து விரல்களிலும் பத்துவித மோதிரம்.. பரணிக்கு நெற்றியில் பூச்சி பறக்கத் தொடங்கியது.

    ‘எப்படி

    Enjoying the preview?
    Page 1 of 1